SRILANKA FULL STORY UPTODATE

>> Monday, January 19, 2009

சந்திரமௌளீஸ்வரன் இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார். கிறிஸ்துவுக்கு முன் முதல் இன்று வரை இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார்...

கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்

கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்

1658- டச்சு ஆதிக்கம் இலங்கையில் தொடக்கம். கண்டி நீங்கலாக எங்கும் அவர்கள் ஆதிக்கம் பரவியது.

1796 – பிரிட்டிஷாரின் பார்வை இலங்கை மேல். அவர்கள் இலங்கையினை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள்

1815- கண்டி பிரிட்டிஷார் வசமாகியது. இலங்கைக்கு டீ, காபி, தேங்காய்த் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்த தென் இந்தியாவிலிருந்து தமிழர்களை கொண்டு செல்லுதல் தொடங்கியது.

1833- இலங்கை மொத்த்த் தீவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில்

1931- சிங்களரின் இடைக்கால காபினட்.

1948- பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை

1949- இந்தியாவிலிருந்து தோட்ட்த் தொழிலாளர்களாகப் போன தமிழர்கள் பலருக்கு குடியுரிமை பறிக்கப்பட்ட்து.

1956-இலங்கை ஒரு சிங்கள தேசம் என்று ஓர் அலை பரவியது. பாரதியார் கூட சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம் என ரொம்ப நாளைக்கு முன்பே சிங்களத் தீவு என்ற பிரயோகத்தினைக் கையாண்டார் என்பதனைக் கவனிக்க. சாலமன் பண்டாரநாயகே ஆதிக்கம். சிங்களம் ஆட்சி மொழியாக அறிவிப்பு. தமிழர்கள் இதனை எதிர்த்தனர். சுமார் 100 தமிழர்கள் அப்போது நடந்த வன்முறையில் உயிரிழந்தனர். இலங்கையில் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டு உயிரிழப்பது அன்று தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது

1958- தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் 200 தமிழர்கள் பலி

1959- சாலமன் பண்டார நாயகே கொலை. அவரின் விதவை சிரிமாவோ பண்டாரநாயகே ஆட்சிப் பொறுப்பு ஏற்பு

1965- சிரிமாவோ தோல்வி . எதிர்கட்சியான ஒருங்கிணைந்த தேசியக் கட்சி ஆட்சி. தமிழர்கள் இழந்த்தைப் பெற சில முயற்சிகள்

1970- சிரிமாவோ மீண்டும் ஆட்சியில். தமிழர்களுக்கு எதிரான போக்கு மீண்டும்

1971- இலங்கையில் மார்க்சீய புரட்சி உதயம். மாணவர் புரட்சி உதயம்

1972- சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம். புத்த மதம் மிகுந்த செல்வாக்கு பெற தொடங்குகிறது, இதனால் தமிழர்கள் அதிருப்தி

1976- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உதயம்

1977 தேர்தலில் Tamil United Liberation Front (TULF) கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் எல்லா இடங்களிலும் வெற்றி- தமிழர்களுக்கு எதிரான வன்முறை பலர் பலி

1981- புகழ்வாய்ந்த யாழ்பாணம் நூலகம் எரிப்பு. பதட்டம் அதிகமாகிறது

1983- எல்டிடிஈ தாக்குதல் 13 சிங்களர் பலி. இதுவே விடுதலைப் புலிகள் தங்களின் முதல் போர் எனக் கூறுவர்

1985- விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் நடந்த முதல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிகிறது

1987- விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை அரசு முயற்சி. யாழ்ப்பாணத்தில் புலிகள். தமிழர் பகுதிகளுக்கு தனி கௌன்சில்கள் அமைக்க இலங்கை அரசு தீர்மானம். இந்திய அமைதிப் படையினை வரவழைக்க இலங்கை அரசு ஒப்பந்தம்

1988- ஜேவிபி என்ற இயக்கமும் இன்னும் சிலரும் இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை எதிர்த்தனர்

1990- இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து விலகியது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கு இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர்

1991- இராஜீவ் காந்தி படுகொலை. விடுதலைப் புலிகளே காரணம் என முதல் கட்ட விசாரணையிலேயே தெளிவு

1993- பிரேமதாசா கொலை

1994- குமாரதுங்க பதவியேற்பு. அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கம்

1995- இலங்கை அரசின் கடற்படை கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர். மீண்டும் போர் தொடக்கம்

1995-2001 வரை இரண்டு தரப்புக்கும் ஆயுதப் போர். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்கள் விடுதலைப் புலிகளின் கேந்திரங்கள் ஆயின

2002 பிப்ரவரியில் நார்வே தூதுக் குழுவின் ஒத்துழைப்பில் இரண்டு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தம். தனி ஈழக் கோரிக்கையை புலிகள் கைவிட்டனர். யாழ்ப்பாணம் சாலை திறக்கப்பட்ட்து. விடுதலைப் புலிகள் மீதான தடையும் கைவிடப்பட்ட்து

2003- விடுதலை புலிகள் போர் நிறுத்த்த்தைக் கைவிட்டனர்

2003 மே பெரும் வெள்ளம்

2004- கருணா விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து விலகி தனி அமைப்பு தோற்றுவிப்பு. தலைமறைவு

2004 ஜூலை புலிகள் கொழும்பு நகரை தற்கொலைப் படை கொண்டு தாக்குதல்

2004- டிசம்பர்- சுனாமி- இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் சேதம்

2002005 ஆக்ஸ்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கொலை- நாடெங்கும் பரபரப்பு

2005 நவம்பர் – பிரதமரகாக இருந்த மஹிந்த ராஜ பக்‌ஷே அதிபர் தேர்தலில் வெற்றி

2006 ல் புலிகள் தொடர் தாக்குதல். மே மாதம் கடற்படைக் கப்பலைத் தாக்கினர்.

2006 ஜெனிவாவில் நடை பெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி

2007 பல தமிழர்கள் கொழும்பு நகரை விட்டு வெளியேற்றியது அரசு. நீதி ம்னறத் தலையீட்டால் நிலை மாற்றம்

2008 மார்ச். சர்வதேச அமைப்புகளை வந்து பார்வையிட இலங்கை அரசு வேண்டுகோள். அதனை ஏற்று குழு வருகை. குழு உறுப்பினார் நெகில் ராட்லி தன்னால் வேலை செய்ய இயலவில்லை. அரசின் குறுக்கீடு உள்ளது எனக் கூறி வெளியேற்றம்

2008 ஜூலையிலிருந்து இன்று வரை இலங்கை அரசு தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது

ஈழத்தின் உண்மை வரலாறு
இப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.

இலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.

சுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.

தமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.

செல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.

அவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.

1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் விடுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.

ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படையும் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.

இவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்

ஈழத்தமிழர் வரலாறு

http://thamilar.blogspot.com/2008/11/blog-post_15.html

http://thamilar.blogspot.com/2008/11/blog-post_9302.html



இலங்கையின் முழுவரலாறு படிக்க குமுதம் ரிப்போர்ட்டரில் வரும்

யுத்தம் சரண்ம் கச்சாமி படிக்கவும்

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP