""ஜெயலலிதா தி.மு.க.,வுக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்,'' _கலைஞர்

>> Sunday, August 31, 2008

"கலர் "டிவி' வழக்கில் செல்வகணபதி தண்டனை பெற்றவர். அவரை தி.மு.க.,வில் சேர்ப்பதற்கு கட்சியில் எதிர்ப்பு ஏற்பட்டதா?' என்று நிருபர் கேட்ட கேள்விக்கு

முதல்வர் கருணாநிதி, ""ஜெயலலிதா மீதே வழக்கு உள்ளது। அவர் தி।மு.க.,வுக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்,''

இப்படியே போனால்......நாளைக்கு

அன்பு தளபதி பின்லேடன்

ஆருயிர் நண்பர் ராம்கோபாலன், சோ மற்றும் .................. பலர் ஆயிரம் ஓட்டுடன் வந்தால் சீட் உண்டு

Read more...

ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய், கலைஞர்

ரேஷன் கடைகளில் அரிசி கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்ற போது எத்தனை டன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டது. இதனால் எத்தனை ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசி கிடைக்காமல் போனது. அதே போல்தான் இப்பொழுதைய அறிவிப்பும். கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி என்று அறிவித்துள்ளீர்கள் இதில் எத்தனை டன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படப் போகிறது என்பதை பற்றியும் தங்களது கேள்வி பதில் அறிவிப்பு மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவிட்டீர்கள் என்றால் மிகவும் நல்லதாக இருக்கும்.
எத்தனை அறிவிப்புகள் அதில் எத்தனை தில்லு முல்லுகள். என்ன கொடுமைடா இந்த தமிழக மக்களுக்கு. இவரது அறிவிப்புகளை பிற மாநிலங்களும் பின் பற்றுகின்றனவாம். இதை விட கொடுமை நாட்டு மக்களுக்கு வேற எதுவும் இருக்க முடியாது.

Read more...

வெற்றிகளை மட்டும் சிந்தியுங்கள்

ஒரு பணக்காரனிடன் செல்வம் பெருகிக்கொண்டே போவதற்கு முக்கியக் காரணம், அவன் எந்நேரமும் செழுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதுதான்।


அதேபோல் ஒரு ஏழையின் கஷ்டங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம் அவன் தன் துன்பங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பதுதான். எண்ணங்கள்தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் வழிநடத்துகிறது. எனவே வாழ்க்கையில் நீங்கள் பெற்ற, பெறப்போகும் வெற்றிகளைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள்.

Read more...

உடல் நலம்: முதுகு நலமாயிருக்க 10 வழிகள்

1। தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (உங்கள் காலை)

2। அமரும்போது வளையாதீர்கள். (அலுவலகத்தில் தூக்கம் வந்தால்கூட)

3। நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள் (மேலதிகாரி மு‎ன்னால் அல்ல)

4। சுருண்டு படுக்காதீர்கள்। (முக்கியமாய் மனைவி எழும்பும்போது)

5। கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள். (மாமியார் மேல் அல்ல)

6। தினம் இருபத்து மூ‎ன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.(மனைவி பி‎ன்னால் வருவதாக நினைத்து)

7। எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.( பயப்பட வேண்டாம், உங்கள் இடத்தை யாரும் பிடித்துவிட மாட்டார்கள்)

8। டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள். (பி‎ன்னால் கேர்ள் ப்ரெ‎ண்ட் இருந்தால்கூட)

9। பளுவா‎ன பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். (குறிப்பாக ஓவர் பாசத்தில் காதலியை)

10। காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வா‎ன் நோக்கி நீட்டுங்கள். (மனைவி மு‎ன் சரண்டர் வதுபோல்)

ந‎ன்றி: குமுதம் வாரஇதழ்

Read more...

ஆரோக்கியம்_DRINK WATER ON EMPTY STOMACH

>> Saturday, August 30, 2008

It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases:
Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual disorders, ear nose and throat diseases.
METHOD OF TREATMENT
1. As you wake up in the morning before brushing teeth, drink 4 x 160ml glasses of water
2. Brush and clean the mouth but do not eat or drink anything for 45 minute
3. After 45 minutes you may eat and drink as normal.
4. After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours
5. Those who are old or sick and are unable to drink 4 glasses of water at the beginning may commence by taking little water and gradually increase it to 4 glasses per day.
6. The above method of treatment will cure diseases of the sick and others can enjoy a healthy life.
The following list gives the number of days of treatment required to cure/control/reduce main diseases:
1. High Blood Pressure (30 days)
2. Gastric (10 days)
3. Diabetes (30 days)
4. Constipation (10 days)
5. Cancer (180 days)
6. TB (90 days)
7. Arthritis patients should follow the above treatment only for 3 days in the 1st week, and from 2nd week onwards â€" daily.
This treatment method has no side effects, however at the commencement of treatment you may have to urinate a few times.
It is better if we continue this and make this procedure as a routine work in our life. Drink Water and Stay healthy and Active.
This makes sense .. The Chinese and Japanese drink hot tea with their meals ..not cold water. Maybe it is time we adopt their drinking habit while eating!!! Nothing to lose, everything to gain...
For those who like to drink cold water, this article is applicable to you.
It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion.
Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine.
Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.
A serious note about heart attacks:
آ· Women should know that not every heart attack symptom is going to be the left arm hurting,
آ· Be aware of intense pain in the jaw line.
آ· You may never have the first chest pain during the course of a heart attack.
آ· Nausea and intense sweating are also common symptoms.
آ· 60% of people who have a heart attack while they are asleep do not wake up.
آ· Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive...
A cardiologist says if everyone who gets this mail sends it to everyone they know, you can be sure that we'll save at least one life.

Read more...

சிரிப்பு மாமே சிரிப்பு (எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்)

>> Friday, August 29, 2008

வண்டி பஞ்சரானா ஸ்டெப்னி
கைகொடுக்கும். ஆனா,
மனுஷனுக்கு ஸ்டெப்னி
இருந்தா வாழ்க்கையே
பஞ்சராயிடும்.
இதான் மாமே உலகம்! Jஒ
கு.வைரச்சந்திரன், திருச்சி.

முருகனுக்கு மயில்
ஐயப்பனுக்கு புலி
சிவனுக்குக் காளை
கணபதிக்கு மூஞ்சுறு
எனக்கு சுஸ§கி
உனக்கு டாங்க்கி
சரிதான மாப்ள?
மகா, திருப்பூர்.

கூட்டம் கூட்டமாய் பறவைகளும்
சாரை சாரையாய் எறும்புகளும்
மந்தை மந்தையாய் மாடுகளும்
போற மாலை நேரத்துல
ஒளிஞ்சு ஒளிஞ்சு போறியடா
ஒயின் ஷாப்புக்குள்ளே...
எம்.கல்லூரி ராமன், கரிசல்புளி.

தமிழ்நாட்டுல மொத்தம்
12 பெரிய ஆறு,
187 சின்ன ஆறு,
3,200 வாய்க்கால்,
658 ஏரி,
13,562 குளம்,
1,55,800 கிணறு இருக்கு.
இவ்வளவு இருந்தும்
நீ ஏண்டா குளிக்கமாட்டேங்கற?
பா।திருச்செந்தாழை, மதுரை1.

அழகில் Ôமன்மதன்Õ நீ!
இரக்கம் Ôநெறஞ்ச மனசுÕ உனக்கு!
நீ யாருக்கும் அஞ்சாத Ôசத்ரபதி!Õ
உனது Ôட்ரீம்ஸ்Õ ஆச்சரியமானவை!
ஆனாலும் நண்பர்களிடமே
நீ Ôஅட்டகாசம்Õ பண்ணுவதைக்
குறைக்காவிட்டால் அப்புறம்
Ôஅந்நியன்Õ ஆகிவிடுவாய்!
எம்.ஏ.ஜின்னா, புதுக்கோட்டை.

அன்பே, என் வீட்டின் பின் வாசல்
உனக்காக எப்போதும் திறந்திருக்கும்.
அப்படித்தான் வருமாம் மூதேவி.
& ஸ்ரீ, சென்னை94.

ÔÔடேய் செல்லம்...
நம்முடைய முதல் சந்திப்பு
உனக்கு நினைவிருக்கிறதா...
திடீரென்று டிரெயின் நிற்க...
சொர்க்கம் போல ஜன்னல்கள் திறந்தன.
நம் விழிகள் சேர்ந்தன.
என்னை ஊடுருவிப் பார்த்தபடி
நீ பேசத் தொடங்கினாய்,
Ôவடா... தோசா... காபி... சாய்... சாய்...ÕÕÕ
ஷபீனாபானு, காஸியாபாத்.

எழுத்துல நீ டாக்டரோட பிரிஸ்கிரிப்ஷன்...
பேச்சுல நீ மணிரத்னம் பட வசனம்...
ஒவியத்துல நீ மாடர்ன் ஆர்ட்...
சுருக்கமா சொல்லணும்னா,
நீ ஒரு புரியாத புதிர்டா மாப்ள.ÕÕ
எஸ்.சுந்தரம், குமாரபாளையம்.

கனிக்கும் காய்க்கும்
இடையில் உள்ளது ருசிக்கிறது.
மொட்டுக்கும் சருகுக்கும்
இடையில் உள்ளது மணக்கிறது.
வெள்ளிக்கும் ஞாயிறுக்கும்
இடையில் இருப்பது எஸ்.எம்.எஸ். படிக்கிறது.ÕÕ
தாமு,தஞ்சாவூர்.

நேத்து எனக்கு நீ போன் பண்ணினப்ப...
நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர்
தற்சமயம் பிஸியாக இருக்கிறார்Õனு
ஒரு ஆம்பளை வாய்ஸ் வந்திருக்குமே...
முட்டாளே, அப்படிப்
பேசினதே நான்தாண்டா!ÕÕ
ராகவ். மகேஷ், தஞ்சாவூர்.

வைரப்பொடியால் கோலம் இடுவேன்।
வான வில்லால் தோரணம் கட்டுவேன்.
மின்னல் கீற்றால் பந்தல் அமைப்பேன்.
விண்மீன் பறித்து வீதியில் தெளிப்பேன்.
ஒரு முறை... ஒரே முறை...
ஓட்டல் டீக்கு நீ காசு கொடுத்தால்!ÕÕ
தாமு,தஞ்சாவூர்.

என்ன மாமூ,பாதி தலை வழுக்கை
ஆயிடுச்சுனு வருத்தப்பட்டியாமே!
மண்ணுல செடிதான் முளைக்கும்.
உனக்கு முடிமுளைச்சிருக்கேனு
நாங்க ஆச்சரியப் பட்டுக்கிட்டிருக்கோம்.
நீ வருத்தப்படுறியே நியாயமா?!ÕÕ
மகேஷ்ப்ரியன், தாரமங்கலம்.

யானைக்கு தும்பிக்கை...
மாட்டுக்கு கொம்பு...
கழுதைக்கு கால்...
உனக்கு சாக்ஸ்!எதிரி எவன்
உன் முன்னாடி வருவான்சொல்லு,
மச்சி..!”
அ.சுகுமார், காட்டுக்கானூர்.

மச்சான் நல்லா படி।
நல்ல வேலையில சீக்கிரம் சேர்.
இல்லேன்னா... இப்படித்தான் வெட்டியா
வர்ற எஸ்.எம்.எஸ்&ஸ எல்லாம்
படிச்சிட்டிருப்ப.ÕÕ
ஆ.பிரபு, கோவில்பட்டி.

மச்சி... நீ எப்ப பார்த்தாலும்
சிக்னல் கிடைக்கலை சிக்னல்
கிடைக்கலைனு சொல்றியே அதெல்லாம்
செல்லுக்கு ஒழுங்கா பில் கட்றவனுக்குத்
தாண்டா கிடைக்கும்?ÕÕ
ஷக்திஷரவணன், அறந்தாங்கி.

மச்சான்! நீ எனக்கு
போன் பண்ணினா,
என் செல்போன்ல
என்ன ரிங்டோன்
வரும் தெரியுமா?
Ôநான் ஒரு
முட்டாளுங்க...ÕÕÕ
ராகவ்.மகேஷ், தஞ்சாவூர்.9

உண்மையிலே
நீ தியாகிதாண்டா
பங்காளி...
உன் லவ்வர்
Ôதம்Õமையும்
தண்ணியையும்
விடச் சொன்னதும் விட்டுட்டியாமே...
அவளை!ÕÕ
எம்.ஏ.ஜின்னா, புதுக்கோட்டை.

கோயிலுக்குப் போகாம
மொட்டை அடிச்சுக்கிட்டே!
முடி கொட்டாமலே
விக் வாங்கி வெச்சுக்கிட்டே!
மீசையோட சில நாள்!
மீசை இல்லாம சில நாள்!
கடன் வாங்கிட்டு இப்படியெல்லாம்
கஷ்டப்படணுமா மச்சி!ÕÕ
நிர்மலா, சென்னை33.

நீ 100 வயது வாழ
ஆசைப்பட்டால், நான்
அதைவிட ஒரே ஒரு
நாள் குறைவாக வாழ
ஆசைப்படுகிறேன்.
ஏனென்றால் நீ
இல்லாமல் என்னால்
ஒரு நாள்கூட
வாழ முடியாது.ÕÕ
வள்ளி, சென்னை

நண்பா! நேத்து நீ குடிச்சிட்டு கார்
ஓட்டினியாமே! இனிமேல் அந்த மாதிரி
செய்யாதே! ஏன்னா நீ குடிச்சா
எல்லாத்தையும் மறந்து போற!
நீ இன்னும் டிரைவிங்கே கத்துக்கலை
அப்படிங்கறதையும்கூட!ÕÕ
எம்.கோபாலகிருஷ்ணன், களர்காடு.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...’’ இது சேரனின் ஆட்டோகிராஃப்
’‘தஞ்சை பெரிய கோயில்...‘‘ இது சோழனின் ஆட்டோகிராஃப்
‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில்...‘‘ இது பாண்டியனின் ஆட்டோகிராஃப்
‘‘மகாபலிபுர சிற்பங்கள்...‘‘ இது பல்லவனின் ஆட்டோகிராஃப்
உன்னோட ஆட்டோகிராஃப்..? உனக்கேது ஆட்டோகிராஃப்..?
நீதான் கைநாட்டாச்சே!
ராகவ், தஞ்சாவூர்&9.

‘‘பிரியாவிடை கொடுத்துவிட்டு பைக்கில் புறப்பட்டுச் சென்றாயே! நீ சென்று வெகுநேரம் ஆகியும் அதே இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருந்தேன். பாவி, இப்படியா புழுதியை கிளப்பிவிட்டுப் போவது?ÕÕ
சிக்ஸ்முகம், ஈரோடு।

‘‘ஆடினாதான் மயிலு பாடினாதான் குயிலு ஓடினாதான் ரயிலு சூப்பர் ஸ்டார்னா ஸ்டைலு உள்ளே போனா ஜெயிலு வெளிய வர பெயிலு எஸ்।எம்।எஸ். அனுப்பினா தாண்டா மொபைலு!ÕÕ
டிஷ்னி, தேனி।

‘‘டேய்॥! புதுசா Ôடூத் பிரஷ்Õ வாங்கியிருக்கியாமே, கங்கிராட்ஸ்! இனி, திருப்புகழ் பாடாமலேயே உன் வாய் மணக்கப் போகுதுடா..!ÕÕ
டி।பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி.

‘‘எல்லாத் தோட்டத்துக்கும் நீ ஒரு ரோஜாவாக இரு..! எல்லா முகத்துக்கும் நீ ஒரு சிரிப்பாக இரு..! எல்லா மலைகளுக்கும் நீ ஒரு அருவியாக இரு..! எல்லா அழகான பெண்களுக்கும் நீ ஒரு நல்ல அண்ணனாக மட்டுமே இரு மாமே!ÕÕ
பா।விஜய்ஆனந்த், கொரட்டூர்.

‘‘கோயிலுக்குப் போயிருந்தபோது, யானை குளிச்சதை ஆச்சரியமா பார்த்தே. குளிக்கறது யானைங்கிறதால அப்படிப் பார்க்கறேனு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது... குளிக்கறதே உனக்கு ஆச்சரியமான விஷயம்தான்னு!ÕÕ
ராகவ்।மகேஷ், தஞ்சாவூர்\9.

‘‘மச்சி! நீ அடிக்கடி உன் போனில் ஒரு பொண்ணு பேசி டார்ச்சர் பண்றானு பீலா விடுறியே! உனக்குத் தெரியாம அது யாருனு செக் பண்ணினேன். நீ ரீசார்ஜ் பண்ணலைனா அப்படிதான் ரெக்கார்டட் மெஸேஜ் வரும்டா கேன!ÕÕ
ஜி।மணிமாறன், தஞ்சை.

‘‘நண்பா! கமல், விக்ரம் நடிப்புக்கெல்லாம் விருது தர்றாங்க... அதெல்லாம் என்னடா நடிப்பு? ஒவ்வொரு கல்யாண மண்டபத்துலேயும் பந்தியிலே இடம் பிடிக்க மாப்பிள்ளை வீட்டுக்காரன் மாதிரியும் பொண்ணு வீட்டுக்காரன் மாதிரியும் நீ நடிக்கிற நடிப்புக்கு ஈடாகுமா?ÕÕ தாமு, தஞ்சாவூர்.

Read more...

ஜாலி டிஸ்கஷன்......

காட் ஃபாதர்ஸ்... மன்மதன்ஸ்... ஜாலி டிஸ்கஷன்!
புது வருஷத்தில் கோடம்பாக்கத்தில் ஒரு சமாதானப்படலம்... பரபரப்பு பேட்டிகள், பஞ்ச் டயலாக்குகள் என முட்டி மோதியதெல்லாம் போதும், இனி ஒற்றுமையாக இருப்போம் என முடிவெடுத்திருக்கிறார்கள் விஜய் \ அஜீத், சிம்பு \ தனுஷ் ஜோடிகள். ஒற்றுமையை ஊருக்குச் சொல்ல இணைந்து படம் செய்ய விரும்புகிறார்கள். இதோ டிஸ்கஷன் ஆரம்பம்...
விஜய் & அஜீத் இருவரும் தங்கள் ஃபேவரைட் இயக்குநர்களுடன் கூடியிருக்கிறார்கள்.
விஜய்: ÔÔஏய்... வாழ்க்கை ஒரு சதுரம். இங்க குந்தினவன் எந்திரிப்பான்... எந்திரிச்சவன் குந்துவான். அதனால நாங்க இப்போ சமாதானமாகிறதா முடிவு பண்ணிட்டோம்.ÕÕ
அஜீத்: Ôஆமா... இன்மே பேஸ் மாட்டோம்... ஆக்ஷன்தான். 2008&ல நாங்கதான் நம்பர் ஒன். அதுவரைக்கும் யார் வேணும்னாலும் எவ்ளோ வேணும்னாலும் கல் எறியுங்க. தாங்கற சக்தி விஜய்கிட்ட இருக்கு.ÕÕ
கே.எஸ்.ரவிக்குமார்: ÔÔசூப்பர் ஐடியா! ‘காட் ஃபாதர்’ படத்தை நைஸா ‘காட்ஃபாதர்ஸ்Õனு மாத்திருவோம். ஓபனிங்ல முண்டா பனியன், ஜீன்ஸோட ரெண்டு பேரும் சேர்ந்து நிக்கறீங்க...’’
தரணி: ‘‘ Ôகில்லியோட தில்லு
ஜியோட சொல்லு
சேர்ந்தா படந்தான் பொய்க்காது
தளபதி டான்ஸ§
தலையோட ஃபைட்டு
போட்டா டிக்கெட்டே கிடைக்காதுÕனு பாட்டப்
போட்ருவோம்.ÕÕ
அஜீத், சரணைப் பார்த்துக் கண்ணடிக்க, சரணும் பதிலுக்குக் கண்ணடித்துவிட்டு,
சரண்: ÔÔபின்னிட்டீங்க. ஆனா, படத்தோட பேரை ‘காட்ஃபாதர்\ கிராண்ட்ஃபாதர்Õனு வெச்சுக்கலாம். அஜீத்தான் காட்ஃபாதர்... விஜய் அவருக்கு கிராண்ட் ஃபாதர்.Õ’
மாதேஷ் (விஜய்யிடம் மெதுவாக): ÔÔமேட்டர் புரியுதுங்களா விஜய்... அதாவது படத்துல அஜீத் தாதாவாம்... நீங்க அவருக்குத் தாத்தாவாம்... அட்டகாசத்தை ஆரம்பிச்சுட்டானுங்க.ÕÕ
சரண்: ÔÔகதை என்னனா திருநெல்வேலியைக் கலக்கற தாதா அஜீத். அவரோட குருவா நீங்க வர்றீங்க விஜய். காலாகாலத்துக்கும் நிக்கற மாதிரி உங்களுக்கு செமத்தியான கெட்அப். கதர் வேட்டிசட்டை, நரைச்ச தலை விக்னு கம்பீரமா உக்கார்ந்திருப்பீங்க. வெட்டுக்குத்து, கொலைனு அஜீத் எங்கே கிளம்பினாலும், உங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டுத்தான் கிளம்புவாரு. அப்போ நீங்க, வையாபுரி, சார்லி, தாமு எல்லாரும்
Ôதல போல வருமா,
நீ பண்ற கொல போல வருமாÕனு பாடற பாட்டு பட்டிதொட்டியெல்லாம் பொளக்கும். உங்களுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல் விஜய்!’’
மாதேஷ் (விஜய்யிடம்): ‘‘தெளிவான திட்டத்தோடதான் வந்திருக்கானுங்க. நம்பியார், நாகேஷ்லாம்கூட இப்போ இந்த ரோல் பண்றதில்லை விஜய்.’’
விஜய்: ÔÔண்ணா, இல்லீங்ணா, இது சரியா வராதுங்ணா. பேசாம ‘சச்சின்’ படத்தை ‘சச்சின் \ கங்குலி’னு மாத்தி ரெண்டு பேரும் அதுல நடிப்போமாங்ணா!ÕÕ
கே.எஸ்.ரவிக்குமார்: ‘Ôம்ம்ம்... பண்ணிர லாம். நானே டைரக்ட் பண்ணிரட்டுமா!’’
தரணி (மெதுவாக): ‘Ôஆகா, சரமாரியா கால்ஷீட் வாங்கறாரே, இனி விடக்கூடாது. (சத்தமாக) ஆக்சுவலி இது காலேஜ் சப்ஜெக்ட். விஜய் ஸ்டூடண்ட். அஜீத் சீனியர் புரொபஸர். அடக்க முடியாத மொரட்டுக் குதிரையா வர்றார் விஜய். தொட்டா பத்திக்கும், தொடாட்டி தொத்திக்கும். அப்படிப்பட்ட விஜய்க்கு அஜீத்னா ஒரு அலர்ஜி... ஸாரி மரியாதை. சொல்ல மறந்துட்டேனே, அஜீத்துக்கு ஜோடியா பரவை முனியம்மா பண்றாங்க. டெர்ரிஃபிக் காரெக்டர்.ÕÕ
விஜய்: ÔÔஹை... கலக்குதுங்ணா!ÕÕ
சரண் (அஜீத்திடம் மெதுவாக): Ô‘சூன்யம் வைக்கப் பாக்கறானுங்க, வழக்கமா வெண்ணிறஆடை மூர்த்தி பண்ணிட்டிருந்த ரோல் உங்களுக்காம். சுதாரிங்க அஜீத்...ÕÕ
தரணி: ÔÔஅட... ஐஸ்வர்யா ராயையும் விஜய்யையும் சேர்த்துவைக்கப்போறதே, நீங்களும் பரவை முனியம்மாவும்தான் அஜீத்.ÕÕ
அஜீத்: ÔÔஇல்ல, இது நல்லால்ல. எல்லாரும் மரம் நடணும். தண்ணி ஊத்ணும். குப்பய ஒழுங்காப் பிர்ச்சிக் கொட்ணும். அதுமாதிரி நல்லா மெசேஜ் சொல்ற கதையா வேணும்.ÕÕ
கே.எஸ்: ‘Ôவழிக்கு வந்துட்டானுங்க, ஓகேம்மா... ஃபைனல் பண்ணிரலாம். நீங்க ரெண்டு பேரும் ரெட்டைக் குழந்தைங்க. யெஸ், ட்வின்ஸ்தான். ஒரு குழந்தை அஜீத், அவங்க அம்மாவான கலெக்டர்கிட்டேயும், இன்னொரு பையன் விஜய் ஒரு தாதாகிட்டேயும் வளர்றாங்கம்மா. ஊரெல்லாம் மரம் நடற கலெக்டரு பையன் ஒரு பக்கம், மரத்தடியிலேயே வாழற தாதா பையன் ஒரு பக்கம்...’’
தரணி: ‘‘கிழிச்சிருவோம். அவர் செடி நட வர்றார். இவர் மரத்தடியில் வழி மறிக் கிறார். ஒரு க்ளாஷ்... டென்ஷன் பில்டப். ரெண்டு பேரும் கிராஸாகிறாங்க. மொறைக்கிறாங்க. கிராஸாகிறாங்க. மொறைக்கிறாங்க. டென்ஷன் பில்டப். சேஸிங்... ஆக்ஷன்.ÕÕ
மாதேஷ்: ÔÔஏ...ஏய், என்னையும் சேத்துக்கங்கப்பா,
‘நண்பன் பேரு மதுர
நட்டுப்பாரு எதிர...
ஆங்... கிண்ணி வெச்சி
தண்ணி ஊத்து
ரெண்டு கன்னு எதுரÕ\னு விஜய்க்கு செம பாட்டப் போட்றலாம். பாஸ், ஸ்டோரி சிக்கிருச்சு பாஸ், வாங்க ஷ¨ட்டிங் போயிரலாம் பாஸ்!ÕÕ
அஜீத்: ÔÔஅப்படியே
‘உனக்கென்ன உனக்கென்ன...
எனக்கு நடவும் தெரியும்...
புடுங்கவும் தெரியும்...
உனக்கென்ன, உனக்கென்னÕனு ஒரு ஓபனிங் சாங் பண்ணிரலாமே விஜய்...ÕÕ
விஜய்: ÔÔபண்ணலாம், அப்பிடியே கவுண்டமணி சாரைக் காமெடிக்குப் போட்டு, முள்ளம்பன்றித் தலையா, புல்டோஸர் தலையா, ஓனிக்ஸ் தலையானு சும்மா அங்கங்கே ஜாலி பண்ணலாமா அஜீத்?ÕÕ
அப்போது அஜீத் செல்லடிக்கிறது. ÔÔஹலோ... என்னது பேட்டியா... எழுதிக் கங்க... எந்த பல்லியாலயும் என்னை அழிக்க முடியாது. நான் இன்மே ஊமையாதான் இர்ப்பேன். 2006&ல பார்ங்க ஆக்ஷன்தான்...ÕÕ என்று அஜீத் பேச ஆரம்பிக்க, அத்தனை பேருடனும் விஜய் எஸ்கேப்.
சிம்பு & தனுஷ் டிஸ்கஷன்...
சிம்பு: ÔÔஉலகம் ரொம்ப சின்னது. சென்னை அதைவிடச் சின்னது, கோடம்பாக்கம் கோலி குண்டு சைஸ் தான், இதுல ஸ்டூடியோவெல்லாம் கொசு அளவுதான்.... இதுல போயி நண்பன் என்ன... எதிரி என்ன?’’
ஏ.வெங்கடேஷ்: ‘‘இப்போ சிம்புவுக்கு ‘மன்மதன்’ ஹிட். தனுஷ§க்கு ‘மன்மதராசா’ ஹிட். ரெண்டையும் போட்டு ஆட்டி ‘மன்மதன்ஸ்Õனு ஒரு ஜிலுஜிலு பரபர ஸ்டோரி பண்ணிரலாமே.ÕÕ
சிம்பு: ÔÔஸ்கிரீன் ப்ளே நான் பண்றேன். சின்ன வயசுல என்னைச் சில்லு விளையாட்டுல ஏமாத்திட்டுப் போயிடுவா ஒரு பொண்ணு. அதுல மனசு உடைஞ்சி அவளை ஊரெல்லாம் தேடிட்டிருப்பேன். ஒரு நாள் அதே பொண்ணு தனுஷோட செஸ் ஆடிட்டு இருப்பா. எமோஷன்... மர்டர்... சிட்டி ஃபுல்லா மர்டர்ஸ்... எல்லாம் வயசோட, மனசோட விளையாடற கேர்ள்ஸ். பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜெனிஃபர் லோபஸ்னு சாங்ஸ் ரிச்சா பண்ணிருவோம். ஃபேஷன் டி.வி. பொண்ணுங்கதான் குரூப் டான்ஸர்ஸ். தியேட் டருக்குள்ள வந்தா ஆடியன்ஸ் ஷாக்காகிருவாங்க. Ôமுதல்ல யாரு சிக்குறாங்கறது முக்கியமில்ல. ஃபைனலா யார் குத்துறாங்கறதுதான் முக்கியம்Õனு ஒரு பஞ்ச் டயலாக் வெச்சிருக்கேன்.ÕÕ
தனுஷ்: (செல்வராகவ னிடம் மெதுவாக) ÔÔசெல்வாண்ணே... படத்துல எனக்கு செஸ், அவருக்கு செக்ஸா? நீ என்ட்ரி குடுத்து ஒரு கலக்கு கலக்குண்ணே.ÕÕ
செல்வராகவன்: ÔÔஆங், Ô19/பி, பாடாவதி காலனிÕனு டைட்டில் வெச்சுக்கலாம். அந்த காலனியில கீழ் வீட்ல தனுஷ், மேல் வீட்ல சிம்பு. நடுவுல உள்ள ஃப்ளாட்ல சோனியா அகர்வால்...ÕÕ
தனுஷ்: ÔÔபிச்சுட்ட பிரதர்!ÕÕ
செல்வராகவன்: ÔÔதனுஷ் சரியான தறுதல. தண்ணி, தம்மு, கஞ்சானு சுத்தற ரோக்கு. ஆனா, நீங்க ஜென்டில்மேன் சிம்பு... பளபளனு ஷேவ் பண்ணி, சேட்டு பையன் மாதிரி எப்பவும் நீட்டா சுத்தற நல்ல பையன்.ÕÕ
வெங்கடேஷ் (மெதுவாக சிம்புவிடம்): ÔÔஉங்க இமே ஜையே காலி பண்ணப் பார்க்கறானுங்க. ஜாக்கிரத...ÕÕ
செல்வராகவன்: ÔÔநீங்க பில்லியர்ட்ஸ், கோல்ஃப் கிளப் பார்ட்டி. ஆனா, ரோட்டோரமா சரக்கடிச்சிட்டுக் கிடக்கிற தனுஷைத்தான் சோனியா லுக் விட றாங்க. லவ் பத்திக்குது. Ôசரக்கடிக்கும் காலங்கள்... சைட் டிஷ் தீரும் நேரங்கள்...’னு முத்துக்குமாரை விட்டு கரகரனு எதையாச்சும் எழுதி வாங்கிரலாம். மான்டேஜஸ்ல லவ் பத்திக்குது...ÕÕ
ஏ.வெங்கடேஷ்: ÔÔஹலோ! அப்போ சிம்புவோட லவ்வு?’’
செல்வராகவன்: ÔÔஇல்லீங்க, அங்க ட்விஸ்ட் வந்துருது... தனுஷ§ம் சோனியாவும் திடுதிப்புனு அப்பாஅம்மா விளையாட்டு ஆடிடறாங்க. ஐ மீன் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிடறாங்க. இந்தக் கெட்டதை எல்லாம் பார்க்க முடியாம இன்டர்வெல்லுக்கு முன்னாடியே சிம்பு வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடறீங்க. பொயட்டிக்கான காரெக்டர்!ÕÕ
சிம்பு: ÔÔநோ, கதை கேக்கும்போதே எனக்கு மூக்குல ரத்தம் வருது. வேணாங்க... நானே இந்தப் படத்தை டைரக்ட் பண்ணிடறேன்....ÕÕ
அப்போது ÔÔஇணைஞ்சுக்கிட்டாங்க. எங்க பிள்ளைங்க, இனிமே இல்லை தொல்லைங்க, கௌம்பி வந்துட்டோம் டாடிங்க, பண்ணப் போறோம் சூப்பர் ஸ்டோரிங்க, டணக்கு ஆ ஜினுக்கு...ÕÕ பார்த்தால் விஜய டி.ராஜேந்தர் நிற்கிறார். பக்கத்தில் கஸ்தூரி ராஜா.
இதைக் கேட்டு ÔÔசமாதானமே வேண்டாம்டாÕÕ என அலறி ஓடுகிறார்கள் எல்லோரும்.










ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அதிரடி டியூஷன்!
வி.சி.டி. ஒழித்தது, விருதுகள் வழங்கியது என அடுத்தடுத்து அன்பு மழை பொழிவதால் கோடம்பாக்கத்துக்கு, அம்மாதான் இப்போ இஷ்டதெய்வம்! அதே சமயம், அரசு விருதுகள் வழங்கும் விழாவில், ‘எப்படியெல்லாம் சினிமா எடுக்கக்கூடாது’ என முதல்வர் அள்ளி வீசிய அட்வைஸ் மழையில் ஆடிப்போயிருக்கிறது கோடம்பாக்கம். அட்வைஸோடு நின்றுவிடாமல், இதை அழுத்தமாக டியூஷன் எடுத்து அமல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு ஆசை. உடனடி ஆக்ஷனில் மந்திரிகள் இறங்க, விஜயகாந்த் தலைமையில், நடிகர் படைக்கு அதிரடி டியூஷன் ஆரம்பம்...
விஜயகாந்த் (எடுத்த எடுப் பில்): ‘‘நேத்துக் கூட தண்ட்ராம்பட்டு பக்கத்துல, ஒரு குக்கிராமத்துல ‘நெறஞ்ச மனசு’ படத்தை கேபிள் டி.வியில போட்டுப் பாத்திருக் கானுங்க. போலீஸ் பொறப்பட்டுப் போயி, அவனுங்கள வளைச்சுப் பிடிச்சு செவுட்டுல போட்ருக்கு. அம்மா எடுத்த ஆக்ஷன்லதான் எங்களுக்குச் சோறு போட்டு மோரு ஊத்தற சினிமாவே இன்னிக்குப் பொழச்சு இருக்கு!’’
சிம்பு (மெதுவாக): ‘‘அட... அப்பிடி யாச்சும் உங்க படத்தை ஜனங்க பார்க்க றாங்களேனு பெருமைப்படுங்க!’’
விஜயகாந்த்: ‘‘ஆனா, இந்த டி.விக் காரனுங்க தொல்லைதான் தாங்கமுடிய லீங்க. நாங்க செத்துச் சுண்ணாம்பாகிப் படமெடுக்கிறோம். இவனுங்க கடப்பாறையை முழுங்கின மாதிரி, குஷன் சோபாவுல உட்காந்துக்கிட்டு ‘நெறஞ்ச மனசு கொறஞ்ச மனசு’னு எதுகை மோனையில எகனை மொகனையாப் பேசறானுங்க. அம்மா அவனுங்களுக்கும் ஆக்ஷன் ஆப்பு அடிக்கணும்ங்க!’’
ஜெ: ‘‘மிஸ்டர் விஜயகாந்த்! அப்படி நாலு பேர் பேசிடக்கூடாதேனுதான் இந்த டியூஷனே! என்ன இருந்தாலும் சினிமா என் தாய்வீடு இல்லையா... அதனால நான் சொல்ற மாதிரி சமத்தா நல்ல படம் எடுத்தீங்கன்னா, யாரும் உங்களைப் பத்தித் தப்பா பேசமாட்டாங்க. என்ன, சரியா?’’
‘‘ஓகே மேடம்!’’ என கோரஸ் குரல்கள்...
சிம்பு (மனசுக்குள்): ‘‘ஆகா, நாமெல் லாம் நடிகருங்களா இல்லே நர்ஸரி ஸ்கூல் பிள்ளைங்களானு தெரியலையே’’
ஜெ: ‘‘முதல்ல, படத்துல வன்முறை இருக்கக்கூடாது!’’
ஓ.பன்னீர்: ‘‘ஆமாம்மா! இப்பல்லாம் எவனைப் பார்த்தாலும் ‘ஏய்...ஏய்’னு குரல்வளையைக் கடிச்சுத் துப்புற மாதிரியே பேசிட்டு அலையறானுங்க. சத்தம் தாங்க முடியலீங்க!’’
பொன்னையன்: ‘‘ஆமா ஸ்டூடண்ட்ஸ்! இனிமே படத்துலகூடச் சண்டை போடாம நீங்கள்லாம் ஒத்துமையா இருக்கணும். குறிப்பா, காய்கறி மார்க்கெட் செட்டுக்குள்ளே யாருமே சண்டை போடக்கூடாது!’’
விஜய் (பதறி): ‘‘அய்யய்யோ... அஸ்தி வாரத்தையே ஆட்டிப் பார்க்கறீங்களே! ஆக்ஸிஜன் இல்லாமக்கூட வாழ்ந்துரு வோம். ஆனா, ஆக்ஷன் இல்லாம வாழ முடியாதுங்களேம்மா!’’
பொன்: ‘‘அப்புறம், இந்தப் பாழாப் போன பஞ்ச் டயலாக்கு! ‘ஏய்... வெளியில வந்தா வெளி மூலம், உள்ளே வந்தா உள் மூலம், உன் பேரு ஆதிமூலம், உன் சாவு என் மூலம்!’னு நாராசமா பேசறானுங்கம்மா! அதனால, இனிமே யாரும் பஞ்ச் டயலாக்கே பேசக்கூடாது. குண்டர் சட்டம் மாதிரி Ôபஞ்ச்சர் சட்டம்Õனு ஒண்ணு போட்டு, பஞ்ச் டயலாக் பேசறவங்களையெல்லாம் பிடிச்சு உள்ளே தள்ளி, லாடம் கட்ட ஏற்பாடு செய்யுங்கம்மா!’’
அஜீத் (அலறி): ‘‘இத்துல எனக்கு இஸ்டமில்ல! நான் நம்பர் ஒன்னா வர்றது, யார்க்கோ பிடிக்ல! அதான் இப்டிச் சட்டம் போட்டுச் சதி பண்றாங்க. ஆனா, நான் நம்பர் ஒன்னா வர்றதை ஆராலும் தடுக்க முடியாது!’’
ஓ.பன்னீர் (அவசரமாகக் குறுக்கிட்டு): ‘‘யம்மா! முதல்ல இவர் பேட்டி கொடுக் கறதுக்கு ஒரு தடைச் சட்டம் போட ணும்மா! நாட்டுக்குள்ள அவனவன் அடுத்தவேளை நாஷ்டாவுக்கு வழி இல்லாம அலையறானுங்க. இவரோட நம்பர் ஒன் டார்ச்சர் தாங்க முடியலை!’’
விஜய்: ‘‘கலக்கிட் டீங்ணா!’’
அஜீத் (ஆவேசமாகச் சுவரைப் பார்த்து): ‘‘ஏய்... தல இர்க்கும்போது வால் ஆடக்கூடாது!’’
விஜய்: ‘‘ஊய்... நான் வால் இல் லீங்ணா, வாளு!’’
பொன் (மெதுவாக): ‘‘பார்த்தீங்களாம்மா, இதெல்லாம் அடுத்த படத்துல டயலாக்கா வெச்சிருவானுங்க!’’
ஓ.பன்னீர்: ஆமா! இந்த அடிதடி, பஞ்ச் டயலாக் இதுக்கெல்லாம் இனிமே தடா! மீறி, எவனாவது கைய, காலைத் தூக்கிப் பேசினா, மிட்நைட் அரெஸ்ட் தான். ஜாக்கிரதை!’’
சத்யராஜ்: ‘‘அட, பார்றா ஒரு சிக்ஸர! கெரகம் கௌப்பிட்டீங்க!ÕÕ
பொன்: ‘‘வாங்கய்யா கோயம்புத்தூரு குசும்பரே! அம்மா, இந்தாளு மேடையில தான் வெள்ளைச் சட்டை போட்டுட்டு பகுத்தறிவு பேசறாரு. திரையில பார்த்தா தக்கனூண்டு பொண்ணுகூட Ôஉம்மா... உம்மம்மாÕனு செம டான்ஸைப் போடறாரும்மா! இவரு புள்ள சிபிராஜு ஆடவேண்டிய ஆட்டத்தையெல்லாம், இந்த வயசுல இவரு போட்டுட்டிருக் காரும்மா!’Õ
ஜெ: ‘‘ம்... கேள்விப்பட்டேன். மிஸ்டர் சத்யராஜ்! நீங்க எல்லோரையும் ஓவரா நக்கலடிக்கறீங்களாமே..?ÕÕ
ஓ.பன்னீர்: ÔÔஇப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா, இனிமே நீங்க ஊமைப் படம்தான் எடுக்கணும்னு சட்டம் போட்ருவோம். ஜாக்கிரதை!ÕÕ
சத்யராஜ் (மெதுவாக): ‘‘ஆஹா... திரும்ப நம்மளத் தெருக்கூத்துக்கு அனுப்பிடுவானுங்க போலயிருக்கே! பேசாம Ôஅமைதிப்படைÕ அமாவாசையா மாறிட வேண்டியதுதான்! (சத்தமாக) நக்கல் எல்லாம் ச்சும்மாம்மா! நமக்கு ரோல்மாடலே வாத்தியாரும் அம்மா நீங்களும் தான். நீங்க சமூகநீதி காத்த வீராங்கனை. பெண் பெரியார்! மங்கையாகப் பிறந்த மார்க்ஸ்!ÕÕ
ஓ.பன்னீர்: ‘‘விட்டா, இந்தாளு இன்னிக்கே மந்திரியாகிடுவாரு போல இருக்கே!’’
அப்போது தனது அந்நியன் ஜடா முடியை விக்ரம் உலுக்க... அது, பொன் னையன் மூக்கில்பட்டு, அவர் அடுத்தடுத்து தும்முகிறார்.
பொன் (கடுப்பாகி): ‘‘முதல்ல இந்தாளைக் குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய், சலூன்ல வெச்சு முடி வெட்டி விடுங்கப்பா..!ÕÕ
விக்ரம்: ‘‘ஹேய்... ஸாரிய்யா! ஸோ ஸாரி!ÕÕ
ஓ.பன்னீர்: ‘‘என்னா ஸாரி பூரினு! யம்மா, இவங்க அடிக்கிற கெட்\அப் கூத்தை முதல்ல ஒழிக்கணும். தலைக்கு கலர் டை அடிக்கறது, பல்லுக்கு பெயிண்ட் அடிக்கிறதுனு பயமுறுத்து றாங்க!ÕÕ
விக்ரம்: ‘‘நான் மட்டுமா கெட்\அப் மாத்தறேன். சூர்யாகூடத்தான் டிஸைன் டிஸைனா அலையறாரு... அவரைக் கேட்கமாட்டீங் களா?ÕÕ
சூர்யா (மனசுக்குள்): ‘‘ஆகா! மாட்டிவிட்டுட்டாரே!ÕÕ
ஓ.பன்னீர்: ‘‘அதே மாதிரி, இந்த சிம்பு இனிமே தலையில ஒரு பேண்டு கட்டறதை விடச் சொல்லுங்கம்மா. Ôஆ... ஊÕனா நெத்திக் கட்டைப் போட்டுக்கிட்டு சண்டை போடறது, பஞ்ச் டயலாக் பேசறது, ட்ரம்ஸ் வாசிக்கறதுனு இவர் அட்டூழியம் தாங்கமுடியலைம்மா!’’
சிம்பு: ‘‘அதாவது சார், ஃபிலிம் ரோல் இல்லாமக்கூட படம் எடுத்துரலாம். ஆனா ஸ்டைல் இல்லாம, இந்த சிம்பு என்ன சார் செய்வான்?’’ எனப் பதற, அதைப் பார்த்துச் சிரிக்கிறார் தனுஷ்.
பொன்: ‘‘என்ன தனுஷ§ சிரிக்கிறே? உங்க குடும்பத்துக்குத்தான் பெரிய லிஸ்ட்டே இருக்கு!’’
ஓ.பன்னீர்: ‘‘ஆமாம்மா! நடுராத்திரியில சுவரேறிக் குதிச்சு, ஹீரோயினோட பெட்ரூமுக்குள்ள ஹீரோ போறது மாதிரி இனிமே எடுக்கட்டும்... கஸ்தூரி ராஜாவைக் குடும்பத்தோட அரெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்!’’
ஓ.பன்னீர்: ‘‘கேப்டன்! உங்களுக்கும் தனியா சில கண்டிஷன் இருக்கு. நீங்க எத்தனை தீவிரவாதிங்களை வேணும்னாலும் பிடிச்சுக்குங்க... சுட்டுக்கங்க. ஆனா, அரசியல்வாதிகளைச் சுட்டுக்கொல்றது, அரசு ஊழியர்களைக் கடத்தறதுங்கறதெல்லாம் இனிமே கூடாது! அப்புறம் அஞ்சு இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு, கலர் கலர் சட்டையில மழையில ஆடக்கூடாது. அது சட்டம் ஒழுங்கைப் பாதிக்கிற செயல். ஆமா, சொல்லிப்புட்டோம்!’’
பொன்: ‘‘ஏம்மா, இவங்களைத் திருத்தணும்னா... நாமளே களத்துல குதிச்சாத்தாம்மா உண்டு. நாமளே ஒரு கதை இலாகா உருவாக்கி, அதுக்கு ஒரு அமைச்சரைப் போட்டு, தமிழ் சினிமாவுக்குக் கதைகள் சப்ளை பண்ணினா என்ன? பாட்டி வடை சுட்ட கதை, நரி திராட்சைப் பழம் தின்ன கதை, சிங்கமும் மாடும் கதைகளையெல்லாம் கொஞ்சம் மாடர்னாக்கி இவங்களை நடிக்க வெச்சோம்னா, பிள்ளைகளுக்கும் அது படமா இல்லாம பாடமா இருக்கும்ல?’’
தனுஷ் (மெதுவாக): ‘‘ஐயையோ! ஏ சர்டிஃபிகேட் படமெடுக்கிற எங்களை, ‘ஏ ஃபார் ஆப்பிள்’ படம் எடுக்க வெச்சிடுவாங்க போலிருக்கே!’’
ஓ.பன்னீர்: ‘‘அப்படியே ‘சந்திரமுகி’யிலே இருந்து ‘சச்சின்’ வரைக்கும் இருக்கிற கதையையெல்லாம் மாத்திட்டு, நாம தர்ற கதையைத்தான் இனிமே படமா எடுக்கணும்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிருவோம். ‘சந்திரமுகி’க்கு வேணும்னா இந்த மரவெட்டி, கோடாலி, தேவதை கதையைத் தந்துருவோம். ரஜினி தம்பி கொஞ்சம் மந்திர தந்திரக் கதைனா விரும்புவாப்ல!’’
பொன்: ‘‘அதேமாதிரி, குத்துப் பாட்டுங்கதாம்மா இப்ப கோடம்பாக் கத்தைப் பிடிச்சிருக்கிற பெரிய வியாதி. ஆளாளுக்கு அலப்பறை பண்றாங்க. அதனால ‘போடாங்கோ’, ‘அப்படிப் போடு’னெல்லாம் எழுதற கவிஞருங்களையெல்லாம் மடக்கிப் பிடிச்சு வேலூர், கடலூர், பாளையங் கோட்டைனு அனுப்பினாத்தாம்மா சரிப்படும். அதுக்கும்கூட இந்த நர்ஸரி ரைம்ஸ்களையே கொஞ்சம் மாத்தி எழுதிப் பாட விட்ருவோம்!’’
விஜய்: ‘‘ண்ணா, என்னங்ணா! நானும் த்ரிஷாவும் கட்டிப்பிடிச்சு ‘அம்மா இங்கே வா வா, ரெயின் ரெயின் கோ அவே!’னெல்லாம் பாடினா நல்லா இருக்காதுங்ணா!’’
பொன்: ‘‘சூ... சும்மா இருங்க! அம்மா, இந்த கலைஞர் வேற திரும்ப கதை, வசனம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அதனால, ஒரு நல்ல படம் எப்படி இருக்கணும்னு நீங்களே ஒரு படம் எடுத்தா என்ன? ‘கண்ணம்மா’ மாதிரி ‘அம்மம்மா’னு டைட்டில் வெச்சுக்குவோம். நீங்கதான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். ரஜினி, கமல், விஜயகாந்து, விக்ரம், விஜய், சிம்பு, தனுஷ்னு அத்தனை பேரையும் பிடிச்சுப் போட்ருவோம். வீரப்பன் என்கௌண்டர், ஜெயேந்திரர் கைதுனு அத்தனை சாதனைகளையும் போட்டுத் தூவி விட்டோம்னா, தேர்தல் நேரத்துல அடிச்சுத் தூக்கிர லாம்ல?’’
ஜெ: ‘‘ஓகே! இந்த ரூட்லயே மேற்கொண்டு பேசி முடிவு பண்ணுங்க. மிஸ்டர் விஜயகாந்த்! நீங்கதான் முன்னாடி நின்னு எல்லார் கால்ஷீட்டும் வாங்கணும், புரியுதா? ஓகே, கேரி ஆன்!’’ என்றபடி ஜெயலலிதா எழுந்து உள்ளே போக...
‘‘அடடா! அப்படி இப்படிப் பேசி அரசியலுக்கு வரலாம்னு பார்த்தா நம்மளை இப்படி Ôஆர்கனைஸிங்Õ வேலை பார்க்கவெச்சே காலி பண்ணிருவாங்க போலிருக்கே!’’ என அதிர்ச்சியில் உறைகிறார் விஜயகாந்த்.


‘‘பின்லேடனும் முஷ்ரப்பும் காஞ்சிபுரம் வந்திருக்கா!’’
‘‘நாளை நடப்பது யாருக்குத் தெரியும்... நடந்து பார்த்தால் நாடகம் புரியும்!’’ சோகமான குரலில் பாடியபடியே அதிகாலையில் மெரீனா கடற்கரையில் விறுவிறுவென நடந்துகொண்டிருக்கிறார் வைகோ. அப்போது ‘‘நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும்!’’ என்று கோரஸ் குரல்கள். ‘‘யார்றா அது என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடறது?’’ என்றபடி வைகோ டென்ஷனாகத் திரும்ப, அங்கே டி&ஷர்ட், பெர்முடாஸ், கேன்வாஸ் ஷ¨ சகிதம் வாக்கிங் காஸ்ட்யூமில் கைகோத்தபடி நிற்கிறார்கள் ராமதாஸ§ம் தொல்.திருமாவளவனும். ‘வந்துட்டாங்கப்பா... பிரியாத பிரதர்ஸ்!’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொள்கிற வைகோ சட்டென்று பிரகாசமாகச் சிரிக்கிறார்.
வைகோ: ‘‘அட நீங்களா? நான் பத்திரிகைக்காரங்களோனு நினைச்சேன்.’’
திருமா: ‘‘இதப்பார்றா. எங்ககிட்டயே பில்டப்பா? அரசியல்வாதிகளுக்குத் தான் இப்போ தமிழ்நாட்டுல மரியாதையே இல்லாமப்போச்சே. பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் அத்தனை பேரும் இப்போ கோர்ட்டு, கோடம் பாக்கம்னு பிஸியா திரியறாங்களே. ஊர் உலக நெலவரம் கேட்கலாம்னு போன் பண்ணினாகூட, நம்ம நம்பரைப் பார்த்துட்டு கலவரமாகி கட் பண்ணிடறானுங்க. அட, கடல் கடந்துபோயி இலங்கைப் பிரதமரை நான் பார்த்துட்டு வந்தேன். சொர்ணமால்யா பேட்டியை நாலு பக்கத்துக்கு கலர் போட்டோவோட போடறாங்க. அதுல ஒரு ஓரமா நம்ம இலங்கை மேட்டரை பிளாக் அண்டு ஒயிட்ல பிட் நியூஸா போடறாங்க. கொடுமையா இருக்குங்க!’’
ராமதாஸ்: ‘‘நான் என்ன நினைக் கிறேனோ, அதையே பேசிவிடுகிறார் தம்பி திருமா. நாட்டுக்குள்ள கண்ணு முன்னாடி என்னென்னமோ நடக்குது. கருத்துச் சொல்ல வாய் துடிக்குது. ஆனா, கேட்க எவனும் வரமாட்டேங்கிறானே!’’
அப்போது ‘‘நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றுமில்லை’ என மூன்றாவது குரல்... பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி நிற்கிறார் கிருஷ்ணசாமி.
திருமா (மெதுவாக): ‘‘வந்துட்டாருப்பா சேல்ஸ் ரெப்பு!’’
கிருஷ்ணசாமி: ‘‘ஆமாங்க... நாட்ல எல்லாமே மேஜிக்கா நடக்குது. நம்மகிட்டே ஒரு வார்த்தைகூட சொல்லாம வீரப்பனைச் சுட்டுக்கொல்றானுங்க, வீராணம் தண்ணியைக் கொண்டுவர்றானுங்க, திருட்டு வி.சி.டி&யை ஒழிக்கிறானுங்க. எதிலேயும் நம்ம கருத்து என்னனு சொல்லவே வாய்ப்புத் தரமாட்டேங்கறானுங்க. சரினு அதைப் பொறுத்துக்கிட்டா, அடுத்த வாரமே அதிரடியா தனுஷ் & ஐஸ்வர்யா கல்யாணம் நடக்குது. இதுக்காவது கருத்து சொல்லலாம்னு பார்த்தா சிம்புவைப் பேட்டியெடுத்துப் போட ஆரம்பிச்சிட்டானுங்க. சதுர்வேதி சாமியார் கைதுக்கு என்ன சொல்லலாம்னு யோசிச்சிட்டிருக்கும்போதே, இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையா ராவோட ராவா ஜெயேந்திரரை ஃப்ளைட் வெச்சி தூக்கிட்டாங்க.’’
திருமா: ‘‘அதுலயும் நமக்கு ரோலே இல்லாம பண்ணிட்டானுங்களேப்பா. அப்பு எஸ்கேப், கதிரவன் பல்டி, ரகு வாக்குமூலம், ரவி சுப்பிரமணியம் தலைமறைவுனு எல்லாப் பத்திரிகையும் பக்கத்துக்குப் பக்கம் போட்டுப் பொரிக்கறானுங்க.’’
ராமதாஸ்: ‘‘போலீஸ§க்கு நடுவுல இந்த ஜெயேந்திரரு வெறிச்ச பார்வையோட அலையறதை போட்டோ எடுத்துப் போடறாங்க. அவரு பாய்ல ஒருக்களிச்சுப் படுத்து இருக்கற ஸ்டில்லைப் போட்டு விசாரணையில் என்ன நடந்ததுனு விலாவாரியா எழுதறாங்க. நடக்கற கூத்துக்கு நடுவுல நம்மளை ஒரு பயலும் கண்டுக்க மாட்டேங்கறானே... இந்த கலைஞர் பரவாயில்ல, தினமும் டி.வி&யில வந்து ‘சங்கராச்சாரியார் கைதில் உள்நோக்கம் இருக்கலாம், இல்லாமலும் போக லாம்!’னு மாத்தி மாத்தி எதையாவது பேசி, தினம் நியூஸ்ல வந்துட்டே இருக்காரு.’’
கிருஷ்: ‘‘நடக்கறதை எல்லாம் பார்த்தா, எங்கே நாம் எல்லாம் அரசியல் அனாதைகளாகிடு வோமோனு பயமாயிருக் குங்க.’’
வைகோ: ‘‘அட! என்னங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு. பேசாம இந்த வாக்கிங்கை இப்பவே நடைப் பயணமா மாத்திருவோமா. நாலு பேரும் சேர்ந்து நடந்தோம்னா, ‘சாமியார்களின் அட்டகாசத்தை எதிர்த்து சரித்திர நடைப் பயணம்’னு கரண்ட் டாபிக்ல கலக்கிடலாம். என்ன சொல்றீங்க?’’
திருமா: ‘‘அய்யய்யோ... வைகோ அண்ணே! முதல்ல இந்த நடைப்பயண மேனியாவை விட்டு ஒழிங்க. சபரிமலை, வேளாங்கன்னிக்கு மாலை போடறவன் கூட வருஷத்துக்கு ஒரு தடவைதான் நடக்கறான். நீங்க என்னடானா கேப் கெடைச்சா கேன்வாஸை எடுத்து மாட்டிடறீங்கனு பெரிய புகார் இருக்கு!’’
ராமதாஸ்: ‘‘ஆமா வைகோ... முதல்ல நாம நியூஸ்ல வர்றதுக்கு என்ன பண்றது... அதுபத்தி ஒரு முடிவு பண்ணுவோம்.’’
கிருஷ்: ‘‘சட்டுபுட்டுனு மூணாவது அணியை அமைப்போம். பனகல் பார்க்ல மேடையைப் போட்டு ஒருத்தர் கையை ஒருத்தர் கோத்துப் பிடிச்சுட்டு ஒரு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம்னா... கலைஞரும் ஜெயலலிதாவும் பயந்து போயிருவாங்க!’’
ராமதாஸ் (மெதுவாக): ‘‘இந்த கிருஷ்ணசாமிக்கு வேற வேலை இல்லை... யார் கையையாவது பிடிச்சு போஸ் கொடுத்தா போதும்னு அலையறாரு... (சத்தமாக) மூன்றாவது அணியெல்லாம் தேர்தல் வரும்போது பார்த்துக்கலாம். இப்ப உடனடியா எதைவெச்சு அரசியல்பண்ணலாம்னு சொல் லுங்கப்பா...’’
திருமா: ‘‘என்னத்த... ஒரு மேட்டரும் சிக்கலையே? ‘தமிழ்ப் படத்துக்கெல்லாம் தமிழ்ப் பேர்தான் வைக்கணும்’னு சொன்னோம். உடனே எல்லா பயகளும் அதை ஏத்துக்கிட்டு, ‘ஓகே, வெச்சுடறோம்’னு பேரை மாத்திட்டானுங்க. போராட்டம், ஆர்ப்பாட்டம்னு ஒரு த்ரில்லே இல்லாமப் போச்சுங்களே.’’
கிருஷ்: ‘‘ஆனா, கமல் மாத்தலியே! ‘மும்பை எக்ஸ்பிரஸ்’னு முறுக்கிட்டு நிக்கறாரு. இங்கிலீஸ் பேரைப் பத்திக்கூட கவலை இல்லை. ‘வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ்Õனு தமிழ்நாட்டு வண்டிங்க பேரை வைக்கலாம்ல. அட! Ôஇந்தியன் எக்ஸ்பிரஸ்Õனு பொதுவாகூட வை. அது என்னா Ôமும்பை எக்ஸ்பிரஸ்Õ? இதை எதிர்த்து இந்திய அளவில் அரசியல் டார்ச்சரை ஆரம்பிச் சிருவோமா?’’
திருமா (மெதுவாக ராமதாஸிடம்): ‘‘ரஜினி, விஜயகாந்துன்னாச்சும் நம்ம ஏரியா. கமல்னா இவருக்குத்தான் பட்டா போட்டு வெச்சிருக்காரு. பேட்டி, கூட்டம்னு இவரே போட்டுப் பின்னுவாரு. நமக்கு கெஸ்ட் ரோல்கூட கொடுக்க மாட்டாரு. அது மட்டுமில்லாம கமலை எதிர்த்து நாம ஏதாவது பேசினோம்னா, உடனே அவர் நமக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சிருவார். வேணவே வேணாம். நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.’’
ராமதாஸ்: ‘‘இந்திய கிரிக்கெட் அணியை எதிர்த்துப் பெரிய அளவுல போராட்டம் நடத்த என்கிட்டே சூப்பர் ஐடியா இருக்கு!’’
வைகோ: ‘‘என்ன என்ன?’’
ராமதாஸ்: ‘‘அதாவது ஆஸ்திரேலியா கிட்டே நம்மாளுங்க ஆப்பு வாங்கறானுங்க. ஆனா, வங்கதேசத் துக்கு போய் ரிவிட் அடிக்கறானுங்க. வலிமையானவங்ககிட்ட அடி வாங்கிட்டு, எளிமையானவங்களை மிதிக்கறது எந்த ஊரு நியாயம்? ஒரு இளிச்சவாயன் சிக்குனா உலக ரெக்கார்டெல்லாம் பண்ண ஆரம்பிச் சிடறானுங்க. இதை எதிர்த்து, இந்திய அளவுல ஆர்ப்பாட்டம் தொடங்கிருவோம்!’’
திருமா: ‘‘அட சூப்பர்! அப்ப இனிமே நம்மளை எதிர்த்து கங்குலி, சச்சினெல்லாம் பேட்டி கொடுப்பாங் களா. ஹை ஜாலி!’’
அப்போது ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்நான்’ என ஒரு புதுக் குரல். குரல் வந்த திசை பார்த்து அதிர்கிறார்கள் நால்வரும்.
திருமா: ‘‘ஆஹா... தமிழ் சினிமா க்ளைமாக்ஸ்ல போலீஸ் வர்ற மாதிரி, அடிக்கடி காமெடி கிளப் க்ளைமாக்ஸ்ல இந்த சுப்பிரமணியம் சுவாமி வந்துடறாருப்பா...ÕÕ
சுவாமி: ‘‘மூணா வது அணி அமைக் கறதெல்லாம் சும்மா ஜுஜுபி. உங்களை நேஷனல் லெவல்ல கொண்டு போறேன். நான்தான் பிரதமர். வைகோ துணைப் பிரதமர்... ராமதாஸ் உள்துறை அமைச்சர்...திருமாவளவன், கிருஷ்ணசாமியை எல்லாம் காபினெட்ல போட்டுக்கலாம்.’’
திருமா: ‘Ôஎன்னாது?ÕÕ
சுவாமி: ‘‘எப்படினு கேளுங்கோ. ஆக்சுவலி சங்கர்ராமனைக்கொன்னது அல்கொய்தா இயக்கம். இந்த அப்பு இருக்கானே... அவன் பின்லேடனோட தூரத்துச் சொந்தம். அதாவது மூணுவிட்ட சித்தி மகன். பின்லேடனும் முஷ்ரப்பும் மாறுவேஷத்துல காஞ்சிபுரம் வந்து தங்கி, மாஸ்டர் பிளான் போட்டுத் தந்திருக்கா. ஆன் தி வே அவா சோனியாகாந்தி வீட்ல டிபன் சாப்பிட்டு வந்ததுக்கும் என்கிட்டே ஆதாரம் இருக்கு. அப்புவையும் ரவி சுப்பிரமணியத்தையும் இப்ப சோனியா கொண்டுபோய் டோனி பிளேர் வீட்லபதுக்கி வெச்சிருக்கா. இப்ப ஜெயில்ல இருக்கறது ஜெயேந்திரரேஇல்ல. ஒரிஜினல் ஜெயேந்திரரை ஆப்கானிஸ்தான் குகைக்கு உள்ள அடைச்சி வெச்சிருக்கா. அப்புறம்...’’
திருமா: ÔÔஒன் டு த்ரீ... விடு ஜூட்!ÕÕ
அலறியடித்து அத்தனை பேரும் ஓடுவதைப் பார்த்து, ‘‘கொஞ்சம் கேப் விட்டா கூடிப் பேசிடுவீங்களே. விட்டுருவேனா நானு!’’ என சிரிக்கிறார் சுவாமி.



















பாவியல்ல காவி... போலீஸல்ல போலி!
‘‘தேரை இழுத்துத் தெருவுல விட்ட மாதிரி, நம்மை கோர்ட்டு, கேஸ§னு அலையவிட்டுட்டு, இந்த பிரஸ்சும் போலீஸ§ம் ஜெயேந்திரர் பின்னால ஓடிட்டாங்க! நாம இதைச் சும்மாவிடக் கூடாது!’’ என்ற கோஷம் கேட்கிறது.
‘சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் சங்கம் உங்களை வரவேற் கிறது’ என்ற பேனர் காற்றில் டான்ஸாட, ஒரு கல்யாண மண்டபத் தில் நடக்கிறது மீட்டிங். கம்பீரமாக மைக் பிடிக்கிறார் பிரேமானந்தா!
பிரேமானந்தா: ‘‘ராஜா! நாமெல்லாம் இந்த சமுதாயத்தால பாதிக்கப்பட்ட பரிதாப ஜீவனுங்க. சின்னதா ஏதோ தப்புப் பண்ணினோம்தான். ஆனா, பின்லேடனெல்லாம் ஃபிரீயா திரியற உலகத்துல, நம்மளை மட்டும் இப்படிக் கட்டம் கட்டி, காலி பண்ணிருச்சே இந்தச் சமுதாயம் என்ற முறையிலே என் கன்னி உரையைத் துவங்குகிறேன்!
இந்த இனிய வேளையிலே, நமது சங்க உறுப்பினர் தேத்தாகுடி தேவதை, அண்ணாச்சிக்கு ஆப்படித்த அல்லி ராணி ஜீவஜோதி அவர்களே! (கைதட்டலில் அரங்கம் அதிர்கிறது. அண்ணாச்சியும் புரியாமல் விசிலடிக்கிறார்), மதுரை தந்த மந்தாகினி, சுடிதார் சுராங்கனி, கஞ்சாவுக்கும் அஞ்சாத சின்ன ராணி செரீனா அவர்களே! (கைதட்டல்), காக்கிவாடன்பட்டி காட்டன் மின்னல், பல காக்கிச் சட்டைகளுக்குக் கறுப்பு சோப்பு போட்டு வரலாறு படைத்து வரும் எங்கள் எம்.எல்.எம். ஏஞ்சல், ஜில்ஜில் ராணி ஜெயலட்சுமி அவர்களே! (உய் உய் என விசில் ஒலிகள்), லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் மாம்பலத்து மாமா, மஜாராஜா சதுர்வேதி அவர்களே! இது அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல இந்த சங்கம் உருவாக, தூணாக நின்று பாடுபட்ட காதல் இளவரசன், கதராடை ரோமியோ, அன்பிற்கினிய அண்ணாச்சி அவர்களே! உங்கள் அத்துணை பேரையும் வருக வருக என இரு கரம் கூப்பி, மனமார வரவேற்கிற அதே வேளையிலே...’’
சதுர்வேதி (டென்ஷனாகி): ‘‘யோவ் சாமீ. இது என்னா கட்சி மீட்டிங்கா? என்னமோ பொலிட்டிசியன் போல பொளக்குறியே... மொதல்ல நம்ம பிரச்னையைப் பேசுப்பா!’’
இதைக் கேட்டு, கடுப்பாகிறார் பிரேமானந்தா.
பிரேமா: ‘‘என்னா சதுர்சாமி... எனக்கேஎன்கௌண்ட்டர் கொடுக்கறியா? சாமியாருங்க கேஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டதே இந்த பிரேமானந்தாதான்... தெரிஞ்சுக்கோ ராஜா!’’
அண்ணாச்சி (குறுக்கிட்டு): ‘‘அடடா முருகா! இப்படி நம்ம பார்ட்டி ஆளுங்களே அடிச்சிக்கிட்டா எப்படி? நாம எல்லோரும் ஏதோ ஒரு விதத்துல இந்த சமுதாயத்தால பாதிக்கப்பட்டு கேஸ§, கோர்ட்டுனு நாறிட்டோம். என்னை விடுங்க. இந்த ஜீவஜோதி தங்கமான பொண்ணுப்பா. அதைப் போயி சிம்ரன் ரேஞ்சுக்குப் பரபரப்பாக்கிவிட்டு எங்க பொழப்பை கெடுத்துட்டானுங்கள்ல. (ஜீவஜோதியிடம் ஹஸ்கி வாய்ஸில்) என்னா ஜீவா... நான் சொல்றது கரெக்ட் தானம்மா?’’
ஜீவஜோதி: ‘‘நீங்க எத்தனை தடவை கேட்டாலும் நான் அதையேதான் சொல்வேன், ‘அண்ணாச்சி ஒரு குள்ளநரி, மோடிமஸ்தான், போர்ஜரி!’’
பிரேமா (அண்ணாச்சியிடம் மெதுவாக): ‘‘எனக்கே டென்ஷனாவுது! எப்பிடிச் சமாளிச்சீங்க அண்ணாச்சி? (சத்தமாக) போதும் ராஜா போதும். குடுத்த பேட்டி, கும்பிட்ட போஸ், வாங்கின வசவெல்லாம் போதும். ஊர்ல உலகத்துல எல்லாரும் யோக்கியனுங்க, நாம மட்டும்தான் தப்பு பண்ணின மாதிரி, வெளியில எல்லாரும் திட்றாங்க, கேலி பேசறாங்க. தலை காட்ட முடியலை. தங்கச்சி ஜெயலச்சுமி... நீ ஏதாவது பேசும்மா!’’
ஜெயலட்சுமி: ‘‘ஒருதடவை இன்ஸ்பெக்டர் மலைச்சாமியோட சேர்ந்து சென்னைக்கு போனேனா, அங்கே எனக்கு ஷாக்கு. அப்புறம் இளங்கோவன் என்னைத் தேக்கடிக்குக் கூட்டிட்டுப் போனாரா... அங்கேயும் அதிர்ச்சி காத்திருந்தது. இன்னொரு டி.எஸ்.பி. கொடைக்கானல் கூப்பிட் டார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு மூணெழுத்து க்ரைம் பிராஞ்ச் ஆபீஸரு தூத்துகுடிக்குத் தூக்கிட்டுப் போயிட்டாரு. நடுங்கிப் போயிட்டேன்...’’
அண்ணாச்சி: ‘‘அய்யய்யே... அதெல்லாம் தொடர்கதையில எழுதிக்கம்மா. இங்கே சங்கத்துப் பிரச்னையைப் பேசும்மா.’’
ஜெயலட்சுமி: ‘‘முதல்ல இந்த மீடியாக்காரங்க தொல்லையை ஒழிக்க ணும் சார். மத்தியானம் காக்காவுக்கு சாதம் வைச்சா, போட்டோ பிடிச்சி ‘கா கா கா... கத்துகிறார் ஜெயலட்சுமி’னு கவர் ஸ்டோரி போடறாங்க. நேத்து ஒரு நிருபர் போன் போட்டு ‘ஸாரிங்க, இடையில கொஞ்சம் பிஸியாகிட்டேன். இப்ப அங்கதான் வந்திட்டிருக்கேன். எதாவது சமையல் குறிப்பு எழுதி வைங்க... போட்ருவோம்!’ங்கறாரு’’
ஜீவஜோதி: ‘‘ஆமா ஜெயாக்கா! என்கிட்டேயும் பல பேரு போன் பண்ணி ‘வீரப்பன் என்கௌண்டர் பத்தி என்ன நினைக்கிறீங்க?’, ‘புஷ் ஜெயிச்சது பத்தி உங்க கருத்து என்ன?’னு எதையாச்சும் கேட்டு இம்சை பண்றாங்க.’’
செரீனா (விசும்பியபடி): ‘‘ம்...ம்... என்னை மாதிரி கேர்ள்ஸெல்லாம் காஃபி ஷாப், பிரௌஸிங் சென்டர், பியூட்டி பார்லர்னு சுத்தும்போது நான் மட்டும் ஜெயிலு, கோர்ட்டுனு அலையறேன். டி.வி&யில காம்பியரிங் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, நியூஸ்லதான் என்னைக் காட்றாங்க!’’
சதுர்: ‘‘நீங்க ஓசி பப்ளிசிட்டியில பின்னிட்டீங்க. பாவி எனக்கு அதுலயும் பாதி அதிர்ஷ்டம்தான். ரெண்டு நாளுகூடத் தலைப்புச் செய்திகள்ல வரலை. அதுக்குள்ள இந்த ஜெயேந்திரரு கொலைக் கேஸ§ல சிக்கிட்டாரு. நம்மளை அம்போனு விட்டுட்டு, மொத்த பேரும் அவரை ரவுண்ட் கட்டிட்டாங்க.’’
பிரேமா: ‘‘என்னமோ நீ கின்னஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு அதுக்கு கிரெடிட் கிடைக்காதது மாதிரி அலுத்துக்கறே? வேணாம் ராஜா! நிறுத்திக்க... நடந்தது நடந்து போச்சு. இனிமே நம்ம சங்கத்து சார்பா எல்லாருமாச் சேர்ந்து புதுசா ஒரு தொழில் தொடங்கி நம்ம களங்கத்தைத் துடைச்சா என்னா?’’
ஜெயலட்சுமி: ‘‘சூப்பர்! இருக்கவே இருக்கு எம்.எல்.எம். பிஸினஸ். சூப்பரான பிஸினஸ். நீங்க எல்லோரும் அதுல சேர்ந்துடுறீங்களா?’’
அண்ணாச்சி (அலறி): ‘‘அய்யய்யோ... மனம் திருந்தி நிக்கிற மனுசனை மல்ட்டி லெவல்ல கலக்கிறாதீங்க முருகா!’’
சதுர்: ‘‘அப்படின்னா நாம எல்லாரும் நேபாளம், பூடான்னு தப்பிச்சிப் போயிருவோம். ஆசிரமம் கட்டுவோம். காவி உடுத்துவோம். ஜாலி பண்ணுவோம்.’’
பிரேமா: ‘‘அடப்பாவி... மாம்பலத்துல மஜா பண்ணினது போதாதுனு, இப்ப இன்டர்நேஷனல் லெவல்ல பிராடு பண்ண ப்ளான் போடறியா? வாய்லேர்ந்து லிங்கம் எடுத்த நானே காலை டிபனுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி எடுக்க முடியாதானு ஜெயிலுக்குள்ள தவிச்சுக் கெடக்கறேன். இவனை நம்பாதீங்க ராஜா!’’
செரீனா: ‘‘ஒரு ஐடியா! நாம எல்லாரும் சேர்ந்து ஒரு மெகா சீரியல் எடுத்தா என்ன?’’
அண்ணாச்சி: ‘‘சூப்பர் முருகா! ‘அண்ணாச்சி’னு டைட்டில் வெச்சிடுவோம். நான்தான் ஹீரோ, ஜீவா ஹீரோயின், செரீனா எனக்குக் கொழுந்தியா, ஜெயலட்சுமிக்கும் ஒரு செம கேரக்டர் மனசுல வெச்சிருக்கேன்...’’
அப்போது, ‘‘அற்புதமான யோசனை. பகவான் சித்தப்படி நல்லதே நடக்கும். ஆனால் யோசனையில் சிறிய மாற்றம்’’ என்ற குரல் கேட்டு திரும்பினால், அங்கே குபீர் விசிட்டராக குட்டிச் சாமியார்.
குட்டிச்சாமியார்: ‘‘இந்த சங்கம் பற்றி கேள்விப்பட்டேன். சங்கத்திற்கு கௌரவ ஆலோசகராக இருக்கும்படி பகவான் கனவில் வந்து கட்டளையிட்டார். ஆகையால்தான் ஓடோடி வந்தோம்.’’
பிரேமா: ‘‘வா ராஜா வா. ஆடு ராஜா ஆடு. உனக்கெல்லாம் இன்னும் டயம் இருக்கு. அப்புறம் தெரியும் எங்க கஷ்டமெல்லாம்.’’
குட்டிச்சாமியார்: ‘‘கலங்காதீர்கள். ‘அதர்மத்தின் வாழ்வுதனை நீதி கவ்வும். அதர்மம் மறுபடி வெல்லும்!’னு கிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதே!’’
பிரேமா: ‘‘அட்றா அட்றா அட்றா!’’
குட்டி: ‘‘அந்த கிருஷ்ண பரமாத்மாவே Ôநான் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்ன மாதிரி!’ என்று பகவத்கீதையில் சொல்லியிருக்கிறாரே’’
பிரேமா: ‘‘புட்றா புட்றா புட்றா!’’
குட்டிச்சாமி: ‘‘ஒரு சேனல்காரா என்னைப் புதுசா புரொக்ராம் பண்ண கூப்பிடறா. நாம எல்லோருமா சேர்ந்து அந்த புரொக்ராம் பண்ணு வோம். நீங்கள் நடந்தது என்ன என்று சொல்லி, என் காலில் விழுந்து புரண்டு, கதறி அழுங்கள். ஆசி கேளுங்கள். என் புகழ் பரவும். கமர்சியல் பிரேக்கில் விளம்பரங்கள் போட்டால், உங்களுக்கும் அது பிஸினஸாக இருக்கும். பார்ட்னர்ஷிப்பில் பண்ணுவோம். ‘கதையல்ல நிஜம்’ மாதிரி ‘பாவியல்ல காவி, போலீஸல்ல போலி!’னு டைட்டில் வெச்சிக்குவோம்.’’
பிரேமா: ‘‘ஆஹா... லிட்டில் ராஜா. எங்க வாழ்க்கையை இன்னும் சந்தியில இழுத்துவிடப் பார்க்கறியே..! பொடிப்பய வெடி வெச்சிருவான் போலயிருக்கு. சங்கம் கலைஞ்சாச்சு! எல்லாரும் ஓடிடுங்கப்பா!’’
என பிரேமானந்தா ஓட, மற்றவர்களும் ஓடுகிறார்கள்.


மாமா\மாப்ளே ஒரு தீபாவளி!
2005&ம் வருடம். தீபாவளித் திருநாள்.
ஜாலியும் கேலியுமாக செம ரகளையில் தனுஷ் வீடு. மனைவி ஐஸ்வர்யாவுடன், பட்டு வேட்டி\சட்டையில் தனுஷ் கம்பி மத்தாப்பு கொளுத்திக்கொண்டிருக்கிறார். படுஉற்சாகமாக புதுத் துணி வாசனையுடன் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது குடும்பம். இத்தனை கலகலப்புக்கு மத்தியிலும், அப்படியே அழுக்காய்த் திரிகிற செல்வராகவனைப் பார்த்து டென்ஷனாகிறார் கஸ்தூரிராஜா.
கஸ்தூரி: ‘‘டேய் செல்வா! தீபாவளியும் அதுவுமா இப்பிடி அழுக்கு மூட்டையா உட்கார்ந்திருக்கியேடா. சின்னவனைப் பாரு... எப்படி நீட்டா இருக்கான்! அவனைப் பார்த்தாவது திருந்துடா. போ... போய் முதல்ல குளி!’’
செல்வராகவன் (கடுப்பாகி): ‘‘யப்பா... அவன் குடும்பஸ்தன். அப்படித்தான் இருப்பான். நானெல்லாம் பேச்சுலர். ஃபிரீயா விட்ரு. சும்மா நை நைங்காம போயிட்டேயிரு!’’ என்றபடி டி.வி&யில் மும்முரமாகிறார். தனுஷ் பக்கம் திரும்புகிற கஸ்தூரிராஜா முகம் மலர்கிறார்.
தனுஷ்: ‘‘அப்பா... மாமா போன் பண்ணினாரு. தலை தீபாவளிக்கு அழைச்சிட்டுப் போக வர்றாராம்.!’’
அப்போது வாசலில்,
‘‘ஐஸ§க்கு செல்ல ஐஸ§க்கு & புது
சிறகு முளைத்தது
தனுஷ§க்கு மாப்ள தனுஷ§க்கு & செம
யோகம் அடித்தது
சூப்பர் ஸ்டார் வீட்டுப் பொண்ணுய்யா & இப்ப
கஸ்தூரி மாட்டுப் பொண்ணுய்யா...’’
\ என்ற பாட்டு சத்தம். வேட்டி\சட்டை காஸ்ட்யூமில் கையில் தூக்கு வாளி, தோளில் வாழைப்பழத் தார் என டிபிக்கல் அப்பா கெட்டப்பில் வந்து நிற்கிறார் ரஜினி.
கஸ்தூரி: ‘‘அடடா... ‘வானத்தைப் போல’ விஜயகாந்த் மாதிரி வந்திருக் கீங்களே சம்பந்தி!’’
ரஜினி: ‘‘ஏய் ஏய்... சமமா உட்கார்ந்து சாப்பிட்டா சம பந்தி. சாந்தமா பேசினாதான் சம்பந்தி. (தனக்குள்) வாவ்... இந்த டயலாக் அடுத்த படத்துக்கு தேறும் போலிருக்கே?’’
அப்பாவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்கிறார் ஐஸ்வர்யா. மகளை அணைத்தபடி,
ரஜினி: ‘‘தோ பாரு கண்ணா... பொண்ணும் வாழைப்பழமும் ஒண்ணு. காய்க்கிறது பிறந்த வீட்ல... இனிக்கிறது புகுந்த வீட்ல... இப்புடுச் சூடு!’’
அப்போது பல் துலக்கியபடியே அந்த இடத்தை செல்வராகவன் க்ராஸ் செய்ய, கடுப்பாகிறார் கஸ்தூரிராஜா.
கஸ்தூரி: ‘‘டேய், இன்னும் குளிக் கலியாடா? சம்பந்தி முன்னால மானத்தை வாங்கறியேடா!?’’
செல்வ (ரஜினியிடம்): ‘‘ஹாய் மாம்ஸ்! காதல் மாயை, கல்யாணம் மாயை, வாழைத்தார் மாயை, வாழ்க்கை மாயை...’’ என்றபடி போகிறார்.
கஸ்தூரி: ‘‘இப்படித்தான் சம்பந்தி. பய புள்ள யார் கூடவும் ஒட்டமாட்டேங்கிறான். பிட்டு பிட்டா பேசறான். உங்க ஸ்டைல்லயே அலையறான். எனக்கு ஒரு பக்கம் பெருமையாவும் இருக்கு, இன்னொரு பக்கம் பயமாவும் இருக்கு!’’
அப்போது ரஜினியின் செல்போனில் எஸ்.எம்.எஸ். வர, எடுத்துப் பார்க்கிறார். ‘ஜக்குபாய் என்னாச்சு? & கே.எஸ்.ரவிக்குமார்.’ அதே நேரம் தனுஷ் செல்லில், ‘ஓடிப்போலாமா... என்னாச்சு? & கே.எஸ்.ரவிக்குமார்’ என்ற மெஸேஜ். இருவரும் அதிர்ந்து நிமிர, கே.எஸ்.ரவிக்குமார் எண்ட்ரி!
ரஜினி: ‘‘ஹேய்... ரவி! இப்பதான் உங்களைப் பத்தி நினைச்சேன். இட்ஸ் மிராக்கிள்யா! ஐஸ், சாருக்கு அதிரசம் கொடு!’’
ரவி: ‘‘அதிரசமெல்லாம் இருக் கட்டும். மாமாவோ, மருமகனோ முதல்ல கால்ஷீட்டைக் கொடுங்கப்பா! ‘ஜக்குபாய்’னு சொல்லிட்டு, ‘சந்திரமுகி’க்குப் போனீங்க. தனுஷ் என்னோட ‘ஓடிப் போலாமா...’ படம் பண்ண லாம்னு சொல்லிட்டு, அவர்பாட்டுக்குக் கல்யாணம், காட்சினு சம்மணம் போட்டு உக்காந்துட்டாரு!’’
கஸ்தூரி: ‘‘ சம்பந்தி, ‘ஜக்குபாய்’, ‘ஓடிப்போலாமா...’ இரண்டையும் மொதல்ல தூக்கித் தூரப் போட்டுட்டு ஒரு புதுப்படத்துக்கு பூஜை போடுவோம். சூப்பர் ஸ்டார் மாமனார், சூப்பர் ஸ்டார் மருமகன், சூப்பர் டைரக்டர் சம்பந்தினு இணைஞ்சு மிரட்டுவோம். செம யூத் சப்ஜெக்ட் வெச்சிருக்கேன். என்ன சொல்றீங்க?’’
ஐஸ்வர்யா: ‘‘ஆமாம்ப்பா. எங்க வீட்டுக் காரரோட ஒரு படம் நடிச்சீங்கன்னா, உங்களுக்கும் சினிமா வாழ்க்கையில ஒரு பிரேக் கிடைக்கும்ல!’’
ரவி: ‘‘அப்பிடிப் போடு! என் கதை முடிஞ்சு போச்சு. தீபாவளித் தள்ளுபடியில காசித் துண்டு ஒண்ணு வாங்கி, தலையிலே போட்டுக்கறேன்!’’
அப்போது குளித்து முடித்து, கையில் சிகரெட் புகைய வருகிறார் செல்வராகவன்.
செல்வ: ‘‘அப்பா... சோனியா அகர்வால் ஹோட்டல்ல தங்கியிருக்கா. தீபாவளியாச்சே... அதான் லஞ்சுக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரப்போறேன்!’’
கஸ்தூரி: ‘‘வரட்டுமே சோனியா! வந்து முறுக்கு சுடட்டுமே! அதிரசம் தின்னட்டுமே!’’
அப்போது
‘செல்வாவே உன்னை நம்பி
இந்த சுடிதாரு இருக்குதய்யா
அல்வாவே உன்னை நம்பி
இந்த அகர்வாலு இருக்குதய்யா
அதிரசம் குடுக்கலியே
பாவிமக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வைச்சி
மீடியாக்கள் கும்மியடிக்குது’’
& என்ற பாட்டுச் சத்தம். சோகமாய் வருகிறார் சோனியா அகர்வால்.
அவரைப் பார்த்து பரவசமாகி, ‘7ஜி ரெயின்போ காலனி’ படப் பாடல் மெட்டில் எதிர் பாட்டு பாடுகிறார் செல்வ ராகவன்.
‘‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
கல்யாணம் எப்போ தெரியவில்லை
கிசுகிசு வருதே கண்டபடி வருதே
என் தம்பிக்கும் பொறுமையில்லை & எங்க
நைனாவுக்கும் விவஸ்தையில்லை’’
ரவிகுமார்: ‘‘எலேய் நாங்கள்லாம் பாடினா தாங்க மாட்டீங்க...
‘சுத்தி சுத்தி வந்தேனே
இத்து போயி நின்னேனே
ஜக்குபாய் நீங்க ஜகா வாங்க’ எப்புடி..?’’
அப்போது அலறலாக ஓடி வருகிறார் சத்திய நாராயணா.
ரஜினி: ‘‘ஹேய் சத்தி. என்ன ஆச்சு?’’
சத்தி: ‘‘தலைவா அசெம்ப்ளி எலக்ஷன் வருதாம். தலைவர்கள் உங்களத் தேடி அலைய றாங்க. ‘தயவுசெஞ்சு இந்த தடவை எங்க கட்சிக்கு ஆதரவா வாய்ஸ் குடுத்துர வேண்டாம்’னு ரொம்பக் கெஞ்சறாங்க தலைவா. பேசாம பிரஸ்மீட் வெச்சிருவோமா.’’
கஸ்தூரி: ‘‘அட, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? உங்க சார்பா தனுஷ் ஒரு பிரஸ்மீட் வெச்சு வாய்ஸ் குடுத்துரட்டும். உங்க ரேஞ்சுக்கு இல்லேன்னாலும் அவனும் பிரமாதமா குழப்பிப் பேசறான்ல. எனக்கு ஒரு யோசனை... நீங்க கட்சி ஆரம்பிச்சிடுங்க சம்பந்தி. நீங்கதான் தலைவர், தனுஷ் தளபதி, ஐஸ்வர்யா மகளிரணித் தலைவி. அப்புறம் நான் வந்து... நான் பொருளாளர்... ஓ.கேவா?’’
‘‘நான்சென்ஸ்!’’ என யாரிடமோ செல்போனில் பேசியபடி க்ராஸ் செய்கிறார் செல்வராகவன்.
கஸ்தூரி: ‘‘இவன் வேற... நந்தவனத்தில் ஓர் ஆண்டியா அலைஞ்சி அப்பப்போ டார்ச்சர் பண்றானே’’
ரஜினி: ‘‘எதையும் சமாளிப்போம். சத்தி பிரஸ்மீட் வைக்கறோம். தெளிவாச் சொல்லிருவோம். ‘சூரியன்’ சூப்பர். ‘இரட்டை இலை’ன்னா டபுள் ஓ.கே. ‘மாம்பழம்’ உடம்புக்கு நல்லது. ‘பம்பரம்’ விளையாடறது எனக்குப் பிடிக்கும். ஐ லைக் ‘லோட்டஸ்’. ‘கை’ சுத்தம் வேணும். இந்த ரேஞ்சுல பேசினா ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆகிடும்ல...’’
அத்தனை பேரும் அலறி ஓட, ரஜினியின் கையை பிடித்து, ‘பிரமாதம்... பின்னிட்டீங்க. என் புதுப்படத்துக்கு காமெடி டிராக் பண்ணித் தர்றீங்களா அங்கிள்!’’ எனக் கேட்கிறார் செல்வராகவன்.



‘‘தலைவா... சிக்கிராதீங்க!’’ ரவுசு பாண்டி
கேளம்பாக்கம் பண்ணை வீடு... வாசலில் மாக்கோலம், மாவிலைத் தோரணங்கள். கிச்சனெங்கும் மசாலா வாசம்.
‘‘ஆங்... வெங்காய பஜ்ஜி போட்டாச்சு தலைவா. பி.வாசுவுக்கு ஓலை பக்கோடானு சொன்னாரு. பிரபுவுக்கு உளுந்து வடையாம். ஆமா, பத்தரை மணிக்கு வந்துடுவாங்க’’ என்று மாடியில் இருக்கிற ரஜினிக்கு இன்டர்காமில் படபடக்கிற சத்தியநாராயணா, பெருமூச்சு விடுகிறார். ‘‘ஜக்குபாய் டிஸ்கஷன்னு நாலஞ்சு மாசமா பெண்டெடுத்தாரு. இப்ப ‘சந்திரமுகி’னு கிளம்பிட்டாரு. இனிமே மறுபடியும் பிரஸ்மீட், பப்ளிசிட்டினு நமக்குப் பழுத்துடும். டேய், யார்றா அங்கே... என்னமோ கருகல் வாசனையடிக்குது பாரு’’ என்று பதற்றமாகிறார்.
சரியாக பத்தரை. பி.வாசு, பிரபு வர பின்னாலேயே செல்வராகவன், தனுஷ§டன் குடும்ப சகிதமாக கஸ்தூரிராஜா. உடனே சத்தியநாராயணா மாடிக்கு ஓடுகிறார். அங்கே சிரசாசனத்தில் ரஜினி.
சத்தியநாராயணா: ‘‘சீரியஸ்னஸ் தெரியாம சிரசாசனம் பண்றீங்களே தலைவா... அவனவன் கவர் ஸ்டோரி போட்டுத் தாளிக்க ஆரம்பிச்சிட்டானுங்க. இன்னும் ‘சந்திரமுகி’க்கு ஒரு ஸீனும் பிடிச்சபாடில்லை. கோடம்பாக்கமே கூடத்துல வந்து குந்தியிருக்கு. வெள்ளை குர்தாவைப் போட்டுகிட்டு வெள்ளன வாங்க தலைவா.’’
ரஜினி: ‘‘ஏய்... ஏய்... நான் நேரா நின்னா நெத்தியடி. தலைகீழா நின்னா தர்ம அடி.’’
சத்தி: ‘‘பஞ்ச்சா? அடக் கடவுளே... அடம்பிடிக்காம கீழே வாங்க தலைவா.’’
கொஞ்ச நேரத்தில் வெள்ளுடை, விபூதிப்பட்டை என ரஜினி கீழே வர சூடு பிடிக்கிறது டிஸ்கஷன்.
பி.வாசு: ‘‘ரஜினி சார். ஆளாளுக்கு போனைப் போட்டு கதை என்னானு என் காதைக் குடையறாங்க. பத்தாததுக்கு இந்தப் பத்திரிகைக்காரங்க வேற காமெடிக் கதை, பேய்க்கதை, அரசியல் கதைனு அடிச்சு விடறாங்க. எனக்குப் பயமாயிருக்கு. ப்ளீஸ் எங்கிட்டேயாவது சொல்லுங்க சார், நம்மளோடது என்னா கதை?’’
பிரபு: ‘‘ம்க்கும், நான் ரெண்டு வாரமா தொங்கிக்கிட்டிருக்கேன். எனக்கே சொல்லமாட்டேங் கறாரு. யப்பா... அந்த வடையை எடுத்து அடுக்குப்பா’’
ரஜினி: ‘‘வாசு கண்ணா, கதையும் வடையும் ஒண்ணு. ரெண்டையும் சுடணும். முதல்ல கேட்ச்சிங்கா ஒரு கேப்ஷன் வேணுமே. ‘ஆண்டவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ங்கற மாதிரி...’’
சத்தி: ‘‘ ‘ஆண்டவா, கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து என்னைக் காப்பாற்று. பி.வாசுவை நான் பார்த்துக்கொள்கிறேன்’னு வைச்சா எப்பிடி இருக்கும் தலைவா?’’
ரஜினி: ‘‘ஏய் சத்தி... உன்னை யாரு டிஸ்கஷன்ல உட்காரச் சொன்னது. போய் கிச்சன் வேலையைப் பாரு.’’
பிரபு: ‘‘அட என்னாங்க கஸ்தூரி ராஜா சார்... யூத்ஃபுல்லா எதாவது சொல்வீங்கன்னுதானே உங்களைக் குடும்பத்தோட கூப்பிட்டோம்’’
கஸ்தூரிராஜா: ‘‘ ‘சந்திரமுகி’னு பேரே அரிச்சந்திரன் காலத்து டைப்ல ஓல்டா இருக்கே. ‘ட்ரீம்ஸ்’ மாதிரி ‘டீன்முகி’னு வெச்சுடலாம். அப்பதான் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.. இங்கிலீஸ்ல வேண்டாம்னா ‘வயசுக்கு வந்தவங்க’னு ‘நச்’னு தமிழ்ல மாத்திக்கலாம். செம காலேஜ் சப்ஜெக்ட். அவுட்லைன் சொல்றேன்... ரஜினி சார் பையனும்... அதான் தனுஷ§ங்க, பிரபு சார் பொண்ணும்...’’
தனுஷ் (குறுக்கிட்டு): ‘‘யப்பா...யப்பா... கோபிகாவை வெச்சுக்கலாம்பா’’
கஸ்தூரிராஜா: ‘‘சரிடா... தனுஷ§ம் கோபிகாவும் ஒரே காலேஜ். அந்த வயசுல ஒரு தடுமாற்றம் வரும்ல. அப்படியே கனவுல மிதப்பம்ல. ஜிவ்வுனு தூக்கும்ல. அப்படி ஒரு ஃபீலிங்ல ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிர்றாங்க...’’
செல்வராகவன்: ‘‘தள்ளுங்கப்பா, நான் கன்டினியூ பண்றேன். ஓடிப்போனவங்க திரும்பி வர்றப்போ, கோபிகா கர்ப்பம். அதை கலைக்கச் சொல்லி அப்பாக்கள் ரெண்டு பேரும் வாதாடறீங்க. மாட்டோம்னு அவங்க முரண்டு பிடிக்கறாங்க. திடீர் திருப்பமா காலேஜ் பிரின்ஸிபால் நடுவுல புகுந்து தனுஷ§க்கும் கோபிகாவுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடறார். இந்த பிரின்ஸி காரெக்டரையும் ரஜினி சாரே பண்ணினா நல்லாயிருக்கும்.’’
கஸ்தூரிராஜா: ‘‘அந்த இடத்துல Ôஆட்சியைக் கலைச்சா ஆள்றவங் களுக்கு பிடிக்காது. பிள்ளையைக் கலைச்சா பிரின்ஸிபாலுக்கு பிடிக்காது’னு பஞ்ச் டயலாக் வெச்சுட்டோம்னா அப்படியே அரசியலையும் தொட்டுரலாமே.’’
சத்தி (ரஜினியிடம் மெதுவாக): ‘‘தலைவா... நைஸா தனுஷ் பட டிஸ்கஷனா மாத்தறானுங்க... விட்றாதீங்க’’
ரஜினி: ‘‘இல்ல கஸ்தூரி. இன்னும் பரபரன்னு வேணும்... எப்டிச் சொல்றது?’’ என்று சட்டென தியானத்துக்குச் செல்கிறார்.
அத்தனைபேரும் அதிர்ந்துபோகிற நேரத்தில், ‘‘நான் சொல்றேன். நேத்து யோசிச்சதுல செம பரபரப்பா ஸீன் சிக்கிருச்சு...’’ என்று ஒரு குரல். வாசலில் கே.எஸ்.ரவிக்குமார் நிற்கிறார். அவரைப் பார்த்ததும் ரஜினிக்கே அதிர்ச்சி.
ரஜினி: ‘‘ஹேய் ரவி... சர்ப்ரைஸ்யா... கம்யா... சத்தி, ரவிக்கு ஒரு தட்டுல பக்கோடாவைக் கொண்டுவந்து கொட்டு.’’
ரவி: ‘‘அதான் மூணு மாசமா வேஸ்ட்டா தின்னோமே. முதல்ல ஸீனைக் கேளுங்க. முட்டை வியாபாரியான ஜக்குபாய் கோழி விலையைக் குறைக்கணும்னு முதலமைச்சரைப் பார்த்து மனு கொடுக்கப் போறாரு. கோட்டையில உள்ளே விடமாட்டேங்கறாங்க. ‘டேய்! நான் யார் தெரியுமா..?’னு ஜக்குபாய் கொந்தளிக்கிறார். அப்படியே ஃப்ளாஷ்பேக் ஓபன். சென்னையில முட்டை விக்கிற ஜக்குபாய்தான் டெல்லியையே கலக்கின மொட்டை தாதா. ‘எனக்கு முட்டை விக்கவும் தெரியும். மொட்டை போடவும் தெரியும். முதலமைச்சருக்கு மனு கொடுக்கவும் தெரியும். முதலமைச்சரா ஆகவும் தெரியும்’னு பாலிட்டிக்ஸ் பச்சைமிளகாயை நறநறனு கடிக்கறோம்.’’
பி.வாசு: ‘‘என்னா ரவிக்குமார்... நீங்க பாட்டுக்கு ஜக்குபாய்க்கு ஸீன் சொல்றீங்க. இது ‘சந்திரமுகி’ டிஸ்கஷன்.’’
ரஜினி: ‘‘ஆமாம் ரவி... கூல்யா. மூணு மாசம் சூன்ய மாசம். விட்ருங்க. சந்திரமுகியை முடிச்சிடறேன். இந்தப் பொங்கலுக்கு சந்திரமுகியை கொளுத்திப் போட்டுட்டோம்னா, அடுத்த தீபாவளிக்கு ஜக்குபாயைப் பொங்க விட்ரலாம்’’
பி.வாசு: ‘‘ஆமா சார், என் பொழைப்பைக் கெடுக்கப் பாக்கிறார். நான் சொல்றேன் கேளுங்க, அதாவது நீங்க தியேட்டர்ல பிளாக்ல டிக்கெட் விக்கிற ஆளு. பர்மா பஜார்ல திருட்டு வி.சி.டி. விக்கிறவன்தான் வில்லன். ‘உன்னால எனக்கு மட்டுமில்ல கலைத்துறைக்கே நஷ்டம்டா’னு அவனை நீங்க பொரட்டியெடுக்கறீங்க. திடுதிப்புனு பார்த்தா திருட்டு வி.சி.டி. வித்தவன் கலைத்துறை அமைச்சர் ஆகிடறான். பழைய பகையை மனசுல வைச்சுகிட்டு திருட்டு வி.சி.டி. விக்கிறது தப்பில்லேனு சட்டம் போடறான். சினிமாத்துறையை நசுக்கறான்.’’
பிரபு: ‘‘பிளாக்ல டிக்கெட் விக்கிற நீங்க பீறிட்டுக் கிளம்பி புதுக் கட்சி தொடங்கி, அப்படியே முதலமைச்சர் ஆகிடறீங்க... உங்க அமைச்சரவையில நான்தான் உணவுத்துறை மந்திரி. யப்பா... என்னா மேலே வடை வரலியே?’’
சத்தி: ‘‘தலைவா... ஒப்புக்காதீங்க. இது ஆளுங்கட்சி ஏரியா. நீங்க இரட்டை இலைக்கு வோட்டுப்போட்ட ஆளு. சிக்கிராதீங்க’’
பி.வாசு: ‘‘ அப்படின்னா... லேடீஸ் ஏரியாவுக்குப் போயிருவோம். க்ளைமாக்ஸ்ல நூறு சுமங்கலிப் பொண்ணுங்களைக் கடத்திட்டு வந்து மவுண்ட் ரோட்ல விட்டு தாலியைக் கழட்டப் பார்க்கறான் வில்லன். அதுல சந்திரமுகியும் உண்டு. படுபாவிப் பசங்க எல்லாருக்கும் வெள்ளை புடவை கட்டி விட்டுர்றானுங்க. ரொம்ப எமோஷனலான ஸீன். நீங்க ஓடி வந்து அவனுங்களை அடி உரிச்சு எடுக்கறீங்க. அப்படியே மஞ்சள் கலர்ல மழை கொட்டுது. எல்லாரும் சுமங்கலியாகிடறாங்க.’’
செல்வராகவன்: ‘‘அதானே... வாசு சார் வாயிலேயிருந்து இன்னும் தாலி வரலையேனு பார்த்தேன். சார், இதெல்லாம் வேணாம். பர்மா பஜார்ல வில்லன் பலான சி.டி. விக்கிறான். டீன் ஏஜ் பசங்க அதுக்கு எப்படி பலியாகிறாங்கனு ராவா சொல்லலாம்.’’
ரஜினி: ‘‘காரம் கம்மியா இருக்கே...’’
பிரபு: ‘‘இல்லையே... வடையில காரம் கரெக்டாதானே இருக்கு.’’
ரவிகுமார்: ‘‘அட... அவர் கதையில சொல்றாருப்பா... சார், இப்படி வெச்சுக்கலாம். அந்தத் திருட்டு வி.சி.டி. வியாபாரிக்கு ஒரு டாக்டர்தான் ரெகுலர் கஸ்டமர். அவர்கிட்டே போய் நீங்க, ‘ஏய்... ஊசி போடறது உன் வேலை. இடுப்பைக் காட்டறது என் வேலை. அனாவசியமா இந்த ஜக்குபாய் பாதையில தலையிட்ட... ஆபரேஷன் பண்ணிடுவேன்’னு டயலாக் பேசறீங்க.’’
சத்தி: ‘‘தலைவா... ஜக்குபாயை நிறுத்துன கடுப்புல ரவிக்குமார் உங்களைப் பழி வாங்கப் பார்க்கறாரு. டாக்டர்னு வசனம் பேசினா ஆபத்து. அது டோட்டலா ராமதாஸ் பெல்ட்டு.’’
அப்போது, ‘‘இதோ கறுப்புத் தமிழன் சொல்கிறேன்... நீ அறிவிப்பு செய்தாலே வியாபாரம் சத்தியம். பூஜை போட்டாலே வெள்ளிவிழா நிச்சயம்’’ என்ற பெருங்குரல். வந்து நிற்கிறார் வைரமுத்து. கூடவே வித்யாசாகர்.
வைரமுத்து: ‘‘சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ‘சந்திரமுகி’ தொடங்கிவிட்டதாக வந்தது செய்தி. பாதி சாதம் தீர்வதற்குள் பல்லவி, சாம்பார் வாசம் தீர்வதற்குள் சரணம் எழுதி விட்டேன். இதோ கேளுங்கள்...
‘சந்திரமுகி சந்திரமுகி &வாழ்க்கையில
நிம்மதி நஹி நிம்மதி நஹி
மனுஷ வாழ்க்கை திருட்டு வி.சி.டி.
மறஞ்சுமறஞ்சு பார்த்துக்கோ
மனசு ஒரு மலபார்பீடி
உறிஞ்சு உறிஞ்சு இழுத்துக்கோ’ & எப்படி..?’’
வித்யாசாகர்: ‘‘நான்கூட ‘எலந்தப் பழம் எலந்தப்பழம் உனக்குத்தான்’ மாதிரி ‘மதுர’ பட ஸ்டைல்ல ஒரு பாட்டு ரெடி பண்ணியிருக்கேன் கேளுங்க...
‘சீத்தா பழம் சீத்தா பழம் உனக்குத்தான்
சி.எம். ஸீட்டும் சி.எம். ஸீட்டும் உனக்குத்தான்
மாம்பழமும் மாம்பழமும் உனக்குதான்
மக்கள்பலம் மக்கள்பலம் உனக்குத்தான்
இமயமலை உனக்குத்தான்
பரங்கிமலையும் உனக்குத்தான்
தலைவா காப்பாத்து புதுசா கொடியேத்து...’ னு போட்ருவோம்.’’
சத்தி: ‘‘பாட்டு ஓ.கே. இதுல ‘மாம்பழமும் உனக்குத் தான்’கறத மட்டும் தூக்கிடு வோம். இல்லைனா படப் பொட்டியைத் தூக்கிடுவானுங்க.’’
ரவிக்குமார்: ‘‘சார்...சார்... இந்த பாட்டை ஜக்குபாய்ல வெச்சுக்கலாம் சார்.’’
ரஜினி: ‘‘ரவி ப்ளீஸ்மா... இது ‘சந்திரமுகி’ டிஸ்கஷன்’’
வைரமுத்து: ‘‘இதோ அடுத்த பல்லவி, ஒரு வாய் ஊட்டிக் கொள்ளுங்கள்.
‘கோபாலபுரம் பிரிந்தாய்
தைலாபுரம் எதிர்த்தாய்
போயஸ்தோட்டம் பொறுத்தாய் & நாளை
கோட்டைக்குள் நீ இருப்பாய்
இணைந்த நதி நீர் குடிப்பாய்’ எப்படி..?’’
சத்தி: ‘‘அய்யய்யோ... இதை போட்டோம்னா மொத்த கட்சிக்காரனும் கூடி வந்து கும்முவான்... ரொம்ப டேஞ்சரு...’’
பிரபு: ‘‘அது சரி, இந்த ஹீரோயின் மேட்டர் பேசவேயில்லையே. எனக்கு ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். ரஜினி யண்ணனுக்கு லட்சுமி பொண்ணு ஐஸ்வர்யாவைப் போட்டுரலாமா. யப்பா... இந்த வடை...’’
சத்தி: ‘‘தலைவா... படத்துல யார் ஹீரோனு நல்லா விசாரிச்சிடுங்க. ஏமாத்திடப் போறாங்க. கஸ்தூரிராஜா சார் நீங்க எதாவது பேசுங்க...’’
கஸ்தூரிராஜா: ‘‘சோனியா அகர்வால் எனக்கு மூத்த மருமகளா வரட்டுமே... தனுஷ§க்கு ஐஸ்வர்யா வரட்டுமே. யார் வந்து சுவிட்ச் போட்டாலும் எங்க வீட்டு லைட் எரியத்தான் போகுது. வரட்டுமே...’’
சத்தி: ‘‘ஆகா, அவனவன் குடும்பப் பேட்டி கொடுக்கற துலயே குறியா இருக்கானுங்களே...’’
அப்போது வெளியே சலசலப்பு கேட்க எட்டிப் பார்க்கிறார் சத்தியநாரயணா.
சத்தி: ‘‘தலைவா... ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ண சாமினு அத்தனை பேரோட ஆட்களும் திரண்டு வந்திருக்காங்க. அவங்களும் டிஸ்கஷன்ல உட்காருவாங்களாம். இல்லைனா பிரச்னை யாகிடுமாம். அவங்க வந்தா கதை கந்தலாகிடும் தலைவா.’’
ரஜினி: ‘‘ஏய்...ஏய்... இடத்தை மாத்து. இனிமே டிஸ்கஷனை பெங்களூர்ல வெச்சுக்கலாம்...’’ என்றதும் அனைவரும் அவசரமாகக் கலைகிறார்கள்.
ரஜினி சத்தியநாராயணாவிடம் மெதுவாக, ‘‘சத்தி... ஆக்சுவலா டிஸ்கஷனை இமயமலையில வைச்சுக்கலாம். ரவிகுமாருக்குத் தெரிஞ்சுரக்கூடாதேனு சும்மா பொய் சொன்னேன். மத்தவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிடு. ஓ.கே.வா?’’
சத்தி: ‘‘டபுள் ஓ.கே. தலைவா!’’


‘‘சேது திட்டத்துக்கே நான்தான் காரணம்!’’ ரவுசு பாண்டி
சீயான் அதிரடி
‘சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற நாங்கள் தான் காரணம்’ என அரசியல் தலைவர்கள் எல்லாரும் உரிமை கலாட்டா, அறிக்கைப் போர், போஸ்டர் ரகளை எனக் கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களைக் கவர, இதே அஸ்திரத்தைக் கையிலெடுப்பதென்று மற்ற பிரபலங்களும் முடிவெடுக்க... ஆங்காங்கே அஜால் குஜால் காட்சிகள் அரங்கேறுகின்றன.
விக்ரம் வீடு. ‘அந்நியனு’க்காக வளர்த்த நீள முடிக்கு மூலிகை எண்ணெய் தடவியபடி உட்கார்ந்திருக் கிறார் சீயான். அப்போது அலறிக் கொண்டு ஓடி வருகிறார் அவரது மானேஜர் கிரி.
கிரி (வந்த வாக்கில்): ‘‘அவனவன் ஒன்றரையணா படம் எடுத்துட்டு, ‘அடுத்த முதல்வர் நான்தான்’னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு அலையறானுங்க. நீங்க என்னடான்னா நேஷனல் அவார்டு வாங்கிட்டு, மோட்டுவளையைப் பார்த்து மூலிகை எண்ணெய் தடவிட்டு உட்கார்ந்து இருக்கீங்க! இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கிட்டு ஏதாவது பரபரப்பு பண்ணினாதானே மக்கள் நம்மளை மதிப்பாங்க?’’
விக்ரம்: ‘‘என்ன பண்ணலாங் கறீங்க... எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.’’
கிரி: ‘‘இப்போ, எல்லாத்துலயும் ஒரு அரசியல் டச் இருக்கணும் சார். அப்பதான் கெத்தா இருக் கும். அதுக்காகத்தான் ஒரு அணுகுண்டு ஐடியாவோட வந்திருக்கேன். மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேத்தினதுக்கு நீங்கதான் காரணம்னு உடனடியா ஒரு அறிக்கை விடறோம்..!’’
விக்ரம் (குழப்பமாக): ‘‘சேது சமுத்திரத் திட்டமா... அப்படின்னா என்ன?’’
கிரி: ‘‘அது என்னவாயிருந்தா என்ன... எனக்கு மட்டும் தெரியுமா? இப்ப எல்லாரும் அதைப் பத்திதான் பேசறாங்க. அதனால, அதை வெச்சுப் பரபரப்பு பண்றோம். நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்குங்க... பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்துலதான் ‘சேது’ படம் பார்த்தாரு. அதுல உங்க நடிப்பைப் பார்த்து நெகிழ்ந்து, கண்ணீர் விட்டிருக்காரு. அந்தக் கண்ணீர்த் துளி வழிஞ்சு வந்து நாக்குல பட்டு உப்புக் கரிச்சப்பதான், சேது சமுத்திரத் திட்டம் அவர் ஞாபகத்துக்கு வந்திருக்கு. உடனே உங்களுக்கு போன் போட்டு, ‘விக்ரம்... என் கண்ணைத் திறந்துட் டேப்பா’னு தழுதழுத்தாரு. அதே கையோட சேது சமுத்திரத் திட்டம் ஃபைல்ல கையெழுத்தும் போட்டாரு. ஆகையால, சேது சமுத்திரத் திட்டம் சக்சஸாக நீங்கதான் காரணம்னு அடிச்சுவிடறோம். என்ன சொல்றீங்க?’’
விக்ரம்: ‘‘கூடவே, ‘இந்தப் பெருமைக்கெல்லாம் காரணமா இருந்த நண்பன் பாலாவுக்கு நன்றி’னு அறிக்கையில சேர்த்துக்கலாமா..?’’
கிரி: ‘‘அடேங்கப்பா... கப்புனு பத்திக்கிட்டீங்களே!’’
அப்போது வெளியே, ‘சேது காத்த சீயான் வாழ்க! சமுத்திரம் காத்த சாமி வாழ்க... வாழ்க!’ என்று சத்தங்கள். அதைக் கேட்டு,
கிரி: ‘‘பாருங்க... அதுக்குள்ள நம்ம ரசிகசிகாமணிகள் ரவுசு பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. சூட்டோட சூடா அடுத்த ஐடியாவை எடுத்து விட்டுர்றேன். சமீபத்துல இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்ததுல்ல... அதுக்குக் காரணமும் நீங்கதான்!’’
விக்ரம் (அதிர்ச்சியாகி): ‘‘அய்யய்யோ... என்ன கிரி பயமுறுத்தறீங்க? பாகிஸ்தான் கொடி பச்சைங்கறதைத் தவிர, எனக்கு வேற எதுவும் தெரியாதே. நான் போயி...’’
கிரி: ‘‘அட என்னங்க... இதுக்கெல்லாம் பயந்தா, எப்படி சூப்பர் ஸ்டார் ஆகறது? சொல்றதைக் கேளுங்க. உங்க ‘அந்நியன்’ படத்தின் பேரை பேப்பர்ல படிச்சிருக்கார் முஷ்ரப். படத்துல நீங்க பாகிஸ்தானியா நடிக்கறதா நினைச்சுக்கிட்டு, நம்மளைப் பத்தி இந்தியாவுல படமெல்லாம் எடுக்கறாங்களேனு மனமுருகித்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தார்னு போட்டுத் தாக்கிடுவோம். விஜய், அஜீத், சிம்பு, தனுஷ்னு அத்தனை பேரும் தூக்கமில்லாம தலையணையைக் கடிச்சுக் குதறப்போறாங்க! நாம தேசிய அளவுலயே அடிப்போம்! குண்டுச் சட்டியில குதிரை ஓட்டாம, பெரிய அண்டாவுல ஃப்ளைட் ஓட்டுவோம்ங்கறேன். என்ன சொல்றீங்க..?’’
விக்ரம்: ‘‘சூப்பர்! நீங்க போய் அறிக்கை ரெடி பண்ணுங்க. நான் ஃப்ரிஜ்ஜுக்குள்ள போய் உட்கார்ந்துக் கணும். அந்நியன் படத்துக்காக நல்லா சிவப்பாகணும்னு ஷங்கர் சொல்லி இருக்கார்... ஹலோ, யாரு அங்க... ஃப்ரிஜ்ல இருக்கிற தயிர் தக்காளியெல் லாம் க்ளீன் பண்ணுங்க...’’
பொள்ளாச்சி ஹோட்டல் ஒன்றில், ‘நெறஞ்ச மனசு’ ஷ¨ட்டிங்குக்காக வந்திருக்கும் விஜயகாந்த் குறுக்கும் மறுக்குமாக நடந்துகொண்டிருக்கிறார்.
லியாகத் அலிகான்: ‘‘வைகோ மாதிரி இப்படி நடந்துக்கிட்டேயிருந்தா எப்படி கேப்டன்? பொதுக்கூட்டம், ஊர்வலம், பஞ்சாயத்துனு ஜெகஜ்ஜோதியா போயிட்டிருந்த நம்ம இமேஜ் திடுதிப்புனு சரிஞ்சு போச்சே! ராமதாஸ் ஒரு பக்கம் கை கொட்டிச் சிரிக்கிறாரு. தயாரிப்பாளர் துரை தெருவுக்கு இழுக்கிறாரு. ரோட்ல போற ஃபைனான்ஸியருங்களெல்லாம் திட்டறாங்க... மானம் போகுது கேப்டன்! அப்படியே பொளேர்னு ஒரு அடி அடிச்சு, நம்ம இமேஜைத் தூக்கி நிறுத்தியே ஆகணும்!’’
விஜயகாந்த்: ‘‘ஏய்... யானைக்கும் அடி சறுக்கும், பூனைக்கும் சளி பிடிக்கும். ஆனா, இந்த விஜயகாந்துக்கு அடியும் சறுக்கக்கூடாது, சளியும் பிடிக்கக்கூடாது!’’
லியா: ‘‘நெறஞ்ச மனசு டயலாகாக் கும்! ஓ.கே... இதைக் கேளுங்க. சேது சமுத்திரத் திட்டமே தன்னாலதான் வந்ததுனு விக்ரமெல்லாம் பேசிட்டுத் திரியறாரு. இதை இப்படியே விடக் கூடாது. அந்தத் திட்டம் சக்சஸாகப் பாடுபட்டது நீங்கதான். இதுக்காக பிரதமர் மன்மோகன் சிங்கைக் கடத்திட்டு வந்து, ஒரு இருட்டு ரூம்ல அடைச்சு வெச்சு, ‘ஏய்... உலகத்துல மொத்தம் ஏழு கடல் இருக்கு. அதுல ஏழு கோடி மீனுங்க இருக்கு. அதுல ஒரு கோடி நெத்திலி, அரைக் கோடி வாளை...’னு சேது சமுத்திரம் பத்தி எடுத்துவிட்டீங்க. அதுல பயந்து போய்தான், பிரதமர் உடனே ஃபைல்ல கையெழுத்து போட்டுட்டாருனு அள்ளி விடறோம். எப்படி?’’
விஜயகாந்த்: ‘‘நல்லாத்தான் இருக்கு... ஆனா, நம்ம படம் மாதிரியே லாஜிக் இல்லாம இருக்கே! சிம்பிளா ஏதாவது சொல்லுங்களேன்!’’
லியா: ‘‘சரி, இது எப்படி இருக்கு பாருங்க! கேப்டன்னாலே போலீஸ்தானே... இப்ப, மொத்த போலீஸ§ம் ஜெயலட்சுமி கையில மாட்டிட்டு முழிக்குதே... இதை முதல்ல கண்டுபிடிச்சு அவங்களை அமுக்கினதே நீங்கதான்!’’
விஜயகாந்த்: ‘‘இது வொர்க்&அவுட் ஆகும் போலிருக்கே... எப்படி, சொல்லுங்க, சொல்லுங்க!’’
லியா: ‘‘நீங்க போலீஸ் டிபார்ட்மெண்ட் மேல பிரியமா இருக்கறதைப் பார்த்துட்டு, கமிஷனர் உங்களைக் கூப்பிட்டு ஸ்பெஷல் இன்ஃபார்மரா நியமிச்சாரு. உடனே, நீங்க உங்க ஃபேவரிட் ரெயின் கோட்டை எடுத்து மாட்டிக்கிட்டு வேட்டைக்குக் கிளம்பினீங்க. அப்பதான் மொத்த மேட்டரும் உங்களுக்குத் தெரிஞ்சுது. பரபரனு அண்டர்கிரவுண்ட்ல வேலை செஞ்சு, எல்லாரையும் போட்டுக் கொடுத்ததே நீங்கதான். இது தெரிஞ்சு ஜெயலட்சுமியை மதுரை காய்கறி மார்க்கெட்ல ஒரு கூட்டம் துரத்தினப்ப, செம ஃபைட் போட்டு அவங்களைக் காப்பாத்தியிருக்கீங்க. அந்தக் கூட்டம் ராமதாஸ் அனுப்பி வெச்ச கூட்டம்தான்னு ஒரு வரி சேர்த்துக்கு வோம். ஓ.கே&வா?’’
விஜயகாந்த்: ‘‘பின்னிட்டே... ராமதாஸெல்லாம் டார்ச்சராகிடு வாருல்ல..?’’
சுப்பிரமணியம் சுவாமியின் எமர்ஜென்ஸி பிரஸ் மீட். கிலியோடு கூடியிருக்கிறார்கள் நிருபர்கள். சந்திரலேகா சகிதம் அரசியல் ஆறுச்சாமி ஆஜர்.
சுவாமி: ‘‘முதல்ல இந்த சேது சமுத்திர பிராப்ளத்தை முடிச்சுண்டுட்டு அடுத்ததுக்கு வர்றேன். திட்டம் நிறைவேறி னதுக்குக் காரணம் நான், நீ&னு ஆளாளுக்கு அடிச்சிண்டிருக்கா! ஆக்சுவலா ராமாயண காலத்துல சேது பந்தனம் கட்டினப்போ, அதுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினீயரா இருந்தது எங்க கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தாதான்!’’
நிருபர்: ‘‘அவர் எங்க பி.இ. படிச்சார் சார்..?’’
சுவாமி: ‘‘அண்ணா யூனிவர்சிட்டியில என்ட்ரன்ஸ் குளறுபடியில சிக்கி, அப்புறம் ஒரு பிரைவேட் காலேஜ்லதான் படிச்சார். அதை விடுங்கோ... நான் என்ன சொல்ல வரேன்னா, சேது சமுத்திர விஷயம் ஸ்டார்ட் ஆனதுலயே நேக்கு பங்கு இருக்கு. இப்பக்கூட ருமேனியா அதிபரைவிட்டு மன்மோகன் சிங் கிட்டே பேசச்சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஓ.கே. வாங்கினதே நான்தான்! இதுக்காக மகாபலிபுரம் சவுக்குத் தோப்புல சந்திரிகாவையும் சோனியாவையும் தனியா மீட் பண்ணிப் பேசவெச்சேன். அவாள்லாம் சேர்ந்துதான் திட்டத்தை ஓ.கே. பண்ணியிருக்கா! எல்லாத்துக்கும் காரணம் இந்த சுவாமிதான்...’’
நிருபர்: ‘‘கிளம்பிட்டீங் களேய்யா... கிளம்பிட்டீங் களே!’’
சுவாமி: ‘‘அப்புறம், ஒரு முக்கியமான மேட்டர். ஏதென்ஸ் ஒலிம்பிக்ல இந்தியா சார்பா ரத்தோர் ஒரேயரு வெள்ளிப் பதக்கம் வாங்கினாரே, அதுக்கும் நான்தான் காரணம்!’’
நிருபர்: ‘‘என்னங்க சார் சொல்றீங்க..?’’
சுவாமி: ‘‘ரத்தோரைப் பதக்கம் வாங்காம பண்ண, பின்லேடனும் முஷ்ரப்பும் சதித் திட்டம் தீட்டியிருந்தா! போட்டி நடக்கறதுக்கு முதல் நாள் ஒரு தீவிரவாதியைவிட்டு ரத்தோர் கண்ணுல மொளகாப் பொடி தூவ ரெடி பண்ணிட்டா. இந்த மேட்டர் இஸ்லாமாபாத் மொளகா வியாபாரி ஒருத்தர் மூலமா நேக்குத் தெரிஞ்சுடுத்து. உடனே, ஏதென்ஸ் மேயர்கிட்டே பேசி, ஃபுல் செக்யூரிட்டி போட்டு ரத்தோரை மொளகா பஜ்ஜிகூட சாப்பிடாம பார்த்துண்டேன். அதனாலதான் அவர் மறுநாள், நல்லபடியா வெள்ளி வாங்கினார். இல்லேன்னா, கிள்ளி எறிஞ்சிருப்பா! அப்புறம், இன்னொண்ணும் சொல்றேன்... எழுதி வெச்சுக்குங்கோ! வர்ற எலெக்ஷன்ல ஜார்ஜ் புஷ் தோக்கப்போறார். அதுக்கும் நான்தான் காரணம்!’’
நிருபர்: ‘‘எப்படி?’’
சுவாமி: ‘‘அவரைத் தோக்கடிக்கச் சொல்லி, நேத்துதான் கஜகஸ்தான் பிரதமர்கிட்டே ஃபோன்ல டீல் பேசினேன். தூஷ்னியா நாட்டு உள்துறை அமைச்சர் கூட எங்களுக்கு ஹெல்ப் பண்றதா சொல்லியிருக்கார். அதனால புஷ் தோக்கறது கன்ஃபர்ம். அப்படியே தோக்கலேன்னாலும் அடுத்த தடவை நிக்காம பண்ணிடு வேன்.. அப்புறம், இந்த ஜெயலட்சுமி இருக்கா ளோன்னோ, அவ ஆப்கானிஸ்தானோட கைக்கூலி. டாகுமெண்ட் ஆதாரமெல்லாம் என்கிட்டே ரெடியா இருக்கு. முல்லா உமர் இவங்கல்லாம்கூட இவளோட எம்.எல்.எம். பிஸினஸ்ல பார்ட்னர். பார்த்துண்டேயிருங்கோ, இதை வெச்சு தமிழ்நாட்டு போலீஸ்காராளைக் காப்பாத்தப் போறது நான்தான்!’’
நிருபர்: ‘‘ஐயோ... தலையைச் சுத்துதே!’’
சுவாமி: ‘‘அப்புறம்... சொன்னா நம்பமாட்டேள். இருந்தாலும் சொல்றேன். ‘கில்லி’ படம் ஓடினது, 501 ரூபாய்க்கு செல்போன் வந்தது, மழை பெஞ்சது, விம்பிள்டன்ல மரியா ஷ்ரபோவா ஜெயிச்சது எல்லாத்துக்குமே நான்தான் காரணம். எப்படின்னா...’’
நிருபர்கள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடுகிறார்கள்.
கொக்கர கொக்கரக்கோ... சாமி கொக்கரக்கோ!
பிதாமகனுக்குத் தேசிய விருது. விக்ரம் செம குஷியில் மிதக்க, ‘வாங்கிட்டான்யா... வாங்கிட்டான்’ என வடிவேலு ஸ்டைலில் வயிறு எரிகிறார்கள் மற்ற ஹீரோக்கள். விக்ரமை ஓவர்டேக் பண்ண சதி ஆலோசனைக் கூட்டத்தில் ஐடியா தேடுகிறார்கள்.
விஜய் (எடுத்த எடுப்பில்): ‘‘ண்ணா... என்னங்ணா இது. அநியாயமா இருக்குங்ணா? ‘பிதாமகன்’ல விக்ரம் டயலாக்கே பேசலை. அதுக்குப்போய் தேசிய விருதா? அப்படிப் பார்த்தா இங்கே பலபேரு நடிக்காமலே இருந்திருக் காங்க. லாஜிக்படி அவங் களுக்குத்தானே விருது கொடுத்திருக்கணும்.’’
சூர்யா: ‘‘சும்மா லோக்கல் கில்லி ஆடிட் டிருந்தா நமக்கு எப்படி விருது கிடைக்கும்..? யாரைப் பார்த்தாலும் பேட்டை செட் ஒண்ணு போட்டுக்கிட்டு ஆக்ஷன் பண்றதே வேலையாப் போச்சு...ÕÕ
விஜய்: ÔÔஹலோ.... செட்டு போட்டாலும் கைத்தட்டு வாங்கற வனுக்குத்தான் இங்க மவுசு...’’
அஜீத் (மெதுவாக): ‘‘மீனாட்சியம்மா... ÔமதுரÕயை கவுத்துரும்மா!’’
சூர்யா: ÔÔஅதுக்கில்லை விஜய்... இன்டர்நேஷனல் கிரவுண்ட்ல இறங்கி ஆடணும். நான் எல்லாத்துக்கும் ரெடியாகிட்டேன். என்னோட அடுத்த படத்துல முனிவர் கெட்\அப் பண்றேன்.’’
விஜய் (ஜெர்க்காகி): ‘‘முனிவரா?’’
சூர்யா: ‘‘ஆமா, ‘யாகவா முனிவர்’ டைப்ல ஒரு ரோல். எனக்கு டயலாக்கே கிடையாது. காக்கா பாஷை, குருவி பாஷை, நாய் பாஷை\னு மிருக பாஷையிலேயே பேசப் போறேன். காதலிகிட்டே முயல் பாஷை. வில்லன்கிட்ட சிங்க பாஷை!’’
தனுஷ்: ‘‘படம் டிஸ்கவரி சேனல்ல ரிலீஸாகுமாண்ணே?’’
சூர்யா: ‘‘நக்கலு..! படத்துல ஒரு ஸீன் கேளுங்க... நான் காந்தி சிலை பக்கத்துல உட்கார்ந்திருப்பேன். ஒரு காக்கா வந்து என் மேலே அசிங்கம் பண்ணிட்டுப் போயிடும். சிட்டி முழுக்க அந்த காக்காவைத் துரத்தி, கடைசியா பனகல் பார்க்ல மடக்கிருவேன். ‘ஏன் இப்படி பண்ணினே..’னு காக்கா பாஷையிலேயே கத்திக் கதறி அழுது குமுறுவேன். சோகம் தாங்காம அந்தக் காக்காவே போய் வாட்டர் பாக்கெட் வாங்கிட்டு வந்து கழுவிவிடும். நாலு முழ அழுக்கு வேட்டி, ஒரு பழைய துண்டு! இதுதான் என் காஸ்ட்யூம்.. தேசிய விருதெல்லாம் கன்ஃபார்ம்!’’
விஜய் (மெதுவாக): ‘‘பயங்கரமா பிளான் போடறானுங்களே. நாமளும் புகுந்து அடிக்க வேண்டியதுதான்... (சத்தமாக) ‘திருப்பாச்சி’ படத்துல நான் ‘சாமி’யா நடிக்கிறேன்!’’
சிம்பு: ‘‘அதான்... விக்ரம் நடிச்சிட்டாரே... ஆறுச்சாமினு!’’
விஜய்:‘‘அய்யய்யே... என்னைப் பேச விடுங்கப்பா. இதுல நான் முனியசாமி. ஊர் எல்லையில அருவா ளோட சிலையா நின்னு ஊரைக் காக்கும் சாமி. படம்முழுக்க சிலையாவே நிப்பேன். அவார்டு நிச்சயம்!’’
தனுஷ்: ‘‘சிலையா நின்னா டூயட்... கிஸ்... ஆக்ஷன் எதுவும் பண்ண முடியாதே அண்ணே!’’
விஜய்: ‘‘ஏன் பண்ண முடியாது? சாமி கனவு காணாதா? கோயிலுக்குக் கூட்டு வண்டியில பாவாடை தாவணியில வர்ற த்ரிஷாவைப் பார்த்த தும் சாமிக்கு ட்ரீம் சாங். கட் பண்ணினா பொட்டல் காட்லேயிருந்து பொசுக்குனு ஸ்விட்சர்லாந்து போயி,
‘கொக்கரகொக்கரக்கோ
சாமிகொக்கரக்கோ
கூட்டு வண்டியிலே
ஒரு மாமிகொக்கரக்கோ’\னு
டூயட் போட்ருவோம்ல’’
அஜீத் (மெதுவாக): ÔÔ‘யார்ரா அந்த மலை?’னு கேட்ட மாதிரி ‘யார்ரா அந்த சிலை.?’னு அடுத்த படத்துல பஞ்ச் டயலாக் வெச்சிர வேண்டியதுதான். (சத்தமாக) தேசிய விருதெல்லாம் என் லட்சியமே கிடையாது... ‘ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு’ங்கறது அஜீத் பாலிஸி... நேரா ஆஸ்கார் தான்.!’’
விஜய் (மெதுவாக): ‘‘ம்க்கும்.. ரேஸ் காரே காலை வாருது. இதுல ஆஸ்காராம்!’’
அஜீத்: ‘‘என்ன முணுமுணுப்பு? மிரட்டலா ஒரு சப்ஜெக்ட் வெச்சிருக்கேன். படத்தோட ஓப்பனிங்லயே ஹீரோ காலியாகிடறான். அப்புறம் படம் முழுக்க அவன் உடல் மட்டும்தான் நடிக்குது. டயலாக் மட்டுமில்லை, சின்ன அசைவுகூடக் கிடையாது... ஆனா அந்த பாடி பட்டையைக் கிளப்பும்!’’
சூர்யா (ஆச்சரியம் தாங்காமல்): ‘‘எப்படி... எப்படி...?’’
அஜீத்: ‘‘அது அப்படித்தான். படம் முழுக்க பஞ்ச் டயலாக்ஸ். ‘டேய்... நான் வெறும் பாடி இல்ல... காட்பாடி’னு ஆவேசமா ஆவியா மாறி பலபேரை உருட்டிப் பொரட்டி அடிக்கும். ‘ஏய்... நான் டெட் பாடி இல்ல... டேஞ்சர் பாடி’ , Ôடேய்... தப்படிச்சா நான் வருவேன்... அது என் தப்பில்லைÕனு பல பஞ்ச் வெச்சிருக்கேன்.’’
சிம்பு: ‘‘அய்யய்யோ... கேட்கும் போதே கிலியா இருக்கே...’’
அஜீத்: ‘‘‘நெத்திக்காசு புட்டுக் காதுடா, யாரும் வந்து எடுக்குற வரையில. டெட்பாடி எந்திரிக் காதுடா எவனும் வந்து உரசுற வரையில...Õனு பரபரனு ஒரு பாட்டு பண்றோம். எப்படி நம்ம ஐடியா?’’
தனுஷ்: ‘‘எங்க அண்ணணோட ‘டாக்டர்ஸ்’ இருக்கிற வரைக்கும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது. அந்தப் படம் வந்துச்சுனா எனக்கு தேசிய விருது கொடுக்காம இந்தியா விலே ஒரு பயலும் நடமாடமுடியாது...ÕÕ
சிம்பு (நக்கலாக): அதுசரி... ‘சுள்ளான்’ படம் ஓடற தியேட்டர் பக்கமே ஒரு ஈ, காக்காகூட இப்போ நடமாடற தில்லையாமே...’’
தனுஷ் (அதைக் கண்டு கொள்ளா மல்): ‘‘ஆக்சுவலா ‘டாக்டர்ஸ்’ படம் முழுக்க மென்டல் ஆஸ்பத்திரியில தான் நடக்குது. படத்துல எனக்கு பயங்கரமான பைத்தியம் காரெக்டர். காதல் கைகூடாம சித்தம் கலங்கிப் பித்துப் பிடிச்சவன். யார் கிட்டயும் எதுவும் பேசமாட்டான். ஆனா, பொண்ணுங் களைப் பார்த்தா மட்டும் காதலி நினைப்புல கட்டிப் பிடிச்சு, இடுப்பைப் புடிச்சு... மடியிலே படுத்து ‘ஓ’னு அழுவான். க்ளைமாக்ஸ்ல தன்னோட பழைய காதலியைப் பார்த்ததும் பைத்தியம் தெளிஞ்சுருது. ஆனா, டாக்டர்ஸ் நம்பமாட்றாங்க.. கடுப்பாகி காதல் வெறியிலே எல்லா டாக்டர்ஸ் தலையிலயும் கல்லைத் தூக்கிப் போட்டு எஸ்கேப் ஆகிடறான்...’’
சூர்யா: ‘‘ஆகா... அண்ணனும் தம்பி யும் சேர்ந்தா அடங்க மாட்டானுங் களே.’’
விஜய்: ‘‘சிம்பு, நீங்க என்ன பண்றாப்ல ஐடியா..?’’
சிம்பு: ‘‘ஆல்ரெடி களத்துல குதிச் சாச்சு. சிம்பிள் மேட்டர்தான். யெஸ்... ‘தொட்டி ஜெயா’ படத்துல நான் ஆறு மாசக் குழந்தையா நடிக்கறேன். ஆக்சுவலா நான் ‘தொட்டில் ஜெயா’!’’
தனுஷ்: ‘‘தோடா!’’
சிம்பு: ‘‘இருபது வயசு பையன் ஆறுமாசக் குழந்தையோட வளர்ச்சி யிலேயே இருக்கான். தொட்டியிலே தான் படுத்துக்குவான்... பசிச்சா ‘ங்கா’னு கேப்பான். அப்படி வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்துல முரட்டுக் குழந்தையா ஆகிடறான். யாராவது தப்புப் பண்ணினா மடியிலே ஏறி உட்கார்ந்து உச்சா போயிடுவான்.
Ôசாணக்யா கேணக்யா
ஏண்டா குழந்தை ஆனாய்
என் மடியில் ஏறிக் கொண்டு நீதான் உச்சா போனாய்Õனு ஹீரோயின் என்னை இடுப்புலதூக்கி வெச்சிட்டுப் பாடற மாதிரி ஒரு பாட்டுக்கூட ரெடியா இருக்கு...ÕÕ
தனுஷ்: ‘‘தாங்கலைடா சாமி...’’
சிம்பு: ‘‘படம் முழுக்கப் பேசாத அந்தக் குழந்தை மனசுக்காரன் வில்லனோட அட்டூழியம் தாங்காம க்ளைமாக்ஸ்ல குமுறி எழுந்திரிச்சு, நாலு பேரை நடைவண்டி ஏத்தியே கொல்றான்.’’
சூர்யா: ‘‘எது எப்படியோ... இந்த வருஷத்துல விக்ரமைத் தாண்டி விருது நம்ம கைக்கு வந்தாகணும். இப்படிப் பண்ணினா என்ன ?’’
விஜய்: ‘‘எப்படி..?’’
சூர்யா: ‘‘நாம எல்லோரும் சேர்ந்து இப்ப பேசினதையெல்லாம் காக்டெயில் பண்ணி ஒரு படமா எடுப்போம். முனிவர், முனியசாமி, பாடி, பைத்தியக்காரன், குழந்தைனு எல்லோருமே நடிப்போம். இப்படி மொத்தமா அட்டாக் பண்ணினா யாருக்காவது விருது தந்து தானே ஆகணும்... என்ன சொல்றீங்க?’’
தனுஷ்: ‘‘திட்டத்தைக் கேட்கும் போதே Ôதிடுக்Õனு இருக்கு. படத்துக்கு எங்க அப்பா கஸ்தூரிராஜாவை டைரக்டரா போட்டுறலாமா..?’’
சிம்பு: ‘‘வேணாம்... வேணாம். எங்க அப்பாவை போட்டுறலாம். ஆறாவதா அவருக்கும் ஒரு காரெக்டரை போட்டுத் தந்தோம்னா அடிச்சி அலசித் தூக்கித் துவட்டிறலாம். என்ன சொல்றீங்க?’’
விஜய்: ‘‘அய்யோ... விருதும் வேணாம் ஒண்ணும் வேணாம்... இவங்களோட சேர்ந்தா இருக்கிற மார்க்கெட்டையும் சரிச்சிடுவாங்க. விடு ஜூட்!’’ என எகிறி எஸ்கேப் ஆகிறார்.












‘‘எங்களையும் ஏதாவது திட்டுங்க!’’
அரசியல் அரங்கில் அதிசயங்கள் சகஜம்தான். சமீபத்திய சர்க்கஸ் காட்சி ராமதாஸ§ம் திருமாவளவனும் ஒரே மேடையில் தோன்றிக் கொஞ்சிக் குலவியது. எதிரும் புதிருமாகத் திரிந்த இந்தத் துருவங்களை இணைத்தது சினிமா எதிர்ப்பு.
சேராதவர்கள் சேர்ந்தால் என்னவாகும்? கோடம்பாக்கத்துக்காரர்களைக் கூண்டோடு காலிபண்ண ஐடியாவில் பரபரப்பாகிறார்கள்.
திருமாவளவன்: ‘‘அண்ணே... Ôவசூல்ராஜாÕ கமல் ஸ்டைல்ல நாம கட்டிப்புடி வைத்தியம் பண்ணிட்டோம்ல... இனிமே ஒண்ணா சேர்ந்து, இந்த சினிமாக்காரனுங்களைப் பிரிச்சு மேய்ஞ்சிரலாமா?’’
ராமதாஸ்: ‘‘எப்பிடி தம்பி? சொல்லு... சொல்லு...’’
ஜி.கே.மணி: ‘‘தலைவா... எல்லா தியேட்டர்லயும் நம்ம ஆளுங்களைவிட்டு, ஸீட்ல முள்ளு குத்தி வைக்கறது, பபிள்கம் ஒட்டிவைக்கறது, கூல் டிரிங்ஸ்ல பேதி மாத்திரை கலக்கறது, பாத்ரூம்ல எண்ணெய் ஊத்தி வைக்கறதுனு சகட்டுமேனிக்குப் பண்ணிட்டோம்னா, வர்ற மக்களெல்லாம் அலறியடிச்சு ஓடிடுவாங்க. அப்புறம் ஒரு படமும் ஓடாது... எப்பிடி நம்ம ஐடியா?’’
ராமதாஸ்: ‘‘மொதல்ல இந்த ‘ஜக்குபாய்’ படத்தை எப்படி நிறுத்தறது? அதுக்கு ஒரு வழி சொல்லுங்க.’’
ஜி.கே.மணி: ‘‘தமாஷ் பண்ணாதீங்க தலைவா... ஜக்குபாயெல்லாம் ஆரம்பிக்கச் சொல்லிப் போராடினாத்தான் உண்டு!’’ (அப்போது வெளியே கரகரப்பான குரல் காட்டமாக ஒலிக்கிறது.)
பாரதிராஜா: ÔÔநடிக்கிறதோட நிறுத்திக்க... நாட்டைப் பிடிக்கணும்னு நினைக்காதே. மூஞ்சிக்கு மேக்\அப் போடறதுதான் உன் வேலை... முதலமைச்சராகணும்னு நினைச்சா மூஞ்சியே இருக்காது!ÕÕ
ஜி.கே.மணி: ‘‘தலைவா... ‘தென்னகத்தின் பால்தாக்கரே’ பாரதிராஜா வர்றாரு. எஸ்கேப் ஆகிரலாமா?’’
(அதற்குள் உள்ளே நுழைகிறார் பாரதிராஜா)
பாரதிராஜா: ‘‘வாவ்... ஐ அம் பிரவுட் ஆஃப் யூ! உங்க ரெண்டுபேரையும் சேர்ந்து பார்க்கும்போது சிரிப்பா... ச்சே... சிலிர்ப்பா இருக்கு! எஸ், ஐ ஹோப் யூ போத்... தமிழனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் நடிகர்களின் முகத்தில் நொட்டாங்கையை வைக்க உங்களால்தான் முடியும்!’’
ராமதாஸ்: ‘‘சினிமாவுக்குள்ளேயே இருந்துட்டு எங்களுக்கு ஆதரவு தர்ற ராசா, இப்போ இண்டஸ்ட்ரியே ஸ்தம்பிக்கிற மாதிரி ஏதாவது பண்ணணுமே ராசா?’’
பாரதிராஜா: ‘‘ நம்ம கையிலே மனோஜ் இருக்கும்போது எதுக்குக் கவலைப்படறீங்க? அவனை ஹீரோவாப் போட்டு, வரிசையா நீங்களே ஒரு அஞ்சு படங்களைத் தயாரிச்சு விடுங்க... ஆக்ஷன், லவ், வில்லேஜ், யூத், த்ரில்லர்னு வெரைட்டியா பண்ணோம்னா, மொத்த இண்டஸ்ட்ரியும் ஸ்தம்பிச்சுரும்.’’
திருமா (தனக்குள்): ‘‘ஆஹா... இண்டஸ்ட்ரியைக் காலி பண்ண ஐடியா கேட்டா, எங்களைக் காலி பண்ணப் பார்க்கறீங்களே ராசா!’’
அத்தனை பேரும் திகிலாகி உட்கார்ந்து இருக்க, வெளியே செம சவுண்டு...
ÔÔபடமா எடுக்கறானுவ... பொணத் துக்கு முன்னாடி ஆடற மாதிரி டான்ஸ் ஆடுறானுவ... ÔநியூÕனு பேர் வைக்கறானுவ... Ôபாய்ஸ்Õனு படுத்தறானுவ... தமிழனாத் தட்டிக் கேட்டா, என்னை அழிக்கப் பாக்கறானுவ... விடமாட்டேன்ல நானு!ÕÕ ஆவேசமாகக் குமுறியபடி வருகிறார் தங்கர்பச்சான்.
ஜி.கே.மணி (மெதுவாக): ‘‘ஆஹா... தமிழ் பச்சான் வந்துட் டாரு! காதுல பஞ்சை வெச்சுக் குங்கப்பா...’’
தங்கர் பச்சான்: ÔÔபுதுசா ஒரு படம் எடுக் கப்போறேன். மொத்த சினிமாப் பயலுகளும் முழிக்கப்போறானுவ. படத்துக்குப் பேரே Ôபுயல்Õ. கூழ் குடிச்சிட்டு, கோவணம் கட்டிக்கிட்டுப் பறையடிக்கிறவன்தான் தமிழன்... Ôஆக்ஷன், கட்Õடுனு இங்கிலீஷ்ல பேசறவன்லாம் அமெரிக்காவுக்கு ஓடிப்போயிடுங்கடானு போட்டுத் தாக்கப் போறேன்...’’
திருமா: ‘‘ஹலோ தங்கர்... கொஞ்சம் ஆக்கப்பூர்வமா ஏதாவது பேசுங்க...’’
தங்கர்: ‘‘ஹீரோயின், தொப்புளைக் காட்டக்கூடாது... ஹீரோ, பஞ்ச் டயலாக் பேசக்கூடாது... வில்லன் Ôஹா ஹா ஹாÕனு சிரிக்கக் கூடாது... தமிழ்ப் பாட்டைத் தமிழ்லதான் பாடணும்னெல்லாம் சட்டம் போடச் சொன்னோம்னா, தமிழ் சினிமாவையே மொத்தமா அழிச்சிடலாம்.’’
(அப்போது, ÔÔஎன்னப்பா என்னை விட்டுட்டீங்க...ÕÕ என்றபடியே உள்ளே நுழைகிறார் கிருஷ்ணசாமி!)
கிருஷ்ணசாமி: ÔÔதிடுதிப்புனு நீங்க ரெண்டுபேரும் ஒண்ணாச் சேர்ந்து சமாதானமாச் சிரிக்கறீங்க... சால்வை போர்த்தறீங்க... என்ன விளையாடறீங்களா? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நானும் ஓடிவந்து போஸ் கொடுத்திருப்பேன்ல?’’
திருமா (வெறுப்பாக): ‘‘அதான் வந்துட்டீங்களே...’’
கிருஷ்ணசாமி: ‘‘இதோ பாருங்க... நாம என்னதான் ரிவிட் அடிச்சாலும் சினிமாக்காரனுங்க டார்ச்சர் தாங்கமுடியலை... அதனால, நாம ஆளுக்கு ஒருத்தன்னு தத்தெடுத்துக்கிட்டு முழுவேகத்துல அட்டாக் பண்ணுவோம்...’’
திருமா: ‘‘இது ஐடியா! ஆல்ரெடி ராமதாஸ§க்கு ரஜினி... கிருஷ்ணசாமிக்கு கமல்னு ஆகிப்போச்சு... இந்த விஜயகாந்தை நான் எடுத்துக்கறேன்!’’
கிருஷ்ணசாமி: ‘‘எப்டி... எப்டி? ரஜினி எங்கே இருக் கார், என்ன பண்றார்னு யாருக்கும் தெரியாது... கமல் என்ன பேசறார்னு எவனுக்கும் புரியமாட்டேங்குது. இப்போதைக்கு சுடச்சுட இருக்கறது விஜயகாந்து மட்டும்தான். அவரை எதிர்த்து நீங்க மட்டும் பேர் வாங்கிட்டுப் போயிரலாம்னு பார்க்கறீங்களா? இது அழுகுணி ஆட்டம்...’’
அப்போது வாசலில் சத்தம் கேட்டு நிமிர்ந்தால், இன்ப அதிர்ச்சியாக அஜீத்தும் டைரக்டர் சரணும் நிற்கிறார்கள்.
ஜி.கே.மணி: ‘‘இவங்க எதுக்கு இங்கே..?ÕÕ
சரண் (கிருஷ்ணசாமியிடம்): ÔÔ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படம் நல்லாப் போகுது. கமல் சார் ரொம்ப ஹேப்பி. உங்களைப் பார்த்தா தாங்க்ஸ் சொல்லச் சொன்னாரு. ஆக்சுவலா Ôவிருமாண்டிÕ, Ôவசூல்ராஜாÕவுக்கெல்லாம் நிகில் முருகன்தான் பி.ஆர்.ஓ. ஆனா, நீங்க பண்ணின எக்ஸ்ட்ரா பப்ளிசிட்டியால எத்தனை கவர் ஸ்டோரி, எத்தனை பேட்டிகள்... அதே மாதிரி, இப்போ அஜீத்துக்கும் பெரிய மனசு பண்ணி, வாழ்க்கை கொடுக்கணும்.ÕÕ
ராமதாஸ் (கன்ஃப்யூஸாகி) : ÔÔஎன்னய்யா சொல்றீங்க..?ÕÕ
அஜீத்: ‘‘ஆமா சார்! சரண் டைரக்ஷன்ல Ôஅட்டகாசம்Õ பண்றேன். தாதா சப்ஜெக்ட். அருவாள் லாம் உண்டு. எதிர்க்கணும், தடை பண்ணணும்னு கிளப்பிவிடறதுக்கு உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. உடனடியா என் படத்துக்கு ஏதாவது பிரச்னை பண்ணுங்க சார்... ப்ளீஸ்!ÕÕ
திருமா: ‘‘என்னாது?’’
சரண்: ‘‘இன்னும் வசமா ஏதாவது வேணும்னா படம் பேரை Ôபாட்டாளிÕ, Ôசிறுத்தைÕனு வெச்சுக்கறோம். அதை எதிர்த்துப் போராட்டம் பண்ணுங்க... கண்டபடி திட்டுங்க...ÕÕ
கிருஷ்ணசாமி (தடுமாறி): ÔÔஐயையோ... என்னென்னவோ பேசறானுங்களே...’’
சரண் (விடாமல்): ÔÔஇது உங்க படம். நீங்க சொல்ற மாதிரி எதிர்மறையா என்ன வேணாலும் பண்ணிக்கலாம். வாங்க... வந்து டிஸ்கஷன்ல உட்காருங்க. கன்னா பின்னான்னு கதை பண்ணுவோம். கம்போஸிங்ல உட்காருங்க... செம செக்ஸியா பாட்டு அடிச்சுவிடுவோம். ஆனா, எப்படியாவது பெரிசா பிரச்னை பண்ணிப் படத்துக்கு பப்ளிசிட்டி குடுத்து சூப்பர் ஹிட்டாக் கித் தர வேண்டியது உங்க பொறுப்பு!ÕÕ
ராமதாஸ் (மெதுவாக): ÔÔஅடடா... நாம இவனுங் களைத் தாக்க நினைச்சா, இப்படி எதிர் பாராம வந்து அட்டாக் பண்றானுங்களே?’’
அஜீத்: ÔÔ ‘அட்டகாச’த்துல ஸீனுக்கு ஸீன் நான் சரக்கடிக்கிறேன் சார். தம் அடிக்கிறேன்... ஹீரோயின் தொப்புள்ள ஸ்னோ பவுலிங் ஆடறேன் சார்! எல்லாம் உங்களை நம்பித்தான்... நீங்க பண்ற பிரச்னையில விஜய்யெல்லாம் மிரண்டு போயிடணும்... ஆமா..!ÕÕ
திருமா: ‘‘அடிச்சானுங்க பாரு சிக்ஸரு...ÕÕ
சரண் (தழுதழுத்த குரலில்): ÔÔநீங்கள்லாம் எங்க தெய்வம்ங்க... திருட்டு வி.சி.டி., டி.வினு ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கலை மீறி, எங்களைத் தூக்கி நிறுத்த உங்களாலதான் முடியும்! விக்ரமும் ஷங்கரும்கூட Ôஅந்நியன்Õ சம்பந்தமா உங்களைப் பார்க்க வரணும்னு சொன்னாங்க. நடிகர் சங்கத்துல மொத்தமா ஒரு வேன் எடுத்துட்டு வந்து, உங்களைப் பார்த்து மரியாதை பண்ணலாம்னு கூடத் திட்டம் இருக்குங்க...ÕÕ
திருமா: ‘‘ஐயையோ... ராமதாஸண்ணே..! ஆட்டம் திசைமாறிப் போகுது... விட்டா, நம்மளை சினிமா வுக்கு பி.ஆர்.ஓ ஆக்கிடு வாங்க... எஸ்கேப்..!ÕÕ என்றபடி ஓட... மற்றவர்களும் எகிறுகிறார்கள்!
‘‘நாங்களும் ‘யூத்’துதான்..!’’
ரவுசு பாண்டி
சினிமா, அரசியல் என எங்கேயும் இளமைக்குதான் மதிப்பு. இதை உணர்ந்தே உஷாராக, ம.தி.மு.க\வுக்கு வலுவான இளைஞர் படையை உருவாக்க பரபரவெனக் காய் நகர்த்துகிறார் வைகோ. துறுதுறு இளைஞனாக அவர் நடைப்பயணம் கிளம்பியிருப்பது சக தலைவர்களிடையே புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. விளைவு... ‘கேளுங்க தொண்டர்களே... நாங்களும் யூத்துதான்’ என்று கொடி பிடிக்கிறார்கள் மற்ற தலைவர்களும்.
அ.இ.ல.தி.மு.க. அலுவலகம்:
பெர்முடாஸ், டிஷர்ட், கலரடித்த கேசம், காதில் ஸ்டட் என ஆளே பக்கா மாடர்னாக இருக்கிறார் விஜய டி.ராஜேந்தர்.
விஜய டி.ஆர்: ‘‘ஏய்... எதுடா யூத்து? வயல்ல நடறது நாத்து. வாய்க்கால்ல மேயறது வாத்து. கதவைக் கொஞ்சம் சாத்து. ஸ்டைலைக் கொஞ்சம் மாத்து. இங்கே இருக்கிற தலைவன்ல நான்தாண்டா இப்போ யூத்து. ஜிமுக்கு ஜிப்பா... டமுக்கு டப்பா..!’’
கட்சிக்காரர் (குறுக்கிட்டு): ÔÔகெட்\ அப்லாம் ஓகே. ஆனா, பத்தாது தலைவா. தனுஷையெல்லாம் தூக்கி லெஃப்ட்ல அடிக்கணும் தலைவா!’’
விஜய டி.ஆர்: ‘‘என்னடா பண்ணலாம்? பேசாம என் பேரை விஷால் டி.ராஜ்னு மாடர்னா மாத்திக்கலாமா..?’’
கட்சிக்காரர்: ‘‘ஐயோ... சட்டையை மாத்தற மாதிரி, பேரை மாத்திட்டே இருந்தா எவனும் சட்டை பண்ண மாட்டான். ஒரு ஐடியா தலைவா! இந்த ‘மன்மதன்Õ படத்துல மந்திராபேடி, யன குப்தா, ஜோதிகானு ஏகப்பட்ட ஃபிகர்களோட சிம்பு கெட்ட ஆட்டம் ஆடறாரு. படத்துல அப்படியே அவரைத் தூக்கிட்டு நீங்க மன்மதனாகிடுங்க. Ôஹீரோயினைத் தொட மாட்டேன்Õனு கொள்கை பேசாம, டூயட்ல சும்மா பின்னி பெடலெடுங்க. ரெஸ்பான்ஸ் பிச்சுக்கும்.’’
விஜய டி.ஆர்: ‘‘ஐயையே... அது நல்லாயிருக் காதேடா! யாரையும் கட்டிப் பிடிக்கக்கூடாதுங்கறதை லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தோட ஒரு லட்சிய மாவே வெச்சிருக்கவண்டா நான். (சட்டென்று குரலை மெதுவாக்கி) அது மட்டுமில்லை... நாம இப்படித் திட்டம் போடறது தெரிஞ்சாலே சிம்பு டென்ஷனாகி உஷாகிட்டே போட்டுக் கொடுத்துரு வான். டேய்... பனைமரத்துல எறக்கறது கள்ளு... எதிரிகளை ஆடணும் சில்லு... புதுசா ஏதாவது சொல்லு... இல்லேன்னா நீ தள்ளு...’’
கட்சிக்காரர்: ‘‘ஐடியா தலைவா! வைகோ நடைப்பயணம் போறதைக் காலி பண்ணணும்னா நாம நீச்சல் பயணம் போகணும். Ôமெரீனா பீச்லேருந்து மன்னார் வளைகுடா வரைக்கும் ஒரு விழிப்பு உணர்ச்சி நீச்சல் பயணம்Õ எப்படி..?’’
விஜய டி.ஆர்: ÔÔஇது ஐடியா! அ... படம்னா செட்டிங்கு, பார்னா கட்டிங்கு, பாலிடிக்ஸ்னா ஸ்விம்மிங்கு... டி. ஆரோட ஸ்விம்மிங்கு...ÕÕ என்று சவுண்ட் விட்டபடி, நீச்சல் உடை சகிதம் புரட்சி நீச்சல் பயணத்துக்குக் கிளம்புகிறார் விஜயடி. ராஜேந்தர்.
அறிவாலயம்: ஜீன்ஸ், காட்டன் ஷர்ட்டில் களேபரமாக வந்து கலைஞர் இறங்க, கலவரமாகிப் பார்க் கிறார்கள் கட்சிக்காரர்கள்.
கலைஞர்: ‘‘கட்சிக்குள் இளரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? எனவேதான் இந்த ஆள்மாற்றம், ஆடை மாற்றமெல்லாம். ஜீன்ஸ், இளமையின் சின்னம். ஆகவேதான் உதயசூரியன் அதை உடுத்திப் பார்க்கிறது!’’
அப்போது கலைஞரின் செல்லில் அடுத்தடுத்து எஸ்.எம்.எஸ். வருகிறது.
ஆற்காடு வீராசாமி: ‘‘என்ன தலைவரே..... உங்களுக்கு எஸ்.எம்.எஸ்ஸா வருது?ÕÕ
கலைஞர்: ÔÔயூத் என்றால் எஸ்.எம்.எஸ். வரவேண்டும் உடன்பிறப்பே! தி.மு.க. மூன்றெழுத்து, அண்ணா மூன்றெழுத்து, எஸ்.எம்.எஸ். மூன்றெழுத்து...’’
ஆற்காடு: ‘‘ம்ம்ம்.. தலைவர் செம ஸ்பீடு!’’
துரைமுருகன்: ‘‘தலைவரே, நீங்க மட்டும் மாறினாப் போதாது. மொத்தமா நாம கூண்டோட மாறணும். சேலம் மாநாட்டுக்கு நாம எல்லோருமே ஜீன்ஸ், டிஷர்ட்னு யூத் கெட்\அப்ல போவோம்.’’
‘‘கலைக்கக் கலைக்க வந்தார் மூனா கானா டோய்!’’
தமிழக அரசியலில் இப்போ டாப் டாபிக் ‘கலைப்பு’!
‘‘கலைஞர் நினைக்கிறவரைதான் ஜெயலலிதா முதலமைச்சர்’’ என ‘356’&ஐ காட்டி, முண்டா தட்டி அலைகிறார்கள் தி.மு.க----&வினர். ‘‘அதையும் பாத்துருவோம்’’ என்று கொஞ்சம் கலக்கமாகத் தொடை தட்டுகிறது அம்மா கோஷ்டி. இந்த பிளாக்மெயில் அரசியலால் இரண்டு முகாம்களிலும் ஏக அமளி துமளிகள்.
அறிவாலயம்... தாவாங்கட்டையைத் தடவியபடி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார் கலைஞர். அப்போது, ‘‘கண்டுபிடிச்சேன் கண்டு பிடிச்சேன்... கலைக்கக் காரணம் கண்டுபிடிச்சேன்...’’ என உற்சாகப் பாட்டுச் சத்தம். நிமிர்ந்தால், துறுதுறுப்பாக நிற்கிறார் துரைமுருகன். கலைஞர்: ‘‘என்ன காரணம் கண்மணி?’’
துரைமுருகன்: ‘‘வர்ற வழியில ஒரு ஆட்டோக்காரன், பக்கத்துல வந்த பைக்காரனைப் பார்த்து ‘பொறம்போக்கு... வீட்ல சொல்லிக்கினு வந்தியா’னு கேட்டான். தமிழ்நாட்டுல சட்டம் & ஒழுங்கு கெட்டுப் போச்சுங்கறதுக்கு இதைவிட என்ன பெரிய ஆதாரம் வேணும்? இதோ நம்ம அறிவாலயம் எதிர்க்க ஒரு மீன்பாடி வண்டிக்காரன் சைக்கிள்ல வந்தவன்கிட்டே ‘கஸ்மாலம்... ரோட்டைப் பாத்து வாடா கயிதே...’னு திட்டினதையும் டேப் பண்ணிட்டேன். ரோட்ல யாரும் பாதுகாப்பா நடமாட முடியலை. மக்கள் நிம்மதியிழந்து தவிக்கிறாங்கனு இந்த டேப்பை டெல்லியில போய்ப் போட்டுக் காட்டினோம்னா, அப்பிடியே ஆடிப்போய் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைச்சிருவாங்களே.’’
கலைஞர் (கடுப்பாகி): ‘‘ஏன் இதோடு நிறுத்திவிட்டாய் துரைமுருகா... காசிமேடு, கோயம்பேடு பகுதிகளில் சுற்றி ‘பேமானி, சோமாறி, போடாங்க... உம்மூஞ்சியில என் பீச்சாங்கையை வைக்க’ என்பது போன்ற தெவிட்டாத தேன்தமிழ்ச் சொற்களையும் பதிவு பண்ணியிருக்கலாமே. பெரிய ராணுவ ரகசியத்தை டேப் பண்ணிட்ட மாதிரி பேச்சைப் பாரு... (அமைதியாகி) சரி அதைவிடு, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். முதல்ல அதைக் கேளு.’’
துரைமுருகன்: ‘‘தினந்தினம் ‘முரசொலி’யிலே அரைப்பக்கம் கவிதை எழுதி என்ன பிரயோஜனம்? ஆக்ஷன் வேணும் தலைவரே...’’
அப்போது பொன்முடி, தாமரைக்கனி முதலானோர் நுழைகிறார்கள்.
தாமரைக்கனி: ‘‘எதையாவது கலைச்சாத்தான் எதிரி நம்மளை மதிப்பானுங்க தலைவரே. சோனியாகிட்டே சொல்லி இந்தியன் கிரிக்கெட் டீமைக் கலைச்சிருவோமா..? கங்குலியைக் குத்துற குத்துல காளிமுத்து கதிகலங்கணும்...’’
ஆற்காட்டார்: ‘‘கிரிக்கெட்டைவிட இப்ப ஒலிம்பிக்ஸ் தான் டாபிக்கல் ஐட்டம். அங்கேயும் நம்மாளுங்க ஒரேயரு வெள்ளியோட ஜல்லியடிச்சிட் டானுங்க. அதனால இந்தியன் ஒலிம்பிக்ஸ் கமிட்டியைச் சூட்டோட சூடா கலைச்சிட் டோம்னா, புயல் போயஸ் தோட்டம் வரைக்கும் வீசுமே.’’
அன்பழகன்: ‘‘அதெல்லாம் சரி. ஏதாவது லோக்கலா பண்ணினாத்தானே இங்கே இருக்கிற வங்களுக்குப் பயம் வரும். எனக்கும் இதுதான் கடைசி டிஸ்கஷனா இருக்கும் போல. அழுகை அழுகையா வருது.’’
துரைமுருகன் (மெதுவாக): ‘‘ஆகா, பேராசிரியரு ஆரம்பிச்சுட் டாரு... எகிறிடுவோமா?’’
பொன்முடி: ‘‘லோக்கல்னா பின்னிடலாமே... மெரீனா பீச்ல யாராவது மண்ணுல வீடு கட்டி விளையாடினாக் கலைப்போம். தெருவுல பசங்க கிரிக்கெட், கில்லிதாண்டு, ஃபுட்பால்னு எங்கே ஆடினாலும் உள்ளே புகுந்து கலைப்போம். யாரு வீட்டு வாசல்ல கோலம் போட்டு வெச்சிருந்தாலும் கலைப்போம். இப்படி நாம ஒவ்வொண்ணா சிம்பாலிக்கா கலைச்சோம்னா, ஆளுங்கட்சிக் காரனுங்க கதிகலங்கிப் போயிரு வானுங்க.’’
பரிதி இளம்வழுதி: ‘‘‘ஏன் இந்த காட்டாட்சியைக் கலைக்கணும்?’னு காரணங்களைப் பாட்டுகளாப் போட்டு பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கவிடுவோம் தலைவரே’’ என்றபடி ‘வசூல் ராஜா’ ஸ்டைலில் பாடத் தொடங்குகிறார்...
‘‘கலைக்க கலைக்க வந்தார்
மூனா கானாடோய்
கவுந்து கவுந்துபுட்டார்
ஜேனா ஜேனாடோய்
சட்டம் ஒழுங்கெல்லாம்
காணா போனாடோய்
போலீஸெல்லாம்
ஜெயலச்சுமி கிட்ட
வீணா போனாடோய்...’’
இதைப் பார்த்து வீணை மீட்டல் ஸ்டைலில் தாமரைக்கனி ஆட்டம் போட, ரசித்துச் சிரிக்கிறார் கலைஞர்.
போயஸ் தோட்டம்...
நகம் கடித்தபடி ஜெ. டென்ஷனாக உட்கார்ந்திருக்க, பதறியடித்து ஓடி வருகிறது அமைச்சர் கூட்டம். ஓ.பன்னீர்: ‘‘அம்மா... எங்கே பார்த்தாலும், ‘கலைக்க கலைக்க வந்தார் மூனா கானாடோய்’னுதான் ஒலிக்குது. ரொம்பப் பயமா இருக்கும்மா. ஏதாவது பதிலடி கொடுத்தாத்தான் அவனுங்க அடங்குவானுங்க...’’
ஜெ (எரிச்சலாக): ‘‘ஆமா அவங்க சைட்ல அப்படியெல்லாம் ஐடியா தர ஆள் இருக்கு. நீங்களும்தான் இருக்கீங்களே...’’
ஜெயக்குமார்: ‘‘ஒரு ஐடியாம்மா... சோனியாவை ஒருதடவை போய்ப் பாருங்க. ‘சோனியாவோட பூர்வீகம் இத்தாலியில்லை... ஊத்துக்குளிங்கற உண்மை இப்பதான் தெரிஞ்சது. இன்ஃபாக்ட் சோனியாவோட தாத்தா ஊத்துக்குளியிலே கொடிகட்டிப் பறந்த வெண்ணெய் வியாபாரி தெரியுமோ...’னு பிரஸ்மீட்குடுத்தீங்கன்னா சோனியாம்மா நம்ம பக்கம் வந்துரு வாங்க. அப்புறம் இந்தக் கருணாநிதியை ஒரு கை பார்த்துடலாம்.’’
ஜெ: ‘‘ச்சே... நான் என்ன சுப்ரமணிய சாமியா? ஏன் இப்படிக் கேவலமா யோசிக்கிறீங்க. புலி பசிச்சாலும் ஃபுல்பாயில் சாப்பிடாது.’’
ஓ.பன்னீர்: ‘‘இவங்க வேஸ்ட்டும்மா... ‘பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்’ங்கிற மாதிரி ‘பாட்டுக்கு எதிர்ப்பாட்டு’தாம்மா சரி. ‘வசூல்ராஜா’வோட ‘ஆழ்வார் பேட்ட ஆளுடா’ ஸ்டைல்ல ஒரு பாட்டு இருக்கு...
‘போயஸ் தோட்ட அம்மாப்பா
நான் சொல்லுறத கேளுப்பா
உன் கலைப்பு நெனப்பு
இங்கே செல்லாதப்பா!’Õனு போட்டுத் தாக்கினோம்னா ஆடிப் போயிருவானுங்கள்ல...’’
வளர்மதி (மெதுவாக): ‘‘ஆகா பன்னீரே பொரியல் போடறாரே... நாமளும் ஏதாவது தாளிக்க வேண்டியதுதான். (சத்தமாக) அம்மா, ஆட்டோகிராஃப் பாணி பாட்டைக் கேளுங்கம்மா...
‘மனசுக்குள்ளே ஆசை வந்துச்சோ வந்துச்சோ
மகனுக்கு சி.எம். ஆசை வந்துச்சோ வந்துச்சோ
ஆட்சி கலைக்க ஆசை வந்துச்சோ
தமிழ்நாட்டுக்கு கேடு வந்துச்சோ
அட கருணாநிதி கோஷ்டி வந்து
அம்மாவோட நல்லாட்சிய
அய்யோ அய்யோ குத்தம் சொல்லுச்சோ...Õ’’
ஜெ: ‘‘வாவ்... வாரே வா வளர்மதி! பிடிச்சிருக்கு. எனக்கு இந்தப் பாட்டு பிடிச்சிருக்கு...’’
பொன்னையன்: ‘‘இந்தாங்கம்மா எடுத்துக்கங்கம்மா... ‘நியூ’ படத்துலேயிருந்தும்மா... (‘சக்கர இனிக்கிற சக்கர’ மெட்டில்...)
‘கலைக்கிற ஆட்சிய கலைக்கிற
குலைக்கிற அமைதிய குலைக்கிற
நீ கலைக்கிற அட குலைக்கிற
எம்.பி. எம்.பி. ஏய்யா குதிக்கிற.’ÕÕ
ஜெயா: ‘‘சூப்பர்ப்... உடனடியா காஸெட் போட ஏற்பாடு பண்ணுங்க. ரெண்டுல ஒண்ணு பார்த்துடுவோம்!’’




















ஜெயா&ஜீவா&செரினா சந்திசிரிப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில்...
ÔÔஇதுதாம்மா என்னோட நாலாவது ஹிட் லிஸ்ட்! இதுல மூணு எஸ்.பி., அஞ்சு டி.எஸ்.பி., ஏழு இன்ஸ்பெக்டர், பத்து ஏட்டுங்கனு பல பேரு மாட்டுவாங்கம்மா. நீதான் கேஸைக் காப்பாத்தணும் தாயீ...’’ & ஹிட் லிஸ்ட் பேப்பரை வைத்துக் கும்பிட்டுவிட்டு, மஞ்சள் புடவை சகிதம் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆரம்பிக்கிறார் லேட்டஸ்ட் பரபரப்பு நாயகி ஜெயலட்சுமி.
‘‘அரோகரா... அரோகரா... போலீஸ் அரோகரா...’’ என்று சவுண்டு விட்டபடியே தண்ணீரை வாரி ஊற்றிக்கொண்டு அவரது வக்கீல்கள் பின்தொடர, ஏக பரபரப்பாகிறது ஏரியா. திடீரென எதிர்ப்பக்கமிருந்து ‘‘கோவிந்தா கோவிந்தா... அண்ணாச்சி கோவிந்தா!’’ என்று குரல்கள். பார்த்தால், சொந்தங்கள் சூழ அங்கே உருண்டு வந்துகொண்டிருக்கிறார் ஜீவஜோதி. இரண்டு பேரும் ஒரு வளைவில் மோதிக்கொள்ள, இருவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக்!
ஜெயலட்சுமி (குஷியாகி): ‘‘அட நம்ம ஜீவா... ரொம்ப நாளா உன்னைப் பார்த்துப் பேசணும்னு நினைச்சுக் கிட்டே இருந் தேன். ஆமா, உனக்கு என்ன வேண்டுதல்?’’
ஜீவஜோதி: ‘‘அண்ணாச்சி கேஸ்ல எனக்கு சாதகமா தீர்ப்புவந்தா, அங்கப்பிரதட்சணம் பண்றதா வேண்டிக்கிட்டேன். ஆமா... நீங்க எதுக்கு உருள்றீங்க?’’
ஜெயா: ‘‘பிரச்னையெல்லாம் நல்லபடியா முடியணும்ல? ஜொள்ளு போலீஸையெல்லாம் உள்ளே தள்ளி, நான் பழையபடி எம்.எல்.எம். பிஸினஸை ஓஹோனு நடத்தணும்னு வேண்டுதல்! ஸ்பெஷல் பர்மிஷன்ல வந்து அங்கப் பிரதட்சணம் பண்றேன்ப்பா!’’ பேசியவாறே உருண்டு முடிக்கிற இருவரும் உண்டக்கட்டி வாங்கிக்கொண்டு, தெப்பக்குளப் படிக்கட்டுகளில் அமர்கிறார்கள். அங்கே விசும்பியபடி, மண்சோற்றைக் குழப்பியடித்துக் கொண்டிருக்கும் குட்டிப் பெண்ணைப் பார்த்ததும், ஜீவஜோதியின் முகம் பிரகாசமாகிறது.
ஜீவா: ‘‘ஏய்... நீ செரினாதானே..? என்ன இது, மண்சோறு சாப்பிட்டுக்கிட்டிருக்க..?’’
செரினா (இவர்களைப் பார்த்ததும் ஓவென்று அழுதபடி): ‘‘ரொம்ப நாள் ஜெயில் சோறு தின்னு பழகிட்டேனா... ஜாமீன்ல வந்ததும் நல்ல சோறு சாப்பிட்டா வவுத்த வலிக்குது. அதான் மண்சோறு!’’
ஜெயா: ‘‘சரி... சரி, விட்டுத் தள்ளு! சரியோ தப்போ... நல்லதோ கெட்டதோ... தமிழ்நாடே இப்ப நம்மளைப் பத்திதான் பேசிக்கிட்டிருக்கு. மொத்த மீடியாவும் ‘ஜீவா ஜீவா’னு அலறி, ‘செரினா செரினா’னு கதறி, இப்ப ‘ஜெயா ஜெயா’னு பதறிக்கிட்டிருக்கு.ÕÕ
ஜீவா: ‘‘அதையேன் கேக்கறீங்க... காலையில பல்லு வெளக்க கொல்லைப்பக்கம் போனா, கிணத்துக்கட்டைக்குப் பின்னாலயிருந்து காமிராவோட ஒருத்தர் பாய்ஞ்சு வந்து நான் பல்லு வெளக்குறதைப் படம் எடுக்கறார். ஏதோ நான் டூத்பேஸ்ட் மாடல் மாதிரி ‘பிரைட்டா சிரிங்க மேடம்’ங்கறார். அசந்து தூங்கிட்டிருக்கிற நடு ராத்திரியில யாராவது ரிப்போர்ட்டர் போன் பண்ணி, ‘அண்ணாச்சியும் முறுக்கு கிருத்திகாவும் முறுக்கிக்கிட்டாங்களாமே... அதுபத்திஎன்ன நினைக்கிறீங்க?’னு என்னமோ மன்மோகன் சிங்கும் முஷ்ரப்பும் முறுக்கிக் கிட்டதுக்கு ஜார்ஜ் புஷ்கிட்ட கருத்து கேட்கிற மாதிரி கேட்டு டார்ச்சர் பண்றாங்க.’’
செரினா: ‘‘எனக்கு கோர்ட்டுக்குப் போறதுனாலே பயமா இருக்குக்கா. மகாமகக் கூட்டத்துல மாட்டிக்கிட்ட குழந்தை மாதிரி திகிலா இருக்கு. ரிப்போர்ட்டருங்க கூடி நின்னு கேள்வி மேல கேள்வியா கேக்கறாங்க. அன்னிக்கு அப்படித்தான் திடீர்னு ஒரு சீனியர் ரிப்போர்ட்டர், வீரப்பன் மீசையோட க்ளோஸ்&அப்ல வந்து ‘யார் அந்தப் பெரிய மனுஷன்?’னு கேட்டாரு. பயந்தே போயிட்டேன். அழுகை அழுகையா வருது. ஆங்ங்ங்...’’ என்றபடி அழத் தொடங்குகிறாள்.
ஜெயா (அதைப் பார்த்துக் கடுப்பாகி): ‘‘ஏய்... என்னடி இவ, சரியான சுள்ளியா இருக்காளே! இதப் பாரு செரினா... காக்கிவாடன்பட்டியில காக்காய்க்கு சோறு வெச்சிக்கிட்டிருந்த நான் இன்னிக்குப் பல காக்கிகளைக் கவுத்துட்டு கம்பீரமா நிக்கலியா..? என்னவோ கோர்ட்டுக்குப் போறதுக்கெல்லாம் இப்படி ஸ்கூலுக்குப் போக அழற எல்.கே.ஜி. குழந்தையாட்டம் அழுது அமர்க்களம் பண்ணினா எப்படி? தைரியமா போஸ் கொடுத்து, ஜாலியா பேட்டி கொடுத்து, என்ஜாய் பண்ணும்மா!’’
ஜீவா: ‘‘உங்க துணிச்சலை நினைச்சா பகீர்னு இருக்கு ஜெயலட்சுமி! நானெல்லாம் அண்ணாச்சிங்கற ஒத்த வெடியை வெடிச்சதுக்கே பயங்கர டார்ச்சராகி அங்கிட்டும் இங்கிட்டும் அலையறேன். நீங்க தடாலடியா தவுசன்வாலா வெடிச்சுட்டு, தேமேனு திரியறீங்களே! தப்பு பண்ணினா போலீஸ் பிடிக்கும். ஆனா, நீங்க போலீஸையே பிடிச்சு நார் நாரா உரிச்சு ஊறுகா போட்டுட் டீங்களே..!’’
செரினா: ‘‘நானும் படிச்சேன்! கடற்கரையில் ராஜசேகரோடு, குற்றாலத்தில் மலைச்சாமி யோடு, ஊட்டியில் இளங் கோவனோடு, ஏற்காட்டில் ஏட்டு கண்ணனோடுனு ஆல்பத்துலயே அடி பின்னியிருக்கீங்களே! எல்லாத்தையும்விட திண்டுக்கல்ல பாத்ரூம் ஏறிக் குதிச்ச ஸீன் இருக்கே... வாவ்! ரியலி கிரேட்க்கா!’’
ஜெயா (வெட்கத்தோடு): ‘‘நீங்கள்லாம் புகழ்ற அளவுக்கு அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? ஒரு டி.எஸ்.பி&யை மல்டி லெவல் மார்க்கெட்டிங்ல சேரச் சொன்னேன். அவர் மார்க்கெட்டிங்ல சேரணும்னா வெட்டிங்லயும் சேரணும்னார். சரினு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இன்னொரு எஸ்.பி., எம்.எல்.எம்\ல சேரணும்னா அவர் தாலி என் கழுத்துல ஏறணும்னார். சரினு அவரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் அங்கேயும் இங்கேயுமா சில பல கல்யாணங்கள் பண்ணிக்கிட்டதைத் தவிர, நான் பெரிசா என்ன சாதிச்சுட்டேன்?’’
ஜீவா (மெதுவாக): ‘‘அடிப்பாவி! ஒரு கல்யாணம் பண்ணினா ஒரு கல்யாணம் ஃப்ரீனு சோப்பு சீப்பு ரேஞ்சுக்குப் பேசறாளே..! (சத்தமாக) தப்பு ஜெயலட்சுமி தப்பு! நிறுத்துங்க... எல்லாத்தையும் நிறுத்துங்க!’’
ஜெயா (ஆவேசமாகி): ‘‘மொதல்ல அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்! சிங்கிள் டீக்கே காசில்லாம வர்ற லைசென்ஸ் இல்லாத அப்பாவிகளை மடக்கி கூல்ட்ரிங்க்ஸ் கேட்கறாங்களே, அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன். வழிப்பறிக் கொள்ளையைத் தடுக்காம, வழியில ஒன் பாத்ரூம் போறவனைக் கேட்ச் பண்ணி கேஸ் ஃபைல் பண்றாங்களே, அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன். எம்.எல்.எம். பிஸினஸ் ஆரம்பிக்க வந்த அப்பாவிப் பொண்ணுகிட்ட எல் ஓ வி ஈ சொன்னாங்களே தொப்பை மாம்ஸ், அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்!’’
ஜெயலட்சுமி சொல்லி நிறுத்தி, மூச்சு வாங்க...
ஜீவா (தானும் உணர்ச்சிவசப்பட்டு): ‘‘முருகா முருகானு சொல்லிக்கிட்டே முறுக்கு டிபார்ட்மெண்ட்ல ஒண்ணு, வசியமருந்துல ஒண்ணுனு வெச்சுக்க சென்னைக்கும் தேத்தாக்குடிக்கும் அலைஞ்சாரே ஒரு ஆமைவடை அண்ணாச்சி... அவரை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்..!’’
செரினா (சிலிர்த்தெழுந்து): ‘‘கஞ்சாவுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாத என்கிட்டே வாசனைச் சுண்ணாம்பைக் கொடுத்து, கஞ்சா கடத்தல்னு கதை கட்டினாங்களே, அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்தறேன்!’’
ஜெயா: ‘‘இதோ பாருங்க... தெரிஞ்சோ தெரியாமலோ நாம பட்டிதொட்டியெல்லாம் ஃபேமஸாகிட்டோம்! இதையே பயன்படுத்தி, நம்மளைக் காலி பண்ண நினைச்சவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுப்போம். ஏன் செரினா, இப்படிப் பண்ணினா என்ன... நாம மூணு பேரும் சேர்ந்து சினிமாவுல நடிச்சுத் தமிழ்நாட்டையே கலக்குவோமா?’’
ஜீவா: ‘‘என்னை ஏற்கெனவே பாரதிராஜாவிலேர்ந்து பாலா வரைக்கும் நடிக்கக் கூப்பிட்டாங்களே... நான் ஹீரோயின்னா அண்ணாச்சியைதான் வில்லனா புக் பண்ணணும்னு சொன் னேன். தலை தெறிச்சு ஓடிட்டாங்க!’’
ஜெயா: ‘‘நாம பண்ணப்போறது ஃபுல்லா ஹீரோயின் சப்ஜெக்ட். படத்துல வர்ற எல்லா ஆம்பளைங்களுமே வில்லன்கள்தான். நாம மூணு பேருமே வழக்குகள்ல பாதிக்கப் பட்டிருக்கறதால ‘த்ரீ ரோஸஸ்’ மாதிரி ‘த்ரீ கேஸஸ்’னு படத்துக்குப் பேர் வைப்போம்...’’
உடனே ஜீவஜோதியும் செரினாவும் குஷியாகி,
‘‘திருநெல்வேலி அல்வாடா
தேத்தாக்குடி ஜோதிடா
அண்ணாச்சிக்கு போகுதிப்ப பேதிடா’’
என்று சாமி வந்தது போல் ஆடிப் பாட,
‘‘ஜெயலட்சுமி ஆன்ட்டிடா
போலீஸெல்லாம் போண்டிடா
மூணு பேரும் ஆடப்போறோம்
பாண்டிடா...’’
என்று ஜெயலட்சுமியும் குத்து டான்ஸைப் போட்டுத் தாக்க, ஏரியாவே ஸ்தம்பிக்கிறது!

Read more...

புதிய தலைவர் விஜயகாந்த்

>> Thursday, August 28, 2008

உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் விஜயகாந்த். இப்படி உங்ககிட்டே அறிமுகப்படுத்திக் கொள்கிற தகுதியும், தன்னம்பிக்கையும் நீங்கதான் எனக்கு கொடுத்தீங்க. இதுவரை உங்க ஆதரவால் ஒரு நடிகனாக வெற்றிகரமாக இருந்திருக்கேன். இப்ப மறுபடியும் ஒரு புதிய சூழலில் உங்களைச் சந்திக்கிறேன்.
அப்படி என்ன புதிய சூழல்? ஆமாம். புதுசுதான். இதுவரை ஒரு நடிகரா உங்ககிட்டே பேசிட்டு இருந்த நான், இனிமே ஒரு சமூக அக்கறை உள்ள அரசியல்வாதியாக பேசப்போறேன். திரைப்படங்களில் மட்டுமே துயரங்களை, வறுமையை, சுரண்டலை, ஊழலை, அராஜகத்தை எதிர்த்துப் போராடிக்கிட்டு இருந்த நான், அதை நிஜவாழ்வில், பொது வாழ்வில் செய்யப்போறேன். சினிமாவில் செய்ததெல்லாம் நிஜத்தில் முடியுமான்னு நீங்க கேட்கலாம். இத்தனை வருஷமாக ஓட்டுப்போட்டோம், ஓட்டுப்போட்டோம், ஓட்டுப் போட்டுக்கொண்டே இருக்கோம். எத்தனை அரசியல் கட்சிகள்? எத்தனை தலைவர்கள் மாறி மாறி வந்துட்டே இருந்தாங்க. சிரிக்கிறாங்க. திட்டங்களை அறிவிக்கிறாங்க. என்ன நடந்திருக்கு? நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கோமா? வெய்யில் வந்தால் குடிக்க சொம்பு தண்ணீர் இல்லை. ஒரு குடம் தண்ணீருக்காக நாலு கிலோ மீட்டர் நம்ம வீட்டுப் பெண்கள் நெஞ்சுக்கூடு வலிக்க நடக்கிறாங்க! குடம் தண்ணீருக்கு இந்த நிலைமைன்னா பூமியை நம்பியே தலைமுறைதலைமுறையாக வாழ்கிற விவசாயிகளின் கதி என்ன? சரி தண்ணீர்தான் இப்படி ஆகிப்போச்சு. மத்தது... வேலை இருக்கிறவர்களும், இல்லாதவர்களும் கூட கஷ்டப்படுறாங்க. வறுமைக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. எது எதுக்குப் போனாலும் லஞ்சம். ஏன் இப்படி ஆச்சு? இதை யாரும் கேட்க மாட்டாங்களா? எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதா? காமராஜர், எம்.ஜி.ஆர். போல தலைவர்கள் திரும்பி வர மாட்டார்களா? இந்த மாதிரி பல கேள்விகள் மனசில் இருக்கு. நான் போகிற இடங்களில் உங்களை மாதிரி மக்கள் வந்து பேசுறாங்க. நீங்க ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக்கூடாது? எந்த வேலையை சினிமாவில் செஞ்சீங்களோ அதை ஏன் நிஜத்தில் செய்யக் கூடாது? இந்தக் கேள்வி, பதில் சொல்லாமல் மனசில் கிடந்தது.
நான் நடிகனா நல்லா இருந்திருக்கேன். நீங்க என் மேல் நிறைய அன்பு வைச்சிருக்கீங்க. போதுமான பணம் சம்பாதிச்சிருக்கேன். சொகுசாக வாழ்ந்திட்டு போக முடியாதா? ஆனால் மனசு கேக்கலை. நான் நல்லா இருக்கிறதே உங்களால்தான். முன்பு நடிகர்கள் கட்சி ஆரம்பித்தபோது இருந்த இதமான சூழ்நிலை இப்ப இல்லை. நடிகர்கள் என்ன செய்தாலும் பாராட்டப்படுகிற காலம் ஒன்று இருந்தது. மிகப்பெரிய பணபேரங்களும், வன்முறையும், எதிர்ப்பு பிரிவினை உணர்வுகளும், மிகுந்திருக்கிற இந்தச் சமயத்தில் நான் வரக் காரணம், சொகுசான வாழ்க்கை கிடைக்கப்போகுது என்ற அர்த்தத்தில் இல்லை. எனக்கு மலர்ப்படுக்கையில் நடந்தாலும் காலில் முள் குத்தின வலி எப்போதும் இருக்கும். எனக்கு எல்லாம் செய்த மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா!
நான் ஒரு தலைவர்ன்னு அடையாளத்துக்காக வர விரும்பவில்லை. இந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும் என்று மன்றத்துக்காரர்களும், என்மேல் பேரன்பு கொண்ட மக்களும் நிற்கிறாங்க. அந்த வரிசையில் நான் முதல் ஆள். அவ்வளவுதான். அரசியல்_சேவையாக செய்தவங்ககிட்டே இருந்து தொழிலாக செய்றவங்ககிட்டே இடம் மாறிப் போய்விட்டது. சேவையாக செய்கிறவங்களைக் கண்டுபிடிப்போம். இந்த நாட்டில் தேனாறும், பாலாறும் ஓட வேண்டாம். வியர்வை ஈரம் காயுறதுக்கு முன்னாடி உழைக்கிறவனுக்கு கூலியைக் கொடுன்னு பைபிள் சொல்லுது.
உழைப்பாளிகள் எவ்வளவு தூரம் சந்தோஷமா இருக்காங்க?
படிச்சவங்க, படிக்காதவங்க யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், நல்லவங்களை ஒன்றுசேர்த்து போராடப்போறேன். சாதியும், மதமும் நாட்டை மட்டும் இல்லாமல் ஊரையும் பிரிக்கிறது. உறவு சொல்லி அழைத்தவர்கள் ஒதுங்கிப்போகும் நிலை உருவாகியிருக்கு. ஒரு தொகுதியில் நிற்க நல்ல மனிதனைத் தேடுவதைவிட, அதிக எண்ணிக்கையில் உள்ள சாதியின் மனிதனைத் தேடுகிற அவலம் இருக்கு. இப்படித் தேடுகிற அரசியல்வாதிகளைக் குற்றவாளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படிப் பெயரிட்டு அழைப்பது?என்னால் முடிஞ்சதை செய்தாகணும். எனக்கும் கடமைகள் இருக்கு. பின்வாங்குற உத்தேசம் இல்லை. எனது வாழ்க்கையே போராட்டமாக இருந்திருக்கு. சவால்களும், கொஞ்சம் பின்னடைவும், எதிர்நீச்சல் போட்டு மேலே வந்த வாழ்க்கைதான் என்னுடையது. உழைப்பிற்கு அஞ்சாதவனாக இருப்பதில் இன்றைக்கும் பெருமையாக உணர்கிறேன். செப்டம்பரில் மதுரை மாநாடு நடக்கும். அதில் கொள்கைகளுக்கு இறுதி வடிவு தரப்படும்.
அதுக்கும் முன்னாடி உங்களில் சிலருக்கு இவருக்கு என்ன அரசியல் தெரியும்? திடீர்னு இங்கே வந்து என்ன பண்ணுவாருன்னு தோணலாம். அவங்களுக்காக, உங்களுக்காக எல்லோருக்குமான பதில்தான் இந்தத் தொடர்.
என்னோட அரசியல் காரியங்கள், மதுரையில் எங்களிடம் அரசியல் உணர்வு பரவிய விதம், சென்னைக்கு நடிகனாக வந்தபிறகு இருந்த அரசியல் ஈடுபாடு, தலைவர்களின் நட்பு, அவர்களின் மன உணர்வுகள், காயங்கள், நிறைய உண்மைகள், சின்ன ஆச்சர்யங்கள், எல்லாத்தையும், சொல்லப்போகிறேன். யாரையும் புண்படுத்தாமல் சொல்லப்போறேன். இதுவரை ஒரு நடிகனா மட்டுமே என்னை உங்களுக்கு அதிகமாக தெரிஞ்சிருக்கும். புருவம் உயர்த்த வைக்கும் என் அரசியல் அனுபவங்கள் உங்களுக்காக.
நான் எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்ததுதான் சின்ன வயசோட அழகான விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் வெளிவருகிற நாள் எங்களுக்கு தீபாவளி. முதல்நாளே தூக்கம் வராது. அன்னிக்குப் பார்த்து நேரம் போகாமல் நம்மை இம்சிக்கும். மதுரை என்னிக்கும் எம்.ஜி.ஆரின் கோட்டை. எம்.ஜி.ஆரின் படம் ஓடுகிற தியேட்டரில் அது அப்படியே தெரியும். ராமுவசந்தன், சுந்தர்ராஜன், ஆழ்வார், இப்ராஹிம், சம்பத், சுந்தரம், பாபு, இவர்கள் எல்லோரும் என்கூட படைதிரண்டு நிப்பாங்க. அப்பாவோ காங்கிரஸ்காரர். ‘உங்களுக்கெல்லாம் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினது தெரியாதுடா’ன்னு சொல்வார். எதுவுமே காதில் விழாது. எதுவும் ஞாபகத்திற்கு வராது. நினைவெல்லாம் எம்.ஜி.ஆர்தான். உடம்பெல்லாம் ரத்தத்திற்கு பதிலா எம்.ஜி.ஆரே ஓடுவது மாதிரி இருக்கும். அடிமைப்பெண் ‘சிந்தாமணி‘யில் ரிலீஸ். முதல் நாள், முதல் ஷோ பார்க்கவே முடியலை. அப்டியே புறப்பட்டு விருதுநகர் போறோம். அங்கேயும் முடியலை, அப்படியே மறுபடியும் ‘சிந்தா
மணி’க்கு வந்து, பெரிய போராட்டத்திற்கு பிறகு படம் பார்த்திட்டோம்.
எம்.ஜி.ஆர்தான் எனக்கு எல்லாமே சொல்லிக்கொடுத்தது மாதிரி இருக்கு. அவர் ஜனங்களோடு ஒரு சேர சேர்ந்த விதம், கள்ளமறியாத சிரிப்பு, எல்லாமே எனக்கு பாடமாக இருந்தது. ‘பப்ளிக்’கில் அவர் வரும்போது அடுத்தடுத்து என்ன செய்வார்னு யாராலும் யூகிக்க முடியாது. அவர் ஜனங்ககிட்டே கொண்டிருந்த நேசம் ரொம்ப உண்மையானது. அந்த பரிவுதான் என்னை ஆட்கொண்டது. அவரோடு நேசம் வைச்சிருந்த சமயத்தில்தான் விருதுநகர் எலெக்ஷன் வந்தது. பெருந்தலைவர் காமராஜை எதிர்த்து சீனிவாசன் போட்டியிட்டார்.
மதுரையிலிருந்து அப்பாவுக்கு தெரியாமல் விருதுநகருக்கு புறப்பட்டோம். ‘பேக்’கில் ஒரு வாரத்திற்கு துணிமணி எடுத்துக்கிட்டோம். அப்படியரு பிரசாரம். சோறுதண்ணீர் இல்லாமல் நடந்து நடந்து, தாய்மார்கள் காலிலெல்லாம் விழுந்து ஓட்டு கேட்கிறோம். வீட்டிற்கு வந்தோம். விருதுநகர் வரைக்கும் ‘சும்மா’ போயிட்டு வந்தோம்னு சொல்லிட்டேன். ரிசல்ட் வருது. பெருந்தலைவர் வெற்றிவாய்ப்பை இழக்கிறார். வீட்டில் ஆனந்தத்தால் குதிக்கிறேன். அப்பா விஷயம் கேள்விப்பட்டு தலைகீழாகக் கட்டிவைச்சு அடிச்சார். அப்போ அடிச்ச அடி கூட வலிக்கலை. இப்ப இத்தனை நாள் கழிச்சு பொறுமையாக யோசிக்கும்போது எதோ தப்பு செய்துட்டோம்னு தெரியுது. தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தவர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். அவர்கிட்ட இருந்தது 120 ரூபாயும், நாலைஞ்சு கதர் சட்டையும். அப்படியே இரத்தமே சுண்டி இறங்கினது மாதிரி இருக்கு. அத்தகைய ஒரு அற்புதமான பெருந்தலைவரைத் தோற்கடிக்க நானும் ஒரு சின்ன காரணமாக இருந்தேனேன்னு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டேன். இன்னிக்குவரைக்கும் நான் வெட்கப்படுகிற விஷயமும் இதுதான்.
(பொங்கி எழுவோம்.)
என்னிக்கும் வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னொரு விஷயம் இருக்கு. மதுரைக்கு இந்திராகாந்தி அம்மையார் வந்திருந்தார்கள். அப்பாவுக்கு ஏக குஷி. இரண்டு நாட்களாகவே பரபரன்னு திரிஞ்சுகிட்டே இருக்கார்.... நான் எம்.ஜி.ஆர். ரசிகன்னு தெரியும். அதை விமர்சனம் செய்யமாட்டார். ஆனால் காங்கிரஸ் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசுவார். தலைவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவ்வளவு மரியாதையுடன் சம்பவங்களைச் சொல்லிக்காட்டுவார். அந்த நேரத்திற்கு உள்வாங்கிட்டு உடனே மறந்திடுவேன். எம்.ஜி.ஆர். போஸ்டர் ஒட்டுகிற வேலை பாக்கி நிற்குதே... அதற்கெல்லாம் மனசுக்குள்ளே டயம் பிரிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன். ரொம்ப நாளைக்குப் பிறகு இந்திராகாந்தி அம்மையார் வந்ததும் ‘நீயும் வாடா’ன்னு என்னைக் கூட்டிட்டுப்போனார். பாதியிலேயே அவர்கிட்டேயிருந்து, என் சிநேகிதன் இப்ராஹிமோடு சேர்ந்துகிட்டேன். அப்படியே மலரசிரிச்சபடி இந்திராகாந்தி வருகிறார். விழுகிற மாலைகளை மக்களிடம் அன்போடு வீசுகிறார். தி.மு.க.வினர் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களும் எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார்கள். கோஷங்களின் விபரீதம் புரியாமல் போனாலும், புன்னகையை குறைக்காமல் இந்திரா வலம் வருகிறார்.
கருப்புக்கொடிப் போராட்டத்தின் நோக்கம் மாறிவிட்டது. தடிகளை வீசியும், கற்களாலும் எங்க கண் முன்னாலேயே இந்திரா தாக்கப்பட்டார். முழுக்க முழுக்க பதற்றம். போலீஸ்காரர்கள் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். இந்திரா ஆதரவற்று கைவிடப்பட்டார். பார்த்துக் கொண்டிருந்த பொதுஜனங்கள் பதறுகிறார்கள். யாராலும், யாருக்கும் உதவமுடியவில்லை. அம்மையாருக்கு அடிவிழுந்துகொண்டே இருக்கிறது. அவருக்குப் பக்கத்தில் பழ. நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் இருக்கிறார்கள். பூஞ்சை உடலில் அத்தனை அடிகளையும், கற்களையும் நெடுமாறன் ஐயா வாங்கிக்கொள்கிறார். என்னதான் ஜீப் வேகமாக தப்ப முயன்றாலும், அவரால் தாக்குதலிலிருந்து தப்ப முடியவில்லை. அப்படியும் நின்றுகொண்டு, கும்பிட்டுக்கொண்டு மாறாத புன்னகையோடு இருக்க முடிந்த அம்மையாரின் உறுதியைக் கண்டு வியந்தேன். ரத்தம் தெறித்த புடவையோடு, புன்னகையோடுதான் அப்போதும் இந்திரா அம்மையார் இருக்கிறார். நெடுமாறன் ஐயா மீது மாறாத அன்பு மனசிற்குள் வந்தது. அம்மையாரை உட்காரவைத்து அவரைச்சுற்றி அரண் மாதிரி நின்று காப்பாற்றியவர் அவர்தான். நிஜமாகவே நெடுமாறன் ஐயா மாவீரர். அவர் கஷ்டப்பட்டு காப்பாற்றிய இந்திராவின் உயிரை பிற்பாடு பாதுகாவலர்கள் பறித்துக்கொண்டது பெரும் துயரம்தான். எளிமையாகவும், பதவிக்கு ஆசைப்படாமலும் இருந்ததால் அவரால் அந்தக்கட்சியில் கூட பெரிய பதவிக்கு வரமுடியவில்லை. அரசியல் சாதாரண விஷயம் அல்ல என்பது அன்றைக்கு தெளிவாகத் தெரிந்தது. என் அப்பாவும் சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டு அடிவாங்கியிருந்தார். நாங்கள் தப்பி, என் அக்கா வேலை பார்த்த மருத்துவமனைக்கு ஓடியதால் உயிர் பிழைத்தோம். தவறு செய்திருந்தால், அதற்கு வன்முறை பதில் அல்ல என்று எனக்குப் புரிந்தது.
அந்த வயதிற்கு அம்மையாரின் தாக்குதல் நினைவு கொஞ்ச நாள்தான் இருந்தது. நான் இன்றைக்கும் மதுரைக்குச் செல்லும்போது இந்திரா தாக்கப்பட்ட இடமும் ஞாபகத்திற்கு வரும். காப்பாற்றியவர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். தாக்கியவர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். நினைக்கிறதையெல்லாம் சொல்லமுடியவில்லை என்ற விஷயமும் இதில் அடங்கி இருக்கு.
திடீரென்று ‘பிள்ளையோ பிள்ளை’ என்று படம் ஆரம்பிக்கப்பட்டு மு.க.முத்து நடிக்கிறார். எம்.ஜி.ஆர். அதில் ஆர்வமாக இருக்கிறார். அவர்தான் முத்துவின் ஸ்டைல், ‘விக்’ பற்றியெல்லாம் ஆலோசனை தருகிறார் என்று சொன்னார்கள். நம்ம தலைவர் சொல்றவங்கதான் நமக்கு இஷ்டம். அந்த விதத்தில் முத்துவும் எங்கள் அபிமானத்திற்குரியவரானார். ‘அலங்கார்’ தியேட்டரில் படம் ரீலிசாகி எம்.ஜி.ஆர். ரசிகர்களால் ஓடுச்சு. பின்னால் வந்த படம் ‘பூக்காரி’. அதில் முத்து ‘காதலின் பொன் வீதியில்’னு பாடும்போது விசில் பறக்குது. அப்படியே எம்ஜிஆர் மாதிரியே ஆடிப்பாடி ஓடுகிறார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இது எம்.ஜி.ஆருக்கே தெரியுமா, அவருக்குத் தெரிஞ்சுதான் எல்லாம் நடக்குதான்னு எங்களுக்குப் புரியவில்லை. படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் பார்த்ததால் நல்லாவே ஓடுது. எங்களுக்குத்தான் ஏதோ ஒரு சந்தேகம் உள்ளேயே இருக்கு. ‘என்னவோ சதி நடக்குதுடா மாப்ளே’ன்னு சிநேகிதர்கள் பேசுறாங்க. அப்படியே ‘பூக்காரி’யிலும் நம்ம தலைவருக்கு ஜோடியாக ஆடின மஞ்சுளாவே ஜோடி. இதெல்லாம் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அறவே பிடிக்கலை. ‘ஆஹா, வேறமாதிரி ரூட் போகுதுடா’ன்னு எல்லோரும் பேசிக்கிட்டோம். ரசிகர்களுக்கு முன்னாடி தெரிஞ்சது தலைவருக்குப் பின்னாடிதான் தெரியுது. ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரை ‘அவாய்ட்’ பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்ட போது, அடுத்தடுத்து முத்துவின் படங்கள் வெற்றியைப் பெறவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பேப்பரிலும், ஒவ்வொரு விதமான செய்தி.
‘பூக்காரி’க்குப் பிறகு மு.க.முத்துவின் படத்தைப் பார்க்கிறதை ஏகமனதாக நிறுத்திட்டோம். முத்துவை கலைஞரோட மகன்னு ரசிக்கமுடியுது. தலைவருக்குப் போட்டியா எங்களால் ரசிக்க முடியவில்லை. சரியோ தவறோ, உண்மையோ இல்லையோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். பிள்ளையை வளர்க்க எம்.ஜி.ஆரை ஒதுக்குகிறார் என்ற செய்தி பரவி மக்கள் மனசில் ஊன்றிவிட்டது.
இப்படி இருக்கும் போது, இன்னொரு சிக்கலும் இருந்தது. இரண்டு விதமாக ரசிகர்கள் இருந்தாங்க. எம்.ஜி.ஆருக்காக கட்சி. கட்சிக்காக எம்.ஜி.ஆரை பிரியப்பட்டவங்க. நான் முதல் வகையில்தான் இருந்தேன். உண்மையைச் சொல்லியாகணும். அதற்கடுத்து தி.மு.க. மாநாடு நடக்குது. எதையும் மனசில் வைக்காமல், நாங்க எல்லோரும் போறோம். தேடித்தேடிப் பார்த்தோம். எங்கேயும் எம்.ஜி.ஆர் படத்தைப் பார்க்க முடியலை. தி.மு.க. காரங்களுக்கே எம்.ஜி.ஆரை புறக்கணித்திருப்பது தெரிஞ்சு போகிறது. அதற்குப்பிறகு எங்களால் எந்த மாநாட்டுக்கும் போக முடியலை. எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் கூட முத்துவை வைச்சுப் பார்க்க எங்களால் முடியலை. அதற்காக கலைஞர் மீதுள்ள பாசமும் எங்களுக்குப் போக மாட்டேங்கிது. நெடுஞ்செழியன், மதியழகன்னு அடுத்தடுத்து இருந்தாலும் எம்.ஜி.ஆர், கலைஞர்தான் மனசிற்குள் இருந்தாங்க.
திடீரென்று கணக்குக் கேட்டு எம்.ஜி.ஆர் பேசினார். ‘அடடா பிரச்னை முற்றிப்போய் வெடிச்சுப்போச்சு’ என்று நினைச்சிட்டோம். கணக்குக் கேட்டால் என்னய்யா தப்புன்னு கொதிக்கிறாங்க. மதுரை முழுக்க எம்.ஜி.ஆர் ரசிகர்களை குறிவைச்சு தேடுதல் வேட்டை நடக்குது. எங்க ரைஸ்மில் கணக்குப்பிள்ளையை தூக்கிக் கொண்டு போயிட்டாங்க. எம்.ஜி.ஆர் படம் ஓடுகிற தியேட்டருக்கு வெளியே போலீஸ்காரர்கள் காத்துக்கிட்டு இருந்து, எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவங்களை ‘கொத்தாக’ தூக்கிட்டுப் போனாங்க. கவுன்சிலர் அழகர்சாமி பசங்கன்னு எங்களை விட்டுவிடுகிறார்கள். மதுரை மேங்காட்டுப் பொட்டலில் தாமரைக் கொடி ஏத்துறோம். மயிரிழையில் போலீஸ்காரர்களிடமிருந்து தப்பிச்சோம். எம்.ஜி.ஆர் ரசிகர்களை போலீஸ் விரட்ட விரட்ட, யாருக்கும் தெரியாமல் ஒரு சக்தி உருவாகியது. எங்களுக்கும் ஆவேசம் வந்துவிட்டது. அப்பா கண்டிப்பால் இதில் நேரடியாக இறங்காமல் இருந்துகிட்டு இருந்தேன். எம்.ஜி.ஆரின் படங்கள் ஒட்டாமல் எந்த வண்டியும் ஓடமுடியாதுங்கிற நிலைமை கூட மதுரையில் வந்தது.
இந்த நெருக்கடியில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வரப்போகுது. அந்தப் படம் வருமான்னு சந்தேகமாகவும் இருக்கு. எம்.ஜி.ஆர் அந்நியச் செலாவணியில் சிக்கிட்டார்னு சொல்றாங்க. படம் நல்லா ஓடும்னு தெரிஞ்சும், ‘கும்பிட்டு படம் வேணாம்னு’ தியேட்டர்காரர்கள் சொல்றாங்க. ரொம்பவும் தைரியமாக மீனாட்சி தியேட்டர் சவுந்தரராஜன் படத்தை வாங்கிப் போடுகிறார். 150 பேரை ஊரிலிருந்து இறக்கி, தியேட்டரில் கொண்டுவந்து நிப்பாட்டி, அவங்களும் காவலுக்கு சிலையாக நிற்கிறாங்க. முதல்நாள் காலையிலிருந்து ஒரு மைலுக்கு டிக்கெட் வாங்கக் கூட்டம். மேயர் முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரையில் ஓடிட்டால் சேலை கட்டிக்கிடுவேன்’’ என்று பரபரப்பாகப் பேசினார். மதுரையில் பதற்றம் கூடிவிட்டது. ரசிகர்கள் சின்னக் கத்தியில் டிக்கெட்டை சொருகிட்டு படம் பார்த்தோம். ஆளுக்கு ஆள் சேர்ந்து காசு வசூல் பண்ணி 1000 சேலைகள் அவருக்கு அனுப்பி வைச்சோம். அதே மதுரை முத்து, பின்னாடி எம்.ஜி.ஆர் கிட்டே சேர்ந்துட்டார். மதுரை முத்துவின் வீரமும், எம்.ஜி.ஆரின் மன்னிக்கிற தன்மையும் இன்னமும் எனக்குப் புரியாத விஷயங்கள்தான்.
(பொங்கி எழுவோம்)
‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸ் ஆகும்போதுதான் எங்களுக்கும் மதுரை முத்துவிற்கும் பிரச்னை இருந்தது. அதற்கு முன்னாடி எம்.ஜி.ஆரை யாருக்கும் குறையாமல் நேசித்தவர் அவர்தான்.
மதுரையில் எம்.ஜி.ஆருக்கு தங்க வீரவாள் பரிசு கொடுத்தார். அந்த நன்றி உள்ளேயே எம்.ஜி.ஆருக்கு இருந்திருக்கணும். அதுதான் படம் ரிலீஸ் ஆனபோது என்னதான் பிரச்னை செய்தாலும், மனசில வச்சுக்காம இருந்தார். அன்னிக்கெல்லாம் வைகையாற்றில் உட்கார்ந்து எம்.ஜி.ஆர். பெருமையை பேசிப்பேசி களைச்சுப்போவோம். அதே முத்துவிற்கு முதல் மதுரை மேயர் பதவியையும் கொடுத்தார் எம்.ஜி.ஆர். வேறெந்த அரசியல்வாதிக்கும் இந்த மனசு வந்திருக்குமா! நினைச்சுப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாகவே இருக்கு. வேடிக்கை இல்லை. இன்னிக்கு யாருக்காவது அப்படியரு மனசு இருக்கும்னு நினைக்கிறீர்களா! மதுரை மாநாட்டிலிருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அந்நியமானதுகூட மு.க.முத்து வெள்ளை உடையில் வெள்ளைக் குதிரையேறி ஊர்வலத்தில் வந்த போதுதான். அன்றைக்கு மனசு விட்டுப்போன எம்.ஜி.ஆர். மாநாட்டு ஆரம்பத்திலேயே நாலு வார்த்தை பேசிட்டு உடனே போயிட்டார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. சாப்பிடக்கூட முடியாமல் அவதிப்பட்டோம். கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் ஒரே இடத்தில் வச்சுப் பார்த்ததுதான் காரணம்.
நான் முதலில் சென்னைக்கு எதற்கு வந்தேன் தெரியுமா? கலைஞர் சைதாப்பேட்டையில் போட்டியிட்டார். பிரசாரத்திற்கு மதுரை முத்து எங்களை சென்னைக்கு அனுப்பிச்சார். அமிஞ்சிக்கரையில் ஒரு கல்யாண மண்டபத்தைப் பிடித்து தங்க வச்சாங்க. பிரசாரத்திற்கு வந்ததை ஓட்டுப்போட வந்ததாக நினைச்சுக்கிட்டு பேப்பரில் போட்டுட்டாங்க. உடனே காலி பண்ணிட்டு பிரசாரம் பண்ணிட்டு ஊருக்குப் புறப்பட்டோம். போகும்போதும் வரும்போதும் சிங்கம்புணரி அமைச்சர் செ. மாதவன் ரைஸ்மில்லில்தான் சாப்பாடு. அதேமாதிரி பிரசாரம் பண்ணிட்டு திரும்பி தாம்பரம் வழியாகப் போகும்போது காங்கிரஸ்காரங்க ஆத்திரப்பட்டு கல்வீசித் தாக்கினாங்க. அன்னிக்கு தப்பி வந்தது குலதெய்வம் புண்ணியம்தான்னு சொல்வேன். அணிஅணியாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேலை பார்த்ததை மறக்க முடியாது. எங்க வேலையெல்லாம் மதுரை முத்துவிற்குத் தெரியும். அவர் எங்களை எப்படியெல்லாம்படுத்தினார், நாங்க எப்படியெல்லாம் தப்பிச்சோம்... நிறையச் சொல்லலாம்.
எனக்கு கட்சின்னு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். இருக்கறதுதான் நம்ம கட்சி. அவர் யாரைச் சொன்னாலும் ஏத்துக்கலாம். அதுதான் மனதில் பட்ட விஷயம். இன்னிக்குப் பாருங்க. அரசியல்வாதிகளைத் திட்டறது ஓல்டு ஃபேஷன் ஆகிப்போச்சு. எல்லோரும் திட்டிட்டாங்க. முதல்ல தப்பு எங்கேனு பார்க்கணும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருட்டு, ஊழல்னு அரசியல்வாதிகளைத் திட்டறோமே.. அவன் எங்கேயிருந்து வர்றான்? நமக்குள்ளே இருந்துதானே வர்றான்! நிறைய சரிபண்ணணும் சார். சேவை பண்றவனை மதிக்கணும். எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். இதுவரைக்கும் இருக்கற மாதிரி எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருக்கிறது சுலபம். ஆனால், கட்சின்னு வரும்போது எத்தனை கேள்விகள், விமர்சனங்கள், ஏச்சுக்கள்... எல்லாத்தையும் சந்திக்கணும்னு தெரியும். எதிலேயும் இறங்குறதுக்கு முன்னாடிதான் யோசிப்பேன். இறங்கிட்டா விறுவிறுனு போய்க்கிட்டே இருப்பேன்.
எனக்கு ‘இந்த அமைப்பே சரியில்லை. எல்லோரும் மோசம்’னு ஒட்டுமொத்தமா குற்றம் சாட்டுறது பிடிக்காது. பொதுவாக தப்புச் சொல்றது ரொம்ப ஈஸி. இது நாமே தேர்ந்தெடுத்த அமைப்புத்தான். அதை குறை சொல்லிட்டு கைதட்டல் வாங்கிட்டுப் போக நான் தயாராக இல்லை.
பசிதான் என்னை மாத்தியது. ரைஸ் மில் ஓனர்தான். ஆனால், ஏழைகளோடுதான் பழகுவேன். வசதியான வீட்டில் பிறந்துட்டு இந்த ஆளு இப்படி இருக்கானேன்னு ‘போங்க முதலாளி’ன்னு தள்ளிவிடுவாங்க. திரும்ப அவங்களோடுதான் ஒட்டுவேன். இன்னிக்கும் கையையே தலைக்கு வச்சுக்கிட்டு வெறுந்தரையில் தூங்கப் போயிடுவேன். பசியோட அருமை பெருமை, வலி, பற்றாக்குறை, அவமானம் எல்லாமே எனக்குத் தெரியும். உலகத்திலே தீராத கொடுமை பசிதாங்க. எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், வயிறு காஞ்சு வந்தால் என்ன சொன்னாலும் தலைக்கு ஏறாதுங்க. நம்ம தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு யார் வந்தாலும், ‘சாப்பிட்டீங்களா, சாப்பிட்டுத்தான் மறுபேச்சு’ன்னு சாப்பிட வைப்பாராம். வயிறைக் குளிர வைக்கிற பாலிஸி அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு யாருக்குத் தெரிந்தது? அவரோட பெருந்தன்மையையும், தாராளத்தையும் எல்லாரும் அடைய நினைக்கணும். படங்களில்கூட எம்.ஜி.ஆர். எல்லோரும் திருந்தி நல்லவனாக ஆகணும்தான் சீன் வைப்பார். இப்ப இருக்கிறது மாதிரி ரத்தக்களறி ஆக்குவது கிடையாது. அவரைப்பத்தி வருகிற கிசுகிசுவைக்கூட ஜனங்கள் நம்பமாட்டாங்க. ‘எப்படி மனுஷன், அவருக்கென்ன பிள்ளையா, குட்டியா, இன்னும் நாலு பேரை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு’ சொல்லி நானே காதுபட நிறைய கேட்டிருக்கேன்.
எங்க காலத்துல எதிரிகளை தூக்கிப்போட்டு பந்தாடுவது மாதிரி ஆகிப்போச்சு. எம்.ஜி.ஆர். அடிச்சிட்டு, காலை கழுத்து மேலே வக்கப்போயிட்டு, ‘சரி பொழைச்சுப்போ, திருந்தி வாழ்ற வழியைப்பாரு’ன்னு சொல்லி அனுப்புவார். எனக்கு கஷ்டமே இருக்கு. நான் படங்களில் சல்லடை, சல்லடையாக துப்பாக்கிக் குண்டால் துளைச்சு சாக வைப்பேன். என் காலத்தில் வேகம், வேகம், ஆக்ஷன் மட்டும்தான்னு ஆகிப்போச்சு.
ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசையெல்லாம் இருந்ததில்லை. சேனாஸ்ஃபிலிம்ஸ் மர்சூக்னு குடும்ப நண்பர் இருந்தார். அவரோட நல்ல பழக்கம். அவர்தான் கட்டுமஸ்தா இருந்த என்னைப் பார்த்து, ‘நடிக்கிறியா’ன்னு கேட்டார். ஒரு படம் நடிச்சிட்டு, திரும்ப மதுரைக்கு வந்து ரைஸ்மில்லில் உட்காருவதுதான் திட்டம். இன்னிக்கும் பாருங்க... மதுரைக்கார சுத்துப்பட்டு ஆட்களுக்கு வல்லினம், மெல்லினம், சரியா வராது. ‘தமிழே பேசத் தெரியலை’ன்னு அனுப்பிச்சிட்டாங்க. அதில பெரிய ஹீரோவோட வேலையும் இருந்தது.
எதையாவது சாதிக்கணும், எந்த இடத்திற்காவது வந்து, அந்த இடம் கொடுக்கிற சௌகரியத்துல நல்லது பண்ணணும். யோசிச்சு, சென்னைக்கு ரயிலேறினேன். இங்கே சந்தித்த மனிதர்கள், எதிர்ப்பட்ட சினிமா, என்னை ஆட்கொண்ட அரசியல் தலைவர்கள். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
(பொங்கி எழுவோம்)
கலைஞர் ‘பொன்விழா’ விற்கு முன்னாடி ‘ஏழைஜாதி’ ன்னு படம் செய்தேன். முக்கியமான எல்லா அரசியல் கட்சிகளையும் அந்தப்படம் தாக்கியது. அதுவும் கதைக்குப் பொருத்தமாக. எனக்கே கலைஞரைப் பார்க்க சங்கடமாக இருந்தது. ‘திடுதிப்’ன்னு பொன்விழா வேலைகளில் இறங்கியதும் அதை மறந்தேன். கலைஞரும் அதைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைப்புக் கொடுத்தார். அதற்கு அப்புறம்கூட எல்லாமே நல்லாயிருந்தது. திடீரென்று ஒரு குறிப்பிட்ட டி.வி.யில் ‘டாப்டென்’னில் படங்களை குறிவச்சுத் தாக்க ஆரம்பிச்சாங்க. நடிகர்சங்கத்திற்குப் போனால் ஒரே புகார்கள். ‘நீங்க இதைக் கண்டிக்க வேண்டாமா’ன்னு ஏகப்பட்ட குரல்கள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பொறுப்புக்கு வந்துட்டா வருகிற விஷயங்களில் இதுவும் ஒண்ணு. தலைவர் கலைஞரைப் போய்ப் பார்த்தேன்.
அப்போது முதல்வரை ஈஸியாகப் பார்க்கலாம். கோட்டையிலும் சரி, பெரியம்மா, சின்னம்மா வீட்டிலும் சரி எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம். உடனே சின்னம்மா வீட்டிற்குப் போனேன். நான் கலைஞரை அப்பா, அண்ணே என்று இரண்டு மாதிரியும் கூப்பிடுவேன். ‘என்ன அப்பா, உங்ககிட்டே ஆலோசனை கேட்டுத்தானே நடிகர் சங்கத்தலைவர் ஆனேன். முதல் புகாரே உங்க டி.வி. பத்திதான் வருது. பார்த்து விமர்சனம் செய்யலாம். காசுபணத்தை இறைச்சுப்போட்டு, படம் செய்தால் அக்குவேறு ஆணிவேறாக கிழிச்சுப் போடுறாங்க. தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் நொந்து போறாங்க. இதுமாதிரி செய்றது நல்லதுதானா, நீங்க சொல்லக் கூடாதான்னு கேட்டேன். கச்சிதமாக நான் சொன்னதையெல்லாம் கேட்டார். ‘நான் சொல்றதை அவங்க கேட்க மாட்டாங்க’ன்னு சொல்லிட்டார். நான் சரிங்கன்னு எழுந்திருச்சி வந்துட்டேன். வருத்தம் வந்துடுச்சி. யதார்த்தமாக ‘குமுதத்தில்’ பேட்டி கேட்க, வருத்தப்பட்டு, கோபப்பட்டு பேசிட்டேன். கலைஞர் அண்ணனுக்கு வருத்தம் வந்துடுச்சு.
அதுக்கும் மேலே இன்னொரு சம்பவமும் நடந்துடுச்சு. ஏதோ படபூஜைக்குப் போயிட்டு, விழுப்புரத்திற்கு பொன்முடி வீட்டுத் திருமணத்திற்குப் போக வேண்டியிருந்தது. கலைஞர்கிட்டே கொஞ்சம் லேட்டாக வருவேன்னு சொல்லியிருந்தேன் போனேன். நான் விழுப்புரம் போகும்போது கலைஞர் பேசிட்டிருந்தார்.
சின்ன சலசலப்பு. ரசிகர்கள், மக்கள் என்னைப் பார்க்க கூடிட்டாங்க. அங்கேயிருந்த கட்சிக்காரர்கள் நான் ஏதோ இடைஞ்சல் பண்றதா நினைச்சிட்டாங்க. அப்படியரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. என்னுடைய காருக்கு ஏகப்பட்ட சேதம். அப்படியிருந்தும் உள்ளே போய், வாழ்த்திட்டுக் கிளம்பினேன். அவ்வளவு நெருக்கடியிலும் வாசல்வரை வந்து வழியனுப்பிய பொன்முடியை மறக்கமுடியாது. எம்.ஜி.ஆர் பாணியில் விஜயகாந்த் வந்திட்டுப் போனார்னு பத்திரிகைகள் எழுதிட்டாங்க. கொஞ்சம் இடைவெளி வந்துவிட்டது. அல்லது நானாக ஒதுங்கிக்கொண்டேன்.
அப்புறம் நெய்வேலிக்கு காவிரிநீர் பிரச்னைக்கு நீதி கேட்கப்போனோம். இடைவெளி எதையும் நினைக்காமல் கலைஞர் அண்ணன், சரத், நெப்போலியன் நெய்வேலிக்கு வருவதற்கு உதவி செய்தார். அந்தச் சமயத்தில் பாரதிராஜா செய்த குழப்பங்கள் அதிகம். பாரதிராஜா, சரத், ரஜினி மூன்று பேரும் இருந்து பேசியபோது சென்னையில் வச்சு போராட்டத்தை நடத்திக்கலாம்னு சொல்லியிருக்கார். திடீரென்று எங்ககிட்டே வந்து நெய்வேலியில் மின்சாரத்தை நிறுத்துவேன்னு சொல்லிட்டார். கலைஞர் முரசொலி அலுவலகத்தில் இருந்தார். நான் சொன்னது எல்லாத்தையும் கேட்டார். ‘விஜி உன்னை நம்பி அனுப்புறேன். கூட்டிட்டுப் போ’ன்னு சொல்லிட்டார். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி அறிவுபூர்வமாகச் செயல்படுவார் கலைஞர். இன்னிக்கு வரைக்கும் அவர் நிலைச்சு நிற்கிறதுக்குக் காரணமே அதுதான். பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்பார். பிரச்னையைப் பற்றி முன்னமே அபிப்பிராயம் வச்சுப்பார். ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட அவர் வாயிலிருந்து வராது. இந்தச் சாமர்த்தியமும், யுக்தியும் வேறு எந்தத் தலைவருக்கும் வராது.
பெப்ஸி, படைப்பாளிகள் மோதல் வந்தபோது என்னை படைப்பாளிகள் தலைவராக இருக்கச் சொன்னாங்க. நான் டெல்லியிலிருந்த அவரிடமே ஆலோசனை கேட்டேன். ‘விஜி, எதற்கு வீண் வம்பு’ன்னு சொன்னார். அமைப்பாளர்கள்கிட்டே ‘ஸாரி, முடியாது’ன்னு சொல்லிட்டேன். அவர் சொன்ன பேச்சையெல்லாம் கேட்டு இருக்கேன். நினைச்சுப் பார்த்தால் ஒரு தகப்பன்_பிள்ளை மாதிரிதான் எங்க உறவு இருந்திருக்கு. பிரியத்தோட இன்னொரு முகம் கோபம்னு சொல்வாங்க. அந்தமாதிரி கோபம் எங்ககிட்டே இருந்திருக்கு. இருக்கு. நான் மனசுக்குப் பட்டதைப் பேசுவேன். கலைஞர் அண்ணன் எதையும் தீர்மானிச்சுப் பேசுவார்.
அவரோடு பழகிய காலங்கள், என்னை மேம்படுத்திய காலங்கள். அவர்கிட்டே இருந்து நிறைய கத்துக்கலாம். எங்களுக்குள்ளே பேசிக்கிட்டாலும், பார்த்துக்கிட்டாலும் ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது உண்மைதான். இரண்டுபேரும் மனசுவிட்டு பேசிவிட்டால், அது எல்லாமே காணாமல் போயிடும்.
சிலபேர் நீங்க அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்னன்னு கேட்கிறாங்க. இதைத்தான் ஆறேழு வருஷமாக நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ளே போராட்டம். இப்போ இந்த நடிகர் சங்கத்தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ணமுடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன் இருந்துச்சு, அடைச்சோம். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணணும். இப்படித்தான் ஜனங்கள் எங்கே போனாலும் தருகிற ஆதரவையும், அன்பையும் ஏத்துக்கிட்டு என்ன செய்யறது! அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்தவேண்டியது என்ன? ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். ஜனங்களுக்கு நல்லது செய்யலை என்றாலும் கெடுதல் பண்ணிடவே கூடாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் மவுண்ட்ரோட்டில் பெரிய அளவில் மறியல் நடந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சின்ன வார்டு தேர்தல். ஏழெட்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. மக்களுக்கு எவ்வளவு துயரம்! கேள்வி கேட்க யாரும் இல்லை. ஸ்கூலுக்குப் போறவங்க, இண்டர்வியூ போக அவசரப்படுகிறவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. அரசியல்கட்சிக்கு அது முக்கியமே இல்லை. வெட்கங்கெட்டுப்போய் நாமும் எந்தக்கேள்வியும் கேட்காமல் விடுகிறோம்.
நமக்கு கஷ்டங்களைத் தாங்கிப் பழகிவிட்டது. ஏழெட்டு மணிநேரம் பொதுமக்கள் துயரப்படவேண்டியதின் அவசியம் என்ன? எனக்கு ஜனங்கள் பெரிசா வசதி வாய்ப்போடு வாழந்து செழிக்கணும் என்ற விருப்பமெல்லாம் அதிகம் இல்லை. அவங்க பாதுகாப்பாக இருக்கணும், சவுகரியமாக இருக்கணும், நிம்மதியாக இருக்கணும் இதுதான் என் விரும்பம்னு சொல்லத் தோணுது. சேவை செய்யணும் என்ற எண்ணம் ஒரு நடிகனுக்கு வரக்கூடாதா? என் மன்றத்து செயல்பாட்டைப்பாருங்க. எல்லாருடைய கட்சியை விட கட்டுப்பாடாக இருக்கும். நான் மத்தவங்க மாதிரி ‘ஷோ’ காட்டலை. ஜனங்க அன்புக்கு பிரதிபலனாக நான் என்ன செய்யப்போறேன்? இதற்குப் பதில்தான் அரசியலுக்கு நேரடியாக வருவது என்று முடிவெடுத்தேன்.
நான் மானசீகமாக நினைச்சுக்கிட்டு இருந்த குரு எம்.ஜி.ஆர்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை, அவர்கிட்டே என்னால் நெருங்க முடியவில்லை. நடிகர் ராஜேஷ் திருமணத்தில்தான் அவரை நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு வந்தது. எனது கைகளை தன் சிவந்த கரங்களுக்கு மத்தியில் வைத்து வணக்கம் சொன்னார். ‘நல்லாயிருக்கீங்களா’ என்ற உலகின் அழகிய வார்த்தையை அன்று நான் கேட்டேன். போகும்போதும் என்னை அருகில் அழைத்து கை அழுத்திப் போனார். ஆனால் எம்.ஜி.ஆரின் அருகிலிருந்து பழக முடியாததை, அவர் காட்டியிருக்கிற அன்பை மகனாக என்னை ஆசீர்வதித்து ஜானகி அம்மா பழகினார். மறக்க முடியாத ஜானகி அம்மாவைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது.
(பொங்கி எழுவோம்)
தொகுப்பு: நா.கதிர்வேலன்.படம்: சித்ராமணி
எஸ்.விஜயன், திருப்பத்தூர்.வசனம் எழுதி நடிச்ச டி.ஆர்., பாக்கியராஜ் வெற்றி பெறமுடியவில்லை. மற்றவர்கள் எழுதிய வசனங்களைப் பேசி நடிக்கிற விஜயகாந்த் எப்படி வெற்றி பெறுவார்னு ஒரு பத்திரிகையில் வந்திருக்கிறதே!
‘‘எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா இவர்களும் மற்றவர்கள் எழுதிய வசனங்களைப் பேசி நடித்தவர்கள்தான். உங்களுக்கு இந்தப் பதில் போதுமே!’’
கே.அழகியநம்பி, காங்கேயம்.உங்கள் மனைவியும் உங்களோடு அரசியலுக்கு வருவாரா?
‘‘அவங்களுக்கு குழந்தைகளைப் பார்த்துக்கறது, வீட்டை நிர்வாகம் பண்ணிக்கிறதுனு நிறைய வேலைகள் இருக்கு. என்னுடைய செயல்பாட்டில் நம்பிக்கை இருக்கிறவங்க அவங்க. என்மேல் அக்கறை நிறைய இருக்கும். என்னுடைய அரசியல் வேலைகளில் தலையீடு அளவுக்கு இருக்காது. ஒரு நண்பன் மாதிரி அவங்ககிட்டே ஆலோசனை கேட்பேன். இறுதி முடிவு என்னோடது.’’
பழ.தளபதி சண்முகம், கோவைநீங்க பி.ஜே.பி.யோடு அணிசேரப்போகிறீர்கள்னு சொல்றாங்களே! உண்மையா?
‘செப்டம்பர் வரை தினமொரு செய்தி வரும். அப்புறம் எனது கொள்கைகள், யார் பக்கம்னு தெளிவாகிட்ட பிறகு எந்தக்கேள்வியும் வராது. அரசியல் சுலபமில்லை தளபதி, நிறைய ‘ஹோம்ஒர்க்’ செய்துக்கிட்டு இருக்கேன். தினமும் பேசுகிற தலைவர்கள், பிரியப்பட்டு வந்து சந்திக்கிற பொதுவானவர்கள் எல்லார் கருத்தையும் கேட்டுக்கிட்டே இருக்கேன்.’’
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஆர்.எம். வீரப்பன்தான் முதல்வராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், திடீர் மாற்றமாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஜானகி அம்மாள்.
பிறகு அவரே ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். நானே, ‘ஏழை ஜாதி’யில் ஒரு வசனம் வச்சேன். ‘என்னடா மக்கள் மக்கள்னு சொல்றே, மக்களுக்காக பாடுபட்ட மக்கள் திலகத்தின் மனைவியையே தோற்கடிச்சவங்க இந்த மக்கள்னு’ சொல்வேன். எல்லோரும் அதில் இருந்த நியாயத்தைப் பார்த்து கை தட்டினார்கள். எனக்கு ஜானகி அம்மாள் பழக்கமானதே ஒரு ஆச்சர்யமான நிகழ்ச்சி. எனது மூத்த மகன் பிரபாகரன் பிறந்திருந்த நேரம். அதே மருத்துவமனைக்கு யாரையோ பார்க்க வந்திருக்கிறார் அம்மையார். விஜயகாந்தின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு பார்க்க வந்திருக்கிறார். பிரேமலதாவிற்கு ஆச்சர்யமான விஷயம். அப்படியே காலில் விழுந்து ஆசி வாங்கியிருக்கிறார். அவரும் குழந்தையைத் தூக்கி, கொஞ்சிவிட்டுப் போயிருக்கிறார்.
நான் ஷ¨ட்டிங்கிலிருந்து திரும்பியதும் இன்னிக்கு வந்த வி.ஐ.பி. யார் தெரியுமா என்று கண்ணில் சந்தோஷம் துள்ளக் கேட்டார் பிரேமா. ஜானகி அம்மாவின் பெயரைச் சொன்னதும் அப்படியே மெய்சிலிர்த்துவிட்டேன். அடுத்து ‘நல்லவன்’ பட ஷ¨ட்டிங் ‘அப்பு ஹவுசில்’ நடந்தது. அருகில் இருந்த ஜானகி அம்மையார் என்னையும், எஸ்.எஸ். சந்திரனையும் சாப்பிட அழைத்தார். எஸ்.எஸ். சந்திரன் ‘அம்மா நான் உப்புப் போட்டு சாப்பிடுவேன். உங்க வீட்டில் சாப்பிட்டுவிட்டு, உங்களையே தாக்கிப் பேசுகிற நிலைமை வரும். நானும் பேசிடுவேன். அதனால் சாப்பிட மனசில்லை’யெனச் சொல்லிவிட்டார். நான்தான் சாப்பிடப் போனேன். உள்ளே ‘ராஜா தேசிங்கு’ பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ‘தலைவர் அதில் என்ன மாதிரி ட்ரஸ் போட்டிருப்பார் என்று பார்க்காமலே சொன்னேன். ஜானகி அம்மாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ‘நீ இவ்வளவு எம்.ஜி.ஆர். ரசிகனா’ என்று மாய்ந்து மாய்ந்து கேட்டார்.
எம்.ஜி.ஆரை நெருங்க முடியாத குறைக்கு ஜானகி அம்மா பெரிதும் அன்பு காட்டினார். பிரேமா மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. அமெரிக்காவிலிருந்து திரும்பும்போதும் விதவிதமான பொம்மைகளை குழந்தைகள் பிரபாகரன், சம்மிக்கு வாங்கி வருவார். அவர்களுக்கு தங்கச் சங்கிலிகளைப் போட்டு அழகு பார்ப்பார். திடீரென்று ‘குழந்தைகளை தூக்கிட்டு தோட்டத்துக்கு வாம்மா’ என்று தொலைபேசியில் பேசுவார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு போவோம். பேரன்கள் மாதிரி கொஞ்சுவார். குழந்தைகளும் பாட்டி, பாட்டியென்று உயிரை விடுவார்கள். எம்.ஜி.ஆர். எங்கே உட்கார்ந்து இருப்பாரோ, அங்கே போய் உட்காருவேன். எம்.ஜி.ஆர். பயன்படுத்திய போனையெல்லாம் தொட்டுப் பார்ப்பேன். அவர் மூச்சுக்காற்று அதில் கலந்து இருக்கும் என்ற எண்ணமெல்லாம் வரும். எம்.ஜி.ஆர். பயன்படுத்திய ‘டை’களையெல்லாம் என்னிடம் கொடுத்தார். திடீரென்று ஒருநாள் ‘விஜி, பிரேமா நீங்க இரண்டு பேரும் தோட்டத்திற்கு வந்திட்டுப் போங்க’ என்று கூப்பிட்டார். என்னவோ ஏதோவென்று உடனே அங்கே ஆஜர். ‘‘இதோ உனக்குப் பிடிச்ச பரிசு தர்றேன். தலைவர் பயன்படுத்திய பிரச்சார வேனை வச்சுக்கோ’ என்று வண்டிச் சாவியைக் கொடுத்தார்.
எனக்கும், பிரேமாவிற்கும் கண்ணீரே வந்துவிட்டது. ‘அம்மா’ என்று ஜானகி அம்மாவை கட்டிப்பிடித்து வணங்கினார் பிரேமா. என்னிடம் ‘நீ முன்னாடியே வந்து தலைவரைப் பார்த்திருக்கக்கூடாதா, இப்போது திரும்பிப் பார்க்காதவர்கள் எல்லாம் அவரிடம் எவ்வளவு உதவியைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு எம்.ஜி.ஆர். விசுவாசியாக இருப்பது தெரிந்திருந்தால் உன்னை பெரிய பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்திருப்பார்’ என்று அம்மா அடிக்கடி சொல்வார். ‘இந்த வேனை கேட்காதவர்களே இல்லை விஜி. பாக்யராஜ் முதற்கொண்டு எத்தனையோ பேர் மன்றாடிக் கேட்டார்கள். இது உனக்குக் கிடைச்சது ரொம்பப் பொருத்தம். இதை யாருக்குக் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைச்சபோது போட்டி இல்லாமல் நினைவுக்கு வந்தது உன் முகம்தான்’ என்றார் அம்மா.
அவர் அருகில் அமர்ந்துகொண்டு தலைவரைப் பற்றி நிறையக் கேட்பேன். நடந்ததெல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். அ.தி.மு.க. ஆரம்பித்து பட்ட கஷ்டங்கள், தலைவருக்கு நேர்ந்த அவமானங்கள், அதை அவர் சவாலாக எடுத்துக்கொண்ட விதத்தையெல்லாம் அப்படியே சொல்வார். ‘எனக்கு அரசியல் வரலை விஜி. வந்தவர்களுக்கு சாப்பாடு போடணும், உபசரிக்கணும். இவ்வளவு பணம் கொடுன்னு சொன்னால், கொடுக்கணும். அதுதான் எனக்குத் தெரிஞ்சது’ என்று சொல்வார். என் படங்களை விரும்பிப்பார்ப்பாராம். ‘உழவன் மகன்’ அவருக்கு ரொம்பப் பிடிச்ச படம் என்று சொல்வார். கலைஞர்கிட்டே கனிமொழி, ‘விஜி அண்ணன் ஆட்சி இருக்கும்போது அதிகமாக வரமாட்டாங்க. இல்லாதபோது சுலபமாக சந்திக்க வருவாரு’ என்று சொல்வாங்க. அதேமாதிரி ஜானகி அம்மாவும் ‘அவர் இல்லாதப்போ இப்படி அன்பு காட்டுறியே. நான் உனக்கு என்ன செய்யப்போறேன்’ன்னு சொல்வாங்க.
அவங்களுக்கு டயாலிசிஸ் பண்ணும்போது ரொம்ப சிரமப்படுவாங்க. எனக்கு நெஞ்சே வெடிச்சுப்போகும். டயாலிசிஸ் முடிஞ்சு ஒருநாள் ஆனதும், பிள்ளைகளைக் கொண்டுவான்னு சொல்லி கொஞ்சிக்கிட்டே இருப்பாங்க. இந்தத் தோட்டத்தை 99 வருஷ குத்தகைக்கு நீயே எடுத்துக்கோ என்று சொன்னார். ‘சரிம்மா ஷ¨ட்டிங் போயிட்டு வந்துவிடுகிறேன்’னு சொல்லி ஊட்டி போனேன். அம்மா இறந்துபோயிட்டதாக பிரேமா அழுதுக்கிட்டே போன் செய்தாங்க.
உடனே, அந்தக் கணத்திலேயே புறப்பட்டு வந்தேன். பார்த்தால் தோட்டத்தில் திருநாவுக்கரசு, ஆர்.எம். வீரப்பன் எல்லோரும் இருந்தாங்க. இறுதிச்சடங்கு சம்பந்தமான மற்ற எல்லா முடிவுகளையும் விஜயகாந்தே செய்யட்டும் என்று அவங்க தம்பி நாராயணன் சொல்லிவிட்டார். அம்மா இறக்கும்போது சொல்லியிருக்கக்கூடும். நானே என் அன்னையைத் தோளில் சுமந்தேன். அடக்கம் செய்தேன். எனக்கான உரிமையை எல்லோரும் ஆமோதித்தார்கள். என் தலைவருக்குச் செய்ய முடியாத மரியாதையை, என் அன்னை ஜானகி அவர்களுக்குச் செய்தேன். இன்னும் என் குழந்தைகளுக்கு ஜானகி பாட்டியை மறக்க முடிய வில்லை. படுக்கை அறையில் எம்.ஜி.ஆர்_ஜானகி அம்மாவின் படத்தில் இன்றைக்கும் கண்விழித்து எழுந்திருக்கிறாள் என் மனைவி.
(பொங்கி எழுவோம்)________________________________________
என் பிரியத்திற்குரிய ஷானகி அம்மாவை தோளில் இருந்து இறக்கித்தான் அடக்கம் செய்தேன். ஆனால் அவரை எந்நாளும் நாங்கள் மறந்ததில்லை. அம்மா இரண்டு வருடத்தில் எங்களை அன்பால் கட்டிப்போட்ட சம்பவங்கள் அதிகம். என் மனைவி மிகவும் பாதிக்கப்பட்டார். எனக்காவது சினிமா, ஜூட்டிங் என்று மனதை திசைதிருப்ப நிறைய விஜயங்கள் இருந்தன. கடைசியில் எத்தனையோ பேரை ஆளாக்கிய எம்.ஜி.ஆரின் மனைவி தனிமையில் இருந்தார். அண்ணி, அண்ணி என்று மாய்ந்தவர்கள் அவரை எம்.ஜி.ஆர் பிறந்த நாளுக்குத்தான் எட்டிப்பார்த்தார்கள். என்னையும், பிரேமாவையும் வைத்துக் கொண்டு அரசியல் விஜயங்கள் நிறையப் பேசுவார் ஷானகி அம்மா. எம்.ஜி.ஆருக்கு எதிரான சூழ்ச்சிகளை எம்.ஜி.ஆர் முறியடித்ததை சுவைபடச் சொல்லுவார். ‘‘வந்தவங்க வயிறு காயாமல் இருக்கணும், அதைத்தான் பெரிசாக நினைச்சேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார் ஷானகி அம்மா. ஒரு தடவை ஷெயலலிதாவும், சசிகலாவும் வந்திருந்தார்களாம். கொஞ்ச நேரம் நலம் விசாரித்துவிட்டு, சாப்பிட்டு விட்டு போனார்களாம். ‘‘மற்றவர்கள் நினைப்பது போல் நாங்கள் எதிரிகள் அல்ல’’ என்றும் சொல்வார். அப்போதுதான் சத்யா ஸ்டுடியோவை பெண்கள் கல்லூரியாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஷானகி அம்மா.
‘‘ஷெயலலிதா செய்திருப்பார். நான்தான் அதை மறுபடியும் வலியுறுத்தவில்லை’’ என்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஷானகி அம்மா சொன்னார். அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்க ‘இதை நீங்கள் அவசியம் செய்யணும்’ என்று கேட்டுக் கொண்டேன். நாற்பதாண்டு கால நண்பர் என்று பேசுவதற்கேற்ப அதைச் செய்து தந்தார் கலைஞர்.
அ.தி.மு.க. ஆரம்பித்த பிறகு எம்.ஜி.ஆரின் ஈடுபாட்டைப் பற்றி பேசும்போது, ஜானகி அம்மாவின் கண்கள் பிரகாசமாகிப் போகும். உலகம் சுற்றும் வாலிபனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் தயாரிக்க ஆசைப்பட்ட ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’வில் நான் நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டார். அந்தக் கதை ஃபைலை மறதியில் எங்கோ வைத்துவிட்டு, அம்மா அலைந்து தேடிப்பார்த்தார். கடைசி வரைக்கும் கிடைக்கவேயில்லை. ‘உன் மனசுக்கு நீயெல்லாம் அரசியலுக்கு வந்தால் நல்லாயிருக்கும்’ என்று அடிக்கடி சொல்வார். நான் சிரிச்சிட்டு ‘தமாஷ் பண்ணாதீங்க அம்மா’ன்னு சொல்வேன். ஆனால் இன்னிக்குப் பாருங்க அரசியலுக்கு வரணும்னு இருந்திருக்கு. வர்றேன்.
இன்னும் சிலபேர் என்னை அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. அரசியல் சாக்கடை, அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம், உங்களுக்கு ஏன் இந்த வம்புபிடிச்சவங்களோட வேலை என்று என் மேல் அக்கறைப்படுகிறவர்களை நான் வணங்குகிறேன். நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. நான் இவங்களுக்குக் கடமைப்பட்டு இருக்கேன். இவர்களுக்காக நான் அரசியலில் இறங்க வேண்டும் என்பதுதான் என் கனவு.
இப்ப இருக்கிற கட்சிகள் மாறி மாறி ஆண்டு மக்களுக்குச் செய்தது என்ன? ஒவ்வொண்ணுக்கும் இதுக்கு என்ன செய்தீங்கன்னு கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். நான் மக்களோட மனச்சாட்சியாக இருக்கணும். இது ஒண்ணுதான் மனசில் இருக்கு. பெரிய திட்டங்கள் கைவசம் இல்லை. நான் அரசியல் சாணக்யன் கிடையாது. அரசியலில் கரைபுரண்டு எழுந்தவன் இல்லை. நிறைய அரசியல்வாதிகளின் கசடு தெரியும். அவர்கள் உள்மனசு புரியும். ஜனங்க நம்பிக்கிட்டு இருக்கிறவர்களை பழகிட்டு, இவ்வளவுதானான்னு ஆச்சர்யப்பட்டு போயிருக்கேன்.
நான் என்னிக்கும் முதல் அமைச்சர் ஆவேன்னு சொல்லிக்கிட்டதில்லை. ஆனால் இங்கே சில பேருக்கு பதற்றம் வந்திருக்கு. நேரடியாக அரசியல் அனுபவம் வேணும்னு ஒரே கூப்பாடு இருக்கு. முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் எந்தப் போராட்டத்தில் கலந்துக்கிட்டு அந்தப் பதவிக்கு வந்தாரு! தயாநிதி மாறன் எந்தப் போராட்டத்தில் கலந்துக்கிட்டு டெல்லி வரைக்கும் மந்திரி ஆகியிருக்காரு! அன்புமணி எந்தப் போராட்டம், தியாகம் செய்து மத்திய மந்திரி ஆகியிருக்கார்? யாரும் வரக்கூடாது என்பது நம்ம கையில் இல்லை. மக்கள் சக்திக்கு முன்னாடி எதுவும் மேல் இல்லை. மலை மீது ஏறுகிறவரைதான் பிரமிப்பு களைப்பு, பதற்றம் எல்லாம். ஏறிவந்த பிறகு அந்த பிரமிப்பு போயிடும். ஒண்ணு சொல்றேன். தெளிவுபடவும் சொல்றேன். எனக்கு இனியும் பணம் வேண்டாம். நான் எளிமையானவன். என் கவனம் எல்லாம் மக்கள் மேலேயிருக்கு. தயாநிதிமாறனும், அன்புமணியும் வந்தபிறகு அரசியல் அனுபவம் வேணும், போராட்டத்தில் கலந்துக்கிட்டு சிறைக்குப் போயிருக்கணும், கட்சி அனுபவம் வேணும் என்றெல்லாம் யாரும் பேச வேண்டாம்.
எனக்கு இங்கே இருக்கிற அத்தனை பேருடைய அரசியலும் தெரியும். ஒரு தேர்தலுக்கு ஒருத்தர், மறு தேர்தலுக்கு இன்னொருத்தர்னு போகிற அரசியல் கூட்டணி அசிங்கமும் எனக்குத் தெரியாதா, எனக்கு அவங்க சொல்ற அரசியல் தெரியாதுதான். அதாவது கொள்ளை அடிக்கிற அரசியல் தெரியாது. குறுக்கு வழி அரசியல் தெரியாது. உள்ளே ஒண்ணு வச்சுக்கிட்டு, வெளியே அரவணைக்கிற புத்தி எனக்குக் கிடையாது. என்கிட்டே ஒண்ணும் இல்லையென்றால், ஏன் என்னைப்பத்தி பயப்படணும்? உங்க கட்சியிலிருந்து பத்தில் இரண்டு பேர் பேசி, ‘நீங்க அரசியலுக்கு வரணும்’னு சொல்றாங்களே, எதுக்காக? எல்லோருக்கும் மாற்றம் தேவையாக இருக்கு. அந்த மாற்றத்திற்குத்தான் வழி தேடுறேன். மக்கள் ஏத்துக்கிட்டா நான் வரப்போறேன். நான் ஒண்ணும் சர்வாதிகாரியாக வரப்போறதில்லையே. ஆக, என் மேல் உங்களுக்கு ஒரு பயம் இருக்கு. அடடா, செப்டம்பரில் கட்சின்னு சொல்லிவிட்டது தப்போன்னு நினைக்கிறேன். உங்களுக்காக சீக்கிரமே வந்திருக்கணும்.
சிவாஜி அண்ணன்தான் அடிக்கடி சொல்வார். ‘டேய் மதுரைக்காரா. மனசில் இருக்கிறதையெல்லாம் பேசுற பயலா இருக்கே. புள்ளைகளை படிக்க வையி. தமிழ் தமிழ்னு சொல்லிட்டு, அவங்க பிள்ளைகளை டெல்லியில் கொண்டுபோய் விட்ருவாங்க’ன்னு சொல்வார். நடிகர் சங்கத்தில ஜாக்கிரதையாக பழகிக்கோ. வேட்டியை கட்டிக்கிட்டு வெள்ளந்தியா திரியறே. ஈகோ பிடிச்சவங்க இருக்கிற இடத்தில் இருக்கே. என்னையே சிமெண்ட் மூட்டையை திருடிட்டு போயிட்டான்னு சொன்ன இடம்பா அது’’. ‘செவலை’ அண்ணனே (எம்.ஜி.ஆரை அப்படிச் சொல்வார்) இந்த இடத்தில் உட்கார்ந்து திணறிப் போயிட்டாருடா’ன்னு சொல்வார். இப்படித்தான் எந்த ஒரு இடத்திலிருந்தும் பாடம் படிச்சிருக்கேன். சாதியோ, மதமோ எதை வேண்டுமானாலும் மனசுல வச்சுக்குங்க அதை அரசியல் ஆக்கி மக்களோட நிம்மதியை கெடுக்காதீங்க. அப்படி கெடுக்கிற எந்த முயற்சியையும் அரசியல் கட்சிகள் கைவிடணும். அதற்கு முன்மாதிரிதான் என் கட்சி!
(பொங்கி எழுவோம்)
தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ கதாநாயகிகளோடு நடித்திருக்கிறார். ஆனால் ரசிகர்களின் மனதைத்தொட்டவர்கள் சரோஜாதேவி, ஜெயலலிதா மட்டும்தான்.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபிறகு ஜெயலலிதா நடிச்ச தனிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சோம். மதுரையிலிருந்து ஷ¨ட்டிங் பார்க்க வந்தபோது ஏ.வி.எம்.மில் அவரைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவரது நடனம். அவ்வளவு ஈஸியாக, அருமையாக சளைக்காமல் ஆடுவார். முகராசி படத்தில் எம்.ஜி.ஆரும் அவரும் ஷார்ட் பேண்ட், ஷார்ட் கட்டம் போட்ட ஷர்ட் போட்டு, கம்பை குறுக்காக வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார்கள். இரண்டு பேரும் கண் படுகிற அளவுக்கு அழகாக இருப்பார்கள். எம்.ஜி.ஆர். கூட நடித்ததில் அவரது ரசிகர்களுக்கு ஜெயலலிதா மட்டும்தான் ஒட்டுதல் ஆனார். அவர் சிவாஜியோடு நடிக்க ஆரம்பித்ததும் எங்களை மாதிரி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் இறங்க, இவர் நடிக்கப்போக, நாளாக நாளாகத்தான் அந்த வருத்தம் மறைந்தது.
எம்.ஜி.ஆர். என்கிற பிரமாண்டமான சக்தியோடு நடிச்சாலும், அவங்க ரசிகர்களை தனியாக கட்டிப்போட்டு வைப்பாங்க.
ஸ்டார் டி.வி.க்கு அவங்க பேட்டி கொடுத்தாங்க. பழைய வாழ்க்கை பற்றிய பேட்டி அது. என் மனைவி பிரேமலதா மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேட்ட கேள்விகளும், அம்மாவின் அற்புதமான பதில்களும் அவ்வளவு உண்மையாக இருக்கும். சந்தியா அம்மா மேல் வைச்சிருந்த அவங்களோட மாறாத பிரியம், திடீரென்று நல்லா படிச்சிட்டு இருந்த பொண்ணு சூழ்நிலையால சினிமாவிற்கு வரவேண்டிய நிர்ப்பந்தம், அதை எதிர்கொண்ட விதம் எல்லாத்தையும் தனியாக, அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வருவார். பார்த்தவர்கள் எல்லோரும் உருகிப்போன பேட்டி அது. அம்மாவின் மிகச் சிறந்த பேட்டி.
எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவர் அமைதியாக தலைவரின் தலைமாட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அவரைப் படுத்திய பாடு, அவர் பட்ட அவமானங்கள் எல்லாத்தையும் ஜீரணித்துக்கொண்டு அவர் தாங்கி நின்ற விதம், இன்னிக்கு அவர் காலூன்றி நிற்பதற்கான அச்சாரமாகத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர். அவரை கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கினார். அப்புறம் அதற்கும் மேலே வந்தது எல்லாம் அம்மாவோட திறமைதான். ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விடுங்கள், இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவை. சிறு கஷ்டத்திற்கும் அழுது துடிக்கிற பெண்களுக்கு மத்தியில் அவரின் தனித்த கலங்காத தன்மை தன்னிகரில்லாத உதாரணம். இந்திராகாந்தியை மட்டும் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டாம், இனி அம்மாவையும் உதாரணமாகச் சொல்லுங்கள்.
எனக்கு அவங்ககிட்டே பிடிச்ச விஷயம், அவங்க மத்த அரசியல்கட்சி பற்றி கவலைப்பட மாட்டாங்க. ஒரு வியூகத்தை அமைச்சுக்கிட்டு, அப்படியே போய்க்கிட்டு இருப்பாங்க. என்னை வைச்சே சொல்றேனே, என்னடா விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போறாரே என்று கவலைப்படமாட்டார். மத்தவங்க படுகிற அவஸ்தையை அவர் படமாட்டார். இதுதான் முடிவு என்றால் முடிவு, லாபமா, நஷ்டமா முடிஞ்ச பின்னாடிதான் பரிசீலிப்பார். இதை நம்ம ஆளுங்க ஆணவம், அகம்பாவம்னு சொல்வாங்க. உண்மையில் அதற்குப் பெயர் தன்னம்பிக்கை. தவறுகளைத் திருத்திக்கமாட்டார்னு அவரைப்பத்தி பேச்சிருக்கு. அதுவும் உண்மையில்லை. போன தடவை பாருங்க, எங்கே பார்த்தாலும் சசிகலா, சசிகலான்னு இருந்தது. இன்னிக்கு அவங்க ப்ரேமுக்குள்ளேயே இல்லை. போன தடவை ஊழல், ஊழல் என்று சொன்னாங்க, இந்தத் தடவை அப்படி எங்கேயாவது சொல்றார்களா! 90_95_ல் என்ன பேசினாங்களோ, 2001_2005_ல் அந்தப் பேச்சே இல்லை. அன்றைக்கு சினிமாவிலும் ஜெயலலிதாதான் முதலிடம். இன்னிக்கும் அரசியலியலும் அம்மாதான் முதலிடம். உண்மை இது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய உண்மை இது.
இன்றைக்கு தனிப்பட்ட குணாதிசயங்களுக்காக மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் அம்மாவும், கலைஞரும்தான். மத்த தலைவர்கள் வருவாங்க. போவாங்க. அவங்களுக்கான தனிப்பட்ட அடையாளங்கள் கிடையாது. நான் அம்மாவைச் சந்தித்து பேசியபோது கூட, அவங்க ஸ்டைலை ரசிச்சிருக்கேன். தனியாக கம்பீரமாக உட்கார்ந்துகொண்டு, நாம் சொல்றதைக் கேட்கிற விதம், அணுகுகிற விதம், எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கும். சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லணும் என்கிற பயம் வந்திடும். அவங்களோட பெரிய புகழுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அவங்களோட வள்ளல் தன்மை. இன்னிக்கு பேப்பரில் பாருங்க. தொழிலாளருக்கு 25 ஆயிரம் நிதிஉதவி. ஐந்து போலீஸ்காரங்க குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் உதவி, காரில் அடிபட்டு இறந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் உதவி இப்படித்தான் இருக்கும். தினம் நிதி கொடுத்து, அவங்க வாழ்க்கையில் விளக்கேற்றியதுதான் வருமே தவிர, இன்னாரைச் சந்தித்தார், இன்னார் பேசினார் என்பது குறைவுதான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு கொடுத்துப் பழகிய முதல்வர் அம்மா தவிர யாராவது இருக்காங்களா? முன்னாடி கோடையில் தண்ணீர் கிடைக்காமல் தடுமாறினோம் இப்பப் பாருங்க அம்மா அனாயாசமாக சமாளித்த விதத்தை. பிணீts ஷீயீயீ tஷீ கினீனீணீ. +2 வரைக்கும் மாணவர்களுக்கு புத்தகம், சைக்கிள் இதெல்லாம் எம்.ஜி.ஆரின் ஈடுஇணையற்ற மதிய உணவுத் திட்டம் மாதிரி வெற்றியடையும்.
இன்றைக்கு எத்தனையோ துயரப்பட்ட பெண்கள் முன்னுக்கு வரலாம் என்பதற்கு அம்மாதான் உதாரணம். ரோல்மாடல். இதைப் படிக்கிற அரசியல்வாதிகள் கிண்டல் பண்ணலாம். நீங்க கிண்டல் செய்தாலும் அதுதான் உண்மை. அம்மா பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருந்தால், இந்நேரம் எல்லோரும் புலம்பித் தீர்த்து இருப்பாங்க. அவங்களை முதுகில் குத்தியவர்கள் அதிகம். அதை இன்றைக்கு வரைக்கும் பேட்டியில் சொல்லிக்கிட்டதில்லை. தன்னந்தனியாக மீண்டு வந்து, சிரித்த முகமாக எல்லாத்தையும் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அம்மாவோட மூன்று விஷயங்கள்தான் அவங்களோட வெற்றி. துணிச்சல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மாதவிகிட்டே அம்மா ஒரு வசனம் பேசுவாங்க. ‘அடியே’ கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பெண்களோட மன ஆழத்தைக் கண்டுபிடிக்க முடியாது. போ’ன்னு சொல்வாங்க. அது வசனமோ இல்லையோ, அதுதான் நிஜம். அவர் கைதாகிப் போனபோது வீட்டைப்பூட்ட ஆள் இல்லையாம். என்னவொரு துயரம் பாருங்க. அவங்க சிறையில் பட்ட கொடுமைகளை போலீஸ் அதிகாரிகள் சொல்லக்கேட்டு இருக்கிறேன். அம்மா இதையெல்லாம் சொல்லி என்றைக்கும் குமுறியது கிடையாது. அப்படி குமுறினால் நிஜமாக இங்கே பூகம்பம் வெடிக்கும்.
எனக்கு அவங்க மேலே உள்ள சின்னக்குறை ஒண்ணுதான். அவங்களை சீக்கிரமாக அணுக முடியவில்லை. சிஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீ ரீணீஜீ இருக்கு. அதை அவங்க சரிசெய்தே ஆகணும். என்னோட வேண்டுகோள் இது. இதை மட்டும் சரி செய்துவிட்டால் அவங்க இன்னும் விஸ்வரூபம் எடுப்பாங்க. அப்புறம் யாரும் அவங்களைத் தடுக்க முடியாது _ யாரும்!
(பொங்கி எழுவோம்)
இந்த வாழ்க்கையை எங்கே கத்துக்கிட்டேன்னு நினைச்சீங்க, ரைஸ்மில்லில்தான். வந்து நிக்கிற வேலைக்காரங்களைக் கவனிப்பேன். அப்படியே உயிரை உருக்கும். இரண்டு மூணு பேருக்கு ஒரு வாளிச்சட்டி சோறுதான் இருக்கும். ‘மாங்கு மாங்கு’ன்னு உழைக்கிறதுக்கு அந்த சோறு என்னத்தைக் காணும்! மத்யானம் பசி தொண்டைக்கும் வயிற்றுக்கும் இருக்கும்போது தலைக்கட்டை அவுத்து உட்காருவாங்க. நான் சத்தமில்லாமல் வீட்டிலிருந்து வந்திருக்கிற என் பெரிய கேரியரை அவங்க முன்னாடி வைப்பேன். ‘அவசரமா வெளியில் போகவேண்டியிருக்கு’ன்னு சொல்லிவிட்டு, ஒரு வேலையும் இல்லாமல் வெளியே கிளம்புவேன். ருசியாக இருக்கிற சாப்பாட்டுக்கு அடிதடி நடக்கும்.
உலகத்திலேயே பெரிய கொடுமை பசிதான்னு முடிவு பண்ணினது அந்தக்காலம்தான். வயிறு காஞ்சவனுக்கு என்ன சொன்னாலும் தலையில் ஏறாது என்று புரிஞ்சதும் அந்தச் சமயம்தான். ரைஸ்மில்லுக்குள்ளே மதிய உணவுத்திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். அதையே நம்ம தலைவர் பெரிசா பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்து மக்கள் மனசை அள்ளிட்டுப் போனார். மனுஷனுக்கு எது கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. இன்னும் வேணும், இன்னும் வேணும்னு ஆசையாகக் கேட்டுட்டே இருப்பான். அவன் போதும் சாமின்னு சொல்கிற ஒரே விஷயம் சோறு மட்டும்தான். அதுதான் ஆரம்பத்திலேயே மனசில் பதிஞ்ச விஷயம். என்னால் கொடுக்க முடிஞ்சது. செய்யறேன்.
நான் சம்பாதிக்கிறது மக்களோட காசு. என் உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் தர்றாங்க. அதில் ஒரு பகுதியைப் படிப்பு, தையல்மிஷின்னு அவங்க உதவிக்காக செலவழிக்கிறது என்னோட பொறுப்பு. காசை இறுக்க முடிஞ்சு வைச்சுக்கிட்டு இதை கிண்டல் பண்ணுகிறவர்களை எனக்குத் தெரியும். இவர்களை ரொம்ப ஈஸியாக அலட்சியம் செய்துவிடுவேன். நான் செலவழிச்சு படிச்சு வந்தவங்க டாக்டராக, வக்கீலாக ஏன் ஐ.ஏ.எஸ். ஆபீசராகக்கூட இருக்காங்க. சந்தோஷமாக இருக்கு. நல்ல நாளுக்கு, கல்யாணம் செய்தால் வந்து வாழ்த்துங்கன்னு வந்திட்டுப்போனாங்க. அப்படி வந்திட்டுப்போறவங்களைப் பார்க்கிறபோது கிடைக்கிற சந்தோசம் பெரிசு. அதை அனுபவிச்சுப் பார்த்தால் தெரியும். அவங்க ஈரம் கசிஞ்சு நம்மை கும்பிடும்போது, அந்தப் புண்ணியம் நம்மை காலத்துக்கும் காக்கும்.
ஆரம்பிச்சு இருபது படத்திற்கும் மேலே ஹீரோவாக நடிச்சு முடிச்சிட்டுப் பார்த்தால் திடீர்னு படமே இல்லை. ஆரம்பத்திலே இருந்தே என்னுடைய பயணம் ஈஸியாக இல்லை. யாருடைய ஆதரவும் இல்லை. எனக்கு தமிழ் தெரியாது என்று காரணம் சொல்லி இங்கிருந்து விரட்டப் பார்த்தாங்க. இந்த இடத்தில்தான் மதுரைக்குத் திரும்பக்கூடாது, போராடணும் என்று முடிவு பண்ணினேன். மதுரைக்காரர்களுக்கு இன்னிக்கும் பாருங்க, நாக்கு புரளாது வல்லினம், மெல்லினம் சரியாக வராது. அதை வைச்சுக்கிட்டு விளையாட்டுக் காட்டினாங்க.
வாழ்க்கையில் வசதி கொஞ்சம் கூடியிருக்கே தவிர, அதே விஜய்ராஜ்தான் இந்த விஜயகாந்த். அன்னிக்கு நண்பனாக கூட இருந்தவங்கதான், இன்னிக்கும் கூட இருக்கிறவங்க. இந்த வரவேற்பறையைத் தாண்டினால், நம்ம வீட்டுக்கு வந்திட்டோமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்திடும். எந்த ஆடம்பரமும் மனசைத் தொட மாட்டேங்குது. மனுஷனுக்கு எளிமைதான் முதல் நல்ல அடையாளம்னு நம்புறவன் நான். பிறந்தநாள் வந்தால் தி.நகர் ராஜாபாதர் தெருவே ததும்பி நின்னுச்சு. நீங்க கல்யாணம் கட்டி சாலிக்கிராமத்துக்குப் போன பின்னாடி ராஜாபாதர் தெரு நிரம்பிப் பார்க்கலைன்னு சொல்வாங்க. அப்புறம்தான்னு கொடி கேட்டாங்க ரசிகர்கள். எனக்கு எவ்வளளோ செய்திருக்காங்க ரசிகர்கள். கோவில் கட்டி கும்பிடுவது மாதிரி பக்தியோடு இருக்காங்க. ‘அண்ணே’ங்கிற வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லை. ‘கேப்டன்’னு செல்லமாகக் கூப்பிட்டாங்க.
கொடின்னு வந்தபிறகுதான் நம்ம அண்ணன் அரசியலுக்கு வரணும்னு அவங்களுக்கு பிரியம் வந்திடுச்சு. என் பலம் ரசிகர்கள். அவர்களுக்காக எதையும் செய்யணும் என்ற மனசு இருக்கு. எனக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகாரங்ககிட்டேயிருந்து அடி, உதை வாங்கியிருக்காங்க. எனக்கு பெரிய ஆசைகள் எதுவும் கிடையாது. எனக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். இராணுவத்திற்கு இணையான கட்டுப்பாடு இருக்கு. அண்ணனுக்காக எதையும் செய்யணும் என்ற பாசம் கொண்டவங்க என்மேல் மொத்த உயிரையும் வைச்சிருந்தாங்க. முடிஞ்சவரைக்கும் நற்பணிகள் செய்வோம்னு அவர்களை ஒரு ராணுவம் மாதிரி தயார்படுத்தி வைச்சிருக்கேன். எந்த சக்தியாலும் அவங்களை திசை திருப்ப முடியாது. ஆசை வார்த்தை காட்டி இழுக்க முடியாது. பயமுறுத்தி பணிய வைக்க முடியாது. எனக்கும் என் ரசிகர்களுக்கும் நடுவே யாரும் வித்தை காட்டி விளையாட முடியாது. திண்டிவனம் பக்கம் எவ்வளவோ மிரட்டிப் பார்த்தாங்க. அங்கே போலீஸ்கிட்டே அடிவாங்கும்போது அம்மாங்கிறதுக்கு பதிலா ‘அண்ணே’ன்னுத்தான் கத்தியிருக்காங்க.
இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யணும். அவங்களுக்கு தலைவனாக இருக்கணும். அதைக் களமாக வைச்சுக்கிட்டு, இந்த ஜனங்களுக்கு நன்மை செய்யணும். எனக்கு நீட்டி முழக்கி கொள்கை விளக்கம் செய்யத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது ஜனங்க சௌகரியம்தான். அவங்க முகம் சுளிக்க வைக்கிற அரசியல் எனக்குப் பிடிக்காது. நான் தனிநபர் அல்ல. என்னை கொஞ்சம் ஈஸியாக நினைக்கிற அரசியல்கட்சிகளுக்கு நிறைய வேலையிருக்கு. என் மேலே அன்பு காட்டுகிற ஜனங்களுக்கு நான் இப்போதைக்கு செய்யப்போறது அரசியலுக்கு வருவதுதான். ஐந்நூறு பேருக்கு உதவுவது ஐந்தாயிரம், ஐந்து லட்சம் என்று பரவட்டுமே என்ற ஆதங்கம்தான். முக்கியமாக எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியது, எல்லாம் இருந்துதான் நான் அரசியலுக்கு வர்றேன். ஜனங்களோட சல்லிக்காசு எனக்கு வேண்டாம்.
எல்லோரும் செய்கிற அரசியல் என்னால் செய்யமுடியாது. அப்புறம் ‘நீ எதுக்கு புதுசா’ன்னு ஜனங்க கேள்வி கேட்பாங்க. எனக்கு தேவைக்கு மேலே பணம் இருந்தாலும், சொகுசா வாழ்ந்திட்டுப் போக மனசு கேட்கலை. என்னால் முடிஞ்ச நாலைந்து விஷயங்களைச் செய்தேன். பார்க்கிறவங்க, இதைப் பெரிய அளவில், ஜனங்களோட பிரதிநிதியாக இருந்து செய்தால் நல்லாயிருக்கும்னு சொல்றாங்க, கொண்டு செல்ல தொண்டர் படை இருக்கு. அப்புறம் சோம்பிக் கிடந்தால் அது தகாது. அதனால்தான் இறங்கிட்டேன்.
என்னோட முன்மாதிரியானவர்கள் காமராஜரும், எம்.ஜி.ஆரும்தான். அவங்க ஏழை ஜனங்களைப்பத்தி எப்பவும் யோசிச்சவங்க. டவுன்ஹால் ரோட்டில் காமராஜரைப் பார்க்க அப்பா கூட்டிட்டுப் போனதை இப்பத்தான் நினைச்சுப்பார்க்கிறேன். எவ்வளவு உன்னதத்தலைவரை அவருக்கு வேண்டிய நியாயம், கவுரவம் செய்யாமல் இழந்திட்டோம்னு இப்பத்தான் தெரியுது. இன்னொரு காமராஜர், எம்.ஜி.ஆர். இப்போது இருந்தால் நான் அரசியல் பக்கமே தலைவைத்து படுத்திருக்க மாட்டேன். மக்களுக்கு நாம்தான் நல்லது செய்யணுமா, யாராவது நல்லது செய்தால் போதுமே.
மானசீகமாக காமராஜர், எம்.ஜி.ஆரிடம் ஆசி வாங்கிட்டுத்தான் கட்சியை ஆரம்பிக்கப் போறேன். தீபம் மாதிரி தன்னையே எரிச்சுக்கிட்டு ஏழைகளுக்காக வாழ்ந்தவங்கதான் எனக்கு முன் மாதிரி. அவங்க. அது அல்லாமல் இன்னொருவரிடமும் நான் ஆசி வாங்கப் போறேன். அந்த ஆசிர்வாதம் யாரிடமிருந்து?
(பொங்கி எழுவோம்)இத்தனை வாரமும் உங்களுக்கு நான் வளர்ந்த அரசியல் சூழல், என்னுடைய அரசியல் விருப்பம், நான் நேசித்த தலைவர்கள், நான் சந்தித்த தலைவர்கள் பற்றியெல்லாம் சொல்லிவந்தேன்.
நான் அரசியலுக்கு வருவேன்னு பகிரங்கமாக அறிவிச்சபிறகு நான் சந்தித்த சில கேள்விகள்ல முக்கியமானது_விஜயகாந்துக்கு என்ன அரசியல் தெரியும்? அப்படிங்கிற கேள்விதான். எனக்கு இப்பிடி கேக்கறவங்களைப் பார்த்தால் பாவமா இருக்கு. அரசியலுக்கு வர விரும்புகிற ஒரு மனிதனுக்கு தன்னுடைய இன மக்களை, நாட்டு மக்களைத்தான் தெரிஞ்சிருக்கணுமே தவிர, ஏதோ காலேஜ் சர்டிபிகேட் மாதிரி அரசியல் கட்சியில சேர்ந்து பழகி வரணும் என்ற அவசியம் இல்லை. தவிர இந்த நாட்டில் இருக்கிற மனிதர்களில் யார் அரசியலுக்கு வெளியே நிக்கறாங்க சொல்லுங்க? ஓட்டுப் போடறவங்க தனக்கு விருப்பமான அரசியலைத் தீர்மானிக்கிறாங்க. ஓட்டுப் போடாதவங்க அரசியலை வெறுத்துட்டாங்கன்னு அர்த்தமா? அவங்க இருக்கிற அரசியல் பிடிக்காமல் இன்னொரு நல்ல அரசியலுக்கு ஏங்கறாங்க. அவ்வளவுதான்.
என்னோட அரசியல் ஒவ்வொரு தமிழனுக்கும் நெஞ்சில் நிம்மதியைக் கொண்டு வரப்போகிற அரசியல். இருக்கிறவங்க நல்ல அரசியல் செய்திருந்தால் இந்த நாட்டில் சுபிட்ஷம்தானே இருந்திருக்கணும்? இந்த அரசியல்வாதிகளோட நோக்கம் மக்களுக்கு நல்லது செய்யறதுதான்னு இருந்தால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏழைஜாதி நிம்மதியாகத்தானே இருந்திருக்கணும்? ஏன் இல்லை. அப்புறம் எதுக்கு நமக்கு ஒரு அரசியல்? நல்லதே தெரியாத இந்த அரசியலை நானும் தெரிஞ்சுக்கணுமா? வேண்டாங்க. சந்தர்ப்பவாத அரசியலையும், மக்களைத் துன்பத்தில் தள்ளும் அரசியலையும் நாம் எல்லோரும் சேர்ந்து ஒழிச்சுக்கட்டுவோம். நான் இங்கு முதலில் கை நீட்டி இருக்கேன். கூட என் மன்றத்து ஆட்கள் கைநீட்டி இருக்காங்க. நீங்களும் கை கொடுங்க. எல்லாக் கைகளும் ஒண்ணா சேர்ந்தால் கிடைக்கிற சக்தியில் புதிய அரசியல் பிறக்கும். அந்த வெளிச்சத்தில் நாம் வாழ்வோம்.
நான் எல்லா கட்சித்தலைவர்களையும், சில முக்கியமானவர்களையும் சந்திக்கறதைக்கூட நிறைய விமர்சிக்கிறாங்க. அவங்களை எல்லாம் நல்லவங்கன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு வர்றீங்கன்னு கேட்கிறாங்க. நான் அவங்களை, சந்திச்சப்ப நடந்த நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னேன். அதுக்காக அவங்களோட கொள்கைகளை எல்லாம் நான் அப்படியே ஒத்துக்கறேன்னு அர்த்தமே இல்லை. அவங்களோட தவறுகளையும், மோசமான பக்கங்களையும் அரசியல் மேடைகளில் கண்டிப்பாக எதிர்ப்பேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டும் என்னோட அரசியல் இல்லை. நல்ல பக்கத்தையும் பாராட்டுகிற நாகரிகம் நிறைந்த அரசியல் என்னோடது.
யார் எந்தக் கட்சிக்கு வந்தாலும், பதவிக்கு வந்தாலும், கட்சி ஆரம்பிச்சாலும் நீ எந்த ஜாதின்னு கேட்கிறாங்க. இதை வச்சே சில கட்சிகள், தலைவர்கள் பிழைப்பு நடத்தறாங்க. கூடவே ஜாதியை ஒழிப்பேன்னு நாடகமாடுகிற கும்பலும் உண்டு. நாம் விரும்பியோ, விரும்பாமலோ இந்த மாதிரி சில அடையாளங்கள் நமக்கு பொறக்கும்போதே வந்துடுது. அது ஒரு அடையாளம், அவ்வளவுதான். அதை ஏன் நம்மைப் பிரிக்கிற சுவராகப் பார்க்கணும்? ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டும் வெட்டிக்கிட்டும் சாகறதுக்கு நமக்கு ஒரு ஜாதி தேவையா?
விஜயகாந்தோட அரசியல், ஜாதியை வச்சு நடக்கிற பிரிவினையை எதிர்க்கும்.
என் மூச்சு என்றைக்கும் தமிழ்தான். அதை அவங்க கவனிக்கத் தவறுகிறார்கள். அவங்களுக்கு வெட்டிப்பேச்சு முக்கியம். தமிழ் தமிழ்னு சொல்லி இந்தத் தலைவர்கள் எல்லாம் நம்மளை ஏமாத்தினது போதும். இந்த தலைவர்கள் எல்லாம் அவங்க பசங்களை, பேரனுங்களை பெரிய பெரிய கான்வென்ட்ல படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிட்டாங்க. நாம் ஏமாந்தது மாதிரி நம்ம பிள்ளைகள் ஏமாற வேண்டாம். நமக்கு தமிழ் வேணும். அது உயிர்தான். இப்ப இருக்கிற சூழ்நிலையில் ஆங்கிலமும் வேணும். என்னோட கட்சி கொள்கைன்னு சொல்லி உங்களை, உங்க தலைமுறையை ஏமாத்தாது.
தமிழ்நாடு மட்டுமல்ல, குஜராத், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, கார்கில் என்று என் உதவிக்கரங்கள் நீண்டிருக்கு. நான் எந்தக்கட்சியாலும் உருவாக்கப்பட்டவன் இல்லை. மக்களால் வளர்க்கப்பட்டவன். நம்ம தலைவர்களுக்கு கூட்டம் சேர்க்க நடிகன் வேணும். அவனை பெரிய இடத்திற்கு வைச்சுப் பார்க்க ஆசைப்படமாட்டாங்க. அவங்க நடிகர்களைப் பயன்படுத்திக்குவாங்க. ஆனால் வெளியே நடிகனுக்கு அரசியல் தேவையான்னு கேள்வி கேட்பாங்க. இரண்டு டிவிக்குள்ளே அடிச்சிக்கிறதுதான் இப்ப நம்ம பிரச்னையா ஆகிப்போச்சு.
அரசியலுக்கு வர்றீங்களே பெரிய பணம் வேணுமேன்னு பலபேர் கேக்கறாங்க. வருஷாவருஷம் 25 லட்சம் ரூபாய் ஏழைமக்களுக்கு தர்றேன், ஆயிரக்கணக்கில் படிக்க வைக்கிறேன், நூறு தையல்மிஷினும், ஊனமுற்றார்களுக்கு வண்டியும் தர்றேன். எல்லாமே மக்கள் எனக்குக் கொடுத்த பணம். யார்கிட்டேயும் பிடுங்கித் தரலை. உழைச்சு, சம்பாதித்த பணம். எனக்கு ஆசை கொஞ்சம் பேருக்குச் செய்றதை, விஸ்தாரமா செய்ய முடியாதான்னு. அதுதான் அரசியலுக்கு வர்றேன்.
என்கிட்டே இவ்வளவு பெரிய அரசியலுக்கு பணம் இல்லை. மக்களோட மனம் இருக்கு. அதுல எம்மேல வச்சிருக்கிற அன்பு இருக்கு. அதை நம்பித்தான் அரசியலுக்கு வர்றேன். நான் ஒரு சாதாரண ஆள். என்னை தன்னோட கைகளால் அள்ளித் தூக்கி உசரத்துல வச்சு அழகு பார்த்த தமிழ்நாட்டுக்கு ஏதாவதுசெய்ய வேண்டாமா? ஒரு இயக்கமா இருந்தால், அதை ஒரு ஒழுங்கோட செய்ய முடியும். அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாலேயே பலபேர் திட்டம் போட்டு பல துரோகம் செய்யறாங்க. சில விஷயங்கள்ல தப்பிச்சு வெளியே வர்றேன். சில விஷயங்கள்ல சின்ன காயம். சண்டைக்கு வந்த பிறகு காயத்தைப் பற்றிக் கவலைப்படலாமா? துரோகங்களை வெல்வேன். அதற்கு மக்கள்தான் எனக்கு உறுதுணை.
செப்டம்பர் மாநாட்டுக்குப் பிறகு முழுநேர அரசியல் தீவிரம் அடையும். ஒவ்வொரு நல்ல ஆன்மாவையும் எனக்குத் துணையாக எதிர்பார்க்கிறேன். மக்கள் சக்திதான் மகத்தானது. நான் உங்களுக்குச் சொல்ல விரும்பறது ஒண்ணே ஒண்ணுதான். உங்க மனசாட்சிக்கு நல்லவன்னு தோணுறவங்களுக்கு துணையா நில்லுங்க. புதிய அரசியலைக் கையில் எடுத்து, புதிய தமிழகத்தை உருவாக்கலாம். போனதடவை முக்கியமானவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்கப் போறேன்னு சொன்னேன் இல்லையா! அடுத்தவாரம் அந்தப் பேரனுபவம்.
(பொங்கி எழுவோம்)நான்தான் நினைச்ச இடத்திற்கு போகமுடிகிறதில்லை. நீங்க சொன்ன இடத்திற்கு வர்றேன். சொல்லுங்க _ என்று நம்மிடமே கேட்டார் விஜயகாந்த். ‘‘இத்தனை வாரம் மக்களைப் பற்றியே பேசிட்டு இருக்கீங்க, அவங்களையே சந்திப்போம்’’ என்று சொன்னதும் ‘‘ஆஹா, அப்படியே’’ என்று புறப்பட்டார்.
‘‘காங்கேயநத்தத்தில் இருக்கு எங்க சாமி வீர சின்னம்மா. எனக்கு எல்லாமே ஆத்தாதான். எந்த நல்லது கெட்டது என்றாலும், மனசு கொஞ்சம் சஞ்சலப்பட்டாலும், சந்தோஷப்பட்டாலும் ஓடி வந்து சேர்கிற இடம் வீரசின்னம்மா சன்னதி.’’ என்று சொன்னவர், மனைவி, இரண்டு மகன்கள் சகிதம் புறப்பட்டார். மதுரையிலிருந்து பயணம் தொடங்கியது.
பச்சை கலர் குவாலிஸ் வழுக்கிக்கொண்டு பயணமானது. வெள்ளை சட்டை, தழையத்தழையக் கட்டிய பட்டைக் கரை வேட்டி... என்று சந்தோஷமாக உட்கார்ந்திருந்தார் விஜயகாந்த். திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் என்று பறந்து, நக்கலக்கோட்டையை அடையவும் காரிலிருந்து இறங்கினார். திடீர் தரிசனம். யாராலும் நம்பமுடியவில்லை. காண்பது நிஜம்தானா என்று கண்களை கசக்கிப் பார்த்துக் கொண்டார்கள். விஜயகாந்துதான் என்றதும் ஆர்வமாய் ஓடிவந்தார்கள்.
கிழவிகள், ‘‘அப்படியே மகாராசன் மாதிரி இருக்கியேப்பா. இந்தச் சிரிப்புத்தாய்யா நெஞ்சை அள்ளுது’’ என்று திருஷ்டி கழித்தார்கள். ‘வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக்க பாட்டி’ என்று விஜயகாந்த் பணம் எடுத்துக் கொடுக்க, ‘‘உன் கையால கொடுத்ததை செலவழிக்க மாட்டேன் ராசா’’ என்று முந்தானையில் முடிந்தார் அந்தக்கிழவி.
அங்கேயிருந்து சற்றுத் தள்ளி, நடந்தார் கேப்டன். ‘‘ரஜினி மாதிரி வராமல் போயிடுவீங்களோனு பயந்தோம். நல்ல வேளை வந்துட்டீங்க. நிச்சயம் ஓட்டுப்போடுவோம்’’ என்று சொன்னார்கள் மக்கள். ‘‘ஆள் வந்தாச்சுன்னு, அளந்து விடுகிறீர்களா?’’ என்று பதம் பார்த்தார் கேப்டன். ‘‘என்ன அப்படிச் சொல்லிப்புட்டீங்க’’ என்று செல்லமாகக் கோபித்தார்கள் மக்கள்.
பத்துநிமிஷ நடையில் வந்தேவிட்டது வீரசின்னம்மா கோயில். ‘‘அப்பா, அம்மா இருக்கும்போது வீரசின்னம்மாவைப் பார்க்க வருவதே விசேஷம். சந்தோஷம் கொடிகட்டிப் பறக்கும். அப்பெல்லாம் கார் வசதி வராது. நடைதான். அனல்பறக்கிற வெயிலுக்கு ஓட்டமும், நடையுமா சாமிதான் கொண்டாந்து சேர்க்கும். ரத்தம் கேட்காது. யாரையும் பயமுறுத்தாது. பார்த்தாலே சிலிர்க்கும். நம்ம தொழிலில்தான் எவ்வளவு போட்டி பொறாமை இருக்கு. எனக்கு வர்ற அத்தனை சிரமத்தையும் அப்படியே எடுத்து விட்டுடும். அப்படியே போகும்போது மனசு ஈஸியாகிடும். பாரம் எல்லாம் நீங்கிடும்’’ என்று வீரசின்னம்மா மகத்துவத்தை சொல்லிக்கொண்டே வந்தார் விஜயகாந்த்.
கூடவே வந்தார்கள் மகன்கள் பிரபாகரனும், சண்முகபாண்டியனும். இரண்டு மகன்களையும் அணைத்துக் கொண்டே செல்வதைப் பார்த்துக் கொண்டே பின்தொடர்ந்தார் திருமதி விஜயகாந்த். ‘‘நான் உங்களையும் பார்க்க வந்திருக்கேன். சாமியையும் பார்க்க வந்திருக்கேன். இரண்டு பேர்கிட்டேயும் மனம்விட்டு பேச வேண்டியிருக்கு’’ என்றவர் சொல்லுக்கு, மகுடிப் பாம்புகளாய் கட்டுப்பட்டார்கள் மக்கள். அப்படியே பின் வாங்கிக்கொள்ள, கோயில் மாலையை பூசாரி எடுத்துத்தர, அப்படியே பயபக்தியுடன் அணிந்துகொண்டார் விஜயகாந்த். கண்கள் மூடி, கைகளை விரித்து கடவுளை வேண்டியவரை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
‘‘ரொம்ப வல்லமையான சாமிங்க. ஆனால் பாக்க வந்துடணும். நம்ம பசங்களை சன்னதிக்கு கொண்டு வந்து கண்ணால பாக்கணும்னு சாமிக்கே ஆசை இருக்கும்போல. இதுதான் உங்க ரூபத்தில் வந்திருக்கு’’ என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார் விஜயகாந்த். கை உயர்த்தி கும்பிட்டு நடந்தார். வழியெங்கும் ‘தலைவா’ என்று குரல்கள். ‘‘ஒரு வாய் தண்ணீர் குடிச்சிட்டுப் போங்க’’ என்ற அழைப்புகள். கன்னம் தொட்ட மக்களைப் பார்த்து ‘‘ஆமா, அவங்களை அப்படியே விட்டுடணும். மக்களை நெருங்கிய தலைவர்கள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு குறைஞ்சுக்கிட்டே இருக்காங்க. அதான் நம்மளை அவங்களுக்கு பிடிச்சிப்போச்சு. நான் என்னிக்கும் நடிகனாக அவங்ககிட்டே முகம் காட்டினதில்லை. ஜனங்களை நெருங்கலாமா என்று பலரும் யோசிக்கும்போது, நான் அவங்ககிட்டே ஈஸியாக கலந்திருப்பேன்’’ என்று வெற்றி ரகசியம் சொன்னார் கேப்டன்.
‘‘நிஜமாகவே நீங்க அரசியலுக்கு வந்திடுவீங்கன்னு எதிர்பார்க்கலை. எங்களுக்கு மாற்று வேணும். இரண்டு பேரையும் மாத்தி மாத்தி தேர்ந்தெடுத்து அலுத்துப்போச்சு. அவங்க சண்டை இப்ப டி.வி. வரைக்கும் வந்து நிக்குது’’ என்று நொந்தபடி சொன்னார் ஒரு படித்த இளைஞர். ‘‘ஆமாம், நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன். நம்பிக்கையானவர்களோடும், உங்களை மாதிரி படிச்சவங்களோடும் திட்டங்கள் உருவாகிட்டே இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்கங்க, எல்லாத்தையும் சொல்றேன்’’ என்று அவரிடம் சொன்னார் விஜயகாந்த்.
‘‘நீதான் ராசா எம்.ஜி.ஆரு. அவர் சிகப்பு, நீ கருப்பு. அவ்வளவுதான்.’’ என்று தாய்மார்கள் சொல்ல அவர்களை கை கூப்பி வணங்கினார்.
‘‘ஏன் சார், உங்க ரசிகர்மன்றம், தனிக்கொடி வந்த நாளிலிருந்து உங்களை அரசியலுக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க. ஏன் அரசியலுக்கு வர இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிங்க?’’ என்று இளைஞர்கள் கேட்க, விஜயகாந்திடமிருந்து திடமாக பதில் வந்தது.
‘‘என்னோட பலம் எனது ரசிகர்கள். மன்றங்கள். அவங்க கொடுத்த தைரியம், அன்பு இது எல்லாம்தான் அரசியலில் இறங்க எனக்கு உத்வேகம் கொடுத்தது. அவங்களுக்கு என்னைத் தெரியும். நான் அறியாத எவ்வளவோ இளைஞர்கள் மற்ற அரசியல் கட்சிகளிடம் சிக்கிப் பாடுபட்டாங்க. கேலிக்கு உள்ளானாங்க. அது மாதிரி எதற்கும் கலங்காமல் நிமிர்ந்து நின்னதை பார்த்த பின்னாடிதான் எனக்கே மனசு இளகிப்போச்சு. அந்த மேலான பிரியத்திற்கு எதாவது நான் செய்தாகணும். அவங்களுக்கும் நல்லது பண்ணி, மக்களுக்கு நல்லது செய்யறதுதான் சரின்னு தோன்றிவிட்டது. அப்புறம் ‘மளமள’ன்னு கட்சி வேலைகளில் இறங்க ஆரம்பிச்சிட்டேன்’’ என்றார் கேப்டன்.
‘‘புள்ளைக்கு இனிமேதான் ரொம்ப வேலை. பின்னி எடுக்கும். ஆட ஓட இருக்க வேண்டியிருக்கும். ஏராளமா பயணம் போக வேண்டியிருக்கும். பக்கத்திலே இருந்து பாத்துக்க ராஜாத்தி’’ என்று திருமதி விஜயகாந்தின் கன்னம் தொட்டு தடவினார் பெரியாத்தா. ‘‘பார்த்துக்கிறேன் ஆத்தா’’ என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார் பிரேமலதா விஜயகாந்த். அப்பாவிற்குக் கிடைத்திருக்கிற பெருமையை சற்றுத் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தார்கள் மகன்கள் பிரபாவும், சம்முவும்.
போகிற வழியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள் போட்டது போட்டபடி ஓடிவர, ‘‘எங்களை நம்புங்க சாமி. தைரியமா வந்திடு. உன்னைய கரை சேத்திடுவோம்’’ என்று உறுதியளித்தார்கள். வண்டியில் ஏறி மூடிய கண்ணாடிக் கதவில் பதிந்தன ஏராளமான கைகள். அப்புறமும் முகம் பார்த்தன நிறைய கண்கள். மறுபடியும் கண்ணாடியை கீழிறக்கி வணங்கினார் விஜயகாந்த். ‘‘இந்த அன்புதாங்க என்னை அரசியலுக்கு இழுத்தது. அவங்க பிரியத்திற்கு ஏதாவது செய்தாகணும். எனக்கும் கடமை இருக்கிறதாக உணர்வது இந்த மாதிரி தருணங்களில்தான்!’’ என்றார் விஜயகாந்த். வெகுஜன சக்தியாய் கேப்டன் உருவெடுக்கிறார் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
(நிறைவு)

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP