ஸீ ஆப் மேட்ரிமனி

>> Sunday, May 24, 2009

"கடலுக்குக் கரிப்புத் தன்மை இருப்பது எதனால் தெரியுமா?' என்று
கேட்டார் குப்பண்ணா.

"சொன்னால் தானே தெரியும்!' என்றேன்.


"கடலுக்குள் வந்து சேரும் நதிகளும், ஓடைகளும் உப்புச் சத்தைப்
பாறைகளிலிருந்தும், பூமியின் மேல் பரப்பிலிருந்தும் சிறுகச்
சிறுக அடித்து வந்து கடலில் சேர்ப்பதால்தான், கடல் நீர் ஆவியாக
மாறி மீண்டும் மழையாகப் பொழிகிறது. உப்பு மட்டும் கடலிலேயே தங்கி
விடுகிறது!'


"கடலுக்கு நீல நிறம் கொடுப்பது வானம் தானே? வானம் நீலநிறமாக
இருப்பதால் தானே கடல் அதை பிரதிபலிக்கிறது...' என்றேன்.


"இல்லையில்லை... கடலுக்கு நீல நிறம் கொடுப்பது சூரியன்தான்.
உண்மையில் கடல் நீர் நிறமற்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் பல
நிற ஒளிக்கதிர்களுள், நீல நிறத்தை தவிர மற்ற அனைத்தையும் கடல்
கிரஹித்துக் கொள்கிறது. நீலநிறக் கதிர்கள்மட்டும் கட லால்
எதிரொளிக்கப்படுவ தால் அது நீலநிறமாகத் தோன்றுகிறது!'


"சந்திரனுக்கும், கடல் கொந் தளிப்புக்கும் கூட சம்பந்தம்
இருக்கிறதாமே?'


"ஆமாம்... முழு நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடல் நீர்
எழுச்சியடைந்து மேலெழும்புகிறது. அதே போல் உலகின் பூமிப்
பகுதியும் கொந்தளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பு சில சமயங்களில்
ஆறு அங்குலம் கூட எழுந்து மீண்டும் அடங்குகிறதாம். உலகப்பரப்பின்
70 சதவிகிதம் தண்ணீர் தான். ஆனால், இதில் ஒரு சதவிகிதம் தான்
குடிக்க லாயக்கானது.


"ஜெர்மனியில் உள்ள ஹெமல் ஸ்டார் பர் என்ற ஏரியின் மேல் பகுதி
நீர் இனிப்பாகவும், அடிப்பகுதி நீர் கசப்பாகவும் இருக்கும்.
அதனால், இதற்கு ஸீ ஆப் மேட்ரிமனி என்று பெயர். மேட்ரிமனி என்ற
ஆங்கில வார்த்தைக்கு, மண வாழ்க்கை என்று பொருள்...' என்றார்
குப்பண்ணா.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP