தசரதன் முடியும்... தவுசண்ட் வாலா வெடியும்!

>> Monday, September 1, 2008

சரி சரி... நாட்டுல என்ன விசேஷம். என்ன நடந்துகிட்டு இருக்கு...?" என்றார் ஆர்வமாக.

ஆங்... காஷ்மீர் அமர்நாத் கலவரம் இன்னும் ஓயலே... கூடவே, பாகிஸ்தான் தீவிரவாதிங்க வேற உள்ளே நுழைஞ்சு அழிச்சாட்டியம் பண்றானுங்க. ஒரிசாவுல மதக்கலவரம். நிறைய பேரு கொல்லப்பட்டிருக்காங்க. கலவர பயத்துல ஊர் மக்கள் கூட்டம் கூட்டமா இடத்தை காலி பண்றாங்க. பீகார்ல ஒரே மழை வெள்ளம். லட்சக்கணக்கான மக்கள் ஊரை காலி செய்துக்கிட்டு வாராங்க... இது போதுமா? இன்னும் வேணுமா...? என்று நக்கலடித்தான் சுவருமுட்டி!

நீ போதை பார்ட்டி, ரொம்பத்தான் கலாய்க்கிற. உன்னை டாக்டர். ராமதாஸ்கிட்டத்தான் கொண்டு போய் விடணும். அப்பதான் அடங்குவே... என்ற சித்தன், கலைஞருக்கும், பழ. நெடுமாறனுக்கும் அப்படி என்னத்தான் விவகாரம்..? ஒரேடியா முட்டிக்குறாங்களே..." என்றார்.

அது பெரிய கதைப்பா. முன்னாடி இலங்கை தமிழர்களுக்கு மருந்து, மாத்திரை கூட இல்லியேன்று நெடுமாறன் கவலைப்பட்டாரு. ஆளுங்களை பிடிச்சு, நிதி திரட்டி அதை ஏற்பாடு செய்துட்டாரு. ஆனா அனுப்ப முடியல. சென்ட்ரல் கவர்மெண்ட் அனுமதி கிடைக்கலே... தமிழினத்துக்கு தலைவர்னு சொல்ற கலைஞர் சென்ட்ரல் கவர்மெண்ட்டுகிட்ட பிடிவாதமா சொல்லணும். ஆனா, அவரும் அப்படி ஏற்பாடு செய்யல. பதவி சுகத்துக்காக சென்ட்ரலை மிரட்டுகிற கலைஞர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் மிரட்டக்கூடாதுங்கிறது பழ. நெடுமாறன் வாதம். அந்த கடுப்புல ஒரே ஒரு தலை முடி நரைச்சவுடனேயே, தசரதன், மூத்தமகன் ராமனுக்கு முடிசூட்டி அவரை மன்னராக்கிட முடிவு செய்தார். ஆனா தள்ளாத வயதிலேயும், கலைஞர் பதவியிலேயே குந்திகிட்டு இருக்காரே ஏன்...? என்று குடைஞ்செடுத்துட்டாரு.

அதுல டென்ஷனான கலைஞர் நீ காமராஜரோட முதுகுல குத்திவிட்டு கவுத்தே. அண்ணாவை கூட இருந்தே காலை வாரிவிட்டே. புலிகள் பேரை சொல்லி பணம் பார்த்து தமிழின துரோகியானே. உன் கதை இவ்வளவு இருக்கும் போது நீ, தசரதனின் நரைத்த மயிர் கதைய எடுத்துகிட்டு வந்திட்டியான்னு தாக்கிப்புட்டாரு தாக்கி. பதிலுக்கு கோபமான பழ. நெடுமாறன், நாகர்கோவில் தொகுதி தேர்தல்ல காமராஜருக்கு எதிரான வேலை பார்த்து துரோகம் செய்தது நீங்க. நாவலர் நெடுஞ்செழியனுக்கு கிடைக்க வேண்டிய பதவிய, அவரை கவுத்துட்டு பறிச்சு அண்ணாவுக்கே துரோகம் செய்தது நீங்கன்னு வரிசையா பட்டியல் போட்டு கடைசி காலத்துலயாவது உண்மைய பேசிட்டு போங்க, பொய்யா பேசாதீங்கன்னு அறிக்கை வுட்டாரு. அடடே இம்புட்டு விஷயம் வெளியே வருதேன்னு ஊர் முழுக்கவும் இதான் இப்ப பேச்சா இருக்கு என்றார்.

குறுக்கிட்ட சுவருமுட்டி "போயா ங்கொய்யால... என்ன சமாச்சாரம்னு கேட்டா கதை சொல்றியா நீ.? ஏம்பா, இலங்கை தமிழருக்கு மருந்து கொண்டுகிட்டு போகணும்னு நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்தப்போ, கலைஞருக்கு அது தர்ம சங்கடமா போச்சு. உண்ணாவிரதத்தை கைவிடச் சொன்னாரு. நெடுமாறன் ஒத்துக்கிடல. உடனே டாக்டர் ராமதாஸை அனுப்பி சமாதானம் பேச வச்சாரு. இது விஷயமா கலைஞர்கிட்ட நேர்ல பேசலாம். அதுக்கு அவரும் சம்மதிச்சிருக்காருன்னு டாக்டர் சொன்னதால விரதம் முடிவுக்கு வந்துடுச்சு.

ஆனா, சொன்னபடி பழ. நெடுமாறனை கலைஞர் சந்திக்கலை. நாளு வாரமாகி, வாரம் மாதமான பிறகும் கலைஞர் அப்பாயின்மெண்ட் கிடைக்குல. ஒரு சமயத்துல திருமாவளவனும் கலைஞரை சந்திச்சப்ப சந்திப்பு பற்றி பேசியிருக்காரு. அவரும் நேரம் ஒதுக்கினாரு. அப்போது பழ. நெடுமாறன் போகலையாம்.

சொன்ன வாக்குறுதிய காப்பாத்த முடியல. மாசக் கணக்குல இழுத்தடிச்சுட்டு, இப்போ வரச் சொன்னா எப்பிடி..? வாங்கி வச்ச மருந்து மாத்திரை எல்லாம் வீணா போயிடுச்சேன்னு இவர் கோபம். இந்த பின்னணிதான் தசரதனின் நரைத்த முடி கதை தெரியுமா..." என்று போட்டு உடைத்தார் சுவருமுட்டி.

நன்றி.குமுதம்

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP