"நோட்டீஸ் டு காலர்ஸ்'

>> Thursday, August 21, 2008

நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்று இருந்தேன்! கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒன்று நடத்தி வருகிறார். தென் மாவட்டக்காரர்... கொஞ்சம், "குஷால்' பேர்வழி!
அவரது மேஜைக் கண்ணாடியின் கீழ், "நோட்டீஸ் டு காலர்ஸ்' - தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு எவ்வளவு நேரம் தரவாரியாக ஒதுக்குவார் என்பதை சூசகமாகத் தெரிவித்து ஒரு சீட்டு வைத்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுள்ளவை மிகவும், சுவையாக இருந்தது... அது—

* நட்பு முறையில் பார்க்க வருபவர்களுக்கு 10 நிமிடம்!

* சேல்ஸ்மேன்களுக்கு அரை செகண்டு!

* லைப் இன்சூரன்ஸ் ஏஜண்டுகளுக்கு 15 செகண்டு!

* "ஓசி' சாம்பிளுடன் வரும் பிராந்தி, விஸ்கி விற்பனையாளர்களுக்கு இரண்டு மணி நேரம்!

* விருந்துக்கு அழைக்க வரும் நண்பருக்கு இரண்டு மணி நேரம்! * கிரிக்கெட் பற்றி பேச வரும் நண்பருக்கு பகல் முழுக்க!

* "பில்லை நான் குடுக்கிறேன்...' எனும் நண்பர்களுக்கு நாள் முழுக்க!

*வாடிக்கையாளர்களுக்கு எட்டு மணி நேரம்!

*மனைவிக்கு, "நோ டைம்!'

* "கேர்ள் பிரெண்ட்ஸ்'களுக்கு இரவு முழுக்க!

* பணம் கொழுத்த 80 வயதுக்கு மேலுள்ள உறவினர்களுக்கு எந்த நேரமானாலும்!

* வேலை கேட்டு வரும் உறவினர்களுக்கு மூன்றே மூன்று செகண்டுகள்!

* வருமானவரித் துறையினர் மற்றும் "பெண்டிங் பில்' வசூல் செய்ய வருபவர்களுக்கு நாள் முழுவதும் — ஆனால், நாளை! (இன்று ரொக்கம், நாளை கடன் என்பது போல்!) — இது எப்படி இருக்கு? * * *

நன்றி தினமலர்

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP