விமர்சனம் : ராவணன்

>> Thursday, June 17, 2010

நன்றி : http://www.thenaali.com/thenaali.aspx?A=2073


திரைக்கதை, இயக்கம்: மணி ரத்னம்


நடிப்பு: விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிருத்விராஜ், பிரபு, கார்த்திக், பிரியாமணி


இசை: ஏ.ஆர். ரஹ்மான்


ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

--------------------------------------------------------------------------------


சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.


திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா - தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.


அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா...). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.


வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.


முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.


வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.


ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.


அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.


மணி ரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.

Read more...

ஆஸ்திரேலியா அட்டாக்....நடந்தது என்ன?

>> Wednesday, June 3, 2009

ஆஸ்திரேலியாவில், சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் கடந்த சில நாள்களாக இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக இந்தியத் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அரசும் இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது.


இது ஏதோ இப்போதுதான் நடைபெறத் தொடங்கியுள்ளதைப் போன்று பேசப்பட்டாலும், உண்மையில், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது என்பது உலகம் முழுவதிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. வெறும் வழிப்பறி என்ற அளவில் முடிந்துபோகின்றவை நிறைய. தற்போது தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடந்திருப்பதும், ஒரு மாணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதும்தான் பிரச்னையை இந்த அளவுக்கு அனைவரும் அறியும்படியாகச் செய்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் மொத்தம் 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த மாணவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம்.


இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா போய்த்தான் படிக்க வேண்டுமா? இந்தியாவில் இத்தகைய படிப்புகள் இல்லையா? என்று கேட்டால், இந்தியாவிலேயே இவர்கள் படிக்க முடியும் என்று பதில் சொல்வது எளிது. ஆனால், மிகக் குறைவான வசதிகளுடன் இங்குள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை ஒப்பிடும்போது, ஏறக்குறைய இதே கல்விக் கட்டணத்தில் ஆஸ்திரேலியாவில் படிக்கவும், அயல் நாடுகளில் பணிபுரியும் வாய்ப்புகளை உடனடியாகத் தேடிக்கொள்ளவும் முடிகிறது.


உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் விமானியாக பயிற்சி பெற வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. இதே பயிற்சியை இந்தியாவில் தனியார் அமைப்புகளில் பெற வேண்டுமானால் ரூ.20 லட்சம் வரை ஆகிறது. ஆகவே, வெளிநாடு போய் படித்தால் என்ன என்ற ஆர்வம் தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இதைப் போன்றுதான் மற்ற படிப்புகளுக்கான செலவுகளும் அமைந்துள்ளன.


அதைவிட முக்கியமானது என்னவென்றால், படிக்கும் காலத்தில் பகுதிநேரம் வேலை செய்து வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும் முடிகிறது. இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு மாணவர்களால் இந்தியாவில் பகுதி நேரமாகப் பணியாற்றி வாழ்க்கைச் செலவை ஈடுசெய்தல் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு இது நனவாகும் கனவு.


ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு "நோ வொர்க்' என்று விசா கொடுக்கப்பட்டாலும், படிப்புக்காலம் தொடங்கியபிறகு, பெரும்பாலும் இரண்டாம் ஆண்டு முதலாக, பகுதிநேர ஊழியம் செய்ய அனுமதி கிடைத்துவிடுகிறது. இந்த வகையில் இந்திய மாணவர்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.450 டாலர் வரை சம்பாதிக்க முடிகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சட்டத்தின்படி ஆண்டுக்கு 6000 டாலர் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்றாலும், இந்த மாணவர்கள் தாங்கள் செலுத்தும் வரியில் குறைந்தது 2500 டாலர் வரை திரும்பப் பெறவும் முடிகிறது.


ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பகுதிநேர வேலை பார்ப்போரில் பெரும்பான்மையோர் இந்திய மாணவர்கள்தான். பகுதி நேர வேலை முடித்து ரயிலிலும் டிராம்களிலும் மனிதர்கள் அதிகம் இல்லாத வேளையில் தனித்து வரும்போதுதான் இந்திய மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். வழிப்பறிக்கு ஆளாகிறார்கள். ஆஸ்திரேலியாவில் வாழும் திறமையற்ற, வேலைசெய்யாத இளைஞர்களால் இத்தாக்குதல் நடத்தப்படுகிறது.


வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டுக்கு படிக்க அழைப்பதன் மூலம் ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அன்னியச் செலாவணியுடன், அறிவுசார்ந்த மனிதவளமும் கிடைக்கிறது. ஆகவே, இந்திய மாணவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டு அரசின் கடமை. அதைவிடுத்து, "இந்திய மாணவர்கள் பாதுகாப்பான புறநகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதுதான் ஒரே வழி' என்று ஆஸ்திரேலிய அரசு சொல்வது, தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவே அமையும்.

அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேணில் "இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல்கள்" என்ற செய்தியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்திய தேசியம் என்ற வட்டத்திற்குள் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால்த்தான் இவ்வாறான சம்பவங்கள் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் எந்தப் பிண்ணணியில் நடக்கின்றன என்று ஆராய்வது மிகவும் அவசியமானதாகும்.

நான் கடந்த 6, 7 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வருகிறேன். சிட்னியில் நான் வசிக்கும் வெஸ்ட்மீட் மற்றும் கரீஸ்பாக் போன்ற பகுதிகள் 80 வீதமான இந்தியரைக் கொண்டவை. மேலும் இன்றுவரை, இந்தியாவிலிருந்து வந்து குடியேறும் அனைத்து இந்தியர்களுமே இந்த இரு பகுதிகளையும் குறிவைத்தே வருகின்றனர். முன்னர், பல்லினத்தவரையும் கொண்ட நகர்களாகக் காட்சியளித்த இந்த இரு பகுதிகளும் இன்று கிட்டத்தட்ட முழு இந்திய குடியேற்றங்களாக மாறி வருகின்றன. இப்பகுதியில் முன்னர் குடியிருந்த வெள்ளையர், சீனர், இத்தாலி நாட்டுக்காரர், இலங்கையின் தமிழீழப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர் போன்றவர்கள் சிறிது சிறிதாக இப்பகுதிகளை விட்டு வெளியேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான பிண்ணனியிலேயே இந்தத் தாக்குதல்கள் பற்றி நாம் ஆராய வேண்டும்.

முதலாவதாக, இன்றைய பொருளாதார தேக்க நிலையில் அவுஸ்த்திரேலியாவின் வேலை வாய்ப்பிண்மை 4 % இலிருந்து சடுதியாக 8% ஆக அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. பல தொழிலதிபர்கள் தமது செலவினைக் குறைக்கும் முகமாக பல தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றனர். அவ்வாறான இடங்களுக்கு பகுதிநேர தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்திய மாணவர்களை அமர்த்த இந்த தொழில் அதிபர்கள் விரும்புகின்றனர். சராசரியாக 22 டால மணித்தியாலத்துக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 அல்லது 8 டாலருக்கு இந்திய மாணவர்கள் வேலை செய்ய விரும்புவதால் இவ்வாறான வேலை வாய்ப்பிண்மை அதிகரித்துக்கொண்டு போகிறது.

இங்கு பலர் வாதாடலாம், இந்திய மாணவர்கள் மட்டும்தானா இங்கு வருகிறார்கள் என்று, உண்மையிலேயே இன்றைய நிலவரப்படி படிக்கவென்று அவுஸ்த்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களில் 90 வீதமானவர்கள் வட இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என்பது புள்ளிவிபரப்படி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவுஸ்த்திரேலிய அரசு மீது பல சமூக வியல் அமைப்புகள் இவ்வாறான வீசா அனுமதிகளைக் குறைக்குமாறும், முழுவதுமாக ரத்துச் செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறன. இதன் வெளிப்பாடுதான் அண்மையில் அரசு முன்மொழிந்திருக்கும் ""தொழில்சார் வீசாக்களுக்கான கட்டுப்பாடு" என்ற தீர்மானத்தைப் பார்க்கலாம். ஆகவே தமது வேலை வாய்ப்பிண்மைக்குக் காரணம் இந்த வட இந்தியர்கள் தான் என்கிற மனநிலை சாதாரண அவுஸ்த்திரேலியக் குடிமகனிடம் காணப்படுகிறது. ஆகவே இதுவே இந்திய மாண்வர்கள் மீதான தாக்குதலை உக்குவித்திருக்கலாம்.

ரெண்டாவது, இந்தியர்கள் செறிந்துவாழும் நகரங்களில் வீட்டு விலைகளும், வாடகையும் மற்ற இடங்களிலும் பார்க்க மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால், 3 அல்லது 4 பேர் மட்டுமே வசிக்கக் கூடிய இரு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் 8 முதல் 10 வரையான இந்திய மாணவர்கள் வசிப்பது. 300 டாலர் மட்டுமே வாராந்த வாடகையாகச் செலுத்தக் கூடிய இந்த வீடுகளை இந்திய மானவர்கள் 400 டாலருக்கு ஏலம் எடுக்கின்றனர்.இதனால் இங்கு வாழ என்று வரும் குடும்பங்கள் அதிக வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடுவதையும், வேறு நகர்கள் நோக்கிச் செல்வதையும் காணமுடிகிறது.

8 அல்லது 10 இந்திய மாணவர்களால் போட்டி மூலம் ஏலம் எடுக்கப்படும் இந்த வீட்டு வாடகையை இவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவருக்கு வெறும் 40 அல்லது 50 டாலர்கள் தான் வாரத்துக்கு செலவாகிறது. இவ்வாறே வீடுகள் வாங்கும்போது நடக்கிறது. ரெண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவ்யு செய்வதால் வீடுகளின் விலையும் இப்பகுதிகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலையேற்றங்கள் மற்ற அவுஸ்த்திரேலியர்களை இப்பகுதிகலை விட்டு போகச் செய்வதுடன், அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுவும் ஒரு காரனம் இந்த வட இந்திய மாணவர்கள் மீதான் தாக்குதல்களுக்கு.

மூன்றாவது வட இந்திய மாணவர்கள் இங்குநடந்து கொள்ளும் விதம் பற்றியது. இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் என்னவென்றால், பொது இடங்களிலோ அல்லது புகையிரதம், பேரூந்து போன்ற மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இந்திய மாணவர்களின் செயல் எவ்வாறான முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிறதென்பது. பொது இடங்களில் கூடும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகவும் உச்ச தொணியில் தமக்குல் பேசிக்கொள்வதும், தொலைபேசியில் உரையாடுவதுமான நிகழ்வுகள். காலை மற்றும் மாலை நேரங்களில் வெலை நிமித்தம் புகையிரதங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான அவுஸ்த்திரேலியர்கள் தினமும் சந்திக்கும் இந்த "இந்திக் கூச்சல்கள்". நூற்றுக்கணக்கான பயணிகள் அமைதியாக மர்ந்திருக்கும் ஒரு புகையிரதப் பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்தப் பெட்டி முழுவதற்குமே கேட்குமளவிற்கு உச்ச ஸ்த்தானியில் பேசும் இரு இந்தியர்கள், அல்லது தொலைபேசியில் காதலியுடனோ அல்லது காதலனுடனோ ரசித்து உரையாடும் இந்திய இளைஞர்கள்.

தம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு நாம் சங்கடமாக இருக்கிறோம் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் தனது வீட்டில் இந்தியாவில் இருப்பது போன்ற பிரமையில் தம்மையறியாது கூக்குரலிடும் வட இந்திய மாணவர்கள். இவ்வலவிற்கும் அந்த மாணவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களில்லை. ஆனால் வேண்டுமென்றே தமது வட இந்திய மொழியில் சத்தமாக மற்றவர்கள் முன்னால் சத்தமாகப் பேசுவதை கவுரவமாக நினைப்பதால் இது நடக்கிறது. எவரும் இதைத் தட்டிக் கேட்டாலோ அல்லது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாலோ அவரை நோக்கி இரு வாரத்தைகலை வீசிவிட்டு மீண்டும் தமது பேச்சைத் தொடர்வார்கள்.

இதேபோல் தாம் குடியிருக்கும் பகுதிகளில் இரவு வேளைகளில் மதுபோதையில் இவர்கள் அடிக்கும் கும்மாளம். சில வேளைகளில் காலை 2 அல்லது 3 மணிவரை இந்தியில் உச்ச ஸ்த்தானியில் பாடலும், கூச்சல்களும் தொடரும். அவுஸ்த்திரேலியர்கள் மது அருந்துவதென்றால் மதுக்கடைகளுக்கே செல்வது வழமை. எவரும் வீடுகளில் மது அருந்திக்கொண்டு மற்றவர்களைக் குழப்புவதில்லை.இரவு 10 மணிக்குப் பின்னர் எவரும் கூச்சல் போடக்கூடாதென்று ஒரு விதியிருக்கு. அயலவர்கள் பொலீசிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் இவர்களின் அட்டகாசம் குறைவதில்லை.

எனது மாடியினருகிலுள்ள எல்லா வீடுகளிலும் இந்தியர்களே வசிக்கிறார்கள். இரவு நேரங்களில் குறிப்பாக வெள்ளி மற்று வார விடுமுறை நாட்களில் இந்தப் பிரதேசம் அவுஸ்த்திரேலியாதானா அல்லது இந்தியாவின் மும்பாயா என்கிற சந்தேகம் வந்திவிடும் எனக்கு. இதனால் பலமுறை போலீசார் இங்கு வந்து போவதும் மற்ற இனத்தாருடன் இந்தியர்கள் தர்க்கத்தில் ஈடுபடுவது இங்கு சர்வ சாதாரணம். இந்திய தேசியவாதத்துக்குள் இருந்து பார்க்குமொருவருக்கு இவர்கள் இங்கே செய்யும் செயல்கள் கண்ணுக்குத் தெரியாது. ஏதோ அப்பாவிகளை இனவாதிகள் அடிப்பதாகத்தான் நினைத்து விடுகிறார்கள்.

நான்காவது, வேலை செய்யுமிடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். எங்கு ரெண்டு இந்தியர்கள் கூடிவிடுகிறார்களோ அங்கு உடனேயே கிந்தியில் சத்தமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி அந்த அலுவலகத்தில் கிந்தி தெரியாத மற்ற மொழிக்காரர்களும் இருக்கிறார்களே என்கிற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் தம்பாட்டிற்கு சத்தமாக பெசுவார்கள். இதனால் இவர்களுடன் ஒரே மேசையிலிருந்தோ அல்லது ஒரே அறையிலிருந்தோ வேலைபார்க்கும் வேற்று மொழிக்காரர் சங்கடப்பட்டு நெழிவதும், என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முளிப்பதும் இங்கு சர்வ சாதாரனம். எவரும் தட்டிக்கேட்டால், "எமக்கு கிந்தியில் ம்பேசுவதுதான் சுலபம், ஆகவே நீங்கள் வேண்டுமான நாங்கள் பேசி முடியும்வரை வெளியே இருந்து விட்டு வாருங்கள்" என்று மிக அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள்.

இங்கு பல இந்தி பேசும் இந்தியர்கள் இருக்கிறார்கள், ஏன் நீங்களும் இந்தி கற்கக் கூடாது" என்று என்னிடம் அடிக்கடி இவர்கள் கேட்பதுண்டு. பலமுறை இதனால் என்னுடன் இவர்கள் தர்க்கித்திருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியர்களும் சில வேளைகளில் இவர்களது தொல்லை தாங்க முடியாது இவர்களுடன் தர்கிப்பார்கள். அப்போதெல்லாம்" இந்த நாடு சரியில்லை, இங்கிருக்க எமக்குப் பிடிக்கவில்லை, உங்கள் கலாச்சாரம் கேவலமானது" என்று அவுஸ்திரேலியர்களிடம் ஆவேசமாக இவர்கள் கூறும்போது "அப்படியானால் உங்கள் நாட்டிற்குச் சென்று வாழ்வதுதானே? எதற்கு எங்கள் வரிப்பணத்தில் இருந்துகொண்டு எங்களைச் சாகடிக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு அவுஸ்த்திரேலியர்கள் சொல்வதையும் பலமுறை கண்டிருக்கிறேன்.

இங்கிருக்கும்வரை உழைக்க முடியுமானதை உழைத்துவிட்டு இறுதியில் உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்கள் கலாச்சாரத்தில் வாழ எங்கலுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவரும் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்தியா தரமான நாடென்றால் அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதற்கு இங்கே வந்தீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

இறுதியாக, மெல்பேணில் அண்மையில் ஒரு இந்தியர் தாக்கப்பட்டது அவர் இந்தியர் என்பதற்காக அல்ல. மாறாக இனவெறி பிடித்த சிங்களவர் கூட்டமொன்று வழியில் செல்லும் திராவிடர் போன்ற தோற்றமளித்த வட இந்தியரைத் தமிழர் என்று நினைத்து விட்டதனால்த்தான். அடி வாங்கி முடியும் தறுவாயில், அடித்தவர்களில் ஒருவர் "நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்" என்று கேட்கும்போது தான் வட இந்தியர் என்று சொல்லியதால் அவரை விட்டார்கள். ஆனால் இதையும் வெள்ளைக்காரர் செய்ததாக பலர் காட்ட முனைதது வெதனைக்குரியது.

By sydney Tamil

Read more...

ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே.........புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

>> Wednesday, May 27, 2009

புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதுதில்லி, மே 27: மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெறுவோர் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அமைச்சர்களாக்க குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். அதன் விவரம்



கேபினட் அமைச்சர்கள்


1.தயாநிதி மாறன்

2.மு.க.அழகிரி

3.ஆ.ராசா

4.ஜி.கே.வாசன்

5.செல்ஜா

6.பவண் குமார் பன்சால்

7.மல்லிகார்ஜுன கார்கே

8.எம் எஸ் கில்

9.காந்திலால் பூரியா

10.விலாஸ் ராவ் தேஷ்முக்

11.முகுல் வாஸ்னிக்

12.பரூக் அப்துல்லா

13.வீரபத்ர சிங்

14.சுபோத் காந்த் சகாய்


இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)


1.பிரஃபுல் படேல்
2.பிரித்விராஜ் சவாண்
3.ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்
4.சல்மான குர்ஷித்
5.தின்ஷா படேல்
6.ஜெய்ராம் ரமேஷ்
7.கிருஷ்ணா தீரத்


இணையமைச்சர்கள்

1.இ. அகமது
2.வி. நாராயணசாமி
3.ஸ்ரீகாந்த் ஜேனா
4.முல்லபள்ளி ராமச்சந்திரன்
5.புரந்தேஸ்வரி
6.பனபாக லட்சுமி
7.அஜய் மக்கன
8.முனியப்பா
9.நமோ நாராயண் மீனா
10.ஜோதிராதித்ய சிந்தியா
11.ஜிதின் பிரசாத்
12.ஜாய் பிரதாப்
13.குருதாஸ் காமத்
14.பல்லம் ராஜு
15.மகாதேவ் கண்டேலா
16.ஹரீஷ் ராவத்
17.கே.வி.தாமஸ்
18.சுகதா ராய்
19.சிசிர் அதிகாரி
20.தினேஷ் திரிவேதி
21.சுல்தான் அகமது
22.முகுல் ராய்
23.மோகன் ஜாதுவா
24.எஸ் எஸ் பழனிமாணிக்கம்
25.டி.நெப்போலியன்
26.எஸ். ஜெகத் ரட்சகன்
27.எஸ். காந்தி செல்வன்

28.புனீத் குமார்
29.சச்சின் பைலட்
30.சசி தரூர்
31.பரத்சிங் சோலங்கி
32.துஷார்பாய் செüத்ரி
33.அருண் யாதவ்
34.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல்
35.ஆர் பி என் சிங்
36.வின்சென்ட் பாலா
37.பிரதீப் ஜெயின்
38.அகதா சங்மா

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது அமைச்சரையில் இடம்பெறுவோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

Read more...

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!

>> Monday, May 25, 2009

மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.

2004-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்துவேறுபாடு கொண்டு, அதை ஒரு நாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, தில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்.

பல்வேறு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை தாமாகவே அளித்துள்ள நிலையில், ஆட்சி நடத்தத் தேவையான எண்ணிக்கை பலம் காங்கிரஸிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பது என்பதைத் தவிர திமுகவுக்கு வேறு வழி கிடையாது. காங்கிரஸýடன் உறவை முறித்துக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத திமுக அரசுக்குத்தான் இழப்பு.

எண்ணிக்கை பலத்தால் மட்டுமே தற்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்கிறது எனச் சொல்வதற்கில்லை. சென்ற ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏராளம். அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் திமுக அமைச்சர்களால் நேர்ந்தவை.

முதலாவதாக, சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு காட்டிய அவசரம். இதனால் தமிழக அரசே ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து, அதை அடையாள உண்ணாவிரதமாக மாற்றியது. சேது சமுத்திரத் திட்டச் செலவும், அதன்பிறகு கிடைக்கும் குறைந்த வருவாயும், கால்வாயைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கான தொடர் செலவினமும், பவளப்பாறை அழிவு மற்றும் ராமர் பாலம் சிதைவு என எல்லா பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால்தான் இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொஞ்சம் தாமதப்படுத்த நேர்ந்தது. ஆனால் மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது திமுக. அடுத்தது ரூ. 60,000 கோடி "ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் அமைச்சர் ராசா மீதான புகார். ஆகவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தகைய அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் அதிக கறாராக இருப்பதைக் குறையாகச் சொல்லமுடியாது.

கடந்தகாலங்களில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, திமுக கேட்பதைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளும் முடிவைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியை அமைக்கும்போது நிலையற்ற தன்மையை விரும்பமாட்டார்கள். உத்தரப் பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் காங்கிரûஸ சுய பலத்துடன் வளர்க்கத் தமிழக காங்கிரஸôர் விரும்பினாலும் அவர்கள் தன்மானத்துடன் செயல்படுவதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாது.

தற்போது திமுக எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்டது, எத்தனை பெற்றது, அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தது என்பது முக்கியமே அல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மறைவு'க்குப் பின், ஈழத் தமிழர்கள் 2.8 லட்சம் பேர் கதியற்று, காப்பான் இன்றி, கவலையிலும் பீதியிலும் பட்டினியாலும் நொந்து கிடக்கும்போது, அவர்களது வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குத் தமிழர் குழுக்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கும்போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி தமிழர்கள் கெüரவமாக நடத்தப்படுகிறார்களா; நிவாரணம் முழுவதுமாக கிடைக்கிறதா என்று கண்காணிப்புக் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தமிழக முதல்வர், தில்லியில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தால்.... இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ!

உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தமிழருக்கு உதவிட ராணுவத்தின் கட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்க முடியும், உதவிகள் வழங்க முடியும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கையில், தமிழக அரசின் செயல்பாடு என்ன?

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று ஒரு சொல்லடை உண்டு. தென்னிலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்க, தில்லியில் பதவி பேரம் பேசினார் ஒரு தமிழினத் தலைவர் என்ற பேச்சு வரலாற்றில் இடம்பெறுவது சரியா?

இன்னின்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் திமுக தலைவர் கருணாநிதி, சூழ்நிலை அவசியம் கருதி, ஈழத் தமிழர் நலன் மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அங்கே அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் நியாயமாகவும் முறையாகவும் நடைபெறவும் ஒரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியிருந்தாலும்கூட, அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் நிலைமை அதுவாக இல்லை.

திமுக தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும் இலங்கை அதிபர் ராஜபட்ச முன்பு சொன்னதனால், இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி பயணப்பட்டிருக்க வேண்டிய இடம் கொழும்புதானே தவிர, தில்லி அல்ல.

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!

Read more...

நூறு விதமான ஸ்டைலில் ரஜினி பாட்டு!

>> Sunday, May 24, 2009

நூறு விதமான ஸ்டைலில் ரஜினி பாட்டு!

"சிவாஜி' படத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ஜேம்ஸ் பாண்ட் என
பலரது, "கெட்டப்'பில் தோன்றி நடித்த ரஜினி, "எந்திரன்' படத்தில்
ஒரே பாடலில் 100 விதமான காஸ்ட்டியூம்களில், 100 விதமான ஸ்டைல்
காட்டி நடித்துள்ளார். அதைப் பார்த்து, "உலகிலேயே ஒரே பாடலில்
இத்தனை விதமான ஸ்டைலை ரஜினியைத் தவிர யாராலும் வெளிப்படுத்த
முடியாது...' என்று அப்பாடலுக்கு நடனம் அமைத்த பிரபுதேவா
மிரட்சியுடன் சொல்லி வருகிறார்.


—சினிமா பொன்னையா


* * *


அமீர்கானை அசத்திய அஜீத்குமார்!


"கஜினி'யைத் தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு நல்ல கதை கிடைக்காதா
என்ற தேடலில் இறங்கிய அமீர்கானின் கண்ணில் அஜீத்தின், "வரலாறு'
படம் தென்பட, அதில் அஜீத்தின் நடிப்பை பார்த்து அசந்து போனார்.
உடனே, அஜீத்தை தொடர்பு கொண்டு பாராட்டிய அமீர்கான், அடுத்து,
"வரலாறு' படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க தயாராகி வருகிறார்.


* * *


வித்தியாசமானபிரபுதேவா!


சிறிய இடைவேளைக்குப் பிறகு, "களவாடிய பொழுதுகள்' படம் மூலம்
மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, படத்தின் கதையை ஆகா,
ஓஹோவென்று புகழ்கிறார். குறிப்பாக, "இப்படியொரு கதைக்காகத்தான்
இத்தனை காலம் காத்திருந்தேன். அப்படியொரு காதல், பாசம் கலந்த
உணர்வுகளின் தொகுப்பு இந்தப் படம். இதில் வித்தியாசமான
பிரபுதேவாவை பார்க்கலாம்...' என்கிறார். இதில், நடிப்பதற்காக
தெலுங்கில் சித்தார்த்தை கொண்டு இயக்கும் படத்தின் படப்பிடிப்பை
கூட தள்ளி வைத்துள்ளார்.


* * *


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் டி.எம்.எஸ்.,!


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "கிருஷ்ண விஜயம்' படத்தில், "ராதே
உனக்கு கோபம் ஆகாதடி...' என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு
அறிமுகமானவர் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன். தற்போது, அவர்
மீண்டும் அதே எம்.எஸ்.வி., இசையில், "வாலிபன் சுற்றும் உலகம்'
படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் தான்
இசையமைக்கும் ஆல்பத்தில் பாடவும் டி.எம். சவுந்தர்ராஜனுக்கு
அழைப்பு விடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


—சி.பொ.,


* * *


த்ரிஷா உஷார் நடவடிக்கை!


கோடிக் கணக்கில் சம்பளம் கேட்டு நயன்தாரா, இலியானா என்று சில
நடிகைகள் படாதிபதிகளின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதால், உஷாராகி
விட்டார் த்ரிஷா. "என் நடிப்புக்கு என்ன ஊதியமோ, அதை
தயாரிப்பாளர்கள் நான் கேட்காமலேயே தருவர். சிலர் பணம் தான்
முக்கியம் என்று அலையலாம்; ஆனால், நான் அப்படியல்ல. எனக்கு
கேரக்டர் தான் முக்கியம்; பணமெல்லாம் அதற்கு பிறகு தான்!' என்று
அறிக்கை வெளியிட்டு நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார் த்ரிஷா.
அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே ஜோடு!


— எலீசா.


* * *


கவர்ச்சிக்கு முழுக்குப் போட்ட மும்தாஜ்!


"ராஜாதி ராஜா' படத்தில், "சைதை சைலஜா' என்ற வில்லி ரோலில்
நடிக்கும் மும்தாஜ், ஒரு கட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகி
விடுகிறார். அந்த பாத்திரத்தில், "பஞ்ச்' டயலாக் விட்டபடி
மும்தாஜ் நடித்த நடிப்பைப் பார்த்தவர்கள், "அடுத்து வில்லியாக
பெரிய ரவுண்டு வருவீர்கள்...' என்று அடித்து சொல்கின்றனர்.
அதனால், இனி கவர்ச்சிக்கு முழுக்கு போடப் போவதாக சொல்லும் மும்
தாஜ், முழுநேர வில்லி அவதாரம் எடுக்க தீர்மானித்துள்ளார்.


* * *


கலக்க வருகிறார் சரோஜா தேவி!


ஜக்குபாயைத் தொடர்ந்து, "ஆதவன்' படத்தை இயக்கும் கே.எஸ்.
ரவிக்குமார், மாஜி கதாநாயகி சரோஜாதேவிக்கு முக்கியத்துவம்
கொடுத்துள்ளார். அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில்
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியின் சூப்பர்ஹிட் டூயட் பாடல் ஒன்றையும்
மலரும் நினைவுகளாக படத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதனால், படப்பிடிப்புக்கு தன்னை எப்போது அழைப்பர் என்று ஏக
குஷியில் உள்ளார் கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி. ஆடிய காலும்,
பாடிய வாயும் சும்மா இருக்காது.


* * *


பப்ளிசிட்டி தேடும் ப்ரியாமணி!


இந்தி, "ராவணா'வில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்கும் ப்ரியாமணி,
படம் ரிலீசானதும் இந்தி சினிமாவுக்குள் நுழைய அதிரடி திட்டம்
தீட்டி வருகிறார். "ராவணா' வில் தன் பங்கு சிறியதே என்றபோதும்,
"தென்னக சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளுள் நானும் ஒருவள்!'
என்பதை அங்குள்ள பிரபலங்களுக்கு உணர்த்தும் வகையில் தன் படப்
பட்டியலையும், தான் தேசிய விருது பெற்ற நடிகை என்பதையும்,
வெளிப்படுத்தி வருகிறார். காரண குருவே காரிய குரு.

Read more...

நம்பினார் கெடுவதில்லை!

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில்
கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்
நம்பியாண்டார் நம்பி.


இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள
திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில்
மிகவும் பிரபலமானது. "பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாதது
என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.


இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை;
நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர்
தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், "இன்று, நீ
போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா...' என்றார்.


மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச்
சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.


"அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய்
விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு
வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு
கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார்.
விரைவில் சாப்பிடப்பா...' என்றான்.


பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?


அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை
வந்தது...


"இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில்
முட்டி மோதி இறப்பேன்...' என்று சொல்லியபடியே, தூணில் முட்டி
அழுதான்.


அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில்
இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார்.
தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட
வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை
பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.


அவரிடம், "விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி
விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக்
கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்...' என்றார் நம்பி.


அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார்
விநாயகர்.


மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர்
திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த
ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு
எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே
வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர்
சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.


அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார்
நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை
உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில்
மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச்
சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக்
கொண்டான்.


அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில்
இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி
அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு
இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.


குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை
நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

Read more...

பித்தன் என்பவன் யார்?

பரமேஸ்வரனுக்கு, "பித்தன்' என்ற ஒரு பெயருமுண்டு. இவருக்கு
பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில்
பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி,
அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி
செய்கிறது.


அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை,
"பணப்பித்து' என்கின்றனர். சிவனையே நினைத்து பக்தி
செய்பவர்களையும் பித்தன் என்பர்.


பகவானைப் புகழ்ந்து பாடி வழிபட்டால், அவனை சந்தோஷப்படுத்தினால்,
அவன் பல சம்பத்துக்களையும் அளித்து, சம்சார பந்தத்திலிருந்து
நம்மை விடுவிக்கிறான்; பக்தர்களை ரட்சிக்க வேண்டியதை தன்
பொறுப்பாகவே ஏற்றுக் கொள்கிறான். கஷ்டம், மரணம் என்பதெல்லாம்
சாதாரண மக்களுக்குத் தான். அதை கண்டு அவர்கள் பயப்படுவர்; ஆனால்,
அவைகளைக் கண்டு பக்தர்கள் பயப்படுவதில்லை. பக்தர்களுக்கு வளமையோ,
செழுமையோ எதுவும் தெரியாது; தெய்வத்தின் அருளே அவர்களது செல்வம்.


சிவனார் ஆலகால விஷம் உண்டார். எதற்காக? அந்த விஷம் வெளியில்
இருந்தால் உலகத்துக்கு ஆபத்து என்பதற்காக. இது அவரது
கருணையல்லவா! தெய்வத்தை வழிபட்டு, நெறியான வாழ்க்கை வாழ்ந்து,
கடவுள் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்களை எந்தவித துன்பமும்
பாதிப்பதில்லை.


பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தினான்.
ஆனால், அவர் கலங்கவில்லை. பகவானை நம்பினார். பிரகலாதனும் பலவித
துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருத்தப்படவே இல்லை. தெய்வீக
இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே
தெரியாது!


தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை
அவர்கள் அறிய மாட்டார் கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர
இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை.


ஒரு தபஸ்வியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பை போட்டான் பரீட்சித்து
மன்னன். ஆனால், அந்த தபஸ்விக்கு அது தெரியவே இல்லை. அவர் மனம்
தவத்தில் ஈடுபட்டிருந்தது.


தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது
தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒருவர்
வாசற்படியின் அருகில் திண்ணையில் உட்கார்ந்து ஜெபம் செய்து
கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் ஒரு மாடு போகிறது. ஆனால்,
அதோ, மாடு போகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை.


ஒருவன் வந்து, "ஐயா! இந்த பக்கம் ஒரு மாடு போயிற்றா?' என்று
கேட்டான். அவர், "தெரியலையே! நான் கவனிக்கவில்லையே...' என்றார்.
இவரது கண் முன் ஒரு மாடு போயிருக்கிறது; ஆனால், விழித்திருந்தும்
அவர் அந்த மாட்டை கவனிக்கவில்லை; காரணம், அவரது மனம் முழுவதுமாக
பக்தியில் ஈடுபட்டிருந்தது.


மனம் எதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதோ, அப்போது மற்ற விஷயங்கள்
மனதில் படுவதில்லை. இப்படி மெய்மறந்து பக்தி செய்ய வேண்டும்!

Read more...

ஸீ ஆப் மேட்ரிமனி

"கடலுக்குக் கரிப்புத் தன்மை இருப்பது எதனால் தெரியுமா?' என்று
கேட்டார் குப்பண்ணா.

"சொன்னால் தானே தெரியும்!' என்றேன்.


"கடலுக்குள் வந்து சேரும் நதிகளும், ஓடைகளும் உப்புச் சத்தைப்
பாறைகளிலிருந்தும், பூமியின் மேல் பரப்பிலிருந்தும் சிறுகச்
சிறுக அடித்து வந்து கடலில் சேர்ப்பதால்தான், கடல் நீர் ஆவியாக
மாறி மீண்டும் மழையாகப் பொழிகிறது. உப்பு மட்டும் கடலிலேயே தங்கி
விடுகிறது!'


"கடலுக்கு நீல நிறம் கொடுப்பது வானம் தானே? வானம் நீலநிறமாக
இருப்பதால் தானே கடல் அதை பிரதிபலிக்கிறது...' என்றேன்.


"இல்லையில்லை... கடலுக்கு நீல நிறம் கொடுப்பது சூரியன்தான்.
உண்மையில் கடல் நீர் நிறமற்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் பல
நிற ஒளிக்கதிர்களுள், நீல நிறத்தை தவிர மற்ற அனைத்தையும் கடல்
கிரஹித்துக் கொள்கிறது. நீலநிறக் கதிர்கள்மட்டும் கட லால்
எதிரொளிக்கப்படுவ தால் அது நீலநிறமாகத் தோன்றுகிறது!'


"சந்திரனுக்கும், கடல் கொந் தளிப்புக்கும் கூட சம்பந்தம்
இருக்கிறதாமே?'


"ஆமாம்... முழு நிலவின் ஈர்ப்பு சக்தியால் கடல் நீர்
எழுச்சியடைந்து மேலெழும்புகிறது. அதே போல் உலகின் பூமிப்
பகுதியும் கொந்தளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பு சில சமயங்களில்
ஆறு அங்குலம் கூட எழுந்து மீண்டும் அடங்குகிறதாம். உலகப்பரப்பின்
70 சதவிகிதம் தண்ணீர் தான். ஆனால், இதில் ஒரு சதவிகிதம் தான்
குடிக்க லாயக்கானது.


"ஜெர்மனியில் உள்ள ஹெமல் ஸ்டார் பர் என்ற ஏரியின் மேல் பகுதி
நீர் இனிப்பாகவும், அடிப்பகுதி நீர் கசப்பாகவும் இருக்கும்.
அதனால், இதற்கு ஸீ ஆப் மேட்ரிமனி என்று பெயர். மேட்ரிமனி என்ற
ஆங்கில வார்த்தைக்கு, மண வாழ்க்கை என்று பொருள்...' என்றார்
குப்பண்ணா.

Read more...

ஸ்காண்டிநேவியன் கன்ட்ரீஸ்

நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய கண்டத்தில்
அடுத்தடுத்து உள்ள நாடுகள். இவற்றை, "ஸ்காண்டிநேவியன் கன்ட்ரீஸ்'
என்றும் அழைப்பர். இந்த நாடுகளில் குளிர்காலம் அதிகம்... குளிர்
என்றால் பனி பொழியும் குளிர். குளிர் நேரத்தில் வெளியே செல்ல
வேண்டுமென்றால், குறைந்த பட்சம் 12 கிலோ எடையுள்ள ஆடைகள் அணிந்து
தான் செல்ல முடியும். தமிழ்நாட்டை விட இரண்டரை மடங்கு
பரப்பளவுள்ள நார்வே நாட்டின் ஜனத் தொகை 4 கோடியே 50 லட்சம் தான்;
தமிழ்நாட்டின் ஜனத்தொகை 6 கோடியே 25 லட்சம். இந்த நாட்டின் தனி
நபர் சராசரி வருமானம் ஆண்டுக்கு 15 லட்சம்; நம்ம ஊர் சராசரி
வருமானம் தான் உங்களுக்குத் தெரியுமே!


இப்படி ஒரு செல்வம் கொழிக்கும் நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுவது
மிக, மிக சுலபமாக இருந்தது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்
இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் பிரச்னைகள் ஆரம்பித்த பிறகு,
சாரி, சாரியாக இந்நாட்டில் தஞ்சம் புக ஆரம்பித்தனர்.


அகதிகளாக வரும் ஒவ்வொரு தனி நபருக்கும் உதவித் தொகையாக மாதம் 40
ஆயிரமும், குடியிருக்க வீடும் கொடுத்து விடும் அந்நாட்டு அரசு.
ஒரே ஒரு கண்டிஷன்... அந்நாட்டு மொழியை கண் டிப்பாக படிக்க
வேண்டும். இதற்காக பள்ளிகளுக்குச் சென்று ஒப்புக்கு படித்து
வருகின்றனர் இலங்கை தமிழர்கள். அந்த நாட்டில் வேலை கிடைத்து
சென்றார் அந்துமணி வாசகி ஒருவர். அவ்வப்போது ஈ-மெயில் அனுப்பிக்
கொண்டிருப்பார். வேலைக்குச் சென்ற ஆறாவது மாதத்தில்
திடுதிப்பென்று வேலையை விட்டு விட்டு தமிழகம் வந்து சேர்ந்து
விட்டார். என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம்
கேட்டார். சந்தித்தோம்!

"சார்... மாதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் கொடுத்தனர்...
இருந்தும் நம்ம ராமராஜன் பாடியது போல, "நம்மூரப் போலாகுமா?'
என்னால் அங்கே குப்பை கொட்ட முடியலே! குளிர்... குளிர்...
குளிர்தான்! அங்கே குடும்ப வாழ்க்கை என்ற, "கான்செப்டே' இல்லை.
கிழவன், கிழவி என தனித் தனியே வாழ்கின்றனர்.


"திருமணம் செய்து கொள் ளாமல் சில காலம் சேர்ந்து வாழ்ந்து
குழந்தைப் பெற்றுக் கொள்கின்றனர்; பின் பிரிந்து சென்று
விடுகின்றனர். குழந்தை கள் வளர்ந்த பிறகு யாருடன் வாழ்கிறதோ,
அவரைப் பிரிந்து சென்று விடுகின்றன. ஓரினச் சேர்க்கை மிக அதிகம்;
இதை அரசாங்கமே அங்கீகரித்துள்ளது.


"அதே போல ஊசி மூலம் ஏற்றிக் கொள்ளும் போதை பழக்கமும் அதிகம்.
இதில் கொடுமை என்னவென்றால் பலரும் ஒரே ஊசியைப் பயன்படுத்தி
எய்ட்ஸ் பரவி விடக் கூடாது என்பதால், நகரின் முக்கியப்
பகுதிகளில் வேன்களில் வந்து அரசே சிரஞ்சுகளை சப்ளை செய்வது தான்.


"அதைப்போல வயதுக்கு வந்த 15, 16 வயதுடைய சிறுவர்களோ, சிறுமியோ
மாலை நேரத்தில் வெளியே சென்றால், "காண்டம் இல்லாமல் செயல்பட
வேண்டாம்...' என மகனிடமும், "காண்டம் இல்லாமல் அனுமதிக்காதே...'
என மகளிடமும் தாயோ, தந்தையோ கூறி அனுப்பும் அவலம் நடக்கிறது.
"இங்கு குழந்தை பிறப்பு மிகக் குறைவு. குழந்தை பெற்றுக்
கொண்டால், அதை வளர்ப்பதற்கு அரசே பணம் தருகிறது. பிறப்பு விகிதம்
குறைவு என்பதால், இங்கு முதி யோர் எண்ணிக்கை மிக அதிகம்.
முதியோருக்கு, "சோஷியல் செக்யூரிட்டி' என்ற பெயரில் பென்ஷன் போல
ஒரு பெரிய தொகையை அரசாங்கமே கொடுக்கிறது. இது போக 58 வயதை
தாண்டியவர்கள் தமக்கு உதவியாளர் ஒருவரை பணியமர்த்திக் கொள்ளலாம்.
அவரது சம்பளத்தையும் அரசே கொடுத்து விடும்.


"இப்படி கிடைக்கும் பணத்தை செலவு செய்யத் தெரியாமல் சேர்த்து
வைத்து, நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மிகக் கொடுமையான குளிர்
மாதங்களில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளுக்கு வந்து, அங்குள்ள
விலை மாதர்களிடம் கொட்டிக் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.


"அரசின் மொத்த வருமானத்தில் 65 சதவீதத்திற்கும் மேல் இதுபோல
முதியவர்களுக்கும், அகதிகளுக்கும் செலவிட நேர்வதால், அகதிகளை
வெளியேற்றி பெரும் பணத்தை மிச்சம் பிடிக்க நார்வே அரசு
முயல்கிறது. இதற்காகவே இலங்கை அரசையும், புலிகளையும் பேச வைத்து
சமரச முயற்சியில் ஈடுபட்டது நார்வே அரசு.


"நார்வேயில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்த சமரச உடன்பாட்டில்
சிறிதும் உடன்பாடில்லை. காரணம், சமரசம் ஏற்பட்டு விட்டால்,
மேற்கொண்டு அவர்கள் அகதிகள் ஸ்டேட்டஸில் தொடர்ந்து நார்வேயில்
வசிக்க முடியாது; அவர்களை அங்கிருந்து நார்வே அரசாங்கம்
வெளியேற்றி விடும்.


"இப்படிப்பட்ட இறுக்கமான சூழலில் சொந்த பந்தம், நண்பர்கள், நமது
உணவு, நமது சூழல் ஆகியவற்றை விட்டு வாழ எனக்குப்
பிடிக்கவில்லை... லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைத்தும்...இதோ
நான் இன்று ஒரு அன்எம்ப்ளாய்ட் போஸ்ட் கிராஜுவேட். என் மதம்
சார்ந்த கல்லூரி ஒன்றில் வேலை கிடைக்கும் நம்பிக்கையுள்ளது...'
என்று முடித்தார்.

Read more...

சொதப்பல் நாயகன் கருணாநிதி

>> Tuesday, February 24, 2009

""வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் ஒன்றுபடுவோம் என்று இணக்கம் தெரிவிக்கிற வரையில் மருத்துவமனையில் இருந்தே நான் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். உண்ணாவிரதத்துக்கான தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ""இவ்வளவு பெரிய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும், உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல்நிலையை மேலும் பாதிக்காதா? எதற்காக இப்படியொரு அறிவிப்பு? காக்கிச் சட்டைகளும், கறுப்புச் சட்டைகளும் விட்டுக்கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்கமாட்டார்களா?'' என்று தனக்குத் தானே கேள்விகளை எழுப்பி அதற்கு வழக்கம்போல பதிலும் எழுதியிருக்கிறார்.

அன்னிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டதன் நோக்கமும், அன்றைய சூழ்நிலையும் வேறு. பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது என்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பது என்பது தனது இயலாமையை வெளிப்படுத்தும் செயலாக அல்லவா கருதப்படும்; இது ஏன் முதல்வருக்குத் தெரியவில்லை?

மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் கருணாநிதி "விடியோ கான்பரன்சிங்' மூலம் பேசுவதன் மூலம் தான் உடல்நிலை தேறிவருவதாக வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, தனது அரசியல் பலவீனங்களையும், தனது பயத்தையும் தேவையில்லாமல் வெளிப்படுத்தி வருகிறாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

""என்றைக்கும் நான் எளிய மக்களின் அங்கமாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பேன். இந்த அரசை நீடிக்க விடுங்கள். மத்திய அரசை வாழ விடுங்கள். மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கிற தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுங்கள்'' என்றெல்லாம் முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பது அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், நிர்வாகத்தில் அவருக்கு இருக்கும் கட்டுப்பாட்டைக் கேள்விக்குறி ஆக்குகிறதே, அது ஏன் முதல்வர் கருணாநிதிக்குப் புரியவில்லை.

தமிழகத்தின் தலைசிறந்த நிர்வாகி, தேர்ந்த அரசியல் ராஜதந்திரி என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கும் முதல்வரது சமீபத்திய அறிக்கைகளும், செயல்பாடுகளும் அவர் தேவையில்லாமல் பாரங்களைத் தனது தோள்களில் சுமந்துகொண்டு வேதனைப்படுகிறாரோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த வயதில், மருத்துவமனையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை நடந்து ஒய்வெடுக்கும் நேரத்திலும், அவர் இப்படி தன்னை வருத்திக் கொள்ளவேண்டிய அவசியம்தான் என்ன?

உயர் நீதிமன்றப் பிரச்னை வந்தபோது, காவல்துறையினரால் உடனடியாக எந்தவித உத்தரவோ, ஆலோசனையோ பெற முடியாத நிலைமை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவரைத் தொந்தரவு செய்வதில் உயர் அதிகாரிகளுக்கும், சக அமைச்சர்களுக்கும் தயக்கம் இருப்பதில் என்ன தவறு? அமைச்சரவையிலுள்ள பல இளைய அமைச்சர்கள் முதல்வரிடம் பேசியே பல மாதங்களாகி விட்டதாகக் கூறுகிறார்கள்.

1984-ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் உடல்நலம் குன்றிய நிலையில் அப்போலோ மருத்துவமனையிலும், பிறகு அமெரிக்காவுக்கும் சிகிச்சைக்காகப் போனபோது, தனது இலாகாக்களை ஏனைய அமைச்சரவை சகாக்களிடம் பிரித்துத் தந்துவிட்டுத்தானே போனார்? இரண்டாம் இடத்தில் இருக்கும் நிதியமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான அன்பழகன், அரசியல் அனுபவம் இல்லாதவரா இல்லை நிர்வாகத் திறமையில்லாதவரா? அவரிடம் உள்துறையைத் தாற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு, தனது உடல்நிலையில் பூரண நலம் ஏற்படும்வரை முதல்வர் ஓய்வெடுக்கக் கூடாதா?

நிதியமைச்சர் அன்பழகனிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் தயக்கம் இருக்கலாம். ஆனால், அடுத்த வாரிசு என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறாரே, அவரிடமாவது தாற்காலிகப் பொறுப்பு அளிக்கப்படலாகாதா? உள்ளாட்சியில் நல்லாட்சி காண முடிந்த அவரால், உள்துறையை ஒருசில நாட்கள் பொறுப்பேற்று நடத்த முடியாதா?

""அரசியல் சட்ட விதிகளின்படி ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் செல்லக்கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை என்கிற ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. இது தமிழக மக்கள் மீது நடத்தப்படுகின்ற மோசடியாகும்'' என்று நவம்பர் 15, 1984-ல் கூடிய திமுக செயற்குழுவின் தீர்மானம், இன்றைய திமுக அரசுக்கே கூடப் பொருத்தமாகிவிடும் சூழ்நிலை அல்லவா ஏற்பட்டு விட்டது. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில், முதல்வர் தேவையில்லாமல் அத்தனை நிர்வாக பளுவையும் தொடர்ந்து சுமப்பதால், நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது என்பது மட்டுமல்ல, அவரது உடல்நிலையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழர்களைக் காப்பாற்ற வேண்டியபொறுப்பு இருப்பதால் பதவியைத் துறக்க விருப்பமில்லை என்கிறார் முதல்வர் கருணாநிதி. பதவியைத் துறக்கும்படி யாரும் சொல்லவில்லை. தாற்காலிகமாகப் பொறுப்புகளை யாரிடமாவது கொடுத்துவிட்டு, தயவுசெய்து ஓய்வெடுங்கள். பூரண குணமடைந்து, புதுத்தெம்புடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். வேண்டாம் இந்த உண்ணாவிரத விஷப் பரீட்சை.

Read more...

உலக இசையின் நாயகன் "அல்லா ரக்கா ரஹ்மான்"


சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் என்ற இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசியபடி அனைவரது புருவத்தையும் உயரச் செய்தார் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

நாட்டு மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரராகியுள்ள ரஹ்மான், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரானாலும், இன்று சாதனையாளராக மலர்ந்து, இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

சென்னையில் 1966-ம் ஆண்டு, ஜனவரி 6-ம் தேதி பிறந்த இவருக்கு, தந்தை ஆர்.கே. சேகர் சூட்டிய பெயர் திலீப்குமார்.

சேகர் மலையாளப் பட இசை அமைப்பாளர். 22 படங்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கும் இசை அமைத்தவர்.

9- வது வயதில் தனது தந்தையைப் பறிகொடுத்தார் திலீப்குமார். அன்று முதல் திரைப்படத் துறையில் இருந்து சற்று விலகியே இருந்தது அவரது குடும்பம்.

10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திய திலீப்குமார், சிலரது வழிகாட்டுதலின்பேரில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் சில ஆண்டுகள் படித்தார்.

தொடக்கத்தில் "கீ போர்டு' வாசிப்பாளராக இசை உலகுக்குத் தெரிந்த அவர், படிப்படியாக தன்னை பட்டைதீட்டிக் கொண்டார்.

அயராத உழைப்பாலும், இசை ஆர்வத்தாலும் பிரபல இசையமைப்பாளர்களிடம் நற்பெயரைப் பெற்ற திலீப்குமார், 1989-ம் ஆண்டு அல்லா ரக்கா ரஹ்மான் என்கிற ஏ.ஆர். ரஹ்மானாக மாறினார்.

சில விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற தகுதியோடு, இயக்குநர் மணிரத்னம் கண்ணில் பட்ட ரஹ்மான், 1992-ம் ஆண்டு "ரோஜா' படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் திரைப்படத் துறைக்கு தனது 26- வது வயதில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர் "சின்ன சின்ன ஆசை' பாடல் மூலம் 1993-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்று இந்திய அளவில் பிரபலமடைந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு குவிந்த விருதுகள் கணக்கிலடங்காதவை.

தொடர்ந்து அவர் இசையமைத்த அனைத்துப் படங்களும் வெற்றி பெறத் தொடங்கின. 1995-ல் "ரங்கீலா' படம் மூலம் "பாலிவுட்' என அழைக்கப்படும் ஹிந்தி திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். முன்னேற்றப்பாதையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் அவர், இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள், 11 முறை பிலிம்பேர் விருதுகள், 6 முறை மாநில விருதுகள், 2000-ம் ஆண்டு பத்மசிறீ விருது பெற்று தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

"பாம்பே ட்ரீம்ஸ்' மூலம் சர்வதேச இசை அரங்குக்கு அறிமுகமாகியிருந்த ரஹ்மானுக்கு 2009-ம் ஆண்டு வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டு என்றே கூறலாம்.

இந்தியப் பின்னணியில் அமைந்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் இவரது இசையைக் கேட்டு பாராட்டாதவர்களே கிடையாது.

இந்தப் படத்துக்காக கடந்த ஜனவரி 11-ம் தேதி அமெரிக்காவில் "கோல்டன் குளோப்' விருதை பெற்றதன் மூலமும், பிப்ரவரி 8-ம் தேதி இங்கிலாந்தில் பாஃப்டா விருது பெற்றதன் மூலமும் சர்வதேசப் பார்வையை தன்பக்கமும், இந்தியாவை நோக்கியும் திரும்பச் செய்தார்.

வசீகர இசையினால் கோடிக்கணக்கான ரசிகர்களை வருடிவிட்ட நவீன இசைக்குச் சொந்தக்காரர் இவர். இசை வெளியீட்டு நிறுவனங்களால் எப்போதும் "வெற்றியின் தொழிற்சாலை' என்றே வர்ணிக்கப்படுகிறார்.

தேர்ந்த உலகத் திரைப்பட அறிவு, இசைக் கருவிகளையும், இசை வல்லுநர்களையும் நன்கு கையாளத் தெரிந்த ஆளுமை இவையே இந்த சர்வதேச இசை நாயகனின் வெற்றியின் ரகசியம்.

தமிழ் இசை, இந்திய இசை என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொள்ளாமல், உலக அரங்கில் தனக்கென ஒரு கொடியை பறக்கவிட்டுள்ள ரஹ்மானின் வெற்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான விஷயமே!.

பல்வேறு இசைப் பாணிகளைக் கலந்து சோதனை செய்வது, எளிமையான மற்றும் இனிமையான மெட்டுகள், கச்சிதமான ஒலி நேர்த்திக்கான தேடல், புதிய இசையொலிக்கான ஆர்வம், புதிதுபுதிதாக குரல்களை அறிமுகம் செய்தல் என்பதில் எப்போதுமே தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் கவனமாக இருந்து வருகிறார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய சாஸ்திரிய இசை, ஹிந்துஸ்தானி, சூஃபி, ஜாஸ், இந்திய பாப் இசை என எதையுமே விட்டுவைக்காமல் தேவைக்கேற்ப தனது பாடல்களில் பயன்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே!.

மேலும், பாரம்பரிய இசைக் கருவிகளில் இருந்து உருவாகும் இசையை புதிய மின்னணுக் கருவியின் இசையோடு சேர்ப்பதில் இவரிடம் எப்போதுமே முக்கியத்துவம் உண்டு.

43 வயதாகும் ரஹ்மானுக்கு ஷாயிரா பானு என்ற மனைவியும், கதிஜா, ரஹிமா என்ற மகள்களும், அமன் என்ற மகனும் உள்ளனர்.

இந்திய இசைக் கலைஞர்கள் யாருமே இதுவரை தொட்டுப் பார்க்காத "ஆஸ்கர்' விருதை இரண்டு பிரிவுகளில் பெற்றதன் மூலம் தன்னை "முதல்வனாக' நிரூபித்துள்ள ரஹ்மானுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் வெற்றி.

Read more...

டைனமிக் கல்யாணம் - டைனமைட் கலாசாரம்!

>> Monday, January 26, 2009

மக்களே இது தான் தமிழர்களின் உண்மையான தமிழர் கலாச்சாரம் முறை... சந்தேகம் இருந்தா கீழே விடியோவை பாருங்க...

http://www.youtube.com/watch?v=umojiUlVAso

Read more...

அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்

சென்னை, குன்னூர் மற்றும் கசவுலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றியுள்ளது. தனியார் நிறுவனங்களை நம்ப முடியாது என்ற நிலையில் தற்போது இம்மையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது

.
தமிழகத்தின் சென்னை, குன்னூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கசவுலி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மூடுவது என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இம்முடிவினால் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் லாபமடையும் என்றும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன

.
ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி வரைமுறைகளுக்கு உள்ளிட்டு இம்மையங்களில் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்பு மணி உத்தரவிட்டார் ஆனால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை, குறைந்த செலவில் தனியார் நிறுவனங்களினால் வழங்கமுடியாது என்பதை அறிந்து, தற்போது மீண்டும் இந்த 3 நிலையங்களிலும் உற்பத்தியை தொடங்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இங்கே தான் அன்புமணியின் ஊழல் ஆரம்பம் ஆகிறது.


மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார். ஆணை பிறப்பித்த கையோடு இனி இந்த மருந்துகளை தனியார் நிறுவனக்களிடம் அரசு கொல்முதல் செய்யும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த தனியார் நிறுவனம் எது தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா



இது யாருடையது தெரியுமா?

பி. சுந்தரபரிபூரணம்
இவர் யார் தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.
திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.



பொது துறை நிறுவங்கள் மூட யார் காரணம் ?

முதலில் இந்த பாஸ்டர் ஆய்வகத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த பாஸ்டர் ஆய்வகம் 1907 ஏப்ரல் 6 அன்று பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் ஸதர்ன் இந்தியா என துவங்கப்பட்டது. பின்னர் 1977 பிப்ரவரி 10ல் பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் இந்தியா (தன்னாட்சி) ஆனது. அப்போது இதை எதிர்த்து பல போராட்டங்கள் அப்பகுதி மக்களால் நடத்தப்பட்டது. கடைசியில் அரசு வென்றது. 1907ல் வெறி நாய்க்கடி மருந்து மூளைத் திசு மூலம் தயாரிக்கப்பட்டது. 1957ல் ஆசிய ப்ளூ வைரஸ் தனித்து எடுக்கப்பட்டது. 1970ல் இந்தியாவில் முதல் முறையாக வெறி நாய்க்கடிக்கானா மருந்து மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகப் படுத்தப்பட்டது. 1970 இந்தியாவில் முதல் முறையாக போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1982ல் தேசிய தடுப்பு மருந்து திட்டதிற்க்காக முத்தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1988ல் வெறி நாய்க்கடிக்கான மருந்து திசு வளர்ப்பு மூலம் தயாரிக்கப்பட்டது.

இத்தனை பெருமையும் பெறுவதற்கான முயற்சிகள் அத்தனையும் இந்திய தொழில் நுட்பத்தினால் மட்டுமே அடைந்தது. இதில் வேறு எந்த நாடும் நமக்கு வழங்கவில்லை.ஆனால், இப்போது பொறுப்பில் வகிக்கும் நிர்வாக இயக்குநர் இலங்கேஸ்வரன் மிக திறமையாக இயங்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு துறையையும் படிப் படியாக முட நிரந்தரமாக மூடி விட்டார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உயிர் வாழும் வெள்ளை எலி கூடத்தை சென்னைக்கு மாற்றினார், இதன் மூலம் 544 வெள்ளை எலிகள் இறந்துவிட்டது. உடனே இந்த ஆய்வு கூடத்தை மூடி விடும் படி உத்தரவு பிறப்பித்தார். சர்வதேச சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற போலியோ சொட்டு மருந்துகளை சோதனை செய்யும் கூடத்தை எந்த காரணமும் இன்றி மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளான டிடிபி எனப்படும் டிப்தீரியா,டெட்டனஸ், பெர்ட்டிசிஸ் ஆகியவை ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான், ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் முத்தடுப்பு மருந்துகளாகும். நாட்டின் தேவையில் 60 % இந்த ஆய்வகம் தயாரிக்கிறது. இப்போது இந்த ஆய்வகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற முக்கியமான ஆலோசனை கூட்டம் (05.02.200 புது டில்லியில் சுகாதார செயலாளர் முன்னிலையில் கூடிய பொதுகூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்னையில் இலங்கேஸ்வரன் ஓய்வு எடுத்து கொண்டார். அதனால் அக்கூட்டத்தில் இதை வெறும் ஆய்வு கூடமாக வைத்து கொண்டு உற்பத்ியை நிறுத்துவது என முடிவு செயப்பட்டது.

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி இ. சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.
தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியா பயனீர் நாளிதழ் வெளியிட்டது.

உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன.


சரி, இவர்கள் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு எங்கு இருந்து பணம் வந்தது?

சென்னையில் உள்ள ஒரு வங்கியில் தான் கடன் பெற்றுருக்கிறார்கள். இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது.

தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.கடந்த 3 காலாண்டுகளாக டிபிடி மற்றும் டிடி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லாபமின்றி தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் தருவதாக உறுதியளித்திருந்த தனியார் நிறுவனங்கள், பின்னர் தங்களது வாக்குறுதியை மீறி விலையை 40 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்தனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பிய பொது அன்பு மணி ராமதாஸ் இந்தியாவில் தடுப்பு ஊசி மருந்து தட்டுப்பாடு உள்ளது என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்.

இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.

நன்றி : http://lightink.wordpress.com/2009/01/24/அன்புமணியின்-தடுப்பூசி-2/

Read more...

SRILANKA FULL STORY UPTODATE

>> Monday, January 19, 2009

சந்திரமௌளீஸ்வரன் இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார். கிறிஸ்துவுக்கு முன் முதல் இன்று வரை இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார்...

கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்

கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்

1658- டச்சு ஆதிக்கம் இலங்கையில் தொடக்கம். கண்டி நீங்கலாக எங்கும் அவர்கள் ஆதிக்கம் பரவியது.

1796 – பிரிட்டிஷாரின் பார்வை இலங்கை மேல். அவர்கள் இலங்கையினை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள்

1815- கண்டி பிரிட்டிஷார் வசமாகியது. இலங்கைக்கு டீ, காபி, தேங்காய்த் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்த தென் இந்தியாவிலிருந்து தமிழர்களை கொண்டு செல்லுதல் தொடங்கியது.

1833- இலங்கை மொத்த்த் தீவும் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில்

1931- சிங்களரின் இடைக்கால காபினட்.

1948- பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை

1949- இந்தியாவிலிருந்து தோட்ட்த் தொழிலாளர்களாகப் போன தமிழர்கள் பலருக்கு குடியுரிமை பறிக்கப்பட்ட்து.

1956-இலங்கை ஒரு சிங்கள தேசம் என்று ஓர் அலை பரவியது. பாரதியார் கூட சிங்களத் தீவினுக்கோர் பாலமைப்போம் என ரொம்ப நாளைக்கு முன்பே சிங்களத் தீவு என்ற பிரயோகத்தினைக் கையாண்டார் என்பதனைக் கவனிக்க. சாலமன் பண்டாரநாயகே ஆதிக்கம். சிங்களம் ஆட்சி மொழியாக அறிவிப்பு. தமிழர்கள் இதனை எதிர்த்தனர். சுமார் 100 தமிழர்கள் அப்போது நடந்த வன்முறையில் உயிரிழந்தனர். இலங்கையில் தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டு உயிரிழப்பது அன்று தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது

1958- தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் 200 தமிழர்கள் பலி

1959- சாலமன் பண்டார நாயகே கொலை. அவரின் விதவை சிரிமாவோ பண்டாரநாயகே ஆட்சிப் பொறுப்பு ஏற்பு

1965- சிரிமாவோ தோல்வி . எதிர்கட்சியான ஒருங்கிணைந்த தேசியக் கட்சி ஆட்சி. தமிழர்கள் இழந்த்தைப் பெற சில முயற்சிகள்

1970- சிரிமாவோ மீண்டும் ஆட்சியில். தமிழர்களுக்கு எதிரான போக்கு மீண்டும்

1971- இலங்கையில் மார்க்சீய புரட்சி உதயம். மாணவர் புரட்சி உதயம்

1972- சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம். புத்த மதம் மிகுந்த செல்வாக்கு பெற தொடங்குகிறது, இதனால் தமிழர்கள் அதிருப்தி

1976- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உதயம்

1977 தேர்தலில் Tamil United Liberation Front (TULF) கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் எல்லா இடங்களிலும் வெற்றி- தமிழர்களுக்கு எதிரான வன்முறை பலர் பலி

1981- புகழ்வாய்ந்த யாழ்பாணம் நூலகம் எரிப்பு. பதட்டம் அதிகமாகிறது

1983- எல்டிடிஈ தாக்குதல் 13 சிங்களர் பலி. இதுவே விடுதலைப் புலிகள் தங்களின் முதல் போர் எனக் கூறுவர்

1985- விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் நடந்த முதல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிகிறது

1987- விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை அரசு முயற்சி. யாழ்ப்பாணத்தில் புலிகள். தமிழர் பகுதிகளுக்கு தனி கௌன்சில்கள் அமைக்க இலங்கை அரசு தீர்மானம். இந்திய அமைதிப் படையினை வரவழைக்க இலங்கை அரசு ஒப்பந்தம்

1988- ஜேவிபி என்ற இயக்கமும் இன்னும் சிலரும் இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை எதிர்த்தனர்

1990- இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து விலகியது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கு இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர்

1991- இராஜீவ் காந்தி படுகொலை. விடுதலைப் புலிகளே காரணம் என முதல் கட்ட விசாரணையிலேயே தெளிவு

1993- பிரேமதாசா கொலை

1994- குமாரதுங்க பதவியேற்பு. அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கம்

1995- இலங்கை அரசின் கடற்படை கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர். மீண்டும் போர் தொடக்கம்

1995-2001 வரை இரண்டு தரப்புக்கும் ஆயுதப் போர். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகணங்கள் விடுதலைப் புலிகளின் கேந்திரங்கள் ஆயின

2002 பிப்ரவரியில் நார்வே தூதுக் குழுவின் ஒத்துழைப்பில் இரண்டு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தம். தனி ஈழக் கோரிக்கையை புலிகள் கைவிட்டனர். யாழ்ப்பாணம் சாலை திறக்கப்பட்ட்து. விடுதலைப் புலிகள் மீதான தடையும் கைவிடப்பட்ட்து

2003- விடுதலை புலிகள் போர் நிறுத்த்த்தைக் கைவிட்டனர்

2003 மே பெரும் வெள்ளம்

2004- கருணா விடுதலைப் புலிகள் இயக்கதிலிருந்து விலகி தனி அமைப்பு தோற்றுவிப்பு. தலைமறைவு

2004 ஜூலை புலிகள் கொழும்பு நகரை தற்கொலைப் படை கொண்டு தாக்குதல்

2004- டிசம்பர்- சுனாமி- இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் சேதம்

2002005 ஆக்ஸ்டு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் கொலை- நாடெங்கும் பரபரப்பு

2005 நவம்பர் – பிரதமரகாக இருந்த மஹிந்த ராஜ பக்‌ஷே அதிபர் தேர்தலில் வெற்றி

2006 ல் புலிகள் தொடர் தாக்குதல். மே மாதம் கடற்படைக் கப்பலைத் தாக்கினர்.

2006 ஜெனிவாவில் நடை பெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி

2007 பல தமிழர்கள் கொழும்பு நகரை விட்டு வெளியேற்றியது அரசு. நீதி ம்னறத் தலையீட்டால் நிலை மாற்றம்

2008 மார்ச். சர்வதேச அமைப்புகளை வந்து பார்வையிட இலங்கை அரசு வேண்டுகோள். அதனை ஏற்று குழு வருகை. குழு உறுப்பினார் நெகில் ராட்லி தன்னால் வேலை செய்ய இயலவில்லை. அரசின் குறுக்கீடு உள்ளது எனக் கூறி வெளியேற்றம்

2008 ஜூலையிலிருந்து இன்று வரை இலங்கை அரசு தாக்குதல்களை தீவிரப் படுத்தியுள்ளது

ஈழத்தின் உண்மை வரலாறு
இப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.

இலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.

சுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.

தமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.

செல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.

அவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.

1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் விடுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.

ஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படையும் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.

இவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்

ஈழத்தமிழர் வரலாறு

http://thamilar.blogspot.com/2008/11/blog-post_15.html

http://thamilar.blogspot.com/2008/11/blog-post_9302.html



இலங்கையின் முழுவரலாறு படிக்க குமுதம் ரிப்போர்ட்டரில் வரும்

யுத்தம் சரண்ம் கச்சாமி படிக்கவும்

Read more...

ஆழ்ந்து தியானியுங்கள். உங்களின் வாழ்வே உயர்வடையும்

>> Sunday, January 11, 2009

ரொம்ப பசிக்குதே, இங்கே சாப்பிடறதுக்கு ஒண்ணுமே இல்லையா?' என்று சுற்றும் முற்றும் பார்த்த வியாபாரியின் கண்ணில் தென்பட்டது கொழுத்து பழுத்த மாம்பழங்கள் நிறைந்த மாந்தோப்பு. நாவில் எச்சில் ஊற ஒரு கல்லை எடுத்து, ஒரு மாம்பழத்தைக் குறிவைத்து எறிந்தார்.

ஒரு மாம்பழத்திற்குப் பதிலாக மூன்று மாம்பழங்களாக அறுத்துத் தள்ளிய கல், வேகமாக வேறெங்கோ சென்றது.

மூன்று மாம்பழங்களையும் எடுத்து வேகவேகமாகச் சாப்பிட ஆரம்பித்தார் வியாபாரி.

ஆனால், `விதி வலியது'. அவரை சில நொடிகளுக்குமேல் அதை சுவைக்க விடவில்லை. காரணம், மாம்பழத்திற்காக அவர் எறிந்த கல் அந்தத் தோப்பில் வேறொரு மூலையில் அமர்ந்து தன் மந்திரிகளோடும், தன் மனைவிகளோடும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த அரசர் தலையில் விழுந்தது.

கல் விழுந்த வேகத்தில் அரசரின் தலைப்பாகை பறந்தது.

``யாரது? அரசரின் மீதே கல்லெறிந்தது?'' என்று மொத்தக் கூட்டமும், வெகுண்டெழுந்தது. காவலாளிகள் சில நிமிடங்களுக்குள் அந்த வியாபாரியைக் கையோடு பிடித்து, இழுத்து வந்தார்கள். அரசரே விசாரணையைத் துவக்கினார்.

``ஏனப்பா என் மீது கல் எறிந்தாய்? என் மீது உனக்கென்ன கோபம்?''

``அய்யோ! அரசே, உங்கள் மீது எனக்கென்ன கோபம். நான் உங்கள் மீது கல்லெறியவில்லை'' என்று பசியின் காரணமாக, தான் கல்லெறிந்த நோக்கத்தைச் சொன்னார் வியாபாரி.

வியாபாரியின் விளக்கத்தையெல்லாம் கேட்குமளவிற்கு பொறுமையில்லாத மந்திரி ஒருவர், ``அரசே, இவன் சொல்வது கதைபோன்று தெரிகிறது. இவனுக்கு தக்க தண்டனை தரவேண்டும்'' என்றார்.

அரசன் தன் பிரதான மந்திரியை அழைத்து, ``மந்திரியாரே, இது என்னுடைய தீர்ப்பு. இதைச் சரியாக நிறைவேற்றுவது உம் பொறுப்பு. இன்றிலிருந்து இந்த வியாபாரியின் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் தேவையான எல்லாத் தேவைகளை பார்த்துக் கொள்வதும், அவரை திருப்தியோடு வைத்துக்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு'' என்றார்.

மன்னனின் தீர்ப்பு அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மன்னரின் மனைவி முதல், மந்திரி, சேவகன் என அனைவருமே மன்னரின் சிறப்பான தீர்ப்புக்கு தாங்களும் ஏதோ ஒருவிதத்தில் காரணம் என்று தங்களுக்குள் ஒரு மாயையும் வளர்த்துக் கொண்டனர்.

ஆனால் வியாபாரியோ, ``அரசே! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டிய எனக்கு, ஆயுள் காப்பீடு அளித்து வரம் தந்திருக்கிறீர்களே! அப்படி என்ன அரும்பாக்கியம் செய்துவிட்டேன்!?'' என்று நன்றியுணர்வுடன் கேட்டார்.

அதற்கு அரசர் கூறிய இந்த பதிலே தியானம்தான்...

``அப்பனே நீ அடித்த மரத்திற்கு புலனறிவு இருக்கிறதா?

புலனறிவு இல்லாத அந்த மரமே, அதன்மீது நீ எறிந்த கல்லுக்கு மூன்று பழங்களைத் தந்தது. உன்னுடைய பத்து நாள் பசியைப் போக்கியிருக்கிறது. தன்மேல் கல் பட்டதற்கு மரம் இவ்வளவு பொழிகிறதென்றால், புலனறிவோடு இயங்கும் நான் எவ்வளவு பொழிய வேண்டும்? அதைத்தான் செய்தேன். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?'' என்றார் மிகவும் இனிமையாக.

சீண்டுபவரைத் தீண்டுவதால் சூழ்நிலையைச் சமாளிக்கலாம். ஆனால் வளர முடியாது. இன்றிலிருந்து சீண்டப்படும் நிமிடங்களை தியான காலங் களாக்குங்கள்.

அரசன் சொன்ன பதிலை ஆழ்ந்து தியானியுங்கள். உங்களின் வாழ்வே உயர்வடையும்.

(ஆனந்தம் பெருகும்)

Read more...

சத்ய(ம்)மான உண்மைகள்

>> Saturday, January 10, 2009


Read more...

நான் தமிழன் (பாகம்-2)

>> Friday, January 2, 2009

எந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி' என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.

இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.

கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது' என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை' என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.

நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது' என்ற சடங்கு மிக முக்கியமானது.

கோயில்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.

அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்' என்றே அழைக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது' என்று எதிர்த்ததோடு கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.

1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.

நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.

நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி' உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.

``நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே'' என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்
அரண்மனைசுப்பு

`தினத்தந்தி'யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு' என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்' என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.

Read more...

`நான் தமிழன்'

>> Sunday, December 28, 2008


`நான் தமிழன்' சாதிகளைப் பற்றியது அல்ல! நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) ``நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது'' என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..

(அது அடுத்த வாரம்)
படங்கள் : ஆர்.சண்முகம்,
அரண்மனை சுப்பு

`உழைத்தால் உயரலாம்' என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்' என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான' மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்' திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்' என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

(பட்டியல் தொடரும்)

Read more...

சின்னகுத்தூசி - பெரிய கோணூசி

>> Monday, December 22, 2008

முரசொலி கட்டுரை மற்றும் தினமணி கட்டுரை இந்த பதிவில்...


முரசொலி கட்டுரை
‘கல்கி’ போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு வாரம் தவறாது முதல்வர் கலைஞரை கேலி செய்து, கண்டித்து, தாக்கி எழுதாவிட்டால் பொழுதுபோகாது. ஜென்மம் சாபல்யம் அடையாது.

கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று அலுக்காமல் சலிக்காமல்
கை சளைக்காமல் எழுதுவார்கள்.

சரி; அப்படியானால் வேறு யார் ஆட்சி வந்தால்- யார் முதல்வரானால் எல்லாம் சரியாகிவிடும்? நல்லாட்சி மலர்ந்து விடும் என்று கேள்வியெழுப்பினால்

- ஜி.கே. வாசன்

- ப. சிதம்பரம்

- ஆர். நல்லக்கண்ணு

- என். வரதராஜன்

- தொல். திருமாவளவன்

- டாக்டர் ராமதாஸ்

- வைகோ

ஆகியோரது கட்சிகள் - ஆட்சிக்கு வந்தால் இவர்கள் முதல்வர் ஆனால் நல்லாட்சி மலரும் - எல்லாம் சரியாகிவிடும் - என்று ஒருபோதும் - மறந்தும்கூட எழுதிவிடமாட்டார்கள்.

ஜெயலலிதாதான் அவர்களது இஷ்ட தெய்வம்; ஜெயலலிதா முதல்வராகிவிட்டால் - 1991 - 1996 போல 2001 - 2006 போல ஒரு ‘நல்லாட்சி’(!) மலர்ந்து விடும் - எல்லாமே சரியாகிவிடும் என்றுதான் நினைப்பார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிவிட வேண்டும் என்பதற்காகவே - கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று குறை கூறியபடியே இருப்பார்கள்; குற்றங் கண்டுபிடித்தபடியே இருப்பார்கள்!

இதோ இந்த வாரம் ஞாயிறன்று கடைகளுக்கு வந்த ‘கல்கி’யிலிருந்து ஒரு கேள்வி - பதில்:

கேள்வி :- ‘மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது. பொட்டு வைக்கக்கூடாது’ என கருணாநிதி கூறியிருப்பது?

இது கேள்வி.

இந்தக் கேள்விக்கு ‘கல்கி’ அளித்துள்ள பதிலைப் பாருங்கள்:-

"நமது அரசியல் சாசனத்தை மதிப்பவராகில் அவ்வாறு கூறும் உரிமையே அவருக்குக் கிடையாது!

இது ஒருபுறமிருக்க - புறச்சின்னங்கள் - அடையாளங்கள் எல்லா ஜாதியினருக்கும் உண்டு. பிராமணர்களை மட்டுமே குறி வைப்பது கருணாநிதி போன்றோரின் பொழுதுபோக்கு - அரசியல் ஆயுதம்.

புறச்சின்னங்கள் களையப்படுவதாலேயே சமத்துவ உணர்வு ஏற்படும் என்கிற அனுமானமும் அபத்தமானது" - என்று கல்கி - வியாக்யானம் செய்துள்ளது.

‘கல்கி’யின் இந்த வெண்டைக்காயால் விளக்கெண்ணையில் தோய்த்து எழுதப்பட்ட இந்த வியாக்யானம் எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்க - வேறு எங்கும் ஆதாரங்களைத் தேடி அலையவேண்டிய அவசியமில்லை.

கல்கியின் அபிமான மதகுரு சுயசாதித் தலைவர் - ‘கல்கி’ இன்னமும் வாரா வாரம் தவறாது ‘அருள்வாக்கு’ என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறதே; ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் உபதேசங்களை - அந்த சங்கராச்சாரியாரே - அவாள் பாஷையில் சொல்வதானால் ‘மகாப் பெரியவாள்’ - அவரது கட்டுரைகளின் தொகுப்பான - ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகத்திலேயே -

பிராமண ஜாதி பிராமண ஜாதியாகவே நீடித்து - மற்ற ஜாதியினருக்கெல்லாம் வழிகாட்டும் ஜாதியாக நீடிக்க - பிராமண ஜாதியின் ஆதிக்கத்தில் மற்ற ஜாதியினர் எல்லாம் அடங்கி - ஒடுங்கி அடிமைகளாக தொடர்ந்து அதல பாதாளத்திலே அமுந்திக்கிடக்க பிராமணன் என்ன செய்யவேண்டும் - என்ன செய்யத் தவறிவிட்டான் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.

மகாப் பெரியவாள் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பாதுகாவலர்; பிராமணன் பிராமணனாகவே - உயர் சாதிக்காரனாகவே நீடிக்கவேண்டும்.

100க்கு 97 சதவீதத்தினரான பார்ப்பனரல்லாத சமுதாயம் அப்படியே சூத்திரர்களாகவே நீடிக்கவேண்டும்.

பிராமண ஜாதியின் மேலாதிக்கம் பட்டொளி வீசிப் பறந்த காலமே ‘இந்து’க்களின் பொற்காலம்! என்பதை நிலைநாட்ட தமது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்!

1. அவர் - உச்சிக்குடுமியும் பூணூலும் - பஞ்சக்கச்சமும் வேதபாராயணமும் நெற்றிச் சின்னங்களும் பிராமணனிடம் இருந்தபோது பிராமண ஆதிக்கம் மேலோங்கி நின்றது.

2. இப்போது பிராமணன் அவைகளை கைவிட்டு விட்டதால்தான், மற்ற ஜாதியினர் அவனை முன்பு போல மதிப்பதில்லை

- என்று ஆதங்கத்தோடும் - அழுத்தம் திருத்தமாகவும் ஓங்கியடித்துக் கூறியிருக்கிறார். அவரது - (தெய்வத்தின்) குரல் - முதல் பாகத்தில் 186ம் பக்கத்தில் அவர் அளித்துள்ள அருள்வாக்கை அப்படியே வரி பிறழாமல் கீழே தருகிறோம்.

‘ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாகியிருப்பதற்கு யார் காரணம்? ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?’ என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ணதர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராம்மணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச ஷேமமும், லோக ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.

பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மானுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமத்தை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான்.

கிராப் வைத்துக் கொண்டான், ஃபுல்ஸூட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப் படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில் போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான்.

வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன் வரை ரட்சித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும் புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்துவிட்டான்.

சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோகnக்ஷமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில் இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும், மரியாதையும் காட்டி வந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன் மாதிரியாக (நஒயஅயீடந, பரனைந. அடினநட) வைத்துக் கொண்டார்கள்.

இப்போது தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தைவிட்டு, பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால் தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டதுபோல் ‘தாட் பூட்’ என்று பண்ணியதை மற்ற ஜாதியினர் பார்த்தார்கள். இதுவரை நல்லதற்கெல்லாம் இவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தையும் விட்டு, நகரவாசம் (வடிறn டகைந), இங்கிலீஷ் படிப்பு, வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.

பிராம்மணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம் கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக nக்ஷமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேத்தாலேயே அது பிரகாசமாக சாணை தீட்டிய கத்தி மாதிரி கூர்மையாக இருந்தது. இப்போது இவனுக்கு சமூக nக்ஷம நோக்கம் போய், தன்னலமான லௌகிக ஆசைகள் எல்லாம் வந்தபின் அந்த புத்திப் பிரகாசம் மழுங்க வேண்டியதுதான். இவனுக்கென்று ஏற்பட்ட கடமையைச் செய்யவே முன்பு இவனுக்கு புத்தி வன்மையும் பகவத் பிரசாதமாகக் கிடைத்திருந்தது. கடமையை விட்டபின், அந்த புத்திக்கூர்மை மழுங்க வேண்டியதுதான்.

ஆனாலும் - சைக்கிளில் காலால் பெடல் பண்ணுவதை நிறுத்திய பிற்பாடுகூட, ஏற்கெனவே உந்தின வேகத்தின் சேஷத்தால், கொஞ்சம் தூரம் அது பெடல் பண்ணாமலே ஓடுகிறது அல்லவா? அந்த மாதிரி, பிராம்மணன் ஆத்மிக வித்தைகளைவிட்டு லௌகிக வித்தைகளில் போய் விழுந்த பின்னும், ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக இவனுடைய பூர்விகர்கள் பெடல் பண்ணியிருந்த பலம் இவனுக்குக் கொஞ்சம் மிஞ்சியிருந்தது. இவனாகப் பெடல் பண்ணா விட்டாலும் அவர்கள் சேமித்து வைத்த புத்திப் பிரகாசம் இவனுக்குள் இன்னமும் பாரம்பரியம்மாகக் கொஞ்சம் வந்தது. இந்த மூளைப் பலத்தினால்தான் இங்கிலீஸ்காரனின் படிப்பு முறையில் ஆச்சரியப்படும்படியாகத் தேர்ச்சி பெற்றான். அவர்களுடைய உத்தியோகம், சட்டம், தொழில் முறைகள் ஆகியவற்றை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு இவற்றில் அவர்களுக்கே தெரியாத தந்திரங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற அளவுக்குச் சதுரனாகிவிட்டான் - என்பது மகாப் பெரியவாளின் அருள்வாக்கு "ஹிந்து சமூகம் பாழானதிற்கு பிராம்மணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்" - என்கிறார் அவர். ஆனால் - அவரது சீடகோடியான ‘கல்கி’யோ - பிராமணன் அதைக் கைவிடவேண்டும், இதைக் கைவிடவேண்டும் என்று கருணாநிதி சொல்வது அபத்தம் என்று புலம்புகிறது!

பிராமணன் பிராமணனாக இருக்கத் தகுதியான உச்சிக்குடுமி - பூணூல் - பஞ்சக் கச்சம் ஆகியவற்றை அவன் கைவிட்டதுதான் பிராமண ஜாதி மதிப்பிழந்து போனதற்குக் காரணம் என்று மகாப் பெரியவாள் சொன்னால் அது தெய்வத்தின் குரல்.

சமத்துவம் ஏற்பட - பிராமணர்கள் பூணூல் அணியக்கூடாது; நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று தலைவர் கலைஞர் ஏன் கருதுகிறார்?

மகாப் பெரியவாளின் தெய்வத்தின் குரலை ஊன்றிப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டதால்தான் கூறுகிறார்.

ஜாதிகள் நீடிக்கவேண்டும்; பிராமணன் உயர்ஜாதிக்காரனாகவே ஆதிக்கம் செலுத்தவேண்டும். சமத்துவ சமூகம் - ஜாதி பேதமற்ற சமுதாயம் அமையாமல் தடுக்க அவன் பூணூல் அணியவேண்டும் - உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டும் - நெற்றிப் பொட்டு இட்டுக் கொள்ளவேண்டும் - என்று - சமத்துவத்துக்கு எதிராக மகாப் பெரியவாள் குரல் கொடுத்தால் அது அருள்வாக்கு தெய்வத்தின் குரல்.

பிராமண ஜாதி என்று ஒன்று இருக்கும் வரையில் - அவன் பூணூல் அணிவதை நிறுத்தாத வரையில் - பொட்டு வைத்துக் கொள்வதைக் கைவிடாத வரையில் சமத்துவம் ஏற்பட இவையெல்லாம் தடையாகவே இருக்கும் என்று கலைஞர் சொன்னால் அது அபத்தம்!

அருள்வாக்கு என்பதற்கும் அபத்தம் என்பதற்கும் அவாளின் அகராதியில் அர்த்தமே வேறுதான்!

- சின்னகுத்தூசி
( நன்றி: முரசொலி )





--------------------------------------------------------------------------------


தினமணி கட்டுரை

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.

இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!


( நன்றி: தினமணி )

இந்த தினமணி கட்டுரை முரசொலி கண்ணில் படவில்லை என்று நினைக்கிறேன். கேள்வி பதிலுக்கே சின்னகுத்தூசி என்றால், கட்டுரைக்கு பெரிய கோணூசி எழுதியிருப்பார்

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP