லவ் பண்ணுடா மவனே... லவ் பண்ணுடா!_கமல்ஹாசன்

>> Thursday, August 28, 2008

‘‘‘காதல் இளவரசன்’, ‘சகலகலா வல்லவன்’, ‘நவரச நாயகன்’, ‘கலைஞானி’, ‘உலக நாயகன்’... இந்தப் பட்டப் பெயர்களை, என்னை நேசிப்பவர்களின் மிகையான கொஞ்சல் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைக் கொஞ்சும்போது வெளிப்படும் சந்தோஷச் சத்தங்களுக்கு நிகரானவை இந்தப் பட்டங்கள். தேங்காய் சீனிவாசனின் தனித்தமிழ் மாதிரி, பொழிப்புரை சொன்னால் அர்த்தமிருக்காது (உதாரணம்: ‘ஸ்ஸ்சோபா’!).
தமிழர்கள் எனக்களித்த பட்டங்களில் நீண்ட நாள் என்னுடன் தொற்றிக் கொண்டு படுத்திய இரண்டு பட்டங்கள் ‘காதல் இளவரசன்’, ‘சகலகலா வல்லவன்’. பட்டிமன்றம் வைத்து சார்பற்ற ஒரு கருத்தைத் தேர்வு செய்ய முனைந்தால், இவ்விரு பட்டங்களுக்குமே நான் முழுத்தகுதி பெறாதவன் என்ற உண்மை தெளியும்.
நண்பர் பாலகுமாரன், வெளியில் இருந்து, பத்திரிகை கிசுகிசுக்கள், சினிமாக்களில் வந்த என் பாத்திரங்கள் என்ற காரிகேச்சர் (சிணீக்ஷீவீநீணீtuக்ஷீமீ) கமல்ஹாசனை முதலில் பார்த்துவிட்டு, பின் சற்றே நெருங்க நேர்ந்தபோது வியந்துபோனார்.
‘‘என்ன சார் இது? கமல்ஹாசன்னா டிபனுக்கு கொஞ்சம் செக்ஸ், மத்தியான உணவுக்கு அப்புறம் கொஞ்சம் செக்ஸ், சாயங்காலம் ஜலக்கிரீடை, அப்புறம் தூங்கப் போறதுக்கு முன்னால இன்னும் நெறைய செக்ஸ்... அப்பிடினு நெனச்சுண்டு கிட்ட வந்து பாத்தா, ரொம்ப ஏமாற்றமா இருக்கு!’’ என்றார்.
ஒரு காதலிலிருந்து இன்னொரு காதலுக்குத் தாவும் இடைப்பட்ட காலத்தில் என்னைக் கொஞ்சம் காதலித்துப் பார்த்த நடிகை ஒருவர், ÔÔஎன்ன காதல் இளவரசன்னா, ஷ்வீறீபீ-ஆ இருப்பீங்கன்னு பாத்தா உங்களுக்குள்ள சரியான மைலாப்பூர் மாமா இருக்காரு... இப்பிடி சாதுப் பையனா இருக்கீங்களேÕÕ என்று அங்கலாய்த்தார். சற்றே வெகுண்டு, என் கை தசையை மடக்கி முறுக்கேற்றி ஒரு மசில் உருண்டை செய்து காட்டிவிட்டு, ‘‘யாரைப் பார்த்து மைலாப்பூர் மாமா என்றாய்?’’ என்று ஒரு திராவிடக் கர்ஜனை செய்தேன். பின், ÔÔகாதல் கொஞ்சம் வீரம் கொஞ்சம் கலந்து செய்த கலவை நான்ÕÕ என்று உறுமிப் பார்த்தேன். ஊஹ§ம்... மிரளவில்லை அம்மணி.
பாலகுமாரன் பார்த்து வியந்த கமல்ஹாசனும், கொஞ்சகாலம் ஒரு தலைக் காதலில் பொழுதைக் கழித்த அந்த அம்மணி பார்த்த கமலும், திகழ்ந்து வரும் இமேஜுக்கு இடைஞ்சலான ஒரு றிணீக்ஷீணீபீஷீஜ். உண்மை யாக இருந்தாலும் ஒப்புக்கொள்ள முடியாத நிஜம்.
‘‘அப்ப நீங்க சகலகலா வல்லவன் இல்லையா? காதல் இளவரசன் இல்லையா?’’ என்று கேட்டால் என் பதில்... எனக்கு வியத்தகு வாத்தியார்கள் கிடைத்தார்கள். நல்ல அறிவாளிகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந் தேன். பலவிதமான பயிற்சிகளால் அன்றைய கலைஞர்களிடம் இருந்து சற்றே மாறுபட்டேன். நன்றாக நடிக்க வருகிறது என்று மற்றவர் சொல்ல, அதை நானே முழுவதுமாக நம்பி அத்திசையில் செல்லலானேன். சினிமாவில் கிடைத்த ப்ளேபாய் இமேஜ், சௌகரியமாயும் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்கும் என்று பத்திரிகை நண்பர்கள் சொல்ல அதையும் நம்பலானேன். நான் காதலித்த, என்னைக் காதலித்த நடிகைகளை விட பன்மடங்கு எண்ணிக்கையில் அதிகம், காதல் இல்லாத எனது பெண் நண்பர்கள்.
இன்று கிரிஜா ரகுராமாக இருக்கும் அன்றைய கிரி, லட்சுமி அவர்கள், நடிகை சுஜாதா, ஜெயபாரதி, எனதருமை சீமா (சீமாவுக்கு டான்ஸ் வாத்தியார் நான்), இன்னும் குரூப் டான்ஸ் ஆடும் பெண்கள் பலர். காதலில் கிடைத்த சந்தோஷத்துக்கு நிகரான சந்தோஷம் எனக்கு நட்பிலும் கிடைத்தது என்பதே உண்மை. பள்ளிக் காலம் முதல் இன்றுவரை என் நண்பர் களாகவே இருக்கும் ஆண்களும் பெண்களும் எனக்கு சேர்த்துத் தந்த சந்தோஷம் என்னைக் காதல் தோல்விகளில் இருந்து மீளச் செய்தது. நன்றி அன்பிற்கு!
நிலவும் கருத்தும் நிகழும் உண்மைகளும் வேறாக இருப்பதை என்னில் மட்டுமல்ல பிறரிலும் நான் பார்த்தேன். எம்.ஜி.ஆர். அவர்களின் தனிமை பற்றிய ஆதங்கத்தை அவரே என்னிடம் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. Ôஆள் கூட்டத்தில் தனியேÕ என்ற மலையாளப் படம் ஒன்றின் தலைப்புதான் ஞாபகம் வந்தது. சிவாஜி அவர்களுடன் நான் நெருங்க நேர்ந்தபோது, அவர் சொன்ன சில கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றிய என் கணிப்புகளெல்லாம் கலைந்து அவரின் புதிய பரிமாணங்கள்புலப்பட்டன.
‘‘ஸிமீணீநீலீவீஸீரீ பிவீtறீமீக்ஷீ tஷீ லீமீணீஸ்மீஸீ” என்ற ஒரு புத்தகம் ஹிட்லரின் மெய்க்காவலர்களில் ஒருவரும் அவரது பர்சனல் டிரைவரும் ஆன லீஞ் (லிவீமீஸீரீமீ) என்பவரின் டைரி குறிப்புகள் + அவரின் பிற்காலக் கருத்துகள் அடங்கிய புத்தகம்.
சிணீtலீஷீறீவீநீவீsனீ, ஙிஷீறீsலீமீஸ்வீsனீ என்ற இரு சித்தாந்த அமைப்புகளை எதிர்த்ததன் மூலம் இருதலைக் கொள்ளி எறும்பாக மட்டுமல்ல, உலகத்திலேயே கொடுமையான சர்வாதிகாரி என்ற தகுதியற்ற பட்டத்துக்கு ஆளானவர் ஹிட்லர். ஐரோப்பிய அரக்கனாகச் சித்தரிக்கப்பட்ட ஹிட்லரின் காதல் ஆச்சரியமான காதல் தெரியுமா..?
ஃபைனல் சொல்யூஷன் (திவீஸீணீறீ ஷிஷீறீutவீஷீஸீ) என்ற, ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இல்லாது செய்துவிடும் நேர்மையற்ற, ஈரமற்ற செயலைத் திட்டமாக வகுத்து அதற்கு அனுமதி அளித்து, கையெழுத்துப் போட்டவர் அவர். அரசியல் விவேகம் இல்லாத, மனிதாபிமானம் இல்லாத இந்தச் செயல், மனிதர்களை ஃபைல்களில் பெயர்களாக, அரசாங்கப் புள்ளிவிவரப் பதிவுகளில், வெறுமனே எண்களாக மட்டுமே பார்த்ததால் வந்த விளைவு. ஆனால், இத்தனை கொடுமைகளையும் செய்தவரின் காதல், அந்த ஆள் சித்திரிக்கப்பட்ட அளவு அத்தனை மோசமானவனாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே உணர்த்துகிறது!
காலத்தின் கைதியாக, தானே உதிர்த்த அடுக்குமொழி இனவெறி வார்த்தைகளின் கைதியாக வாழ்ந்து வீழ்ந்தவர் ஹிட்லர். இந்தக் காதல் இளவரசன் இமேஜ் மாதிரி, அவரும் தப்பிக்க முடியாத ஒரு இமேஜ் சிறையில் வாழ்ந்து மடிந்திருக்கிறார். பெரும்பான்மை அரசியல் தலைவர்களைப்போல, கோணலான பதவி நாற்காலிக்கேற்ப தனது உடம்பை வளைத்துக் கொண்ட தால் ஊனமடைந்தவர் ஹிட்லர்.
ஆனால், காதலில் என்னைப் போல், உங்களைப் போல, சாதாரணர்தான். அசடு என்றுகூடச் சொல்லலாம்.
அன்பு நிறைய இருந்திருக்கிறது ஹிட்லரிடம். அதை அடிக்கடி தரிசித்த ஒரே பெண்மணி ஏவா ப்ரௌன் (ணிஸ்ணீ ஙிக்ஷீஷீஷ்ஸீ).
ஏப்ரல் 30, 1946 ... தன் தோல்வி நிச்சயம் என்று உணர்ந்தார் ஹிட்லர். பெர்லின் எல்லையில் அமெரிக்க ரஷ்யப் படைகள் குவிந்து விட்டன. ஜெர்மனியில் இனி தொழிலாளர் யூனியன்களே இருக்கக் கூடாது என சட்டம் இயற்றினார் ஹிட்லர். அந்தச் சட்டம் மே 1\ம் தேதியன்று 1943\ல் அமலுக்கு வந்தது. அப்படி ஒரு மே முதல் தேதி, ரஷ்யப் படை பெர்லினுக்குள் புகுந்து ஹிட்லரை முடிந்தால் உயிரோடு பிடிக்கும் நோக்கத்துடன் காத்திருந்தது.
ஹிட்லர் அதுவரை, விலாசமின்றி ரகசியக் காதலியாக இருந்த ஏவாவுக்கு, மிஸஸ். ஏவா ஹிட்லர் என்ற சமுதாய விலாசமொன்றைக் கொடுக்கிறார். பூமிக்கடியில் ஒரு பதுங்குகுழியில், முறைப்படி பதிவுத் திருமணம். எதிரிகளின் குண்டுகள் பெர்லின் கட்டடங்களைத் தகர்க்கும் ஓசையே கல்யாண மேளம். புது மணப் பெண்ணை அழைத்துச் சென்று, அரை மணி நேரம் தன் காதலை அவள் காதில் தாழ்ந்த குரலில் கிசுகிசுக்கிறார்.
அதே சயன அறையில் அன்புடன் ஏவாவின் வாயில் ஒரு சயனைட் காப்ஸ்யூலை ஊட்டி விடுகிறார். தனது கையை இறுக்கப் பிடித்தபடி சாகும் தன் காதலியைப் பார்த்துவிட்டு முழு சூட் கோட்டுடன் ஒரு நாற்காலியில் அமர்கிறார். தன் தலையில் மௌசர் (விணீusமீக்ஷீ) துப்பாக்கியை வைத்துக்கொண்டு, காதலியைப் பார்த்தபடியே விசையை அழுத்துகிறார். இவை பிற்பாடு, புலனாய்வில் தெளிவான விஷயங்கள்.
ஹிட்லர் ஏன் இப்படிச் செய்தார்?
ஹிட்லரின் தற்கொலைக்குச் சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால் ஹிட்லரின் சகோதர சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சி வீழ்ந்தது. தன் காதலியுடன் தப்பிச் செல்ல முற்பட்ட முசோலினி (அவருக்கும் காதல் இருந்திருக்கிறது), மக்கள் கையில் அகப்பட்டார். தர்ம அடி என்பார்களே அது கிடைத்தது. மக்கள் கோபம் கொப்பளித்தது. 50, 60 ஆவேசமான மக்களின் குத்துகளுக்குப் பிறகு முசோலினி மூர்ச்சையானார். காதலியும்தான். கூட்டத்தில் இருந்த வர்கள் ÔÔநானும் கொஞ்சம் மிதிக்கிறேனேÕÕ என க்யூவில் நின்று தாக்கினார்கள். முசோலினியும் அவர் காதலியும் இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் தர்ம அடி க்யூ முடிந்த பாடில்லை.
ஏப்ரல் 29, 1945... அவரை சர்வாதிகாரியாக்கி மண்டியிட்டு வணங்கிய அதே மக்கள், அவரது கால்களில் கயிற்றைக் கட்டி தலைகீழாக அவரையும் அவர் காதலியையும் நாற்சந்தியில் தொங்கவிட்டனர். அப்புறமும் தர்ம அடி தொடர்ந்தது. இந்த விவேகமற்ற கூட்டுக் கோபத்தில் முசோலினி செத்தாலும், மனிதமும் நேயமும் பிழைத்திருந்திருக்கிறது. அதற்கான சான்று புகைப்படமாக இன்றும் வாழ்கிறது. தலைகீழாகத் தொங்குகிறாள் சர்வாதிகாரியின் காதலி செனோரிடா க்ளோரட்டா பேத்தாச்சி.
அரைப்பாவாடை சரிந்து க்ளோராவின் மேனி தெரிவதைத் தவிர்க்க ஒரு அம்மையார், ஏணி வைத்து ஏறி, ஒரு சேஃப்டி பின் குத்தி, அவளது ஆடைகளைச் சரிசெய்து மனிதத்தை முன்னேற்றிவிடுகிறார். இந்தப் படத்தை இன்று பார்த்தாலும் அன்பும் நேயமும் வெல்ல நிறைய வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது.
முசோலினி காதலியின் கதி தனது காதலிக்கும் வராதிருக்க, கொலை, தற்கொலை, இரண்டையும் செய்திருக்கிறார் ஹிட்லர். அன்பு மிகுதியால் செய்த கொலைகள் அவை. இத்தனை காதல் உள்ள மனிதனுக்கு எங்கோ விகிதாசாரப்படி இருக்க வேண்டிய அளவைவிட குரூரமும் அதிகமாக இருந்திருக்கிறது.
ஒருவேளை, அந்தக் குரோதம் அதிகமில்லாமல், காதல் விகிதம் கூடியிருந்தால்... ஹிட்லர் சர்வாதிகாரியாகவே ஆகியிருக்க மாட்டார். ஒரு ஓவியராகி இருக்கலாம்.. காதலிக்கும் நேரம் ஹிட்லருக்குக் கிடைத்திருந்தால், ஹிட்லரின் சர்வாதிகாரம், லீ க்வான் யூ&வின் சர்வாதிகாரம் போல மக்கள் நலம் கலந்த சர்வாதிகாரமாக மாறியிருக்க வாய்ப்புண்டோ என்னவோ?
மொத்தத்தில் கதையின் கருத்து... காதலிக்க நேரம் வேண்டும். இல்லேன்னா ஹிட்லர் கதிதான்.
பாவம்... அவருக்குக் காதலிக்க நேரமில்லை!
Ôஹே ராம்Õ படத்துக்கான ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்தபோது, தாமதமாக எனக்குக் கிடைத்த ஈடில்லா எழுத்தாளர் மன்டோ. எனது மொழிபெயர்ப்பால் காயமுற்றிருந்தால் ஒழிய, உருதுவில் எழுதிய இவரின் கதைகள் உலகத்தரம் வாய்ந்தவையே!
ஹே ராமில், அந்தக் காலகட்டத்தின் உணர்வுகளைக் குறுகிய காலத்தில் எனக்குப் போதித்த குரு சதத் ஹஸன் மன்டோ.
Ôநான் கொஞ்சம் முன்னாடி பிறந் திருந்தால், ஜெயகாந்தனைச் சந்தித்தது போல், சுந்தர ராமசாமியைச் சந்தித்தது போல்... சத்யஜித் ரே, திலீப்குமார் போன் றோரைச் சந்தித்ததுபோல் இவரையும் சந்தித்திருக்கலாமோ?Õ என்ற அசட்டுக் கனவுகள் காண்பதுண்டு நான். கையில் ஒரு பழத்தை வைத்துக் கொண்டு, தட்டில் இருக்கும் பழத்துக்கு அழும் குழந்தைபோல நான். நானும் சில உன்னதமான மனிதர்களின் சகஜீவி என்பதை எப்போதாவது உணராமலா செத்துப் போவேன்?
இப்போது உணர ஆரம்பித்திருக்கிறேன். முழுதும் உணர நேரம் இருப்பதாகத் தோன்றுகிறது! நல்லவற்றை எனக்கு உணர்த்த, நல்ல வாசிப்புள்ள நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் நான் சந்தித்த விவீறீஷீs திஷீக்ஷீமீனீணீஸீ, யிமீணீஸீ சிறீணீuபீமீ சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீ போன்ற ஐரோப்பிய மேதாவிகள் பற்றியும் சொல்லவிருக்கிறேன்.
கவலை வேண்டாம்... அந்த மேதை களுக்கும் காதல் உண்டு. ஆகையால், காதலை உதாசீனப்படுத்திவிட்டு, வெறும் அறிவுப்பூர்வமான விஷயங்களில் நான் திளைப்பதாக நினைத்துவிடாதீர்கள்!
ஈரம் காய்ந்து வறண்டுவிடாமல் இருக்க, அவ்வப்போது காதல், பூடகமான விவீபீபீறீமீ சிறீணீss விரும்பும் ஷிமீஜ் எல்லாம் சேர்க்காமல் இருப்பேனா? கோடம் பாக்கத்தில் வளர்ந்த பிள்ளையாச்சே நான்! இங்கிதம் தெரிந்த இந்தியன் அல்லவா நான்? கவலை வேண்டாம்!
நிஜத்தைப் பேச வேண்டும். ஆனால், நேரடியாகப் பேசக்கூடாது என்ற சமூக இடக்கரடக்கல் தெரிந்தவன் நான்.
Ôஅதென்ன... இடக்கரடக்கல்னா?Õ என்று யாராவது சிலர் கேட்பர் ணிuஜீலீமீனீவீsனீ எனும் ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை. இன்னும் சொல்லப்போனால், அதையும் தாண்டி (புனிதமானது) பன்முகம் கொண்ட வார்த்தை!
வெட்கப்படாமல் பத்திரிகையில் பேட்டிகளில், கட்டுரைகளில் உபயோகித்தால் பழக்கமாகிவிடும்!
யிமீணீஸீ சிறீணீuபீமீ சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீமீ, (ஜ)ழான் க்ளாட் காரியேர்! கடைசி Ôர்Õஐ அழுத்தாமல் சொல்ல வேண்டும். ஆங்கில sஜீமீறீறீவீஸீரீபடி உச்சரித்தால் (ஜ)ழான் க்ளாட் வருத்தப்பட நேரிடும்.
‘மருதநாயகம்’ படத்துக்கு நடிக\நடிகையர் தேர்வுக்காகச் சென்றிருந்தேன். கையில் மருதநாயகத்தின் தமிழ்த் திரைக்கதையும் ஆங்கிலத் திரைக்கதையும் இருந்தது. ஃபிரெஞ்ச் திரைக்கதைக்கான ஆசிரியரையும் தேடும் படலம் அது. அறிவுரை பெற, எனக்குப் பெயர் தெரிந்த ஃபிரெஞ்ச் கலைஞர்களை நாடினேன். என் நெடுநாளைய நண்பர் அஷீல் ஃபோர்லேர் (மறுபடியும் Ôர்Õ எல்லாம் சைலண்ட்!) பரிந்துரைக்க காரியேரைச் சந்திக்கலானேன். பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதத்தில் நாடக ஆசிரியர் என்பது போக, ஸ்பெயின் நாட்டின் சினிமா ஆசான், லூயி புனுவேலுடன் (லிஷீuவீsமீ ஙிuஸீஸீuமீறீ) 19 படங்கள் பணியாற்றியவர்.
பணிவுடன் 200 பக்க மருதநாயகம் திரைக்கதையை அவர் முன்வைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஸ்கிரிப்ட்டைப் பார்த்தார்.
ÔÔஉம்! பெரிசா இருக்கே! நான் என்ன உதவி செய்யணும்?ÕÕ என்றார். ÔÔஇதன் ஃபிரெஞ்ச் வடிவத்தை எழுத ஆள் தேடுகிறேன். இளம் எழுத்தாளர் யாரையாவது நீங்கள் பரிந்துரைத்தால் உங்கள் ரெகமண்டேஷனின் பலத்தில் நம்பி அவரிடம் என் திரைக்கதையைத் தருவேன்ÕÕ என்றேன்.
ÔÔபடிச்சுட்டு சொல்றேன். இரண்டு நாள் கழிச்சு வந்து பாருங்க!ÕÕ என்றார்.
காரியேரைச் சந்தித்ததே எவ்வளவு பெருமை என்பதை என் மகள் ஸ்ருதிக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். காரியேரின் போன் வந்தது.
ÔÔக்மால், நீங்கள் எங்கே தங்கியிருக்கீங்க?’’
ஓட்டல் பெயரைச் சொன்னேன். ÔÔநானே வரேன்ÕÕ என்றார். வந்தார்.
ÔÔமுழுக்கப் படிச்சேன்ÕÕ என்றார்.
ÔÔரொம்ப நன்றிÕÕ என்பதோடு நிறுத்திக்கொண்டேன் திடீரென்று மீண்டும் ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் கணக்குப் பரீட்சைக்கு உட்கார்ந்த கலக்கல் வயிற்றில்.
ÔÔஇதை எழுத இளம் எழுத் தாளர் வேணும்னீங்க இல்ல?ÕÕ
ÔÔஆமாம்.ÕÕ
ÔÔவயசானவரா இருந்தா பரவால்லியா?ÕÕ
ÔÔஉம்... ஆனா, கெட்டிக்காரரா இருக்கணும்.ÕÕ
ÔÔஎவ்வளவு சம்பளம்?’’
ÔÔஎங்களால முடிஞ்சது கொஞ்சம்தான்.ÕÕ
ÔÔஅதுக்கேத்த கெட்டிகாரத் தனம்தான் கிடைக்கும்.ÕÕ
சிரித்தோம். பின், Ô‘நீங்க ரெகமண்ட் பண்ற ஆளு ஓகே.தான். ஆள் எப்படி?ÕÕ
‘‘ஃபிரான்ஸின் முக்கிய எழுத்தாளர்...ÕÕ
‘‘பேரு?’’
ÔÔ(ஜ)ழான் க்ளாட் காரியேர்ÕÕ என்றார் (ஜ)ழான் க்ளாட் காரியேர்.
அப்படித் துவங்கியது காரியேருடன் நட்பு. இது நடந்தது பாரீஸில்.
தனது இளவயதுக் காதலி யுடன் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் லண்டனில் என்னுடன் தங்கினார். மருதநாயகத்தின் ஃபிரெஞ்சு வடிவத்தைச் செதுக்கினோம்.
காரியேர் மாலைகளில் எழுதுவதில்லை. ஏதாவது ஒரு பஃப்பில் அமர்ந்தபடி சினிமா பற்றிப் பேசுவோம். அனந்து அவர்கள் அகால மரணமடைந்து இரண்டரை மாதமாகியிருக்கும். மறுபடியும் ஃபிரெஞ்சு அனந்து ஒருவர் கிடைத்த சந்தோஷம் எனக்கு.
வேலை முடிந்ததும் அவர் ஃபிரான்ஸ் திரும்பும் நாள். இரவுச் சாப்பாட்டுக்குப் பின் ஃப்ளாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.
ÔÔக்மால். உங்களுடன் வேலை செய்தபோது எனக்கு லூயி புனுவேல் நினைவு வந்தது.ÕÕ
‘‘ஏன்?’’ என்றேன் புரியாமல்.
ÔÔஅவரின் ஆழம்... அதே சினிமா சென்ஸ்!ÕÕ
‘‘நீங்க இப்படிச் சொன் னீங்கனு ஊரு பூரா தம்பட்டம் அடிப்பேன். இது எனக்குக் கிடைச்ச விருது. ரொம்ப நன்றி!’’ என்றேன்.
நான் பேசிய சம்பளத் தொகை ஐந்து லட்ச ரூபாயை, லண்டனிலேயே செலவழித்து விட்டார் காரியேர். அவர் வழக்கமாக வாங்கும் தொகை இரண்டரை லட்சம் டாலர்கள் (சுமார் ஒரு கோடி ரூபாய்) என்று வெகு தாமதமாக வேறு ஒருவர் சொல்லித் தெரிந்து கொண்டேன்.
இப்போது அவருக்கு 68 வயது. 65 வயது வயதில் தனது காதலியை மனைவியாக்கிக் கொண் டார். திருமதி காரியேர், இரான்காரர். சீன மொழி வல்லுநர். இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை. க்யாரா என்று பெயர். க்யாராவுக்கு தமிழ்நாட்டிலிருந்து மர சொப்புச் சாமான்கள் வாங்கிப் போனேன்.
ÔÔக்மால்... சந்தோஷம், சங்கீதம் மாதிரி. சாதகம் பண்ணலேனா கச்சேரி நல்லாருக்காது. மறுபடியும் சந்தோஷம் பழகுங்கள்!ÕÕ என்றார் 66 வயது புது மாப்பிள்ளை. இப்பல்லாம் கச்சேரி வருகிறதோ இல்லையோ... அறிவுரைப்படி கமல்ஹாச பாகவதர் தவறாமல் சாதகம் செய்கிறார். அதன் சாயல் அவர் முகத்தில்கூடத் தெரிவது போன்ற பிரமை எனக்கு.
Ôவிருமாண்டிÕ முடிந்து காரியேரை பார்க்கச் சென்றேன்.
அப்போது ÔÔக்மால்! எனது இன்னொரு நண்பர்... அவரும் டைரக்டர் தான். உங்களைப் பத்தி சொல்லியிருக் கேன். சந்திக்கிறீங்களா?ÕÕ என்றார்.
‘‘யாரு?’’
ÔÔஉங்களுக்குப் பிடிச்சவருதான். மிலோஸ் ஃபோர்மன்.ÕÕ
இளையராஜாவும் நானும் அவரது Ôஅமேடியஸ்Õ படத்தை இருபது முறை பார்த்திருப்போம்.
ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தவர், தனக்காக மட்டுமல்ல, மற்றவருக்கும் இவர் படங்களில் பெருமை கிடைத் திருக்கிறது.
‘‘கொஞ்சம் சீக்கிரமா வந்துடுங்க... ஒரு ஆறு மணிக்கு. ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல தூக்கம் வந்துரும் அவருக்கு’’ என்றார்.
‘‘ஆறு மணி நேரமா?’’
ÔÔஆமாம். ரெண்டு நல்ல டைரக்டர்கள் பேச அவ்வளவு நேரமாகுமே, நான் வேற இருக்கேன்.ÕÕ
மிலோஸ் ஃபோர்மென் சந்திப்பு கனவு போல நடந்து முடிந்தது, முடியும் வேளையில் ஆறு மணி நேரம் போதவில்லை.
செக்கோஸ்லோவேகியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தபோது அவருக்கு 47 வயதாம். கையில் இருந்த காசெல்லாம் தீர்ந்துபோகும் தறுவாயில் அவருக்கு வந்த சான்ஸ் ளிஸீமீ திறீமீஷ் ஷீஸ்மீக்ஷீ tலீமீ நீuநீளீஷீஷீs ஸீமீst பல நட்சத்திரங்களின் வெற்றிக்கு வழி வகுத்த படம். மிலோஸ§க்கும் ஆக்ஸிஜன் அந்தப் படம். அதற்கு முன்னால் அவர் செக்கோஸ்லோவேகியாவின் இயக்குநர் சிகரம். அதையெல்லாம் விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு வேலை தேடிப் போகும் அவலம். அங்கே வேலை கிடைக்காமல் ஒரு வருடம் அலைந்தாராம்.
ÔÔரொம்ப அவமானமா இருந் திருக்குமே?ÕÕ என்றேன்.
ÔÔகண்டிப்பா இருந்திருக்கணும், இப்ப ஞாபகமில்லை.ÕÕ
ÔÔஆனா, (ஜ)ழான் க்ளாட் தக்க சமயத்துல எனக்குக் குடுத்த 500 டாலர் ஞாபகமிருக்கு...ÕÕ என்றார் மிலோஸ்.
ÔÔபோன வருஷம் மிலோஸ் இன்கம்டாக்ஸ§க்கு எரிச்சலோட 800,000 டாலர் செக் ஒண்ணுல கையெழுத்துப் போடும்போது கிட்ட இருந்தேன்.ÕÕ காரியேர் பெருமைபட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு படத்தையும் எப்படி எடுத்தார். எதனால் சில விஷயங்களைச் செய்ய முடியவில்லை... என்றெல்லாம் சொன்னார் ஃபோர்மன்.
அவரது படங்களை ஒன்று விடாமல் நான் பார்த்திருக்கிறேன், ரசித்திருக் கிறேன் என்பதை அவரும் புரிந்து கொண்டார்.
பிறகு என் குழந்தைகள் ஸ்ருதி, அக்ஷரா பற்றி பேச்சு வந்தது. அப்போது ஸ்ருதி என்னுடன் இல்லை என்று குறைபட்டுக் கொண்டேன்.
ÔÔகவலைப்படாதீங்க. காதல், கல்யாணம், எல்லாம் கொஞ்சம் பிஸினஸ் மாதிரி. மனஸ்தாபங்கள் ஏற்பட்டு எதிரி ஆயிட வாய்ப்புண்டு. அப்பா, மகள் உறவு ரொம்ப பலமான உறவு. ஜிலீமீ தீமீst tஷ்ஷீ க்ஷீமீறீணீtவீஷீஸீsலீவீஜீ நீஷீனீதீவீஸீணீtவீஷீஸீ தீமீtஷ்மீமீஸீ னீணீஸீ ணீஸீபீ ஷ்ஷீனீணீஸீ ணீக்ஷீமீ, யீணீtலீமீக்ஷீ ணீஸீபீ பீணீuரீலீtமீக்ஷீ - னீஷீtலீமீக்ஷீ ணீஸீபீ sஷீஸீ (ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சிறந்த உறவு அப்பா மகள், அம்மா \ மகன் உறவுதான்)ÕÕ என்றார். அம்மா, ஸ்ருதி, அக்ஷராவை நினைத்துப் பார்த்தேன். அவர் சொன்னது சரியாகப்பட்டது.
‘‘உங்களுக்குக் குழந்தைகள்..?ÕÕ விசாரித்தேன்.
ÔÔநிறைய!ÕÕ என்றார்.
ÔÔமனைவிகளைவிட மிலோஸ§க்குக் கொஞ்சம் குழந்தைகள் அதிகம்ÕÕ என்றார் (ஜ)ழான் க்ளாட்.
‘‘எத்தனை?’’என்றேன்.
‘‘கிட்டத்தட்ட ஏழு!’’ என்றவர், ‘‘நீங்க கேட்டது குழந்தைகளையா... இல்ல மனைவியரையா?’’ என்றார்.
‘‘ஸாரி! குழந்தைகளைத்தான் கேட்டேன்.ÕÕ
ÔÔஓ..! அது பன்னிரண்டுÕÕ என்றார் நிதானமாக.
நாங்கள் காரை நிறுத்தியிருந்த இடம் தொலைவில் இருந்ததால் பேசியபடி நடந்தோம்.
தனது கடந்தகால மனைவியரைப் பற்றி நிறைய கனிவுடன் பேசினார்.
மண முறிவு ஏற்பட்டாலும் மனமுறிவில்லாமல் அவர்களுடனான நட்பு தொடர்வதாகச் சொன்னார்.
ÔÔநீங்க நல்லவரா கெட்டவரா? என்று மிலோஸிடம் அசட்டுக் கேள்வியெல்லாம் கேட்காமல் விடை பெற்றேன்.
தசரதன், பாஞ்சாலி, ராமன், கிருஷ்ணன், இந்திரன் என்று நமது புராணங் களிலும் வெவ்வேறு குணச்சித்திரங்களும் வாழ்முறைகளும் சித்திரிக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் எல்லாருமே ராஜாக்கள். மிடில் க்ளாஸ் மனிதனின் நியாயமான மனப்போராட்டங்கள் அவர்களுக்குப் பொருந்தாது, புரியாது, இருந்திருக்காது.
Ôநான் நல்லவனா... கெட்டவனா?Õ கேள்வியை, சந்நியாசம் வாங்கினாலும் கேட்டுக் கொண்டே இருக்கும், மிடில் க்ளாஸ் நாயகனின் மனம்.
உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,
எவ்வழி எனத் தெரியாமலே எமை நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.
அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறு
மட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிது
இவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்
பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்
ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.
அப்போது தென்படுமே வெவ்வேறு பாதைகள்!
அவற்றில், எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?
எமக்கும் தெரியாது உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம், விபத்தல்ல.
யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,
உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?
என்ற சந்தேகத்திற்கிடமின்றி, இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;
மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.
‘விருமாண்டி’ முடியும் தறுவாயில் இருந்தபோது எழுதியது. இன்று தாமதமாகப் பிரசுரமாகிறது. Ôஇதன் பொருள் என்ன... இந்த வாரம் காதல் எங்கே காணவில்லை... என்ன சொல்ல வருகிறார்?Õ என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பலாம். இது தொண்டர் அடிப்பொடி யின் குரல். யாருக்கும், வெளியே கேட்காத அகக் குரல். ஒருவேளை, அதை ஓசைப்படுத்திப் பார்த்தால், சற்று நேரம் நமக்கே புரியாமல்கூடப் போகலாம், இது நமது குரல் என்று. அரசியல், மதம், கல்வி என எல்லாச் சாலைகளிலும் நடமாடும் ஜனநாயகனின் குரல் இது.
ஞானக்கூத்தன் எனக்கு ஐயப்ப பணிக்கர் என்ற கவிஞரை அறிமுகப்படுத்தினார். ஆளை யல்ல, அவர் புத்தகத்தை. நன்றிகள் பல!
அவரின் ஒரு கவிதை...
‘இண்டன் தாத்தா தனது
வலதுகால் சேற்றை இடது காலில் துடைத்தும்
இடதுகால் சேற்றை வலது காலில் துடைத்தும்
பின் வலது கால் சேற்றை...’
என்று தொடரும் புள்ளிகளுடன் விட்டிருப்பார் பணிக்கர்.
நாம் செய்த தவறுகளை நீக்குதல், அதை ஒளிப்பதன் மூலமோ, இடம் பெயர்ப்பதன் மூலமோ நிகழாது. தவறு என்பதை ஊரறிய, முக்கியமாக நாமறிய ஒப்புக் கொள்வதன் மூலமே அது நிகழும்.
வாசகரில் சிலரின் பதற்றம் புரிகிறது. காதலே இல்லையா இந்த வாரம் எனும் அங்கலாய்ப்பு பொங்கிவரும் முன் தாளித்து இறக்கி விடுகிறேன்.
கவன ஈர்ப்புக்காகக் கொடுத்த தலைப்பு, இப்படி ஈரத் தலைப்பாகையாகக் கனக்கும் எனக் கண்டேனா?
மெனுவில் காதல் வேண்டும்.. அவ்வளவு தானே? இதோ பிடியுங்கள்...
டாக்டர் ருயூபன், 70&களில் ஒரு புத்தகம் எழுதினார். Ôகிறீறீ ஹ்ஷீu ஷ்ணீஸீtமீபீ tஷீ ளீஸீஷீஷ் ணீதீஷீut sமீஜ், தீut ஷ்மீக்ஷீமீ ணீயீக்ஷீணீவீபீ tஷீ ணீsளீ’ நீளமான தலைப்பு. ஆனால், அன்றைய எங்கள் வயதும் சந்தேகங்களும் அப் புத்தகத்தை, கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகுமளவுக்குப் படிக்க வைத்தது.
அதில் பால் நோய் பரவும் விதத்தைப் பலரும் உணர, வரைபடமாக வரைந்திருந்தார் ருயூபன். ‘ஃபேமிலி ட்ரீÕ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படி ஒரு வியாதி விருட்சத்தை வரைந்து காட்டியிருந்தார் டாக்டர்.
லண்டனில் தொழில் செய்யும் ஒரு விபசாரியின் பால் நோய், எப்படி குறுகிய காலத்தில் அரச குடும்பத்துக்கும் பிற்பாடு மன்னரையோ அரசியையோ தொற்றிக் கொள்கிறது என்பதன் வழித்தடம் அந்த விருட்சம்.
அதில் படிப்படியாக அவர் சொல்லிக்கொண்டு வந்த தொடர்புகளில் ஒன்று, குதிரை லாயத்தில் வேலை செய்பவனுக்கும் இளவரசிக்கும் ஏற்படும் காதல், தொடர்பு...
Ôச்சீ! புத்தகம் விக்கறதுக்காக ராஜ குடும்பத்தைப் பத்தி கற்பனையாகக்கூட இப்படியெல்லாம் எழுதலாமா?’ என்று கோபித்த ராஜ விசுவாசி இந்தியர்களை நான் சந்திக்க நேரிட்டது. பின் கிட்டதட்ட 25 வருடங்களுக்குப் பிறகு, டாக்டர் ருயூபனின் கற்பனை நிஜமானது. இளவரசி டயானாவின் காதல் வாழ்க்கை, வியாபாரத்துக்காகப் புத்தக வடிவில் அம்பலமாக்கப்பட்டபோது படித்து வியந்தேன்.
ருயூபனின் புத்தகத்திலிருந்து வந்ததுபோல் நிகழ்கதையில் புனைகதையின் சாயல் இருக்கும் ஆச்சரியம் பற்றி நண்பர் முனைவர் கு.ஞானசம்பந்தனிடம் சொன்னேன். ‘இந்த ரூட் மேப், நம்ம கதைகள்லயும் இருக்கே!’ என்று குட்டிக் கதையன்றைச் சொன்னார் அவர்.
‘மன்னன் ஒருவன் தனது பட்டத்து மகிஷிக்கு அபூர்வப் பழமொன்றை, காதல் பரிசாகத் தந்தான். பழம் உடனே மகிஷியின் கையினின்று அவள் கள்ளக் காதலன் கைக்கு மாறியது. காதலன் அந்த அபூர்வப் பழத்தை, அவனது வேறு காதலிக்குத் தர, அவள் அதை அரண்மனை வேலைக்காரனுக்குத் தர, வேலைக்காரன் வேலைக் காரிக்குத் தர, அவள் அதைத் தனது குதிரைக் காரக் காதலனுக்குத் தர, அவன் அதைப் பழக் கடைக்காரன் மனைவிக்குக் காதல் பரிசாகத் தந்தான். மன்னர் நகர் உலா வருகையில்,தனது காதல் பரிசு சந்தையில் விற்பதைக் கண்டு சந்நியாசம் பூண்டார்!’ என்பதே கதை.
பழம்பெரும் கதையன்றைக் கேட்டதன் மூலம் டாக்டர் ருயூபனுக்கு பாட்டனெல்லாம் இருந்திருக்கிறார் கள், அதுவும் நம் நாட்டில் என்ற சந்தோஷம்.
ருயூபனின் பால் நோய் மரமும், மன்னரின் பழம் சென்ற வழித்தடமும் கிட்டத்தட்ட ஒன்றே!
பழம் நழுவிப் பால் நோயில் விழுந்த நவீனக் கதைகள் பல. டயானா விஷயத்தில் அதே குதிரை லாயம், அதே பிரிட்டானிய இளவரசி. பால் நோய்தான் சம்பந்தப்படவில்லை. மொத்தத்தில், டாக்டர் ருயூபனின், வரைபடம் சரியான பிம்பமே.
இந்தப் புத்தகத்தின் பாதிப்பு நான் சம்பந்தப் பட்ட ‘உணர்ச்சிகள்’ திரைக் கதையில்கூடத் தெரியும்.
முன்பெல்லாம் ஐரோப்பிய மன்னர்களுக் குக்கூட பால் நோய் இருந்திருக்கிறது. சீஸருக்கு கொடும் சிஃபிலிஸ்நோய் இருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ‘இந்தக் கண்றாவியெல் லாம் \ காதல் பற்றி எழுதும்போது எதுக்கு?’ எனலாம்.
காதலின் பகுதிதான் காமமும் என உணர்ந்த வர்கள் காமத்தின் ஒரு தொகுதியாக இன்று பால் நோயை அடையாளம் காணவேண்டும். Ôசீ, அசிங்கம்.... இதை எல்லாம் எழுதலாமா?’ என்போர் இதைப் படிக்க வேண்டாம். வேறு வழியில் இதே சேதி களை, விரைவில் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் ஒருவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ‘‘மிஸ்டர் கமல்... பால்வினை நோய்கள் அதிகம் இருப்பது இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தி னரிடம்தான்’’ என்றார்.
இது நிஜமாக இருக்காது என்று பொய்யாக மனதைத் தேற்றிக் கொண்டேன்.
சத்யமேவ ஜெயதே!
உயிர் நீக்கும் ஆட்டம்!
கிப்பனின் (நிவீதீதீஷீஸீ) ‘டிக்ளைம் அண்ட் ஃபால் ஆஃப் த ரோமன் எம்ப்பயர்’ என்ற மாபெரும் சரித்திரப் புத்தகத்தைத் தமிழில் யாராவது மொழிபெயர்க்க வேண்டும்என்று எனக்கு ஆசை. பலமுறை நான் சொல்லிப்பார்த்தும், எனது யோசனையே விலை போக வில்லை... அப்புறம்தானே எழுத்து விலை போகும்?!
Ôசரித்திரப் புத்தகத்தை வாரப் பத்திரிகையில் போட்டால் யார் படிப்பார்கள்?Õ என் கிறார்கள். நடிக, நடிகையர்களின் அந்தரங்கங்கள் அம்பலமாவதை ஆவலாகப் படிக்கும் அன்பர்கள், ரோமானிய மன்னர்கள் செய்த காமக் கேளிக்கைகளையும் ஆர்வமாகப் படிக்க மாட்டார்களா?
இதோ, ஒரு ஙீஙீஙீணீனீஜீறீமீ...
மாமன் டைபீரியஸ் சீசரின் செல்லப் பிள்ளை கையஸ் காலி கூலா, குழந்தையாக இருந்தபோதே போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். கட்டுக் கோப்பான ரோமானியப் படை களமிறங்கும்போது, குழந்தைகளைக்கூடப் போர்முனைக்கு இட்டுச்செல்லும் பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருந்திருக் கிறது!
சிறுவயதிலேயே போர்வீரர்களை மகிழ்விக்க, சேராத பெரிய போர்க் காலணி களை அணிந்து நடன மாடினான் சிறுவன் காலி. அந்தக் குதூகலமான குழந்தைக்கு Ôலிட்டில் பூட்ஸ்Õ (லிவீttறீமீ ஙிஷீஷீts) என்பது வீரர்கள் இட்ட செல்லப் பெயர்!
வீரன் டைபீரியஸ் சீசரின் கட்டுப்பாடான வாழ்க்கை ஒழுக்கம், அவரது வயது கூடக் கூட குறைய ஆரம்பித்தது. போர்முனையில் இருந்து திரும்பும்போது எப்போதாவது வேசிகளை நாடிய டைபீரியஸ், பிற்பாடு Ôவேசிகள் விட்டால்தான் போருக்கே வர முடியும்Õ என்ற அளவுக்கு விபசரிக்கலானார் (ஹை! அவர் தப்பைச் சொல்லப்போய், நல்ல வார்த்தை கிடைத்தது, பாருங்கள்!). கர்மமே கண்ணாக இருந்தவர், காமமே கண்ணானார்.


காலிகூலா
இளம் காலி, மாமன் டைபீரியஸிடம் அரசியலும் வீரமும் மட்டும் கற்க வில்லை... மேற்படி சமாசாரங்களிலும் தேர்ந்த மாணவனானான். Ôஉத்தமபுத் திரன்Õ படத்தில், நம்பியார் மாமாவுடன் சேர்ந்து ஒரு சிவாஜி கெட்டுப் போவாரே... அந்தநிழலின் நிஜ உருவம் டைபீரியஸ§ம் காலிகூலாவும். இளம் காலிக்குப் பாம்பின் குணாதிச யங்கள் இருந்ததாகப் பிற்பாடு பல விமரிசகர்கள் சொன்னார்கள். ஆனால், மாமாவுக்கு முன்னால் இந்தப் பாம்பும் பால் குடிக்குமா என்பது போலத்தான் இருந்தான் இளம் காலி. ஆனால், பாம்புக்குட்டி குடிக்க, லிட்டர் கணக்கில் காமத்துப்பால், டைபீரியஸ் மாமா வீட்டில் கொட்டிக் கிடந்தது!
ஒரு நாள் தன் சகோதரி அக்ரிபினா அறிய, தனது மெய்க்காப்பாளன் உதவியுடன், உடல்நலம் இல்லாமலிருந்த வயோதிக டைபீரியஸின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, டைபீரியஸின் மரணத்தையும் ரோமானிய அரசியல் சரித்திரத்தில் புதிய யுகத்தையும் தருவித் தான் காலிகூலா.
இந்தக் கொலை நடந்த சில நாட்களிலேயே சக்கர வர்த்தியானான் காலி. அது மட்டுமல்ல... டைபீரியஸையும் விஞ்சும் காமக்கேடியுமானான். உடன் பிறந்த சகோதரியோடே அவன் உடலுறவு வைத்திருந்த ராஜ ரகசியம் ஊரறிந்த விஷயமாக இருந்தது. ஆண் பெண் (பெரும் அறிவாளிகள் நிறைந்த) மதிப்புக்குரிய செனட் என்று பாரபட்சம் இல்லாமல் அனைவரின் கற்பையும் சூறையாடினான் காலி.
தனது முடிவு நெருங்குவது தெரியாமல், தன்னை வாழும் தெய்வமாக செனட்டைவிட்டுப் பிரஸ்தாபிக்கச் செய்தான். குமைந்துகொண்டிருந்த செனட், ரோமின் அரசியல் எதிர்காலம் கருதி, ஒரு நாள் கடவுள் காலிகூலாவைக் காலி செய்ய முடிவு செய்தது. விசுவாசம் உள்ள வீரர்களை ஏவியது. சமீபத்தில் தனக்கும் தனது சகோதரிக்கும் பிறந்த குழந்தையுடன் மாமன்னர் காலிகூலா கொலோசியம் (சிஷீறீறீஷீssமீuனீ) வந்தருள மனம் கொண்டிருநதார்.
கொலோசியம் பற்றி ஒரு சின்ன குறிப்பு: சிவீக்ஷீநீus விணீஜ்வீனீus என்று இன்று பாழாய்க் கிடக்கும் மாபெரும் அரங்கம், அன்று ரோமானிய மன்னர்களும் மக்களும் அடிமைகளின் மரணங்களைக் கண்டுகளிக்கும் குருதிக்களமாக இருந்தது.
மனிதரும் மிருகமும் அல்லது மனிதனும் மனிதனும் யாரேனும் ஒருவர் சாகும்வரை போராடும் வீர விளையாட்டு அது. வீரம் களத்தில் இருப்பவர்களுக்கு, விளையாட்டு வேடிக்கை பார்ப்பவர்களுக்கு. ‘சாகப்போகிறவ ருக்கு வணக்கங்கள்’ என்ற மரியாதை மந்திரத்துடன் ஆட்டம் ஆரம்பமாகும். இந்த உயிர்நீக்கும் ஆட்டம் ஆடும் வீரர்களைத் தயார் செய்ய, தனிப் பள்ளிகளை நிறுவியிருந்தது ரோம். பள்ளியின் மாணவர்கள் பெயர் கிளாடியேட்டர்ஸ்.
இந்த கிளாடியேட்டர்ஸ் தவிர, தேசத் துரோகிகள், புரட்சியாளர்கள் போன்ற உபத்திரவங்களை இல்லாமல் செய்யும் கொலைக்களமாகவும் இருந்தது சர்க்கஸ் மாக்ஸிமஸ்.
Ôபுதிதாக உருவான கிறிஸ்துவர்கள்Õ என்ற கூட்டத்தின் அங்கத்தினர்களை அங்கம்


Ôகிளாடியேட்டர்Õ படத்தில்...
அங்கமாக மிருகங்கள் பிய்த்துத் தின்னும் காட்சிகளும் நடந்தன. சில உற்சவ நாட்களில், ஒரே நாளில் மூன்று ஷோகூட நடக்கும். அப்படிப்பட்ட தினங்களில் களத்தின் மண், ரத்தம் கலந்து ரத்தச் சகதியாகிவிடும். போராளி கள் வழுக்கி வழுக்கி விழுந்ததால், மோதலில் வன்மம் குறைந்து, காமெடி அதிகம் ஆகிவிட்டதாக மன்னனிடம் மக்கள் குறை கூற... மாமன்னன் பகவான் காலிகூலா உடனே செவிசாய்த் தார்.
ரத்தத்தை உறிஞ்சும் சக்தி ரோமானிய ஈர மண்ணுக்குக் குறைவு. அதனால் ஈரப்பதம் குறைந்த அரேபியப் பாலை வனத்து மணலை அரங்கத்தில் தூவ லாம் என்று மனதில் ஈரமில்லாத அறிஞர்கள் அறிவுரை கூற, ஆவன செய்யக் கட்டளையிட்டார். டன் கணக்கில் மண் கப்பலில் இறக்குமதியாகி, அரேபிய மண் கொலோசியத்தின் களத்தில் தூவப்பட்டது. வழுக்காமல், நிறீணீபீவீணீtஷீக்ஷீs கொடூரமாகப் போரிட்டு மடிவதை, மன்னனுக்கு நன்றி சொல்லியபடி பார்த்து மகிழ்ந்தார்கள் மக்கள்.
இதுவே பிற்பாடு வன்முறை குறைந்து சர்க்கஸாக, பின் சினிமாவாக உருவெடுத்தது. ‘மாட்னி ஷோ’ என்ற வழக்கு ரோமில், கொலோசியத்தில் மத்தியான ஷோவிலிருந்து துவங்கியது. காலிகூலா இப்படிப்பட்ட கேளிக்கைகளைப் பார்க்கத்தான் தன் சகோதரிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையுடன் வந்து கொண்டிருந்தான். திடீரென வெளிப்பட்ட வீரர்கள் காலிகூலாவைத் தாக்கினார்கள். வீசப்பட்ட வாள்களுக் குத் தப்ப, காலிகூலா தலையைத் தாழ்த்தினாலும் கழுத்துக்கு வந்த வாள், அவன் தாடையைப் பதம் பார்த்தது.
Ôதவடை (தாவாங்கட்டை) கழண்டு போச்சுÕனு கேட்டிருப்போமே... அது ஆச்சு, காலிகூலாவுக்கு! தகாத உறவில் பிறந்த அவனது குழந்தையைக் காலைப் பிடித்து, அந்தக் கொலோசியத்தின் கல்தூணில் துணி தோய்ப்பதுபோல் அடித்துக் கொன்றனர் தேச விசுவாசி வீரர்கள் (கம்சன் குழந்தைகளைக் கொன்ற பாணியில்!).
காலிகூலாவின் சகோதரி அக்ரிபினாவை மட்டும் ஏனோ கொல்லவில்லை அவர்கள். பிற்பாடு, இந்தச் சகோதரி அடுத்த சக்ரவர்த்தி க்(«)ளாடியஸ் சீசரை (சிறீணீuபீவீus சிமீணீsணீக்ஷீ) மணந்தாள். மூன்று சீசர்களைத் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்தாள் அக்ரிபினா. இவளது மரணமும் காலிகூலாவின் மரணம்போல் கொடூரமாகவும் அதைவிடச் சோகமானதாகவும் இருந்தது. இவள் பெற்ற பிள்ளை மன்னன் நீரோ (ஆமாம்! ரோம் எரிகையில் ஃபிடில் வாசித்தாரே... அவர்தான்!) தன் தாயைக் கொல்ல ஆளை ஏவினான்.
இதெல்லாம் எதுக்குச் சொல்ல வரேன்னா, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கொஞ்சம்கூடக் கொடூரம் குறையாமல் இன்னும் ரொவாண்டாவில், அயோத்தியாவில், கோத்ராவில், நியூயார்க்கில், ஏன்... காஞ்சிபுரத்தில்கூட வன்முறை பழகி வருகிறோம் நாம்.
கலிங்கத்துப் பரணி படித்தால், நாமும் ரத்தச் சேற்றில் விளையாடிய பிள்ளைகள்தாம் என்பது விளங்கும்.
இந்த வாரம் காதல்... அப்படிங்கிறீங்களா? அதான், காலிகூலாவுக்கும் அவன் சகோதரிக்கும் இருந்ததே... அதுவும் காதல்தானே?
உமக்கும் எனக்கும் பிடிக்கவில்லை என்பதால், அது காதல் இல்லை என்றால், காலிகூலா ஒப்புக்கொள்ள மாட்டார். Ôகடவுள் ஸ்தானத்துக்கு உயர்ந்த மனிதன் இப்படியெல்லாம் எப்படிச் செய்தான்?Õ என்றால்...
இன்றைய செய்திகளைப் படியுங்கள்... சந்திரசாமியைக்கூட சிஙிமி விசாரிக்கப் போகிறதாம்!
இன்னொரு கடவுள் கம்பி எண்ண வாய்ப்பிருக்கு.
என்னத்தைச் சொல்ல... போங்கோ! கலி முத்திடுத்து!

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP