பாண்டி!!!!

>> Saturday, September 27, 2008


நம் தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை.

தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் கொஞ்சம் காமெடி. ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் லேசாக உதட்டை அழுத்தி, `புட்டு வேணுமா...' என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.

திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தமிழ் சினிமாவினர் தங்களது லொள்ளுத்தனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

மலையாளிகள் அப்படி அல்ல. தமிழர்கள் பற்றிய காட்சியமைப்புகளும் நம்மைப் போல், முண்டு, ஜாக்கெட் என ஆடையோடு முடிந்துவிடும் ஒரு ரகம் அல்ல. சூலம் மாதிரி பலமுனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் விசேஷப் பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முந்நூறு. குளிக்காதவன்... அசிங்கம் பிடிச்சவன்... இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, `அக்கரை அக்கரை அக்கரை' என்றொரு படம்
ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ``எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''

எல்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த நெஞ்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.

மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீப்பாய் போலிருக்கும் நடிகர் ராஜூதான் போலீஸ் அதிகாரி. வழக்கம் போல கீழ்மட்ட அடியாளாக ஒரு தமிழ்வில்லன். ``நீ பொன்னுசாமி இல்லையா?'' ராஜூவைப் பார்த்து நம் தமிழ் ஆளு கேட்கிறார். தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ``என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''

தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுச்சாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை... அப்படியொரு ஆதிக்க மனோபாவம்.

திரைப்படங்களில் அரசியல் பேசுவது மலையாளிகளுக்கு கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம். கூத்தாடி விடுவார்கள்!

மோகன்லாலின் `உடையோன்' படத்தின் வில்லன் சலீம்கௌஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான்: ``தமிழ்நாட்டுல மழை பெஞ்சாதான் உங்க கிணத்துல தண்ணி'' மோகன்லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார்: ``அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார்: ``தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ``எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''

இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு ரொம்பவே உண்டு. பல மலையாளத் திரைப்படங்களில் மெயின் திரைக்கதையே இந்தப் பயங்கர கற்பனைதான்.

இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணனாக நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான தயாரிப்புகளை ஊரில் நுழையாமல் தடுத்து நிறுத்துவார். அவரது சுதேசிக் கனவைத் தகர்க்கும் விதமாய் அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனைத் துரத்தியடித்து சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.

`லாலேட்டன்' எனச் செல்லமாய் அழைக்கப்படும் மோகன்லாலின் பெரும்பாலான படங்களில் தமிழர்களுக்கு எதிராய் இப்படி வாலாட்டும் காட்சிகள் மிக அதிகம்.

``இதெற்கெல்லாம் நேர்மாறாக அங்கே எல்லா காலேஜ் ஃபங்கஷன்லயும் நம்ம ஊரு சினிமாப் பாடல்கள் வெகு பிரபலம். எழுந்து நின்று ஆட்டம் போடுவாங்க. கூடவே தமிழ் சினிமாவினால மலையாளிகளுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபமும் கிடைக்குது.

சொற்ப சம்பளம் வாங்குற மலையாள நடிகர், நடிகைககூட தமிழ் சினிமாவுக்கு வந்தா லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க. நயன்தாரா முதல் நரேன் வரை பல உதாரணம்.... எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடறது தமிழன்தான்.

தமிழ்நாட்டுல இருக்கற நிறைய டீக்கடைகளை நடத்தறது மலையாளிகள். அவ்வளவு ஏன், அரிசி, பருப்பு வகையறாக்கள்கூட இங்கே இருந்துதான் கேரளாவுக்குப் போகுது. அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களை தங்களோட சினிமாக்களில் கேவலமா காட்டறாங்கன்னா மனதளவுல அவங்க குறைபாடா இருக்காங்கன்னு அர்த்தம்'' என்கிறார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்..

தொகுப்பு: மா.மணிவண்ணன்
(தட்ஸ் தமிழ்)

Read more...

கந்தமால் "பொய்'யில் மறைக்கப்பட்ட "உண்மை'கள் !

>> Thursday, September 25, 2008

" கொலையுண்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா – ஒரு மஹான்" என்று துக்ளகில் மூன்று வாரமாக வந்த இந்த கட்டுரையை யாரும் கண்டுக்கவில்லை.
( நன்றி: துக்ளக் )

கொலையுண்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா – ஒரு மஹான்
"ஒரிஸ்ஸா மாநிலத்தில் கந்தமால் என்கிற மாவட்டத்தில் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி என்கிற ஒரு ஸந்நியாசி ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தினால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர்'. இந்தச் செய்தி பெருமளவில் நாடு முழுவதும் – உலக அளவில் கூட – பிரசுரிக்கப்பட்டு, பிரச்சாரப்படுத்தப்பட்டது. "மறுபடியும் ஒரிஸ்ஸாவில் மைனாரிட்டி கிறிஸ்தவ மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; சங்பரிவார்,
விச்வ ஹிந்து பரிஷத் ஆகிய இயக்கங்கள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்றெல்லாம் தலைப்புச் செய்திகள், பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் நாள் தவறாமல் வெளிவந்தன.

இதனால், பாவம் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி யார் என்றே தெரியாமல் போய்விட்டது. அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தவிர, மற்ற எந்த விவரத்தையும் பத்திரிகைகள் எழுதவில்லை. "அவர் வி.ஹெச்.பி. தலைவர்' என்று நம் நாட்டில் செய்தி பிரசுரமானபோது, "அவர் ஹிந்து தீவிரவாதி' என்று வெளிநாட்டில் பிரசுரமாகியது.

ஆனால், உண்மை என்ன? அவர் பெரிய ஆன்மிகவாதி. யாருமே அவரைப் பற்றி உண்மையை எழுதாததாலும், பேசாததாலும் வெளியுலகிற்கு எதுவும் தெரியவில்லை. முதலில் அவர் யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார், அந்தக் கொலையைச் செய்தது உண்மையில் யார்? எப்படி அந்தக் கொலை பற்றிய உண்மையான செய்தி, திசை திருப்பப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி ஸ்வாமி, ஸ்வாமி தயானந்த சரஸ்வதியுடன் சக மாணவராக இருந்து ரிஷிகேஷில் வேதம், உபநிஷதம், வேதாந்தம், பிரம்மசூத்ர பாஷ்யம் போன்ற அரிய பொக்கிஷமான ஆன்மிக நூல்களைப்
பயின்றவர். அவர் படித்து முடித்த பிறகு, 1965ல் நடந்த பசுவதைத் தடுப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஸந்நியாசிகள் ஈடுபட்டபோது, அவரும் ஈடுபட்டு 19 நாட்கள் சிறைவாசம் பெற்றார். பசு பாதுகாப்பு இயக்கத்தை நடத்த 1967ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா சென்றார். 196870ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா கந்தமால் ஜில்லாவின் தலைநகரமான "புல்பளி'க்கு சென்றார்.

அவர் அங்கு சென்றபோது, அவரிடம் ஒரு சல்லிக்காசு கூட கிடையாது. பிச்சை எடுத்து உணவு உண்டார். கையேந்தி, செலவுக்கு ரூ.30 சேர்த்து, கந்தமால் ஜில்லாவில் சக்கபாத் என்கிற குக்கிராமத்திற்குச் சென்றார். "பகவான் பூரி ஜகன்னாதர் அருளால்தான் நான் அங்கு சென்றேன்' என்று கூறினார் அவர்.

ஏன் அவர் 1969ஆம் ஆண்டு அங்கு சென்றார் என்கிற கேள்விக்கு நாம் விடை கண்டால், அவருக்கு ஏன் இந்தக் கதி நேர்ந்தது என்பதற்கு துப்பும் கிடைத்துவிடும்.

கந்தமால் ஜில்லா, வனவாசிகள் நிறைந்த இடம். அந்தச் சமயத்தில் வெளிநாட்டுப் பண உதவியுடன் பெருமளவு மதமாற்றம் நடந்து வந்தது. பீஹார், மத்தியப் பிரதேச மாநிலங்களை ஒட்டிய வனவாசிகள் நிறைந்த ஒரிஸ்ஸா ஜில்லாக்களிலும் பெருமளவு மதமாற்றங்கள் நடந்து வந்தன. மத்தியப் பிரதேசத்தில், நீதிபதி நியோகி குழுவின் அறிக்கைப்படி, ஏமாற்றி, ஆசை காட்டி, பயமுறுத்தி மதமாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது உறுதியானது. அதே கதைதான் ஒரிஸ்ஸாவிலும். அதனால்தான் மத்தியப் பிரதேசத்திலும், ஒரிஸ்ஸாவிலும் மதமாற்றத்தைத் தடுக்கச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இப்படி மதமாற்றம் நடப்பதைத் தடுக்கவே ஸ்வாமி லக்ஷ்மணானந்தா, கந்தமாலில் உள்ள சக்கபாத் கிராமத்திற்குச் சென்றார். இந்தக் கிராமம், ஜில்லா தலைநகரான புல்பளியிலிருந்து 30 கி.மீ. தூரம். அன்றிலிருந்து அவர் கொலையுண்ட நாள் வரை சக்கபாத் கிராமமே அவர் கர்ம பூமியாகியது. அந்தக் குக்கிராமத்திலிருந்து அவருடைய சேவை விரிவடைந்தது.

1969ஆம் ஆண்டு "சக்கபாத்' கிராமத்தில் அவர் ஒரு பள்ளிக்கூடமும், ஒரு சம்ஸ்க்ருதக் கல்லூரியும் துவங்கினார். மத மாற்றத்தைத் தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் பஜனைக் கூடங்களை நிறுவினார். மூலைமுடுக்கெல்லாம் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினார். அவருடைய சேவைகளும், சொற்பொழிவுகளும் வனவாசி மக்களிடம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

"கிறிஸ்து ஸ்தானம்' ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற வேகத்தில் பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரிகளுக்கு, ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவின் சேவை பெரிய வேகத் தடையாகவும், உண்மையான எதிர்ப்பாகவும் மாறியது. எந்தெந்த மிஷனரி அமைப்புகள் திட்டமிட்டு பணிபுரிந்தனவோ, அவை தங்கள் வேலைகளில் தோல்வி அடைந்து, கந்தமால் ஜில்லாவை விட்டே வெளியேறின.

வனவாசி மக்களை முன்னேற்றும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி பெரும் வெற்றிகண்டார் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா. அதிகாரிகளையும் போலீஸையும் கண்டு, காரணமில்லாமல் பயந்த வனவாசிகளை, தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களாக மாற்றினார். அவரது முயற்சியால் வனவாசிகள் உற்பத்தி செய்த "பீன்ஸ்' காய்கறி பிரபலமாகியது. கடிங்கா என்கிற இடத்தில்
வனவாசிகளை காய்கறி கூட்டுறவு இயக்கம் ஆரம்பிக்கத் தூண்டினார்.

மரங்களை வெட்டுவதைத் தடுத்து, காடுகளை வளர்த்தார் ஸ்வாமி. மரங்களுக்கு நம்பர்கள் கொடுத்து வெட்டுவதை நிறுத்தினார். மரத்தை வெட்ட அனுமதி கொடுக்க கிராம பஞ்சாயத்திற்கு மட்டுமே உரிமை என்ற விதி ஒன்றையும் கொண்டு வந்தார் லக்ஷ்மணானந்தா ஸ்வாமி.

மேலும் வனவாசிகளின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், சங்கீதம் உள்பட பொதுவான வாழ்க்கை முறைகள் – இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். பசு பாதுகாப்பின் அவசியத்தையும், பசு மாமிசம் உண்ணக்கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் வளர்த்தார். அவர்களுடைய சொந்த வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, அவர்களுடைய கோவில்களைப் புதுப்பித்தார்.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் பெயரும் புகழும் கந்தமால் ஜில்லா மட்டுமல்லாமல், ஒரிஸ்ஸா முழுவதும் பரவியது. குக்கிராமமான சக்காபாத்தில் 1986லும், 2007லும் லட்சக்கணக்கான வனவாசி மக்களைத் திரட்டி அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளித்தார்.

பூரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் கஜபதி மகாராஜா, ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் சேவையைப் பாராட்டி, "அதர்மத்தை எதிர்க்கும் மகாரதி' மற்றும் "வேதாந்த கேசரி' என்று பட்டமளித்துக் கௌரவித்தனர்.


அவருடைய பணியின் காரணமாக கிறிஸ்தவ அமைப்புகளின் வேலையின் வேகமும் வெற்றியும் குறைந்தது. ஏராளமாக வெளிநாட்டிலிருந்து பணம்
வந்தும் அதற்கான பெரும் பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. 1999லிருந்து 2003 வரை ஐந்தாண்டுகளில் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவ தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெற்ற தொகை ரூபாய் 183 கோடிக்கும் மேல். இந்தத் தொகையில் 10 சதவிகிதம் கூட ஹிந்து தன்னார்வ நிறுவனங்களுக்குக் கிடைக்கவில்லை.

இவ்வளவு பண பலத்துடன், மைனாரிட்டி என்கிற போர்வையில், பத்திரிகை, அரசு, போலீஸ் உதவியுடன் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ அமைப்புகள், ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியை எதிர்த்து வந்தன. இதுவரை அவர் மீது ஒன்பது முறை கொலை முயற்சிகள் நடைபெற்றன. 24.12.2007 அன்று ஒன்பதாவது முறையாக கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவாளர்கள் 200 பேர் கொண்ட கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் காரணமாக பெரும் கலவரம் அப்போதே ஏற்பட்டது என்று ஜனவரி 2008ல் வெளியிடப்பட்ட தேசிய சிறுபான்மை அமைப்பின் ஆய்வு தெரிவித்தது.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் சேவை, மத மாற்றம் செய்யும் கிறிஸ்தவ அமைப்புகளின் கண்களை உறுத்தி வந்தது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. அவரைப் பலமுறை கிறிஸ்தவ ஆதரவாளர்கள் தாக்க முயற்சி செய்தார்கள்; தாக்கவும் செய்தார்கள் என்பது ஒரிஸ்ஸாவில் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்த நிலையில்தான் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி 24.8.2008 அன்று, ஏ.கே. 47 துப்பாக்கி மூலமாக வாரி இறைக்கப்பட்ட குண்டுகளுக்கு பலியானார். அவருக்கு வயது 84. அவருடன் மேலும் நால்வரும் மடிந்தனர். இந்தக் கொலைக்கு அந்தக் கன்யாஸ்ரமத்தில் இருந்த பெண் குழந்தைகள் சாட்சி.

இந்தக் கொலையைச் செய்தது யார் என்பது பற்றி பெரும் சர்ச்சைகிளப்பப்பட்டிருக்கிறது. திசை திருப்பும் செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன. நக்ஸலைட்டுகள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று முதலில் செய்திகள் வந்தன. நக்ஸலைட்டுகள் இதை மறுத்திருக்கிறார்கள். யார் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

கந்தமால் "பொய்'யில் மறைக்கப்பட்ட "உண்மை'கள் !

ஒரிஸ்ஸாவிலுள்ள கந்தமால் மாவட்டம் இன்று உலகப் புகழ்பெற்ற இடமாக
மாறியிருக்கிறது. "அங்கு ஹிந்து வெறியர்களால் அப்பாவி கிறிஸ்தவ மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்' – என்று கிறிஸ்தவ மக்கள் நம்பும்படியாக நம் நாட்டிலிருந்து பிரச்சாரம் நடந்து வருகிறது. ஹிந்து வெறியர்கள் என்றால் வி.ஹெச்.பி., சங்பரிவார் என்று அர்த்தம். இது உண்மை கலந்த பொய்ப் பிரச்சாரமானதால், இதில் பொய் எது என்பதைப் பிரித்துக் கூறுவது மிகவும் கடினம். இதில் உண்மை என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

முதலில் ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவும், அவருடைய நான்கு சீடர்களும் கொலை செய்யப்பட்டார்கள்; பின்பு நடந்த கலவரத்தில் பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். வீடுகள், வழிபாட்டு ஸ்தலங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது உண்மை. ஆனால், இவையெல்லாம் கிறிஸ்தவ சமுதாயத்தைக் குறிவைத்து, அவர்கள் மட்டுமே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று நடக்கிற பிரச்சாரம், பொய்ப் பிரச்சாரம். இன்றைய நிலையில் – பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நாடே நினைக்கும்போது – உண்மை என்ன என்று எடுத்துக் கூறுவது நம்முடைய கடமை. இந்த உணர்வில்தான், அங்கொன்றும்
இங்கொன்றுமாகப் பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் வெளிவந்த உண்மைகளைத் தொகுத்து எழுதுகிறேன்.

ஒன்று – கந்தமால் மாவட்டத்தில் நடந்த கலவரத்தையும், கொலைகளையும் நம் நாட்டு யதார்த்த நிலையின்படி பார்த்தால், அவை ஹிந்து – கிறிஸ்தவ மத விரோதம்
சம்பந்தப்பட்டது மட்டுமே என்று கூற முடியாது. மதம் கலந்திருப்பது உண்மை. ஆனால், ஆதாரமான காரணம் வேறு. கந்தமாலில் மதம் மாறாத "கந்த்' என்கிற மலை வாழ் மக்களுக்கும், "பணா' என்கிற (கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்ட) தலித் சமுதாயத்துக்கும் இடையே, பாரம்பரிய நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஏற்பட்டிருக்கும் விரோதம்தான் ஆதாரமான காரணம்.

"கந்த்' சமுதாயம் எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தது; "பணா' சமுதாயம் எஸ்.ஸி. வகுப்பைச் சேர்ந்தது. அரசியல் சட்டப்படி கிறிஸ்தவராக மதம் மாறிய எஸ்.ஸி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடையாது. ஆனால், அப்படி மதம் மாறினாலும் எஸ்.டி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தொடரும். "பணா' சமுதாயம், கிறிஸ்தவ மற்றும் காங்கிரஸ் போன்ற "மதச்சார்பற்ற' கட்சிகளின் உதவியுடன் எஸ்.டி. அந்தஸ்து கேட்டுப் போராட்டம் நடத்தி வருகிறது. இதை கந்த் சமுதாயம் கடுமையாக எதிர்க்கிறது.

இதனால்தான், நெருப்பில்லாமலேயே பற்றிக் கொள்கிற ஒரு நிலை கந்தமால் மாவட்டத்தில் இருந்து வருகிறது. இவையெல்லாம் அரசாங்க ஆய்வறிக்கைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கும் உண்மைகள். இவற்றை யாரும் மறுக்க முடியாது. ஆக, அடிப்படையாக ஹிந்துக்களாகவே வாழும் "கந்த்' எஸ்.டி. பிரிவினருக்கும், கிறிஸ்தவராக மாறிவிட்ட "பணா' பிரிவினருக்கும் இடையே, பெரிய கலவரம் வெடிக்க ஸ்வாமி லக்ஷ்மணானந்தா கொலை ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

இந்த "கந்த் – பணா' விரோதம் என்பது ஒரிஸ்ஸாவில் சங்பரிவார், வி.ஹெச்.பி.யினர் தங்கள் வேலைகளைப் பெரிய அளவில் துவங்குவதற்கு முன்னரே இருந்து வந்தது. 1992ஆம் ஆண்டு கந்தமாலில், கந்த் – பணா பிரிவினருக்கு இடையே நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல், மூன்று மாதங்கள் தொடர்ந்து நடந்தது. 20 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள்.

அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. இயக்கங்கள் ஒரிஸ்ஸாவில் வேலையைத் துவக்குகின்றன. பஜ்ரங்தள் இயக்கம் துவங்கவே இல்லை. ஆனால், கிறிஸ்தவ மிஷனரிகள் கந்தமாலில் நுழைந்து தீவிரமாக மத மாற்றம் செய்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1961ல் 19,128லிருந்ததை, 2001ல் 1,17,757 ஆகப் பெருக்கினர். இப்படி தீவிரமாக மத மாற்றம் நடப்பதை எதிர்த்துத்தான், ஸ்வாமி லக்ஷ்மணானந்தா மற்றும் வி.ஹெச்.பி. இயக்கங்கள், 1990களில் தங்களுடைய மதமாற்ற எதிர்ப்பைத் தீவிரமாக்கினர்.

ஆக, கிறிஸ்தவ மத மாற்றம், அதை எதிர்த்து ஹிந்து இயக்கங்களின் போராட்டம்
– இப்படி மாறியது கந்தமால் நிலவரம். 1992க்குப் பின் இது ஹிந்து – கிறிஸ்தவ கலவரமாக மாறியது கொஞ்சம் உண்மை.

முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய உள்துறை அமைச்சரான
சிவராஜ் பாட்டீல் கூட "கந்தமால் கலவரம் மதக் கலவரம் அல்ல, நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு காரணமானது' என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தி 6.9.2008 எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் மட்டும் வந்திருந்தது.

இந்த முறை நடைபெற்ற கலவரத்தில் கந்த், பணா – ஆகிய இருபிரிவினரும் பரஸ்பரம் பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினரும் கொலைகள் மற்ற நாசச் செயல்களில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ சமுதாயம் மட்டுமே குறிவைக்கப்பட்டது, அல்லது பாதிக்கப்பட்டது என்று கூறுவது முழுப் பொய். "டெக்கான் கிரானிக்கிள்' பத்திரிகையின் ஆய்வு என்ன கூறுகிறது பாருங்கள். ""இந்த முறை ஹிந்து அடிப்படைவாதிகளின் தாக்குதல்களுக்குக் கிறிஸ்தவர்கள் எதிர்த்துப் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

""கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினார்கள். மேலும், துப்பாக்கிகளால் சுட்டும் கொலைகள் செய்தார்கள். இதனாலேயே
மாவோயிஸ்டுகளான நக்ஸலைட்டுகள், கிறிஸ்தவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவி செய்தார்களோ என்று சந்தேகம் வருகிறது. கிறிஸ்தவர்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது? "கந்த்' மக்கள் கையாலும், தடியாலும், கிறிஸ்தவர்கள் துப்பாக்கியாலும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர். இதனால் ஒரிஸ்ஸாவில் ஒரு புதிய கோணம் உருவாகியிருக்கிறது. அதாவது, கிறிஸ்தவ பயங்கரவாதம் ஒரிஸ்ஸாவில்
துவங்கியிருக்கிறது'' என்கிற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகை. எந்த அளவுக்கு கிறிஸ்தவ பயங்கரவாதம் வளர்ந்திருக்கிறது என்பதைக் கணிக்க, ஒரிஸ்ஸா அரசு முயன்று வருகிறது – என்றும் கூறுகிறது அந்தப் பத்திரிகை.

இதிலிருந்து கந்தமாலில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஒருதலைப் பட்சமாகப் பேசுவதும் எழுதுவதும் பொய் மட்டுமல்ல, நாட்டுக்கே தீங்கு இழைக்கக்கூடிய செயல் என்பதும் நமக்குப் புரியும். வெளிநாட்டுப் பண உதவியுடன், பரஸ்பர விரோதங்களைத் தோற்றுவிக்கும் தீவிரவாத கிறிஸ்தவ அமைப்புகள் உருவாக்கும் மதமாற்றம் என்பது, கந்தமால் போன்ற மலைவாழ் மக்கள் வாழும் இடங்களில் எப்படி பெரிய பூகம்பங்களை உண்டு பண்ணுகின்றன என்பது, திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரியிலும், சென்னை லயோலா கல்லூரியிலும் படித்த ஹிந்துக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

பொதுவாக, கிறிஸ்தவ மதம், உலகையே கிறிஸ்தவ உலகமாக மாற்றுவதை தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டது. இதை எப்படிச் செய்வது என்பதில்தான் கிறிஸ்தவ இயக்கங்களுக்குள் வேறுபாடே தவிர, நோக்கத்தில் வித்தியாசமே கிடையாது. இதனால்தான் மற்ற மதங்களுடன் இணைந்து செயல்படும் குணம் கிறிஸ்தவ மதத்தில் குறைவாக இருக்கிறது – என்று சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற ஹிந்து சமய ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். ஆக, மத மாற்றம், அதன் உள்நோக்கம், அதனால் ஏற்படும் விரோதங்கள், ஏற்கெனவே இருக்கும்
விரோதங்களை நெய் ஊற்றி வளர்ப்பது போன்ற காரணங்களால்தான் கந்தமாலில் இப்படிப்பட்ட நிலை உருவாகியிருக்கிறது.

இந்தக் கொலை, கலவரங்களில் ஒரு பிரிவினர் மட்டும் குறிவைக்கப்படவில்லை; இருபிரிவினரும் கடும் குற்றங்கள் புரிந்திருக்கின்றனர். ஆக, அப்பாவி கிறிஸ்தவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது முழுப் பொய் – நாட்டு விரோத சக்திகளால், பத்திரிகைகளின் உதவியால், மதச்சார்பற்ற ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஜோடிக்கப்பட்ட பொய். இது நம் நாட்டிற்கே பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற பொய்ப் பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டியது, நம் நாட்டின் மீது பக்தி கொண்ட ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோருடைய கடமையாகும்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் படுகொலை நடந்தது. அன்று கோகுலாஷ்டமி நாள். குறிப்பாக வட
மாநிலங்களில் விரதம் அனுஷ்டிக்கும் நாள். "அவருடைய படுகொலை, இளைஞர்களுக்கு ஆத்திரத்தையும், பெண்களுக்கு பிரமிப்பையும்
உருவாக்கியிருக்கிறது' – என்று எழுதியது "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை.

அவருடன் ஒரு பெண் ஸந்நியாசி உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொலை நடந்த நாள், கொலைகள் செய்யப்பட்ட விதம்; கொலை செய்யப்பட்ட பெண் ஸந்நியாசியின் உடல் அவமானப்படுத்தப்பட்டது; முதலில் கைதானவர்கள் யார் யார்; பின்னணியில் யார் யார் இருக்கக்கூடும் – என்பதைப் பார்த்தால், இவையெல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது.

அந்தக் கொலைகள் நடப்பதற்கு முன் கிறிஸ்தவ அமைப்புகள், ஸ்வாமிகளை கடந்த டிசம்பர் மாதம் தாக்கினார்கள். "அவரை தீர்த்துக் கட்டினால் பெரும் கலவரம் ஏற்படும். அதன் மூலமாக கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவார்கள். அதை வைத்து "கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்' என்கிற பிரச்சாரத்தை நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் சுலபமாகச் செய்ய முடியும். இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு செக்யுலர் பத்திரிகைகள், அரசியல்வாதிகள், கட்சிகள் ஆகியோர், தங்கள் தங்கள் காரணத்திற்காக ஒத்துழைப்புத் தருவார்கள்' என்று கணித்திருக்கிறார்கள். இந்த
முறையில் நாடு முழுவதும் கிறிஸ்தவ அமைப்புகளைத் தூண்டி விட முடியும் என்று ஆழ்ந்த, திட்டமிட்ட சதியோ இது என்று தோன்றுகிறது.

இதற்குக் காரணம், இதற்கு முன்பு உண்மைகளைப் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம், குறுகிய காலத்தில் மூடி மறைப்பதை, நாட்டின் விரோத சக்திகள் செய்திருப்பதுதான். முன்கூட்டியே திட்டமிடாமல் இதைச் செய்திருக்கவே முடியாது என்பது, என்னுடன் பேசிய முன்னாள் உளவுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் கணிப்பும் கூட. ஸ்வாமிகளின் கொலைக்குப் பின்னணி யார் என்பதைக் கண்டுவிட்டால், இந்தச் சதி ஓரளவுக்கு விளங்கும். அதுபற்றி, அடுத்த வாரம்.

லக்ஷ்மணானந்தா படுகொலை – யார் கொலையாளி ?

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா படுகொலை நடந்தது 2008, ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு சுமார் 8 மணி. நடந்த விதம் இதோ:

* சுமார் 30 அல்லது 40 பேர் கொண்ட கொலைப் படை ஆச்ரமத்தைச் சூழ்ந்து கொண்டது.

* பார்த்தவர்கள் கூறியபடி, நான்கு பேர் ஏ.கே.47 துப்பாக்கிகளும், மற்ற பலர் நாட்டுத் துப்பாக்கிகளும் ஏந்தியிருந்தனர்.

* காவலுக்கு இருந்தது தடி மட்டுமே வைத்திருந்த "ஹோம் கார்டு' போலீஸ்காரர்கள் நான்கு பேர்; அவர்களில் இருவர் இரவு உணவுக்குச் சென்றிருந்தனர். மற்ற இருவர் மட்டுமே காவல் பணியில் இருந்தனர்.

* கொலையாளிகள் அந்த இருவரையும் கை, கால்களுடன், வாயையும் மூடிக் கட்டிவிட்டனர்.

* ஆச்ரமத்தின் உள்ளே சென்ற அவர்கள் ஸ்வாமியைத் தேடினார்கள்;
குளியலறையில் இருந்த அவரை ஏ.கே.47 துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்தனர். வெளியறையில் இருந்த மூன்று ஸந்நியாசிகளையும், ஒரு பக்தரையும் கூடக் கொலை செய்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஸந்நியாசி.
இறந்த அவருடைய உடலை அவமானப்படுத்தினார்கள்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதாகாந்த் நாயக் என்பவரின் கிராமத்தில், சென்ற ஆண்டு டிசம்பரில் ஸ்வாமிகள் மீது தாக்குதல் நடந்தது. அவர் பணா எஸ்.ஸி. வகுப்பைச் சேர்ந்தவர். ப்ரமோஷன் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி – பதவி ஓய்வு பெற்று அரசியலில் சேர்ந்த கிறிஸ்தவர்; ஆனால் எஸ்.ஸி. தகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மதம் மாறியதை மறைத்து வைத்திருப்பவர். சோனியாகாந்திக்கு மிகவும் வேண்டியவர். அதனால் ஒரிஸ்ஸா காங்கிரஸில் அவருக்கு "மவுசு' அதிகம்.

ஸ்வாமிகள் மீது நடந்த தாக்குதல் அவருடைய "கைவண்ணம்' என்று பலரும் நினைக்கிறார்கள். "அவர்தான் அந்தத் தாக்குதலை நடத்தினார்' என்று ஸ்வாமிகளும் அப்போது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அதற்கு நாயக்,
"ஸ்வாமி லக்ஷ்மணானந்தா என்று ஒருவர் எங்கள் ஜில்லாவில் இருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது' என்றார். இது அப்பட்டமான பொய் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தத் தாக்குதல் நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், ஐந்து லட்சம் பேர் கொண்ட ஒரு மலைவாழ் மக்கள் பேரணியை, கந்தமால் ஜில்லாவில் நடத்தி ஒரிஸ்ஸாவையே கலக்கியிருந்தார் ஸ்வாமி அவர்கள்.

டிசம்பர் 24, 2007–ல் நடந்த தாக்குதலில் படுகாயமுற்ற ஸ்வாமி லக்ஷ்மணானந்தா, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குணமடைந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இன்றுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. அதற்கு முன் ஒன்பது முறை ஸ்வாமிகள் மீது தாக்குதல் நடந்திருக்கின்றன. "இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும், புதியதாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள்' – என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர், தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

""கிறிஸ்தவ அமைப்புகளில் தொடர்புள்ள பல இளைஞர்கள் மாவோயிஸ்ட் அமைப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். டிசம்பர் 2007 கலவரத்தின்போது, ஹிந்து மலைவாழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நான்கு கிராமங்களில் நடந்த போலீஸ் சோதனையில், 47 மாவோயிஸ்ட்கள் (கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து ஹிந்துக்களைத் தாக்கியவர்கள்) கைதுசெய்யப்பட்டார்கள்.

""அவர்களிடமிருந்து 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதிலிருந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே உறவு இருப்பது வெளிப்பட்டது. மேலும் பல கிராமங்களில் துப்பாக்கியைக் காட்டிக் கூட மதமாற்றம் நடந்திருக்கிறது'' என்றும் எழுதியிருக்கிறார் அந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி.

""அரசாங்கத்தில் பதவியில் இருக்கும்போதே ரகசியமாக மதம் மாறிய
ராதாகாந்த் நாயக் ஐ.ஏ.எஸ். மற்றும் வெளிப்படையாக கிறிஸ்தவரான ஜான் நாயக் ஐ.பி.எஸ். இருவரும், பணா எஸ்.ஸி. மக்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

""மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ அமைப்புகள், ஸ்வாமிகளைக்
குறிவைத்திருந்தனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் வாழும் இடத்தில் மதமாற்றம் நடக்கும்போது, அதன் விளைவுகள்
பயங்கரமாக மாறுகின்றன.

""அதுபோன்ற மலைவாழ் மக்களிடம் நடக்கும் மதமாற்றங்கள் நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா போன்ற இடங்களில் கிறிஸ்தவ தீவிரவாதமாகவும்,
பயங்கரவாதமாகவும் மாறி, பிரிவினை சக்திகளைக் கூட தூண்டிவிட்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மத மாற்றத்தால், மதம் மாறுவதற்கு முன்பு அவர்களிடையே இருந்த விரோதம் அதிகமாவது மட்டுமல்லாமல், அவர்களிடையே எந்தக் கலவரம் நடந்தாலும், அது கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

""அதனால் மதம் மாறாத மலைவாழ் மக்கள் மீது அரசின் தாக்குதலும், பத்திரிகைகளின் சாடுதலும் நடக்கின்றன. அவர்களுக்கு உறுதுணையாக எந்த ஹிந்து அமைப்பு நின்றாலும் அவர்கள் "வகுப்புவாதிகள், தீவிரவாதிகள்' என்று பட்டம் கட்டப்படுகிறார்கள்; மதம் மாறாதவர்களை நிராயுதபாணிகளாகச் செய்யும் வகையில் அரசியல் சாசன அமைப்பும், பத்திரிகைகளின் போக்கும், அறிவுஜீவிகளின் போதனைகளும் அமைந்திருக்கின்றன. அதனால்தான் கிறிஸ்தவராக மதம் மாறிய "பணா' சமூகத்தினருக்கு அரசியல் சட்டத்தில் "சிறுபான்மையினர்' என்கிற பாதுகாப்பு; மதச்சார்பற்ற கட்சிகள், தலைவர்கள், பத்திரிகைகளின் பரிவு, உலக கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவு, பணம் எல்லாம் கிடைக்கின்றன.

""ஆனால், மதம் மாறாமல், தங்களுடைய வழிபாடு, கலாச்சாரம் காக்கப் போராடும்
"கந்தா' மலைவாழ் மக்கள், அரசியல் சட்டரீதியாக பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்ததால் அவர்களுக்கு எந்தவிதமான உதவியோ, அல்லது ஆதரவோ கிடையாது. அவர்களுக்கு ஆதரவாக ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சேவை செய்தால், அவருக்குக் கூட பாதுகாப்புக் கிடையாது.

""ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவுக்கு உதவி செய்தது ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகள். அதனால் ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவுக்கு "வகுப்புவாதி' என்கிற பட்டம். கந்தமால் ஜில்லாவில் மதம் மாறியவர்கள் பாக்கியசாலிகள்; மதம் மாறாதவர்கள் துரதிர்ஷ்டம் செய்தவர்கள். இந்த நிலையில் மதம் மாறாதவர்களுக்கு ஒரே ஆதரவாக இருந்தார் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா. அவரைத் தீர்த்துக்கட்டி விட்டால் தங்கள் மதமாற்ற வேலைகளுக்கு எந்தத் தடையும் இல்லாமல் செய்துவிடலாம் என்பதுதான், கந்தமாலில், தீவிர எண்ணம் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகளின் சிந்தனையாகவும், நோக்கமாகவும் இருந்திருக்கிறது.
இந்தத் தீவிரவாதம் வளர பணா, கந்தா சமூகத்தினரிடையே வளர்ந்து வந்த விரோதம், மத மாற்றம் முக்கியமான காரணம். இதனுடன் இணைந்தன மாவோயிஸ்ட் அமைப்புகள்'' – என்று எழுதியிருக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா மீது டிசம்பர் 2007ல் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, எப்படி மாவோயிஸ்ட்களும் கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன என்பதை விளக்கி, தேபசிஸ் திரிபாதி என்கிற பத்திரிகையாளர் "ஆர்கனைசர்' (ஆர்.எஸ்.எஸ்.ஆதரவுப் பத்திரிகை) பத்திரிகையில் 13.1.2008 அன்று எழுதிய கட்டுரையில் கூறுகிறார் : ""கிறிஸ்தவ பாதிரிகள் மாவோயிஸ்ட்களை அழைத்து, மதம் மாறாத மலைவாழ் மக்களைத் தாக்க வைத்தனர். அந்தப் பகுதியின் போலீஸ் சூப்பரின்டெண்டென்டாக இருந்த அபிதேந்திர நாத் சின்கா, தீவிரவாத கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, மதம் மாறாத மக்களை மாவோயிஸ்ட்கள் எப்படித் தாக்கினார்கள் என்று, தான் நேரில் கண்டதைக் கூறினார்.

""2007 டிசம்பர் 28 அன்று நான் பிராமணிகாவ் கிராமத்திற்கு, 40 பேர் கொண்ட போலீஸ் படையுடன் சென்றிருந்தேன். கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மதம் மாறாதவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்களை நாங்கள் எச்சரித்தபோது, அவர்கள் அஞ்சாமல் எங்களை நோக்கி வந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென்று, தேர்ச்சி பெற்ற மாவோயிஸ்ட்போல துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். நான் மயிரிழையில் தப்பினேன். ஆனால், ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். பிறகு அவர்கள் "ஆட்டோமேடிக் துப்பாக்கியால்' 100 ரௌண்டுகள் சுட்டனர். இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாவோயிஸ்ட்கள் கிறிஸ்தவ தீவிரவாதிகளுடன்
சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை'' – என்று அந்த போலீஸ் அதிகாரி கூறியதை அப்பத்திரிகையாளர் எழுதியிருந்தார். யாராலும் இது மறுக்கப்படவில்லை.

மேற்கு ஒரிஸ்ஸா போலீஸ்துறை, கந்தமால் பகுதியில், சேவை என்கிற போர்வையில் வேலை செய்யும் கிறிஸ்தவ தன்னார்வ அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று வேண்டியது. காரணம் – அவர்களுடைய பணம் மாவோயிஸ்ட்களுக்குப் பெருமளவு கொடுக்கப்படுகிறது. ஆக, மாவோயிஸ்ட்களும், கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளும் கந்தமால் ஜில்லாவில் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பது டிசம்பர் 2007லேயே வெட்ட வெளிச்சமாகியது.

இதனால்தான் மாவோயிஸ்ட்கள் மூலமாக கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகள்,
ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவைப் படுகொலை செய்திருக்கலாம் என்கிற எண்ணம் வலுத்து வருகிறது. மாவோயிஸ்ட்களில் ஒரு பகுதியினர், "கொலையைத் தாங்கள் செய்ததாக'வும்; இன்னொரு பகுதியினர், "எங்களுக்குத் தொடர்பில்லை' என்றும் கூறியுள்ளனர். "இது மாவோயிஸ்ட்களின் பொது வேலையில்லை; அதில் ஒரு
பகுதியினர் கூலிப்படையாக இருந்து இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்' – என்று மற்ற பகுதியினர் கருதுகிறார்கள்.

இந்தக் கொலை சம்பந்தமாக கிறிஸ்தவ தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்கிற விவரத்தை, கிறிஸ்தவர் ஒருவரால் நடத்தப்படும் கிறிஸ்தவ தீவிரவாதம் பற்றிய இணையதளம், 25.8.2008 அன்று வெளியிட்டது. அதன் விவரம் : "கந்தமால் ஜில்லாவிலிருந்து தப்பித்து ஓடும்போது, கிறிஸ்தவ அமைப்பில் பணியாற்றும் பிரதேஷ் குமார்தாஸ் என்பவரைப் போலீஸ் கைது செய்தது. மேலும், விக்ரம் திகில், வில்லியம் திகில் என்கிற இருவரை, கிறிஸ்தவ தீவிரவாதியான லால் திகில் என்கிறவர் வீட்டிலிருந்து போலீஸ் கைது செய்தது. ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவைத் தாக்கிய கும்பலில் அவர்கள் இருந்ததாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்'.

ஆக, ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவின் கொலையை கிறிஸ்தவ தீவிரவாதிகளும், மாவோயிஸ்ட்களும் சேர்ந்து செய்திருக்கின்றனர் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

Read more...

நீதிபதிகள்

>> Monday, September 15, 2008

உத்தரப்பிரதேசம் காஜியாபாதில் நான்காம் நிலை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து ரூ.23 கோடி ரூபாயைச் சட்டவிரோதமாகக் கையாடிய ஊழலில், நீதித்துறையின் மூன்றடுக்கு வரிசை நீதிபதிகளுக்குப் பங்கிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

பஞ்சாபில் அதைவிட வேடிக்கை; ஒரு நீதிபதிக்கு லஞ்சமாக அனுப்பப்பட்ட பணம் தவறுதலாக, அதே பெயரை உடைய இன்னொரு நீதிபதியிடம் தரப்பட, விஷயம் வெளிப்பட்டு பத்திரிகைகளில் வந்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த கே.கே. சபர்வால் தனது சொந்த மகன்கள் நலனை உத்தேசித்துத் தீர்ப்பு வழங்கினார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்ல?

செüமித்ர சென், கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி. அவர் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் நீதிமன்றத்தின் சார்பில் பெறப்பட்ட பணத்தைத் தனது சொந்த வங்கிக் கணக்கில் போட்டு மோசடி செய்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 2006-ம் ஆண்டு அந்தப் பணத்தைக் குறைந்த வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருக்கிறார் செüமித்ர சென். இதுபற்றிய விசாரணைகள் நடந்ததும், ""விருப்ப ஓய்வு பெறுங்கள் அல்லது ராஜிநாமா செய்துவிடுங்கள்'' என்று அவரிடம் கூறப்பட்டது. அவரோ இதில் எதையும் செய்ய மறுத்துவிட்டார். விடாப்பிடியாக, நீதிபதியாகத் தொடரத்தான் செய்வேன் என்று அடம்பிடிக்கும் அவரை என்ன செய்வது? அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரையே செய்திருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.

ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களோ அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களோ, ""சம்பந்தப்பட்ட நீதிபதி பதவியிறக்கம் செய்யப்பட வேண்டும்'' என்று குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்க வேண்டும். இரு அவைகளிலும் தனித்தனியே பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தால் மட்டும் போதாது; மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையில் இருந்தாக வேண்டும். 1968-ம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின்படி ஒருவரைப் பதவி நீக்குவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய விஷயமல்ல என்பது நீதிபதி செüமித்ர சென்னுக்குத் தெரியாதா என்ன?

தனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை சந்திப்பதைக்கூடத் தவிர்த்த நீதிபதிகள் இருந்த காலம் ஒன்று இருந்தது. இவ்வளவு இழிவான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் நீதிபதி பதவியிலிருந்து விலக மறுக்கும் செüமித்ர சென் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இந்தக் காலம். இதற்கு முக்கியமான காரணம், நீதிபதிகள் தேர்வில் நடக்கும் முறைகேடுகள்தான்.

நீதிபதிகள் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களுடைய பின்னணி பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு, அப்பழுக்கில்லாதவர் என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை.

2006-ல் நீதிபதிகள் விசாரணைச் சட்டம் பற்றிய முன்வடிவு தயாரிக்கப்பட்டு தூங்குகிறது. பதவியில் இருக்கும் நீதிபதிகளைக் கொண்ட தேசிய நீதிக்குழுமம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், தவறு நிரூபிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் ஆலோசனையைக் குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் அதிகாரத்தை அதற்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் விசாரணைச்சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏனோ அந்தச் சட்டம் இப்போதும் முன்வரைவாகவே தொடர்கிறது.

இந்திய ஜனநாயகத்தில் எத்தனை எத்தனையோ குறைகள் இருந்தாலும், நீதித்துறை ஓரளவுக்கு நேர்மையாக இருப்பதால்தான் அந்தக் குறைகளை மீறி நாம் தொடர்கிறோம். நீதித்துறை களங்கப்படுவதும், அதன் மீது மரியாதை குறைவதும் ஒரு நல்ல ஜனநாயகத்தின் அறிகுறி அல்ல. தவறுகள் வெளியில் தெரியக்கூடாது என்று மூடிமறைப்பதும், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று தடுப்பதும், தவறுகள் அதிகரிக்கத்தான் உதவும்.

""தர்மோ ரbதி ர·த:'' என்று வடமொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது, நாம் தர்மத்தைக் காப்பாற்றினால், தர்மம் நம்மைக் காப்பாற்றும் என்று அதற்குப் பொருள். நமக்கு நீதி வழங்கும் நீதித்துறையை நாம் பாதுகாக்கத் தயார்; நீதியே நிலை பிறழ்ந்தால் நம்மை யார் பாதுகாப்பது?

Read more...

சர்வதேச தரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் 'பார்'

>> Tuesday, September 9, 2008

சர்வதேச தரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் 'பார்' , இது குறித்து அடிக்கடி விமான நிலையம் வரும் டிரைவர் ஒருவர் கூறுகையில், "இதில் சர்வதேச தரம் பார்க்கும் விமான நிலைய ஆணையம், மற்ற வசதிகளையும் சர்வதேச தரத்தில் வைத்திருக்கிறதா என்றால் இல்லை. நள்ளிரவில் வந்து பாருங்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை, நண்பர்களை வரவேற்க வருவோர் உட்கார இடமில்லாமல் பல மணி நேரம் நின்று கொண்டிருக்கிறார்கள். இதனால், பெண்கள், வயதானவர்கள் படும்பாடு கொஞ்ச, நஞ்சமல்ல. இவர்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. தாகம் எடுத்தால் பணம் கொடுத்துதான் மினரல் வாட்டர் வாங்கி குடிக்க வேண்டும். குறைவான கழிப்பறைகளே உள்ளன. இதில் எல்லாம் சர்வதேச தரத்தை கடைப்பிடிக்கவில்லை. சாராயம் விற்பதில் மட்டும் சர்வதேச தரத்தை கடைப்பிடிக்கிறது நிர்வாகம்' என்றார்.


இது சத்தியமான உண்மை என்று அடிக்கடி விமானத்தில் போய் வரும் நமக்குதான் சென்னை விமானநிலையத்தின் சர்வதேசதரம் தெரியும்...சாம்பிளுக்கு சில

நாத்தமடிக்கும் கழிப்பறைகள்

சாப்பிட நல்ல ஹோட்டல் கிடையாது

வாசலில் நிற்க்கும்/வழியும் காக்கிசட்டை பிச்சைக்காரர்கள் (சார் நம்ம ஊர் காசு அங்கே போனா செல்லாது என்கிட்டை கொடுத்துட்டுபோங்கன்னு பில்டப்வேற.....???)

விமானநிலையத்த சுத்தமா சுகாதாரமா வச்சிக்குனும்னு சொரனையே இல்லாத ஏர்போர்ட் மேனேஜர்.

எவன் இளிச்சவாயன் வருவான் அவன்கிட்ட காச கறக்கும் கஸ்டம்ஸ் ஆபிஸர்ஸ் (ரூபா வேண்டாம் டாலரா கொடுங்கன்னு அன்பு கட்டளைவேற).

ஹைதராபாத், பங்களூரு விமானநிலையத்த பார்த்தும் இன்னும் சென்னை விமானநிலையத்த பத்தி கவலைபடாத நம்மஊரு அரசியல்வியாதிகளை நினைத்தால்...

நெஞ்சு போறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட...................

Read more...

என்ன கொடுமை கருணாநிதி சார்?

>> Friday, September 5, 2008

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.

கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாக கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 லட்சம்தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா? ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா? என்ன கொடுமை......

கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை...... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே.... என்ன பேச்சு சார் அது ? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்கு போட்டதே உங்கள் ஆட்சிதானே ?

அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள் ? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் `இவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன் ? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று, எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை........

கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே.... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைதானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது. அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கும், நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது. கங்கை - காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லாரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.

உதவாதினி தாமதம். உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா ? என்ன கொடுமை.......

கேள்வி 4: 40 லட்ச ரூபாய்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் ரத்த வாரிசுகளுக்கு `அள்ளிக்' கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 லட்ச ரூபாய்க்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்வார்.

அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதை விட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.

அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்ல வேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா. அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துக்களை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லி வந்தார்.

ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேத்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை? உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை? அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம் ? என்ன கொடுமை......

கேள்வி:5 ராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே.... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே, அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா? புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதி மன்றம் கருத முடியுமல்லவா?

உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டாமா? எது சரி ? என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ன கொடுமை.......

கேள்வி 6: உலக அளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்று நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி. வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள். உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் டி.வி மட்டும் இதில் பின்தங்கிவிட முடியாதல்லவா.

அதனால்தான் இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, `விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவிக்காமல், `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதே போல `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசணிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல். விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா? என்ன கொடுமை.......

கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை. ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணி நேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால் உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை. தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்? ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தி ஒரு நாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாடவிட்டீர்கள். மாரத்தான் செலவுப்பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை ?

மின்வெட்டைப்பற்றி 1973-ல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை: "இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால், சே.. மின்வெட்டாம்.''

பின்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கவுரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் ரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.

இ.வா.பூச்செண்டு
சகிப்புத்தன்மையின் உச்சத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு.

நன்றி....குமுதம்/ஞானி

Read more...

ஆதாம் ஏவாள்_புதியகதை

தருமி அவர்களது இடுகை எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. எல்லா மதங்கள் சம்பந்தமான அவரது சந்தேகங்கள் பிரசித்தமானவை. எனக்கும் பலமுறை அம்மாதிரி சந்தேகங்கள் வந்துள்ளன. ஆகவே அவரது இம்மாதிரி இடுகைகளை நான் சுவாரசியமாகப் படிப்பதுண்டு.

"ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்."

இந்த விஷயத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு. ஆதாம் மற்றும் ஏவாள் கடவுள் சொன்னபடி நடந்து அக்கனியை பறித்துண்ணாதிருந்தால் என்னவாகியிருக்கும்? சற்று கற்பனையை ஓட்டிப் பாருங்கள். முடியாவிட்டாலும் கவலையில்லை. ஏற்கனவே ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle இதை கற்பனை செய்து ஒரு அருமையான கதையை எழுதியுள்ளார். அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) *சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. கதையின் பெயர் Quand le Serpent Échoua. (பாம்பு தோல்வியுற்றபோது).

இக்கதையில் ஆசிரியர் ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்துகிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதுதான் அது. இக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது. ஏவாள் ஈடன் தோட்டத்தில் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். பாம்பு அவளிடம் வந்து வேகமாகத் தான் சொல்வதை சொல்லி விட்டு அறிவுக் கனியை பறித்துண்ணும்படி ஏவாளுக்கு ஆசை காட்டி விட்டு தன் வழியே போக யத்தனிக்கும் போது, ஏவாள் இம்முறை கூறுகிறாள், "பாம்பே, நீ சொல்வதை நான் கேளேன், பரமபிதா எங்களுக்கு இக்கனியை பறிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டார். ஆகவே நான் அக்கனியைத் தொடேன்" என்று கூற பாம்புக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சரி ஆதாமிடமாவது போய் முயற்சி செய்ய, அவனோ அதை அடி அடி என்று அடித்து விரட்டி விடுகிறான்.

அன்று இரவு பரம பிதா வருகிறார். அவருக்குப் பல வேலைகள். நடுவில் இந்த வேலை வேறு, அதாவது ஆதாம் ஏவாளை ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவது. "ஆதாம் எங்கிருக்கிறாய்?" என்று கோபம் கலந்த இடிக்குரலில் கேட்க, அவனோ "இங்கிருக்கிறேன் ஆண்டையே" என்று ஏவாளின் கையை பிடித்துக் கொண்டு தைரியமாக ஆடையின்றி அவர் முன் வந்து நிற்கிறான். "அக்கனியை பறித்தாயா" என்று சற்றே குறைந்த சப்தத்தில் வழக்கமான கேள்வியைக் கேட்க, "இல்லை ஆண்டே, அவ்வாறு செய்வோமா நாங்கள்" என்று கூற, பரமபிதாவுக்கு மூர்ச்சை வரும்போலாகி விட்டது. "சரி, சரி, ஜாக்கிரதையாக இருந்துக் கொள்" என்று சுரத்தேயில்லாமல் கூறிவிட்டு தன்னிடம் இருக்கும் சூப்பர் கணினியிடம் சென்று பார்க்கிறார். அதனிடம் நடந்ததை எழுதி உள்ளிட, அது மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறது. "இது என்ன சோதனை, இத்தனை உலகங்களிலும் சமத்தாக இருந்த ஆதாம் ஏவாள் இங்கு மட்டும் ஏன் படுத்துகிறார்கள்" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறது. பிறகு கூறுகிறது, "ஏவாள் இம்மாதிரி நடந்து கொள்வதற்கானச் சாத்தியக்கூறு ஒன்றின் கீழ் பத்து கோடி என்று நான் செட் செய்திருந்தேன். இது வரை நடக்காதது இப்போது நடந்து விட்டது".

"சரி இப்போது என்ன செய்யலாம்" என்று பரமபிதா கேட்க கணினி சற்று நேரம் கேட்கிறது. அதற்குள் இங்கு ஈடன் தோட்டத்தில் அனர்த்தம் ஆரம்பிக்கிறது. அக்கனியைப் பறிக்காததால் பாவம் புண்ணியம் பற்றிய அறிவே ஆதாம் ஏவாளிடம் சுத்தமாக இல்லை. ஏவாள் கையில் கிடைக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளை பிய்த்து ஆராய்கிறாள். ஆதாம் தோட்டத்திற்கே நெருப்பு வைக்கிறான். நேரம் செல்லச் செல்ல அவர்களது அட்டகாசங்கள் அதிகரிக்கின்றன. தோட்டத்தை விட்டு அவர்களை அனுப்பவும் முடியாது.

அப்போது பரமபிதாவின் புத்திரர் வருகிறார். "என்ன தந்தையே இப்படியாகி விட்டது, எப்போது இவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி, நான் சிலுவை சுமப்பது எல்லாம் நடக்கும்?" என்று அவர் தரப்புக்கு அவரும் கூற, பரம பிதா யோசனையில் ஆழ்கிறார். பிறகு வேறு வழியில்லாது புத்திரரிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அவரும் வேறு வழியின்றி அழகிய வாலிபன் உருவம் தரித்து, ஏவாளிடம் சென்று, அவள் மனதை மாற்றி அவளையும் ஆதாமையும் கனியைப் புசிக்கச் செய்கிறார். இப்போது பழைய ஏற்பாடுகள் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

இப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன். ஆகவே 100% அப்படியே கொடுத்தேன் எனக் கூறமுடியாது. ஆனால் பிளாட் அதுதான்.

இதே எழுத்தாளர் எழுதிய நாவல்தான் "Bridge on the river Quai". சர் அலெக் கினஸ் நடித்தது. அவரது பிரெஞ்சு நடை பிரமிக்கத் தக்கது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Posted by dondu(#11168674346665545885) at 10/06/2006 03:08:00 PM
Labels: நகைச்சுவை, விவாத மேடை
33 comments:
Dharumi said...
ஏதும் censor செய்து விட்டீர்களா என்ன? இளைஞன் எப்படி அதைச் சாதித்தான் என்றெல்லாம் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்?

October 06, 2006 3:26 PM
dondu(#4800161) said...
ஆம் தருமி அவர்களே. இங்கு புத்திரர் காலை நட்சத்திரத்தின் (லூசிஃபர்) வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் ஆசிரியர் கூற நினைத்த அபத்தம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 06, 2006 3:30 PM
Cervantes said...
கதை நன்றாக இருந்தது டோண்டு சார். உங்கள் பதிவுகளும் நன்றாக இருக்கின்றன.

கிருஷ்ணன்

October 06, 2006 5:34 PM
dondu(#4800161) said...
நன்றி செர்வாண்டெஸ். டான் க்விக்ஸோட், சான்கோ பான்ஷா மற்றும் ரோசினாந்தே நலமா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 06, 2006 5:42 PM
Avitam said...
நான் டோண்டுவின் பதிவில் பின்னுட்டியதால் என் பதிவில்

"குச்சிக்காரி தேவடியா மகனே" என்று ஆரம்பித்து உங்கள் தமிழ் புலமையை காட்டியிருக்கும் அருமை நண்பர் போலி அவர்களே, நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். உங்களுக்கும் குடும்பமும் பெண் குழந்தையும் உண்டாமே!!!!!
உங்களின் எந்த வார்த்தை வீச்சின் அர்த்ததிளும் அவர்களின் வாழ்க்கை அமையாதிருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்....

October 07, 2006 2:13 AM
dondu(#4800161) said...
"உங்களின் எந்த வார்த்தை வீச்சின் அர்த்ததிளும் அவர்களின் வாழ்க்கை அமையாதிருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்...."
ஆமென்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 7:25 AM
dinakar said...
Recently Ezil had a good debate about this topic. It is saddening to see people still believing in such cock and bull stories.

October 07, 2006 8:13 AM
சந்திரா said...
/அப்போது பரமைதாவின் புத்திரர் வருகிறார். "என்ன தந்தையே இப்படியாகி விட்டது, எப்போது இவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி, நான் சிலுவை சுமந்து எல்லாம் நடக்கும்" என்று அவர் தரப்புக்கு அவரும் கூற, பரம பிதா யோசனையில் ஆழ்கிறார். பிறகு வேறு வழியில்லாது புத்திரரிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அவரும் வேறு வழியின்றி அழகிய வாலிபன் உருவம் தரித்து, ஏவாளிடம் சென்று, அவள் மனதை மாற்றி அவளையும் ஆதாமையும் கனியைப் புசிக்கச் செய்கிறார்./

மனிதனை துன்புறுத்தி தோட்டத்தை விட்டு விரட்டுவதில் கடவுளுக்கு அப்படி என்ன பேரானந்தம்?

October 07, 2006 8:15 AM
நாட்டாமை said...
டோண்டு அவர்களே

நலமா? இந்தியாவுக்கு போய் சொந்த ஊரில் ஜாலியாக பொழுதை கழித்து விட்டு சென்ற வாரம் தான் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன். உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் ஒரு ரவுண்டு வரவேண்டும்.

October 07, 2006 8:22 AM
dondu(#4800161) said...
இப்படி பாருங்கள் சந்திரா அவர்களே. பிறத்தல், வாழ்தல், போராடுதல் கடைசியில் இறத்தல் எல்லாமே வாழ்க்கையின் தவிர்க்க முடியாத நிகழ்வுகள். ஈடன் தோட்டத்திலேயே இருப்பதுதான் நிஜமான கொடுமை. உண்மை கூறப்போனால் கடவுள் ஆதாம் ஏவாளுக்கு நன்மையே செய்திருக்கிறார். சரியோ தவறோ சுயமுயற்சியே மேல் என்பதை கூறியிருக்கிறார்.

அதைப்போய் ஒரு சோகமாக விவரிப்பது நமது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

ராமர் காட்டுக்கு போகாதிருந்தால் அவதார நோக்கமான ராவண வதம் நடந்திருக்குமா? அதற்குத்தானே அந்த முக்கியத் தருணத்தில் கைகேயியின் மூளையை மாயை மூடியது. பிறகு விழித்துக் கொண்ட அவள் கதறுவது கல்லையும் உருக்குமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 8:24 AM
venkateshsharma said...
//ஆதாம் மற்றும் ஏவாள் கடவுள் சொன்னபடி நடந்து அக்கனியை பறித்துண்ணாதிருந்தால் என்னவாகியிருக்கும்? சற்று கற்பனையை ஓட்டிப் பாருங்கள்.//

நாம் யாரும் பிறந்திருக்க மாட்டோம். ஆதாமும் ஏவாளும் ஜாலியாக ஏடனில் வாழ்ந்திருப்பார்கள். பிரசவ வலி என்பது இருந்திருக்காது.

October 07, 2006 8:26 AM
dondu(#4800161) said...
தினகர் அவர்களே, கட்டுகதையோ, இல்லையோ ஒரு நல்ல பாடம் தருகிறதல்லவா. பைபிள் கதைகள் பல உருவகக் கதைகள். நமது உபநிஷத்துகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 8:28 AM
venkateshsharma said...
//உண்மை கூறப்போனால் கடவுள் ஆதாம் ஏவாளுக்கு நன்மையே செய்திருக்கிறார். சரியோ தவறோ சுயமுயற்சியே மேல் என்பதை கூறியிருக்கிறார்.

அதைப்போய் ஒரு சோகமாக விவரிப்பது நமது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.//

அதை பாவம், கடவுளுக்கெதிரான குற்றம் என்று தான் பைபிள் சொல்கிறது. நீங்கள் சொல்வது போல் சுயமுயற்சி என்று பைபிள் சொல்லவில்லை. கேள்வி கேட்காது கீழ்ப்படியும் நம்பிக்கையை தான் பைபிளின் ஆண்டவர் வேண்டுகிறார்.

October 07, 2006 8:29 AM
dinakar said...
தினகர் அவர்களே, கட்டுகதையோ, இல்லையோ ஒரு நல்ல பாடம் தருகிறதல்லவா. பைபிள் கதைகள் பல உருவகக் கதைகள். நமது உபநிஷத்துகள் பற்றிக் கேட்கவே வேண்டாம்./

Nobody argues that upanishads should replace biology text books in schools. But many fundamentalistis argue that darwin should not be taught in schools. Religion should have no place in school text books.

October 07, 2006 8:32 AM
dondu(#4800161) said...
"நாம் யாரும் பிறந்திருக்க மாட்டோம். ஆதாமும் ஏவாளும் ஜாலியாக ஏடனில் வாழ்ந்திருப்பார்கள். பிரசவ வலி என்பது இருந்திருக்காது."
ரொம்ப போர் அடித்திருக்கும் வாழ்க்கை. சுஜாதா அவர்கள் எழுதியுள்ளார், தான் இறந்த பிறகு நரகத்துக்கு போக விரும்புவதாக. ஏனெனில் சொர்கத்தில் நடக்கும் அகண்ட பஜனை ஒரு நாளைக்கு மேல் சகித்துக் கொள்ளக் கூடியது இல்லை என்று. அதிலும் ஒரு பாயிண்ட் இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 8:34 AM
dondu(#4800161) said...
"அதை பாவம், கடவுளுக்கெதிரான குற்றம் என்று தான் பைபிள் சொல்கிறது. நீங்கள் சொல்வது போல் சுயமுயற்சி என்று பைபிள் சொல்லவில்லை."
நீங்கள் கூறுவதும் சரிதான். நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 8:35 AM
அறவாழி அந்தணன் said...
/ரொம்ப போர் அடித்திருக்கும் வாழ்க்கை. சுஜாதா அவர்கள் எழுதியுள்ளார், தான் இறந்த பிறகு நரகத்துக்கு போக விரும்புவதாக. ஏனெனில் சொர்கத்தில் நடக்கும் அகண்ட பஜனை ஒரு நாளைக்கு மேல் சகித்துக் கொள்ளக் கூடியது இல்லை என்று. அதிலும் ஒரு பாயிண்ட் இருக்கிறது./

சோ அவர்களும் நரகத்துக்கு தான் போக விரும்புவார். அங்கே தான் அனைத்து அரசியல்வாதிகளும் இருப்பார்கள்:-D அவர்கள் காலை வாரா விட்டால் அவருக்கு பொழுதே போகாது:-D

October 07, 2006 8:37 AM
dondu(#4800161) said...
"Nobody argues that upanishads should replace biology text books in schools. But many fundamentalistis argue that darwin should not be taught in schools. Religion should have no place in school text books."
Yes, that is true. Especially in the USA. Isaac Asimov has written paasionately against such backward views.

Regards,
Dondu N.Raghavan

October 07, 2006 8:40 AM
dondu(#4800161) said...
"சோ அவர்களும் நரகத்துக்கு தான் போக விரும்புவார். அங்கே தான் அனைத்து அரசியல்வாதிகளும் இருப்பார்கள்:-D அவர்கள் காலை வாரா விட்டால் அவருக்கு பொழுதே போகாது:-D"

அதானே, சோ அவர்களைப் பற்றி கூற மறந்து விட்டேனே.

சமீபத்தில் 1972-ல் பம்பாயில் அவர் நாடகங்கள் நடந்த போது எல்லா நாளும் போய் பார்த்தேன். அதில் ஒரு நாடகம், "இன்பக் கனா ஒன்று கண்டேன்". அதில் ஜாம்பஜார் ஜக்கு கெட்டப்பில் சோ வருவார். அவர் கனா காண ஆரம்பிப்பார்.

ஒரு தேசம். அதில் எல்லோரும் நல்லவர்கள். பொது நலனுக்காக அவரவருக்கு இடப்பட்ட வேலையை அவரவர் செய்வார்கள். தூய்ய வெள்ள உடை அணிந்து எப்போதை யாரை சந்தித்தாலும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டு செல்வார்கள். ஆடியன்ஸுக்கு ஒரே அதிர்ச்சி, சோ நாடகத்துக்குத்தான் வந்தோமா என்று.

பிறகு தேர்தல் வரும். பதவி மோகம் வரும். கூத்துக்கள் வரும். டாக்டர் பட்டம் எல்லாம் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வார்கள். ஒரே கலகலப்புத்தான் போங்கள்.

கடைசியில் சோ பிடிவாதமாக விழித்துக் கொள்ள, நாடக மனிதர்கள் மறைவார்கள். சோ மட்டும் தனியாக ஸ்டேஜில் புலம்புவார். ஆனால் கடைசியாக சுதாரித்து, எல்லோரும் நல்லவர்களாக இருப்பதாகக் காட்டிய காட்சிகள் எவ்வளவு போர் அடித்தன என்பதை அவருக்கே உரித்தானக் குரலில் கூறி வைக்க, பார்வையாளர்களின் கரகோஷத்தில் பம்பாய் ஷண்முகானந்தா ஹாலே அதிர்ந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 8:49 AM
bala said...
டோண்டு அவர்கள் சொன்னது,

"பிறகு தேர்தல் வரும். பதவி மோகம் வரும். கூத்துக்கள் வரும். டாக்டர் பட்டம் எல்லாம் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வார்கள். ஒரே கலகலப்புத்தான் போங்கள்."

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

இந்த பட்டம்,போஸ்டர்,கட் அவுட்,convoy of cars, கலாசாரம் ஏன்
தமிழ் நாட்டில் மட்டும் மிக அதிகமாக இருக்கு..இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?

பாலா

October 07, 2006 11:48 AM
Hariharan # 26491540 said...
//இந்த பட்டம்,போஸ்டர்,கட் அவுட்,convoy of cars, கலாசாரம் ஏன்
தமிழ் நாட்டில் மட்டும் மிக அதிகமாக இருக்கு..இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?//

டோண்டு சார்,

இதற்கு தாங்கள் விளக்கமாக பதிவிட வேண்டுகிறேன்.

தங்களுடைய கிப்பூர் பதிவில் பின்னுட்டம் போட்டதிற்காக போலி இழிபிறவி வந்து மனவக்கிரப் ஈ மெயில் இரண்டு போட்டது!

உங்கள் சமாதான முயற்சிக்கான பலன் புரிந்து கொண்டேன். மனநோயாளியான இழிபிறவி போலிப்பயல் திருந்துவதாகப் படவில்லை.

அன்புடன்

ஹரிஹரன்

October 07, 2006 12:14 PM
dondu(#4800161) said...
மனம் தளறாதீர்கள் ஹரிஹரன் அவர்களே. போலியார் சமாதானத்துக்கு வருவார் என்றுதான் நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் பந்தா கலாசாரத்தைப் பற்றி நீங்கள் சொன்னதுபோல பதிவு போட வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 12:22 PM
dondu(#4800161) said...
"இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?"

அடக்கம் அமரருள் உய்க்கும் என்று கூறினார் ஐயன் திருவள்ளுவர். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இம்மாதிரி அறிவுரைகள் தேவைப்பட்டிருக்கின்றன அக்காலத்திலேயே. ஆகவேதான் ஐயனும் அதை வலியுறுத்தினார்.

தமிழக மக்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். பொதுவாகவே தென்னிந்தியர்கள் அப்படித்தான், கேரளத்தவரைத் தவிர. அங்கெல்லாம் பிரேம் நசீர் போன்றவர்கள் தேர்தலில் நின்றிருந்தால் டெபாஸிட் கூட கிடைத்திராது. மற்ற 3 மானிலத்தவரும் 1000 கார்கள், வண்டி வண்டியாக மாலைகள் எல்லாவற்றுக்கும் மட்டுமே மயங்குகின்றனர். அவை இல்லாவிட்டால் சீந்துவதே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 07, 2006 12:27 PM
Cervantes said...
"டான் க்விக்ஸோட், சான்கோ பான்ஷா மற்றும் ரோசினாந்தே நலமா."

நீங்களும் டான் க்விக்ஸோட் பற்றி படித்திருக்கிறீர்களா? அவரைப் பற்றிப் பேசும்போது தீமைக்கு எதிராக யுத்தம் செய்தால் மட்டும் போதாது. அதையும் புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் பேராசிரியர் தெய்வப்பிச்சை கூறியது ஞாபகத்துக்கு வந்தது.

கிருஷ்ணன்

October 08, 2006 7:16 PM
dondu(#4800161) said...
டான் க்விக்ஸோட் ராட்சசக் காற்றாடிகளை அரக்கர்கள் என நினைத்து அதனுடன் மோதினான். அவன் ஒரு சுவாரசியமான முட்டாள். எது எப்படியாயியினும் அவன் தைரியத்தை பாராட்டுவோம்.

அவனை வைத்துத்தான் tilting at the windmills என்ற ஆங்கிலச் சொற்றொடர் உருவாயிற்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 08, 2006 10:25 PM
Muse (# 5279076) said...
அமைதியான முறையில் டாவின்ஸி கோட் படத்தை தடை செய்வதில் வெற்றி பெற்ற நாங்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடும் புத்தகங்களையும், ப்ளாக்குகளையும் தடை செய்யுமாறு போராடப்போகிறோம்.

நாங்கள் சொல்லுவதைக் கேட்காவிட்டால்..........

அப்புறம் மற்றொரு அமைதி மார்க்கம்போல நாங்களும் மாறுவோம்.

October 09, 2006 1:49 PM
Muse (# 5279076) said...
இந்த பட்டம்,போஸ்டர்,கட் அவுட்,convoy of cars, கலாசாரம் ஏன்
தமிழ் நாட்டில் மட்டும் மிக அதிகமாக இருக்கு..இதற்க்கு மரபியல்/பரிணாமவளர்ச்சி ரீதியா ஏதாவது விளக்கம் இருக்கிறதா?


ரிச்சர்ட் டாவ்க்கின்ஸ் அப்படித்தான் கூறுகிறார்.

October 09, 2006 2:04 PM
dondu(#4800161) said...
"அப்புறம் மற்றொரு அமைதி மார்க்கம்போல நாங்களும் மாறுவோம்."
:)))))))))))))

ஆன்புடன்,
டோண்டு ராகவன்

October 09, 2006 2:10 PM
dondu(#4800161) said...
"ரிச்சர்ட் டாவ்க்கின்ஸ் அப்படித்தான் கூறுகிறார்."
பெயரை ஆங்கில எழுத்தில் கொடுத்தால் கூகளண்ணன் துணை நாடுதல் எளிதாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 09, 2006 2:11 PM
Muse (# 5279076) said...
ஆஸிரியர் பெயர்: Richard Dawkins

புத்தகத்தின் பெயர்: The Selfish Gene

October 09, 2006 6:52 PM
dondu(#4800161) said...
மிக்க நன்றி ம்யூஸ் அவர்களே. முடிந்தால் புத்தகத்தைப் பெற முயற்சிக்கிறேன்.

"சுயநலம், ஒரு நல்ல குணம்" என்று பொருள்படும் தலைப்பில் ஏய்ன் ரேண்ட் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 09, 2006 7:17 PM
bala said...
//மிக்க நன்றி ம்யூஸ் அவர்களே. முடிந்தால் புத்தகத்தைப் பெற முயற்சிக்கிறேன்.

"சுயநலம், ஒரு நல்ல குணம்" என்று பொருள்படும் தலைப்பில் ஏய்ன் ரேண்ட் எழுதியதைப் படித்திருக்கிறீர்களா//

Muse Thanks for the info..will try to read..

bala

October 10, 2006 5:15 PM
Anonymous said...
The idea of the Son of God being forced to play the role of Lucifer, the Morning Star is just mind-boggling.

I have read that God's most favorite Archangel was this Lucifer. Another absurdity, which makes us think. There are wheels within wheels than?

Thangamma

Read more...

காஷ்மீரும் ஒரிஸ்ஸாவும்

ஒரிஸ்ஸாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை காஷ்மீர் இந்துக்கள் மீதும் பிரதமர் காட்ட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஒரிஸ்ஸாவில் கிருஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்டவசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.

அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரிஸ்ஸாவில் மத பிரச்சினையின்போது பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது.அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5,000 ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.

1990களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச் சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள்.அங்கிருந்து தப்பிய சுமார் 3.5 லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படைவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.ஒரிஸ்ஸாவில் கிருஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.எனவே, ஒரிஸ்ஸாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும்.

எனவே, பிரதமர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம்.காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிஸ்ஸாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Thanks : Thatstamil.com

Read more...

தன்வினை தன்னைச் சுடும்...!

தன்வினை தன்னைச் சுடும்...!

அரசு கேபிள் டிவிக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சன் டிவிக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு கேபிள் டிவிக்கு சேனல்களை தராமல் சன் டிவி தாமதப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் வரும் 15ந் தேதி முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு கேபிள் டிவி இயங்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேபிள் டிவி குறித்து மதுரையில் உள்ள ராயல் கேபிள் விஷன் அறிக்கை கொடுப்பதும், அதற்கு சன் டிவி நிறுவனத்தினர் பதில் அறிக்கை கொடுப்பதும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் உண்மை நிலை புரியாமல் இருப்பதும் தொடர்வது கண்டு அரசின் சார்பில் அதற்கான விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் இதை யார் நடத்துகிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. அரசின் சார்பில் ஒரு நிறுவனம் இந்த ஆட்சியிலே தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில்கூட இதுபோன்ற அரசு கேபிள் நிறுவனம் தொடங்க முற்பட்ட போது, இதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. மத்திய அரசுதான் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றுதான் திமுக சார்பில் கருத்து கூறப்பட்டது.

போன ஆட்சியில் தயாநிதி மாறனுடன் நீங்க கவர்னரை ஏன் சந்தித்தீர்கள் ?
தற்போதுகூட மாநில அரசு கேபிள் நிறுவனத்தை தொடங்குவதற்கான அனுமதியை முறைப்படி மத்திய அரசிடம் விண்ணப்பித்து சட்டப்படி பெற்றுத்தான் இதனை நடத்த தொடங்கி உள்ளது.

அரசு கேபிள் நிறுவனம் தற்போது தஞ்சையிலும், கோவையிலும் தொடங்கப்பட்டு அதன் மூலமாக பல மாவட்டங்கள் இந்த வசதியை பெற்றுள்ளன. அரசின் மூலமாக கேபிள் இணைப்பை பெற்றவர்கள் குறைந்த கட்டணத் தொகையை செலுத்தினால் போதும். எனவே மக்களுக்கு சலுகை விலையில் பாரபட்சமற்ற முறையில் நல்லது செய்ய வேண்டுமென்ற சீரிய குறிக்கோளோடுதான் இந்த அரசு நிறுவனம் செயல்பட தொடங்கி உள்ளது.

அரசு ஒரு கேபிள் நிறுவனத்தை தொடங்கும்போது, அதற்கு அனைத்து டிவிகளும் ஒத்துழைப்பு நல்குவது தானே முறை. மாறாக நாங்கள் ஏகபோக உரிமையாகத்தான் இருப்போம். யார் கேட்டாலும் இணைப்பைத் தரமாட்டோம். கடிதம் மூலம் பதில் எழுதி இழுத்தடிப்போம் என்பதை எல்லாம் விதண்டாவாதமே தவிர வேறல்ல.

பேச்சு வார்த்தை என்றால் எங்களுக்கு புரியாதா ? காவிரி, ஓக்கெனக்கல் என்று எவ்வளவு பேச்சு வார்த்தை பார்த்திருக்கிறோம்.

நேற்று சன் டிவியில் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சன் டிவி தன் சேனல்களை தர மறுப்பதாக கூறுவது அப்பட்டமான பொய் என்று கூறி இருக்கின்றது. இணைப்பு கொடுக்கவில்லையாம், ஆனால் அதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக் கிறார்களாம். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்றால் இன்னும் இணைப்பு கொடுக்க வில்லை என்பது தானே உண்மை. அதிலே என்ன பொய் இருக்கிறது.

பேச்சுவார்த்தை நடந்ததற்காக ஒரு ஆதாரம் காட்டியிருக்கிறார்கள். அதிலே 18.08.2008 அன்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கடிதம் எழுத 10 நாள், அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்த 10 நாள் என்று நாளை கடத்துவது ஏமாற்றும் செயல்தானே?

மற்றவர்கள் நடத்தும் ஜெயா டிவி, மக்கள் டிவி ஆகியவை அரசு டிவிக்கு ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், ஒரு நிறுவனம் மட்டும் குதர்க்கம் செய்வது தாமதப்படுத்தும் நடவடிக்கையே தவிர, கடைசி வரை இணைப்பு கொடுக்காமல் இருக்க முடியாது.

ஏதாவது வம்பு வளர்க்க வேண்டும் என்று நினைப்பது உள்ளபடியே யார் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? இது ஜனநாயக நாடு. யார் வேண்டு மானாலும் தொழில் தொடங்கலாம்.

அவ்வாறு அரசாங்கமே மக்கள் நலனுக்காக இந்த செயலை ஆற்றிட முற்பட்டால் நாங்கள் எங்கள் சேனல்களை வழங்க மாட்டோம் என்று கூறி பிரச்சனையை ஏற்படுத்துவது யார்? தேவை யில்லாமல் இடைஞ்சலையும், தாமதத்தையும் ஏற்படுத்தி எப்படியாவது குழப்பத்தை உருவாக்க நினைப்பது யார்?

என்னைப் பொறுத்தவரை காவல் துறை அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுரைகள் வழங்கி உள்ளேன். இதில் சட்டம்ஒழுங்குக்கு கெடுதல் ஏற்படுத்தும் எண்ணத்துடன் யார் செயல்பட்டாலோ அல்லது தூண்டி விட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.

ஒருவர் இன்னொரு நிறுவனத்தின் கம்பியை வெட்டுவது என்ற புகார் எந்த தரப்பிலிருந்து வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு பாரபட்சமற்ற நேர்மையான அரசுதான் முக்கியமே தவிர, சொந்தம் என்பதெல்லாம் எப்போதும் கிடையாது.

அரசு தொலைக்காட்சிக்கு சன் டிவி மட்டும் சேனல் வழங்காமல் இல்லை. ஸ்டார், சோனி, ஜி குழுமங்களும் அரசு டிவிக்கு சேனல் தரவில்லை என்று பெரிய விளக்கத்தை அந்த நிறுவனம் தனது அறிக்கையிலே கூறியிருக்கிறது.

அவர்கள் குறிப்பிடுகின்ற இந்த ஒரு சில நிறுவனங்கள் ஜி குழுமத்தை தவிர சன் தொலைக்காட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற டிவிக்கள் என்பதை தொழில் புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

விளக்கத்துக்கு நன்றி

ஜி குழுமத்தின் சேனல்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சையில் ஒளிபரப்பி வருகிறது. ஒன்றுமறியாத பாமர மக்களை இப்படியெல்லாம் எழுதி ஏமாற்றலாம். அரசு கேபிளுக்காக வக்காலத்து வாங்கும் இவர்கள் அங்கே ஆர்சிவியை ஆரம்பித்து அரசு கேபிள் வராமல் தடுக்க முனைவது ஏன்? என்று சன் டிவி கேட்டுள்ளது.

ஜனநாயக உணர்வுள்ள யாரும் அரசு கேபிள் டிவிக்காக வக்காலத்து வாங்கத்தான் செய்வார்கள். அரசை பகையாக நினைப்பவர்கள்தான் வக்காலத்து வாங்குவதாக எழுத துணிவார்கள்.

ஆர்சிவியை ஆரம்பித்து அரசு கேபிள் வராமல் தடுக்க அவர்கள் முயற்சிப்பதாக இவர்கள்தான் இட்டுக்கட்டி கூறுகிறார்களே தவிர, ஆர்சிவியாக இருந்தாலும் சரி, வேறு எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி அவர்கள் அரசு நிறுவனத்தோடு ஒத்துழைத்துத்தான் செயலாற்ற போகிறார்கள். அப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல் மதுரையில் ஏதோ அரசு டிவி நிறுவனமே வராது என்பது போல நினைத்துக் கொண்டு அறிக்கை விட்டுள்ளார்கள்.

மதுரை உட்பட, சென்னை உட்பட, நெல்லை உட்பட அனைத்து இடங்களிலும் வரும் 15ம் தேதி முதல் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட உள்ளது. அரசு கேபிள் நிறுவனத்துடன் ஒத்துழைப்புடன் மற்ற நிறுவனங்கள் எல்லாம் பணியாற்ற போகின்றன.

இதை எல்லாம் மறைத்துவிட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிற நோக்கத்தை அரசு கேபிள் டிவி மீது அவதூறு பரப்புபவர்கள் சட்டப்படி அணுக வேண்டிய நிலைமை தவிர்க்க முடியாதது என்று சுட்டிக் காட்டுவது என் கடமை என்பதால் இந்த அறிக்கை வெளியிட தேவைப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாட்டில் இப்ப இது தான் பெரிய பிரச்சனை


Posted by IdlyVadai

Read more...

கண்ணீரும் புன்னகையும்

>> Thursday, September 4, 2008



என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'



விலை: ரூ.70

ISBN எண்: 81-8368-098-4

Read more...

பாகவத புராணம்



அறுபதடி உயர ஆண்டெனா கொடைக்கானலை குறிபார்க்க முடியாமல் இரைச்சலை அனுப்பிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிய டி.வியில் அரை மணி நேரம் கூட தூர்தர்ஷன் வராததால் கவலையோடு உட்கார்ந்திருந்தார் அப்பா. தம்பி வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுக்க, சுவரேறி ஆண்டெனாவை 360 டிகிரி மெதுவாக சுழற்றியபோது சிக்கியதுதான் ரூபாவாஹினி! வித்தியாசமான தமிழாக இருந்தாலும் தூர்தர்ஷனை விட துல்லியமாகவே இருந்தது. செய்தியறிக்கை முடிந்து ஏதோ ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கு பின் வந்ததுதான், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?'. துள்ளிக்கொண்டு முன்னே வந்த பாட்டி சொன்னாள், 'அட, பாகவதரு!'

வெள்ளைக்குதிரை. அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள்.

இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி. ஆனால் உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம். 'பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்' என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் பல.

எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் முதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று.

*ஒரு கொலை வழக்கு. ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை சூன்யமாக்கிய வழக்கு. நடந்தது என்ன? பாகவதர் குற்றவாளியா? நிரபராதியா? தொலைத்த இடத்திலேயே தன் புகழைத் தேடிய பாகவருக்கு, மீண்டும் அது கிடைக்காமல் போனது ஏன்?

'பாகவதரைப் போல் வாழ்ந்தவரும் கிடையாது; அவரைப் போல் கஷ்டப்பட்டவரும் கிடையாது' கேட்டுக் கேட்டு புளித்துப் போன டயலாக். பாகவதர் படத்தை பார்த்திராதவர்கள் கூட சொல்லும் டயலாக். அப்படியென்னதான் வாழ்ந்து கெட்டார்? பாகதவரின் படத்தை விட சுவராசியமானது அவரது பர்சனல் கதைதான்.

எல்லா சூப்பர் ஸ்டார்களையும் போலவே வறுமைதான் பாகவதரையும் சினிமாவுக்கு வரவழைத்தது. வெறும் பாட்டு மட்டும் பாடிக்கொண்டிருந்தால் பைசா தேறாது என்பதால்தான் நாடகமேடைக்கு வந்தார். கிட்டப்பாவுக்கு இணையான வரவேற்பு கிடைத்ததும், சினிமாவுலகம் சிவப்பு கம்பளத்தை பாகவதர் பக்கமாய் விரித்து வைத்தது. பாட்டோ, நாடகமோ, சினிமாவோ ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தால் போதும்! மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள் கொண்ட பெரிய குடும்பத்தை சமாளிக்க பாகவதருக்கு பணம் தேவையாக இருந்தது. பெரிய பெரிய லட்சியமெல்லாமல் மனதில் இல்லை. லட்சியமாவது புடலாங்காயாவது?



பாகவதரை சினிமாவுலகம் கைவிடவில்லை. ஒரு துளி வியர்வை கூட சிந்தாமல் ஓராயிரம் தங்கக்காசுகள் கிடைத்தது. வெறும் பதிநான்கு படங்களில் தமிழ் சினிமாவையும் வாழ வைத்து, ஐந்து தலைமுறைக்கான சொத்தையும் பாகதவரால் சேர்த்து வைத்துக்கொள்ள முடிந்தது. பாடல் எழுதிய பாபநாசம் சிவனும், வசனம் எழுதிய இளங்கோவனும் பாகவதரை தமிழ் சினிமாவில் உச்சியிலிருந்து தரையிறங்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

கொஞ்சம் பக்தி, நிறைய பாடல்கள். பாட்டைத் தவிர பாகவதர் படத்திலிருக்கும் இன்னொரு பொதுவான விஷயம் தேவதாசிகள். ஏதாவது ஒரு தாசியுடன் கண்ணியமான உறவு, கட்டிய கணவனை இப்படியா நடத்துவது என்று மனைவியை கடிந்து கொள்வது என பாகவதரின் படைப்புகள் நிச்சயம் பார்முலா படங்கள்தான். பல படங்களில் பாகவதர் திறந்த மேனியாக நிற்பதும் கூட கமர்ஷியல் கட்டாயங்களுக்காகத்தான்.

திருநீலகண்டரை தவிர்த்துவிட்டு மற்ற படங்களில் பாகவதரின் நடிப்பை எம்.ஜி.ஆரின் நடிப்புத்திறமையோடு ஒப்பிட்டு, எம்.ஜி.ஆரை மிகச்சிறந்த நடிகர் என்று சுலபமாக நிரூபித்துவிடலாம். என்னதான் சின்னப்பாவுக்கு அசாத்திய திறமைகள் இருந்தாலும், அதிர்ஷ்டக்காற்று பாகவதர் பக்கம்தான் இருந்தது. சாஸ்திரீய சங்கீதத்தை சாமானியனும் முணுமுணுக்க வைத்த பாகதவரின் சாதனையை யாராலும் மறுக்கவே முடியாது. அசுர சாதகம் செய்யும் சாஸ்தீரிய பாடகர்களையே மிரள வைக்கும் 'தீன கருணாகரனே...' பாடல் ஒரு சின்ன உதாரணம்தான்.

பவளக்கொடியில் ஆரம்பித்த பாகவதரின் ஸ்கோர், சிந்தாமணி, அம்பிகாபதிக்கு பின்னர் வேகமெடுத்து ஹரிதாஸ் மூலம் உச்சிக்குப் போனது. ஒரு சமான்ய மனிதனாய் சகல அபிலாஷைகளுக்கும் இடம் கொடுத்து, வாழ்க்கையைத் தொலைத்து கிள¨மாக்ஸில் பாகதவர் முன் கடவுளர்கள் பிரத்யட்சமாகும் படங்களைத்தான் மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு டவுனுக்குப் போய், பார்த்துப் பார்த்து பரவசப்பட்டு போனார்கள்.



பாகவதரின் வீழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன்தான் காரணம் என்று சொன்னாலும் சரித்திரம் மறைத்த சம்பவங்கள் நிறைய. தங்க தாம்பாளத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாகவதருக்கு, சம்பாதித்த பணத்தை எப்படி, எங்கே முதலீடு செய்வது பத்திரமாக வைத்திருக்க தெரியவில்லை அல்லது முடியவில்லை. அந்த நாள், பராசக்தி, சந்திரலேகா என்று தமிழ் சினிமா வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்த காலத்தில் மக்களின் பல்ஸ் தெரியாமல் பாட்டு கதம்பமான அதே பார்முலா படங்களை சொந்த பேனரில் சுட்டு தனது கையையும் சுட்டுக்கொண்டிருந்தார். தொலைத்த இடத்திலேயே பணத்தை தேடித் தேடி நிம்மதியைத் தொலைத்து, அடையாளத்தை தொலைத்து கடைசியில் வாழ்க்கையை தொலைத்துவிட்டவர்.

இரண்டு பந்துகள் சிக்ஸருக்கு பறந்ததும் மூன்றாவது பந்தை வெகு கவனமாக எதிர்கொள்ளும் கிரிக்கெட்டரின் மனநிலைதான் எனக்கும். 'கண்ணீரும் புன்னகையும்' என்று சந்திரபாபுவின் சரித்திரத்தை எழுதிய முகிலும், சிரிப்பு டாக்டர் என்று என்.எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கையை எழுதிய முத்துராமனும் உதவிக்கு வந்தார்கள். பாகதவர் சம்பந்தப்பட்ட தகவல்களை தேடிக்கண்டுபிடித்து ஒரு மூட்டையாக கட்டிக் கொடுத்தனுப்பிய ஜெயபாபுவுக்கு முதல் நன்றி. சந்திப் பிழையிலிருந்து சகல பிழைகளையும் செய்து வைத்தாலும் சளைக்காமல் போராடி புரூப் பார்த்த முகிலுக்கு இரண்டாவது நன்றி. சினிமாவே பிடிக்காது என்று சொல்லிவிட்டு சிந்தாமணியில் ஆரம்பித்து சிவகவி, திருநீலகண்டர், அசோக்குமார், ஹரிதாஸ் என சிடிபிளேயரே கதியாக உட்கார்ந்திருந்தவனை அதிகயமாக பார்த்துக்கொண்டே கடைசிவரை பொறுமையிழக்காமல் இருந்த மனைவிக்கு மகத்தான நன்றி!

பெயர் : பாகவதர்

நூலாசிரியர் : ஜெ. ராம்கி

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.

விலை ரூ. 70/- பக்கங்கள் 143

புத்தகம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு

http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bio&itemid=381

கதை உங்களுக்காக....நன்றி சாரு

http://charuonline.com/oldarticls/kp222.html

Read more...

ஹை ஜாலி கலாட்டா

விவேக், வடிவேல், பார்த்திபன் போன்ற அன்பர்கள் அடிக்கடி சின்னத் திரையில் எட்டிப்பார்க்கும் பெரிய நட்சத்திரங்களைப் போல இணையத்திலும் எட்டிப் பார்த்ததால் பிரச்சினை உருவாகின்றது. கோலிவுட் காமெடி டிராக்கை வலைப்பூக்களின் காமெடி சூப்பராக இருப்பதால் கிர்ரடித்துப் போகின்றது கோடம்பாக்கம். ஒன்று காமெடி வலைப்பதிவர்களை கடத்துவது, இல்லாவிடில் கவிழ்ப்பது போன்ற அஜெண்டாவுடன் நீலாங்கரை பங்களா ஒன்றில் ரகஸியா ஸாரி ரகஸிய கூட்டம் கூடுகின்றது. மேற்கொண்டு:

கவுண்டமணி நாம்பாட்டுக்கு ஏதோ போண்டாத்தலையா, பன்னித்தலையா, ஈஸ்வரன் கோயில் எண்ணெச்சட்டி'ன்னு கலக்கல் காமெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா 'ஏர்போர்ட் தலையன்'ன்னு டெக்னிகலா ப்ளாக்ல எழுதுறானுங்களாம். இனிமே நம்ம மார்க்கெட்டு அவுட்டா?
விவேக் நேத்திக்கு இணைய அரங்கம் மீட்டிங்கிக்குப் போனேண்டா. இலவசக்கொத்தனாராம். ஏம்ப்பா வாஸ்துபடி இலவசமா கட்டித் தருவியான்னு கேக்கலாமுன்னு தோணிச்சி. அவிங்கெல்லாம் அமெரிக்கா மாதிரி ஸ்பீடா போறானுங்கப்பா
வடிவேலு அந்தக்கதய ஏன் கேக்குற? வருத்தப்படாத வாலிப சங்கம்ன்னு வைச்சிக்கிட்டு இவனுங்க பண்ர அலப்பர தாங்க முடியலீப்பா. யாரோ கைப்புள்ளையாம். நமக்கே பாடம் சொல்லித் தரானுங்கப்பா
விவேக் திராவிடத்தையும் விடாம சங்கம் வைச்சு சங்க அறுக்குறானுங்க. சீரியஸா காமெடி பண்றாங்கப்பா. ஆ வூன்னா அப்யூஸ்னு அவங்க விடற அலறலக் கேட்டாக்கா நரசிம்மராவ் ஆவி கூட வாய் தொறந்து நல்லா சிரிக்கும்ப்பா
கருணாதாஸ் ஜொள்ளுப்பாண்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் பாஸ். "கட்டை"ங்ற டைட்டிலுலக் கூட பட்டையக் கெளப்புது பாஸ். அந்தாளோட அக்ரீமெண்ட் போட்டாலே பல படத்துக்கு பஞ்சர் டயலாக் எழுதலாம் பாஸ்
கவுண்டமணி இங்லீஷ் படத்துல அடிச்ச காப்பி எல்லாம் பத்தாதுன்னு இப்போ இண்டெர்நெட்டையும் இந்த நாயி உட மாட்டேங்குது பாரு. கருணா கம்முன்னு கெடக்கவே மாட்டியா
கருணாதாஸ் பாஸ் உன்னால பீட் பண்ண முடியலேன்னா ஜாயின் பண்ணிக்கோ
கவுண்டமணி இங்லீஷ் பழமொழி இன்னொரு தடவை சொன்னா பல்லைப் பேத்துப்புடுவேன்.
எஸ்ஜே சூர்யா டபுள் மீனிங்ல நான் டயலாக் பேசுறேன். ஆனா நெட்டுலே பாட்டையே பிட்டுப் பாட்டாப் போட்டு கில்மா கெளப்புறாங்கலாமே. இந்த ரேஞ்சுல போனா என்னோட பாபுலாரிட்டி என்னாவது?
செந்தில் ஓ போலி சிவஞானம்ஜி பிளாக்கச் சொல்றீங்களா?
கவுண்டமணிடேய் என்னடா இங்லீஷ்ல என்னென்னமோ கெட்ட கெட்ட வார்த்தையா சொல்ற... ஒண்ணுமே புரியலியேடா...
செந்தில் இப்பெல்லாம் ஒரிஜினல் ஆளுங்களுக்கு மேல போலிங்களுக்குத்தான் கிராக்கி ஜாஸ்திண்ணே! உதாரணமா போலி டோண்டுவை எடுத்துக்கங்க...
எஸ்ஜே அடப்பாவிங்களா அதையும் அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? என்னோட அடுத்த படத்துக்கு அங்கேருந்துதான் அஸ்திவாரம் போடலாமுன்னு இருந்தேன். அந்த ஐடியாவ ஆட்டங் காண வைச்சிடாதீங்கப்பா...
வடிவேலு ஓஹோ அதான் திருமகன்லேயே "பானை" ஒடைக்கிற வசனம் வந்துச்சா?
எச்ஜே சூர்யா அதுசரி ஒரு போலிப் பதிவைக் கூட உட்டு வெக்கலன்னு சொல்லு
கவுண்டமணி ஒரிஜினல் டூப்ளிகேட்டுன்னு டாஸ்மாக் சரக்குலதான் கேள்விப்பட்டு இருக்கேன். இப்போ இண்டெர்நெட் சரக்குலேயுமா?
செந்தில் என்னண்ணே நீங்க இன்னும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கே இன்னும் வராம இருக்கீங்க. பதிவுல மட்டுமில்ல கமெண்டுப் பொட்டியிலேயும் காமெடி பண்றாய்ங்க
விவேக் என்னாது கமெண்ட்டுப் பொட்டியிலேயுமா? (ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் போங்க விவேக். ப்ரோபைல்ல கூட போலியிருக்குது
விவேக் என்னாது ப்ரோபைல்ல கூட போலியா? (மீண்டும் ஆச்சர்யப்படுகின்றார்)
செந்தில் நீங்க வெறும் காமெடியைத்தான் பாக்குறீங்க. ஆனாப் பாருங்க சீரியஸ் படத்தையே நெட்டுலேர்ந்து சுடலாம். இப்போ விஜயகாந்த வைச்சி "கச்சத்தீவு ராசா"ன்னு படமெடுத்தீங்கன்னு வைங்க. வில்லனா நெப்போலியனப் போட்டுட்டு "ஏண்டா இந்திய மீனவனை இலங்கை கப்பல் சுடும்போது இண்டியா நேவி என்னா மசுரு புடுங்கிக்கிட்டு இருந்துச்சா?"ன்னு கேப்பாரு. உடனே விஜயகாந்த் பொங்கிப் போயி "இந்திய இலங்கை கடலெல்லை தெரியுமா உனக்கு? ஏழு கடல்மைல்ல எட்டிப் பாக்கலாம் இலங்கையை. இங்க இருக்குற டிராலர் எண்ணிக்கை 3,036. மீனவர்கள் என்ணிக்கை 30,000. எழுபதிலேர்ந்து சுட்டதுல செத்தது 113 பேர். படுகாயமடைஞ்சது 1,005. ரெண்டு திராவிடக் கழகங்களும் கஜானாவை காலி செய்யிறதுலதான் இருந்துச்சு" இப்பிடியெல்லா விஷயத்தையும் நெட்டுல கொட்டியிருக்கானுங்க.
கவுண்டமணி இதையெல்லாம் எழுதுறானுங்களா? அவனுங்க என்ன வேலை வெட்டி இல்லாதவனுங்களா?
செந்தில் இதுல குசும்பு பண்றவனுங்களுக்கும் பஞ்சமே இல்ல. கார்த்திக் ரமாஸ்ன்னு ஒருத்தர் இதையே காமெடி பண்ணி "விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தா மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கே செல்ல வேண்டாம். நாங்களே மீன்களைப் பிடித்து வீட்டுக்கு வீடு அளிப்போம்"ன்னு சொல்வாரா அப்பிடின்னு கோக்குமாக்கு கேள்வி கேப்பாரு.
செந்தில்படத்துக்கு கோக்குமாக்கா டைட்டில் வைக்கணுமின்னா லக்கிலுக்கு'ன்னு ஒருத்தர் இருக்காரு. சாதிவெறியன்னு பிட்டப் போட்டு பின்னியெடுப்பாரு. அப்பிடியே தூய தமிழ்ல பேரு வைக்கணுமின்னா இராமகி இருக்காரு. திருட்டு திகிரியை ஒழிக்க வேண்டுமென்றால்...
கவுண்டமணி என்னாது திருட்டு திகிரியா?
செந்தில் அட ஆமாங்க திகிரின்னா இராமகி பாஷையில 'சிடி'ங்க
கவுண்டமணி அடங்கொக்காமக்கா இப்பிடியெல்லாம் கூட மேட்டரு நெட்டுல நடக்குதா?
வடிவேலு பெரியார் படத்தையே நெட்லேர்ந்து ஐடியாவப் பிக்கப் பண்ற அளவுக்கு மேட்டரு கொட்டிக் கெடக்குதாமே? மெய்யாலுமாவே? இப்பிடியெல்லாம் கூட மூலையில உக்காந்து சிந்திப்பாய்ங்களோ?
செந்தில்அண்ணே இப்ப எடுக்கிறாங்களே தசாவதாரம் அந்த ஐடியா கூட நெட்டுலதான் கெடைச்சதாம். உபயம் ஏதோ பெயரிலின்னு சொல்றாங்க...அவரு அத்தினி வேஷம் கட்டி அடிக்கிறவராம்
கவுண்டமணி ஆன்ன்ங் அந்தக் கதய இங்க உடாத அப்பனே... நவராத்திரி படம் வந்தப்ப உங்க நெட்டு இருந்துச்சாம் காட்டியும். அப்பாவியா வாயத் தொறந்தா கொசு வலம் வந்துட்டுப் போயிடுவீங்களே
செந்தில் அண்ணே கொசுன்ன உடனே ஞாபகம் வந்துடுச்சி. கொசு புடுங்கின்னு ஒரு ஆளு இருக்காரு. வண்டை வண்டையா திட்டறதுக்கு ஐடியா வேணுமின்னா அங்க போங்க.
கவுண்டமணிஎன்னாது கொசு புடுங்கியா? பேரு சூப்பரா இருக்கே
விவேக்இப்ப ஒண்ணு எனக்குப் புரியுது. காமெடியோ, டிராஜெடியோ நெட்டுல உள்ளவங்கள அடிச்சுக்க முடியாது. அதுனால கூட்டணியைப் போடு. நான் திராவிடம், தமிழ், இலவசம் மாதிரி ஆளுங்கள கவர் பண்றேன். மகளிர் அணியை கோவை சரளா பாத்துக்கட்டும். கொசுபுடுங்கி, லக்கிலுக் மாதிரி வெவகாரமான ஆளுங்கள கவனிக்கட்டும். வடிவேலு கைப்புள்ளைய கணக்கு பண்ணட்டும். குசும்பு புடிச்சவங்களை கருணாஸ் கவனிக்கட்டும்.
எஸ்ஜே சூர்யாஅப்ப நானு என்னா செய்யட்டும்?
விவேக் ஹஹ்ஹஹ்ஹா உங்களுக்குத்தான் ஏகப்பட்ட போலிகளைக் கவனிக்க வேண்டியதிருக்கே. கெட் செட் கோ...

(ஆளு புடிக்க சினிமாக்காரங்க வாராஹப்பு. நான் சைலண்டாய் எஸ்கேப் :-)
Posted by குசும்பன் at 11:43 PM 5 comments Links to this post
Labels: அராத்து, சினிமா, ஜோக், வம்பு
Tuesday, March 13, 2007
இணைய அரங்கம்
இப்போ சன் டிவியில அரட்டை அரங்கத்தை விஜய.டி.ராஜேந்தர் நடத்த, அவரை கம்மென்று கவிழ்க்க இணைய அரங்கத்திற்கு அழைத்து வந்துவிட்டோம். அவரே உச்சபட்ச காமெடி என்பதால் கூட சைடு கிக்குகள் இல்லையென்றாலும் விவேக் அவ்வப்போது தோன்றுவாரென்று வாசகர்களை எச்சரிக்கின்றோம்.

ராஜேந்தர்:
இண்டெர் நெட்டுங்றது மாயவலை
இங்கன எழுதுறது தனிகலை
அவனவன் வைப்பான் அணுஉலை
பீச்சிலேயும் எடுப்பான் சூப்பர்சிலை

ஏ திந்தானக்கடி ஏ திந்தானக்கடி

என்று பாட ஸ்டேடியமே திகிலடிக்கின்றது.

ராஜேந்தர்: வாங்க வாங்க வந்த எல்லோருக்கும் வணக்கம். இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டே இண்டர் நெட்டு தான். எவனாலயும் ஈகோ டிரிப் அடிக்காம இருக்கவே முடியாது. இங்க ட்ரிப் போயி ட்ரிப்ஸ் ஏத்துற நெலமைக்கு வந்தவங்களும் இருக்காங்க. எட்டிப் பாத்துட்டு செட்டிலானவங்களும் இருக்காங்க. சுத்தி சுளுக்கெடுத்தவங்களும் இருக்காங்க. சும்மா இருக்கறவங்களும் இருக்காங்க. இதோ நானும் இருக்கேன். ப்ளாக், வலைப்பதிவு, வலைப்பூ அவசியமா? அத்தியாவசியமா? இல்லை அல்லக்கைகள் போடும் அலப்பற ஆட்டமா? இணையத்துலயும் இலக்கியம் வருமா? இப்பிடி பல டாபிக்ல பேச மக்கள்ஸ் ஆர்வமா இருக்காங்க. நானே பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது. வாங்க மாலன் சார். நீங்கதான் மொதோ போணி...
மாலன்: நெட்டுலேயும் நாந்தாங்க மொதோ போணி. ஆனா போ"நீ" பண்ணிட்டாங்க. என்னோட பொன்னான 180 நிமிடங்களை ஸ்பெண்ட் பண்ணி எவ்வளவோ டிரை பண்ணி பாத்துட்டேன். என்னைய ப்ரை பண்ணிட்டாங்க. இதுக்கு மேல என்னால முடியல அதுனால வேதனையுடன் விடை பெறுகின்றேன்.
(கூட்டத்தோடு ராஜேந்தரும் கண் கலங்குறார்)
ராஜேந்தர்: இப்போ நீங்க உங்களோட சோதனையை, வேதனையை வெளிப்படுத்தீட்டீங்க. எனக்கென்னமோ கொஞ்சம் சப்டெக்ஸ்ட் என்னான்னு புரியல...
மாலன்: நீங்க வேற வலைப்பூக்கள் எல்லாம் ப்ரீ-டெக்ஸ்ட்ல ஓடுது. இப்பிடித்தான் ஒரு சூழல் 1970'களில் சிற்றிலக்கியத்தில் நிலவியது
விவேக்: ஆஹா ஹிஸ்டிரிய அவுத்து வுட்டு ஹிஸ்டீரியா ஆக்குறாரே
ராஜேந்தர்: அப்ப இண்டெர்நெட்டு சீக்கிரம் முற்றும் சிற்றிலக்கிய சூழலுக்கு வந்துடும்னு சொல்றீங்களா?
மாலன்: (முனகுகின்றார்) ஹூம் இப்ப மட்டும் என்ன வாழுதாம்? தீப்பெட்டி படம் மாதிரி சினிமா ஸ்டில்களை சேக்குற விசிலடிச்சான் குஞ்சுகளா இருக்காங்க. ஏன்னு கேட்டா பிச்சைப்பாத்திரத்தால மொத்துறாங்க. இதெல்லாம் எனக்குத் தேவையா?
மனுஷ்யபுத்திரன்: இவர் நெலமை கொஞ்சமாவது தேவலாம். என்னை அனாமதேய புழுக்களெல்லாம் அனாயாசமா போட்டுத் தாக்கிடுச்சி. செங்கிஸ்கான் படை மாதிரி செட்டிலாக வுடாம செம்மிறாய்ங்க. ஆறுமுகத்தை நாவலராக்கி அழகு பாத்தோம்னு மாலன் சமாதானப் புறாவை அனுப்பினா சிக்கன்-65 மசாலா தடவி சுக்காவாக்குறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல... (கண்ணைக் கசக்குகின்றார்)
குசும்பன்: ஐய்யா நான் இணையக் குசும்பனுங்க
ராஜேந்தர்: (கிலியாகின்றார்) பேரே சரியில்லியே? ஏதோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குறோமோ?
குசும்பன்: வலைப்பூக்கள் உலகம்ங்றது ஒரு தனித்துவமானது. ஜூனியர் விகடன் மாதிரி ஜுகல்பந்தி இருக்கும். குமுதம் மாதிரி கவர்ச்சி; கல்கி மாதிரி "நடுநிலைமை"; ரிப்போர்ட்டர் மாதிரி கட்&பேஸ்ட்; நக்கீரன் மாதிரி மஞ்சள் மசாலா; கணையாழி மாதிரி கத்திக்குத்து; காலச்சுவடு மாதிரி காண்டு; இப்பிடி வெகுஜன ஊடகம் மாதிரி எல்லாமே உண்டு. ஞானவெட்டியான்-ஞாபீடம்; இளவஞ்சி-இணைய குசும்பன்; பெயரிலி-பெடிச்சி; சின்னவன்-சிறில் அலெக்ஸ்; பிகேஎஸ்-பிரேமலதா இப்பிடி கலக்கல் காம்பினேஷன் இருக்குற இடமய்யா இது. 25 வருஷமா ஜூவியை நாந்தான் தூக்கி நிறுத்தினேன்னு ஒருத்தரு சொன்னாருன்னு வைங்க நெட்டுல ப்ரூப் கேட்டு ஒடனே பிட்டப் போடுவாய்ங்க. அடுத்த இஷ்யூ வர வரைக்கும் காத்திருக்க வேண்டாம். கட்டை வெரல்ல பவர் இருக்குற மாதிரி பதிவைத் தட்டி பரபரப்பு கெளப்பிடுவாய்ங்க.
ராஜேந்தர்: இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?
குசும்பன்: அது தெரிஞ்சா நான் ஏன் நெட்டுல குப்பை கொட்டப் போறேன்?
ராஜேந்தர்: பேருக்கு ஏத்தாப்புல பெஸ்டாத்தாம்ப்பா பேசுற...
பாரா: (பாக்கை மென்றபடி) நான் அப்பவே சொன்னேன். யாருமே கேக்கலை. தமிழோவியத்த தல முழுகுன பின்னாடிதான் நான் நிம்மதியா இருக்கேன். நெட்டுல ஒன்பது கட்டளைகள்ன்னு தாம்ப்பா சொன்னேன். என்னை மனத்துக்கண்ணையே மறக்கடிச்சுட்டானுங்க. (தேம்புகின்றார்)
நாமக்கல் ராஜா: பின்னே வலைப்பூக்கள்ள என்ன வேணுமின்னாலும் எழுது அப்பிடின்னு சொல்லி முடிச்சி பதிவு பப்ளிஷ் ஆறதுக்குள்ள கொஞ்ச நாளைக்கு பதிவு போடலேன்னா குடி முழுகிப் போயிடாதுன்னு கட்டளை போட்டா எவந்தான் சும்மாயிருப்பான்? தூர வெலகுனாலே துள்ளி வந்து சண்டை போடறவனுக்கு, வெத்திலை தாம்பூலம் வெச்சி வெவரம் சொன்னா பெண்டக் கயட்டாமலா வுடுவான்?
வெங்கடேஷ்: (ஓவென்று கதறுகின்றார்)
ராஜேந்தர்: ரொம்ப நொந்து போயிருக்கார் போல. ஸார் சொன்னா நாங்களும் கூட அழுவோம்ல. நம்ம ப்ரொட்யூசரும் அழுறதுக்குத்தான் சான்ஸ் பாத்துக்கிட்டு இருக்கார்
வெங்கடேஷ்: (திக்கியபடி) சுனாமிக்கு நன்றி'ன்னு சொன்னவுடனேயே சுகுற்றா என்னைய சுத்தி சுத்தி அடிச்சானுங்க. இதையே இலங்கையிலேர்ந்து ஒரு அம்மா சொன்னா உச்சுக் கொட்டி ஆறுதல் சொல்றாங்க அதே ஆளுங்க. புரியில ஒண்ணுமே புரியல
சொக்கன்: இந்த தில்லாலங்கடி தெரியாமத்தான் நான் நெட்டுல மறந்து கூட ஒதுங்றதில்ல. சும்மா இருந்தாலும் சுலபமா வுடாம நாந்தான் நேசக்குமார்'ன்னு இப்போ சுருதியக் கெளப்புறானுங்க. நான் "தினம் ஒரு விளக்கம்" ரேஞ்சுல பவுன்சருக்கு பம்ம வேண்டியதாயிருக்கு. (மூக்கை உறிஞ்சுகின்றார்)
ராஜ்குமார்: பெரிய எழுத்தாளர்களுக்கே இணையம் ஒத்து வராது போலருக்கே?
தமிழினி: ஐய்யய்யோ அப்ப இணையத்துல எழுதி பெரிய எழுத்தாளரா வர முடியாதா? பொட்டி கட்டி சென்னைக்கு வந்தது வீணாப்போச்சா?
ராஜ்குமார்: ஹலோ நான் பெரிய எழுத்தாளர்கள் வலைப்பூவிற்கு வருவதைச் சொல்கிறேன்
தமிழினி: ஹப்பாடி இப்பத்தான் நிம்மதி. முத்துக் குமரன் நீங்களும் கவலையை விடுங்கள்
ராஜேந்தர்: இதென்ன சைடு டிராக்கு? அப்ப நீங்க எல்லாரும் நெட்டுல பிட்டு அவசியங்றீங்க... ஆனா பெரிய எழுத்தாளர்களுக்கு அனாவசியம் அப்பிடீங்றீங்க?
பெயரிலி: இங்க பல ஆடியன்ஸ் இருக்காங்க. அதுனால பல கோஷ்டிகள் எடுத்துக்காட்டா ஈழத் தமிழன் - இலங்கைத் தமிழன் ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியுமா?
ராஜேந்தர்: என்னப்பா என்ன வித்தியாசம்?
பெயரிலி: !@#$%^&*()<> {}|_+.,? (கூட்டம் கலவரமாகின்றது)
மனுஷ்யபுத்திரன்: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும் சொன்னாங்க (மாலன் அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்)
ராஜேந்தர்: என்னப்பா இது வித்தியாசத்த விளக்குமாறு கேட்டா வெளக்குமாறு தூக்குறியே?
ஈழநாதன்: நீங்கள் காகிதக்கத்தி வீசி, வீசும் காற்றின் திசையில் காலைத் தூக்குகின்றீர்கள் என்பதைத்தான் பெயரிலி அண்ணை கூறினார்கள்
ராஜேந்தர்: (பேஸ்தடிக்கின்றார்) அய்யய்யோ கூட்டம் சேருதே? குமுறிடுவானுங்களோ?
மனுஷ்யபுத்திரன்: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையும்...
ராஜேந்தர்: ஆஹா மனுஷனே போட்டுக் குடுத்துடுவாரு போலருக்கே
பிகேஎஸ்: தம்பி ஈழநாதா...இப்பிடித்தான் 2002'ல் நீங்கள் சிங்கை பிரௌசிங் செண்டரிலிருந்து வேறொரு பெயரில் பதிவிட்டிருப்பதை சொந்தப் பெயரில் சொல்லிக் கொள்கின்றேன். அதனுடைய ஐபி அட்ரஸ் இதோ...
ராஜேந்தர்: என்னது ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஐபி அட்ரஸா? எழவு என்னாங்கடா இது?
பாரா: இப்பிடித்தான் இப்பிடித்தான் என்னையவும் ஐபியால அடிச்சானுங்க
விவேக்: அம்மா அடி ஆடிட்டர் மூலமா கேட்டிருக்கேன். இதென்னடா புதுசா ஐபி அடி...? வெவரமாச் சொல்லுன்னா வெளக்குமாறு வேற தூக்குவானுங்களே
இரா. முருகன்: இவிடத்தே இண்டெர்நெட்டுலே ஜீவிதம் படு கஷ்டம் ஸாரே. நாய் நக்கியெண்டு அறியுமோ?
விவேக்: அடப்பாவிங்களா... ஏதோ பொழுது போக்கா எழுதிப் போடுவானுங்க ப்ளாக்குலன்னு பாத்தா சீரியஸா சிலம்பம் சுத்துவானுங்க போலருக்கே. பாட்டியாலா ட்ரிங்கடிச்சாலும் பத்தாது போலருக்கே...
தமிழ்பார்டெண்டர்: வாங்க விவேக் லாங்ஐலண்ட் ஐஸ் டீயை ஸ்குரூ டிரைவரோடு மிக்ஸ் பண்ணி கல்ப்படிச்சு ஈசிஆர்'ல கில்மாவா இருக்கலாம்
விவேக்: என்னது பார்டெண்டரா? அடப்பாவிங்களா என்னமோ பாலோடு நரசுஸ் டிகாஷன் கலக்குறது மாதிரி சர்வ சாதாரணமா சொல்றானே? லாங்ஐலண்ட் ஐஸ் டீயை என்னமோ டாட்டா சக்ரா டீ மாதிரி பாவிக்கிறானே. எஸ்ஸாயிடுவோமா?
ஜொள்ளுப்பாண்டி: பாரண்ணே... வித்யா எப்பிடி இருக்காக?
விவேக்: என்னது ஜொள்ளுப்பாண்டியா? ஏம்ப்பா நீங்கெல்லாம் நெட்டுல என்னாப்பா பண்றீங்க?
ராஜேந்தர்: இதென்ன இலவசக் கொத்தனார், மீட்டர் முருகேசன், இரவுக்கழுகார் இப்பிடி ஒரிஜினல், போலின்னு பல பேரு இருக்காங்களாம். கண்ணக் கட்டல?
ஜெயமோகன்: இந்த லட்சணத்துல இணையத்துல இலக்கியமாம்... எங்கே உருப்படும்?
விவேக்: ஆஹா வந்துட்டாருய்யா பழைய கம்பெடுத்து புதுக்கூழு காச்சிறவரு? சுரா'வுக்கு சிம்பிளா 350 பக்க கடுதாசி போட்டவரு இவருதானா? சோத்துக்கு அலைஞ்சா சுண்டக்கஞ்சி வேணுமாங்றாரே?
நாஞ்சில் நாடன்: குசு, பீ, மூத்திரம் என்று இணையத்திலேயும் இலக்கியம் வளருகின்றது
விவேக்: அடப்பாவிங்களா? இதுதான் இலகியமாடா? மேத்தா ஸார் சொன்னத கேக்க மாட்டீங்களா? பெண்ணியத்துல கூட கண்ணியம் வேணும்னு சொன்னாரேடா?
பிரேமலதா: மிஸ்டர் விவேக் நீங்க என்ன MCP'யா?
விவேக்: எனக்கு MC கோல்டு, RC, ராயல் ஸ்டாக் ஏன் OM, OC எல்லாம் தெரியும். MCP என்ன புது ப்ராண்டா?
(பெண்ணியவாதிகள் விவேக்கைப் பின்னியெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். விஜய.டி.ராஜேந்தரையும் விட்டு வைக்கவில்லை. யார் யாரை அடிக்கின்றார்கள் என்பதே புரியாமல் போகின்றது.)

இந்நிலையில் "தாயே உன் பெயர் சொல்லும்போதே இணையத்தில் இருட்டடி கிடைக்குதே; தாய்மண்ணே சலாம்; ஆள விடு சலாம்;" என்ற பாடலோடு கூட்டம் முடிவடைகின்றது.

முடிவு? அடுத்தவட்டி மீட்டிங்குல பாத்துக்குவோம்.
Posted by குசும்பன் at 11:44 PM 13 comments Links to this post
இண்டெர்நெட் இருட்டுக்கடை
"குதடா குதடா குதடா ஷாக்கடிக்குதடா" என்று திருமகன் பாட்டு ஸ்பீக்கரில் எகிறிக் கொண்டிருக்கின்றது.

கொலைவெறியோடு குலவை போட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவாளர்கள், கத்தியின்றி ரத்தமின்றி தற்சமயம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பதிவு போட்டாலே பத்திக் கொள்ளும் நிலையில் இருந்தது மாறி, ஒயிட் பாஸ்பரஸ் தூவினாலும் ஒதுங்கிப் போகும் மக்களைக் குறித்து விசனப்பட்டு வெந்து நொந்து போன சில வலைப்பதிவர்கள் ஒன்று கூடினார்கள். நாயகனாய் நமது கன்னட பிரசாத் ஐடியாக்களை அள்ளித் தர வந்தால் அவர்களுக்குக் கசக்கவா செய்யும்? இதோ இண்டெர்நெட் இருட்டுக்கடை ஆரம்பம்...

பிகேஎஸ்: இதென்ன கூட்டம் இவ்வளவு கம்மியாயிருக்கு? விளக்கு விருது வழங்கும் விழாவுக்குக் கூட ஆளுங்க அதிகமா இருந்துச்சு போலருக்கே?
முகமூடி: (முனகுகின்றார்) க்கும் நீங்க வர்றீங்கன்னு முன்கூட்டியே நியூஸ் கசிஞ்சுடுச்சி போலருக்கு
பெயரிலி: என்னங்க பிகேஎஸ்ஸு குளோபல் டெலிவரி டயத்துல பதிவு போட்டு அடிச்சுக்குவோமே அதெல்லாம் பழங்கனவாகிடுமோ? அமைதிப்படையிலிருந்து, அட்லாண்டிக்கு அப்பால் வரை அடிச்சிக்கிட்டு நாறினதெல்லாம் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"
முகமூடி: அட ஆமாம் உபிச! உங்க பதிவு வர்றதுக்கு முன்னாடியே கமெண்ட்டுப் போட்டுக் கலக்கும் கார்த்திக் ரமாஸ், அப்பிடி இப்பிடின்னு பின்னூட்டப் பெட்டியிலேயும் பின்னி பெடலெடுப்போமே... இப்ப வர்றவனுங்கெல்லாம் சப்பிப் போட்ட மாங்கொட்டைக் கணக்கா சவசவன்னு இருக்கானுங்களே...வெசனமாயிருக்கு...ஏதாச்சும் பண்ணணுமே?
பெயரிலி: அட மூதித்தம்பி... நீயும் அருக்காணி, குந்தானின்னு பதிவைப் போட்டு கலக்கிக்கிட்டு இருந்தே. கண்ணுப்பட்ட மாதிரி உன்னை இண்டிபிளாக்கீஸ்ஸுக்கு ஜட்ஜாப் போட்டு இண்டலக்ச்சுவல் ரேஞ்சுக்கு ஒசத்தி நாஸ்திப் பண்ணிட்டானுங்க. கலி முத்திடுச்சிபா
குசும்பன்: பெயரிலி அண்ணாச்சி...கன்னட பிரசாத்துக்கு எத்தினி பொண்டாட்டின்னு கூட என்ணி கண்டுபிடிச்சுடலாம்... ஆனா நீங்க எத்தினி பதிவுகள் மெயின்டெயின் பண்றீங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாதுங்ற ரேஞ்சுக்கு கலக்குனியே ராசா... இப்போ என்னாச்சு பாரு... நம்மள எல்லாத்தையும் கௌதம் மேனன் பட வில்லனுங்க பண்ற காமெடி ரேஞ்சுக்கு இப்ப நெட்டுல ட்ரீட் பண்றானுங்க...
தமிழ்பார்: ஏதோ நான் பாட்டுக்கு பீரு, பீட்டரு திவ்யான்னு கத வுட்டு கலாய்ச்சிட்டு இருந்தேன். அதுக்கும் ஆப்படிச்சு ஆக்கர் வேற குத்திட்டானுங்க. பரபரப்பா ஏதாச்சும் செய்யணும். பிரசாத் அண்ணே ஐடியா கொடுங்கண்ணே.
குசும்பன்: ஏம்ப்பா காவேரிக்கு அவனவன் அடிச்சிக்கிறானுங்க. ஆனா கன்னடக்காரங்கிட்டே போயி ஒரு வலைத்தமிளன் ஐடியா கேக்கலாமா?
பிரசாத்: என்னது காவேரிக்கு அடிச்சிக்கிறானுங்களா? என்கிட்ட சொல்லவே இல்லியே? இதோ இப்பவே போனப் போடுறேன் (செல்போனை எடுக்கின்றார்)
குசும்பன்: அட கசுமாலம் அது நடிகை காவேரி இல்லப்பா...காவேரி ரிவர்பா
பிரசாத்: அடச்சே அந்த மாதிரி தம்மாத்தூண்டு மேட்டருல நான் கைய வைக்கிறதேயில்ல. இருந்தாலும் காவேரி எனக்கு பேக்கு.
குசும்பன்: ஆமாம்ப்பா உனக்கு காவேரி பேக்கு. நெட்டுல எல்லாருக்கும் தமிழ் பேக்கு. எனக்கு நீ மட்டும் பேடா...
இளவஞ்சி: அண்ணாத்தே... இப்பிடி டா போட்டுப் பேசாத. ஏதோ ஒரு காலத்துல நாமெல்லாம் அடிச்சிக்கிட்டு ஆட்டம் போட்டு சந்தோஷமா இருந்தோங்றத மறந்துடாதப்பா குசும்பா. இப்போ பரபரப்பா பத்திக்கிற மாதிரி ஏதாவது செய்யணும். அதுக்கு ஐடியா சொல்லு
டோண்டு: அதுக்குத்தான் இந்த இருபது வயது இளைஞன் இருக்கேன்ல. நேத்திக்கு ICICI டெலிமார்க்கெட்டிங் பிகர் ஒண்ணு...
பிரசாத்: பிகரா எங்கே எங்கே? எங்கே? போன் நம்பர் கொடுங்க...
போலி: அட எழவெடுத்தவனுங்களா...போன் நம்பர்லேயே குறியா இருக்குறானுங்களே...
ரோஸாவசந்த்: என்னது குறியா? அத அறுத்தா சரியாடும்ல. ஸ்வீட் கொடுத்து கரெக்ட் பண்ணுப்பா. சேச்சே பொது வாழ்வுக்கு போனதுலேர்ந்து எனக்கும் நிம்மதியே போயிடுச்சி...நெட்டுல சண்டியரா சலம்பம் பண்ணிட்டு இருந்தவன இப்பிடி குந்தானி மேல குந்த வைச்சிட்டானுங்களே
பொட்டீக்கடை: கடை விரித்தேன் கொல்வாரில்லை. அம்பறாத்துணியை அவுத்துவுட்டு வாடா சண்டைக்குன்னு கூப்டாலும் கூலா டீ அடிச்சிட்டு போய்க்கினே இருக்கானுங்கப்பா. கிரி பட வடிவேலு மாதிரி எல்லாரும் நெட்டுல எல்லாரும் நல்லவனா மாறிட்டானுங்களா?
முகமூடி: டம்ஸ், வாழைப்பழம்னு பேதிக்கு வழி சொன்னப்பவே பேஸ்தியாக்கி நாஸ்தி பண்ணின நல்லவங்களேல்லாம் இப்போ எங்கேப்பா இருக்கீங்க? வாங்கப்பா ஏதாவது செய்ங்க. "பத்திக்கிச்சு பத்திக்கிச்சுடா கண்ணாளா கண்டபடி பத்திக்கிச்சுடா" அப்பிடின்னு பதிவைப் போட்டாலும் "போங்கண்ணே கிச்சுகிச்சு காட்டாதீங்க"ன்னு பம்முறானுங்களே... இப்பிடியே காந்திகிரி போச்சுன்னா எப்பிடி நாமெல்லாம் காலம் தள்ள முடியும்?
தமிழ்பார்: எல்லோரும் வண்டியை எடுங்க. இசிஆர் போவோம்...
குசும்பன்: ஆஹா கெளம்பிட்டானுங்கடா...இந்தாளு நம்மள ஐசியூ'வுல அட்மிட் பண்ணாம ஓயமாட்டான் போலருக்கே
பிகேஎஸ்: தமிழ்பார்தான் தமிழ்சசி என்று வந்தியத்தேவன் அடையாளம் கண்டு ப்ரூப் காட்டிய பின்னும்...
பெயரிலி: யோவ் நெட்டு கெட்டுப் போனதுக்கு மொதோ காரணமே நீதான். "பத்து மைல் டிஸ்ரென்ஸ்" பதிவைப் போட்டு முகமூடியும், குசும்பனும் ஒண்ணே அப்பிடின்னு நானொரு பிட்டைப் போட்டேன். அதுமாதிரி அறிவியல் பூர்வமா ஐடெண்டிபிகேஷன் இல்லாம வெறும் ஐபி அட்ரெஸ் கொடுத்தால் என்ன கிட்டும்? சூச்சூன்னு அந்தாண்ட போங்க. அடையாளம் காட்டறேன்னு ஆளுங்கள அம்பேல் பண்ணதுலேர்ந்து நெட்டுல சுவாரஸியமே இல்லாமப் போச்சி
குசும்பன்: அண்ணாத்தே ரிலாக்ஸ் ப்ளீஸ். மோப்ப பல்லாவை மாத்து எண்டு ரிக்வெஸ்ட் செஞ்சும் ஐடெண்ட்டிடி தெப்ட் போல அடுத்தவா ஐபி போட்டு என்னைய கொச்சைப் படுத்தியதை நான் மறக்கலை காணும் ஓய்
குழலி: ஐய்யா பத்திக்கிச்சு பத்திக்கிச்சு. திராவிடன் இதை மறக்க மாட்டான்.
குசும்பன்: மரம் சம்பந்தபடாத விஷயத்துலயும் வெட்டுறதுக்கு குழலி ஐய்யா கோடாலியோட வராருப்பா. இந்த டாபிக்க பிக்கப் பண்ணி டகால்டியா டக்கர் பண்ணலாமா? என்ன சொல்றேள்?
பிரசாத்: ஐய்யய்யோ இவனுங்கள விட போலீஸ் டார்ச்சரே பெட்டரா இருக்கே...குஷூம் அன்பே குஷூம் (அழ ஆரம்பிக்கின்றார்)
குழலி: குசும்பன் குஷூம் ரெண்டுமே "கு"வுல ஆரம்பிக்குது. அப்பிடின்னா...
குசும்பன்: ஏன் குழலில கூட "கு" இருக்கு. இவ்வளவு ஏன் "கு"வுல பலது ஆரம்பிக்குது. அப்பிடின்னா..(தொடர்கின்றார்)
உஷா: (பி.டி. உஷா ரேஞ்சில் ஓடிவந்தபடி) போதும் அப்பிடியே நிறுத்துங்க. அன்னியன் அம்பி ஸ்டைல்ல தல சுத்துது.
குழலி: சூப்பர். இந்த டாபிக்க தொடரலாமே...அம்பி விஷயம்னு சொன்னோமின்னா கூடி கொட்டமடிக்க ஒரு கூட்டமே இருக்கு. என்ன சொல்றீங்க?
பத்ரி: "சுட்டாச்சு சுட்டாச்சு"
முகில்: அண்ணே அப்பிடி சத்தமா கத்தாதீங்க தப்பாயிரப்போவுது
குமார்: ஸ்வீட்டாச் சொல்றேன். அதான் சுட்டுட்டீங்களே. அப்புறமென்ன? என்ஞாய் மாடி. ஆமாம் பிரசாத் நீங்க நல்லவரா கெட்டவரா?
பிரசாத்: (நாயகன் ஸ்டைலில்) நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவுமே தப்பில்லே.
(டோண்டு மேசையைத் தட்டுகின்றார்) என்னது நாலு பேருக்கு நல்லதா? எங்கிட்ட சொல்லவேயில்லியே? நெட்டுல நாந்தான் போலியப் பத்தி எடுத்துச் சொல்லி நாலு பேருக்கு நல்லது செஞ்சேன்
போலி: (அடுத்த பதிவுக்கு அச்சாரம் போட்டு நாலு பேரை வைத்து "கதை"யை படபட வென்று டைப்புகின்றார்)
குசும்பன்: சே முன்னாடியாவது போலியைத் திட்டு, அனானிகளைத் திட்டு பின்னர் ஏன் டோண்டுவையே திட்டு என்று பதிவுகள் பல போட்டு எல்லாரும் வாழ்ந்தாங்க. இப்ப என்னடான்னா போலி வசனத்தையே மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற ரேஞ்ச்சுக்கு மரத்துப் போயிட்டாங்களா?
குழலி: அட சங்கம் வைச்சுக் கூட பாத்துட்டோங்க. சீரியஸான சங்கத்தையே அங்கதமா ட்ரீட் பண்றாங்க. இப்போ என்னா பண்றதுன்னு தெரியலியே?
பிரசாத்: பேசாம நீங்க எல்லாரும் என்னோட நீலாங்கரை பங்களாவுக்கு வாங்க. பார்ட்டியோட பார்ட்டியா டிஸ்கஷன வைச்சிக்கலாம்.
குசும்பன்: இந்தாளு எப்பவுமே கோக்குமாக்காவே பேசுறானே... பார்ட்டிங்கறான் வைச்சிக்குவோம்ங்றான் டிஸ்கஷன்ங்றான்
குழலி: ஆமாம் எல்லாமே ஒரே டிஸ்கஷன்தான். சினிமாவுல கூட டிஸ்கஷன தடை பண்ண ஒரு சட்டம் போடணும்
ஹரிஹரன்: இதுக்கெல்லாம் சட்டமா? முருகா...
இரவுக்கழுகார்: முருகனப் பத்தி நீங்க பேசுனத ஸ்கீரீன் ஷாட் போட்டுருக்கேன். உஷாராயிடுங்க
ஹரிஹரன்: வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. ஆனால் முருகன் வேறு. முத்துக்குமரன் வேறு.
பிரசாத்: மயிலா எங்கே எங்கே?
குசும்பன்: சே முருகன் மேட்டரும் முடிஞ்சி போச்சே. அரோகரா கோவிந்தா கோவிந்தா
பெயரிலி: நாமெல்லாம் இன்னமும் சேவாக் மாதிரி ரொம்ப நாளா பார்முக்கு வராமலே இருக்கோம். இந்த ரேஞ்சிலேயே போனா அப்புறம் அனாதையா ஆக்கிடுவானுங்க
சின்னவன்: பாருங்க நம்ம ஞானபீடம் மாதிரி ஆளுங்களெல்லாம் திருப்பி அழைச்சி எழுதச் சொல்லணும்
பெயரிலி: அப்ப நீங்க ஞானபீடம் இல்லியா?
சின்னவன்: நான் குசும்பந்தான்னுல நெனச்சிட்டு இருந்தேன்
குசும்பன்: அப்ப குசும்பன் நானில்லையா? என்னையா கதையா இருக்கு? ஊருல உள்ளவனெல்லாம் நான்னா அப்ப நான் யாரு?
பிகேஎஸ்: இப்பிடியே பேசிட்டு இருந்தா கதைக்கு உதவாது. யாராவது ஒரு ஐடியாவ சட்டு புட்டுன்னு அவுத்து வுடுங்க.
குசும்பன்: ஆங் ஐடியா. நாம புதுசா ஒரு இழைய ஆரம்பிப்போம். மொதல்ல நான் ஒருத்தர திட்டி பதிவைப் போட்டு, அவரையே கையைக் காட்டி ரெண்டு பேரத் திட்டச் சொல்வேன். அவரும் திட்டி இன்னொருத்தரு கிட்ட சேர்ப்பிப்பார். இப்பிடியே தொடர்ந்தா நெட்டே பத்தி எரியும். நாமெல்லாம் என்னிக்கோ முன்னூறு அடிச்ச சேவாக் மாதிரி சந்தோஷமா இருக்கலாம். என்ன சரியா?
முகமூடி: ஆமாம் ஏதோ ஒலிம்பிக் ஜோதிய கைமாத்தி எடுத்துட்டுப் போற ஆளுங்க மாதிரி என்னமா சந்தோஷப் படுறாங்கப்பா? சரி சரி மொதல்ல யாரைத் திட்டி ஜோதிய கொளுத்தப் போறீங்க?
(அனைவரும் மொதல்ல என்னையத் திட்டுங்க என்று ஒரே நேரத்தில் கத்த அமளி துமளியாகின்றது. அப்போது முரளி மனோகரைப் பிடித்து விட்டேன் என்று ஒரு குரல் வருகின்றது. உடனே "தர்மயுத்தம்" என்று மறு குரல் ஒலிக்க கடமையே கண்ணாய் வலைப்பதிவாளர்கள் இன்னொருகுத்தாட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஐடியா கொடுக்க வந்த பிரசாத் தனது கதைக்கு I-Cash கிடைக்குமா என்று ஒருவரிடம் வினவிக் கொண்டிருந்ததுதான் வேதனை.)
Posted by குசும்பன் at 2:20 AM 10 comments Links to this post
Labels: இருட்டுக் கடை, ஜோக்கிரி, பிரசாத்
Wednesday, February 07, 2007
இவர்கள் சந்தித்தால்
பாபா-கலீஞர், அனர்ந்தமயி-கலீஞர்'ன்னு எதிரெதிர் துருவங்களின் சந்திப்பு அரசியல் வானில் அரங்கேற நமது சக வலைப்பதிவர்கள் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கையா பார்ப்பார்கள். இதோ நமது இணைய உலகில் "ஒத்துப்போகாத ஜோடி நம்பர்-1" என்ற போட்டி "கலங்கப் போவது யாரு?" என்ற டைட்டிலில் நடத்தப்படுகின்றது. நடுவர்களாய் வழக்கம் போல் நமது பார்த்திபனும், வடிவேலுவும்:

வ: அண்ணே நம்மள இணையத்துல கூப்பிட்டு கௌரதி பன்ணி எவ்வளவு நாளாச்சு? உங்களக் கூட "முன்னாள் பெப்ஸி இந்நாள் உமா" கூடப் சன் டிவியில பாத்தேனே? என்ன உங்களுக்கும் மார்க்கெட் டவுனா?
பார்த்திபன்: இந்த குசும்பு தானே வேணாங்றது "நான் கடவுள்"
வ: என்னாது நீங்க கடவுளா?
பார்த்திபன்: அட "நான் கடவுள்" ஆர்யா கூட உமாவோட ப்ரோக்கிராம் கொடுத்தாரு. அப்ப அவரு மார்க்கெட் டவுனா? சிங்கத்துக்கு காச்சலடிச்சா நாய் பக்கத்துல வந்து நக்கி உட்டுப் போகுமாம்.
வ: இந்தா இந்த சிங்கம், நாய் கதய வுட்டு இணையத்துல இலக்கிய சண்டையை உருவாக்கிறாத. சொல்லிப்புட்டேன் ஆமாம். சட்டு புட்டுன்னு நிகழ்ச்சிக்குப் போவோம். சோடிங்க காத்துக்கிட்டு இருக்கு. மொதோ ஜோடி வாங்கப்பா.

(தெலுங்கு பட நடிகர் பாலகிருஷ்ணா போல் 20 வயது இளைஞன் உடையில் டோண்டுவும், குறுந்தாடி மேலைநாட்டு ஸ்டைலில் இணைய நாடோடியும் வருகின்றார்கள். ஸ்டேஜ் களை கட்டுகின்றது)
டோ: வாங்க வாங்க. உங்களோட தனிப்பட்ட நட்பு என்னான்னு இந்த இணையத்துக்கு தெரியாது.
நாடோடி: அட ஆமாங்க திரு. டோண்டு ராகவ ஐயங்கார் அவர்களே
டோ: ஏங்க உங்க வீட்டுக்கு ஒரு ஐயர், ஐயங்கார் வந்தா ஆகாதா? வந்தா அப்பிடி என்னதான் நடக்கும்?
நா: அய்யோ அய்யய்யோ ஒரு ஐயரும், ஐயங்காரும் ஒண்ணா வந்தா எனக்கு "பட்டை நாமாம்" சாத்திடுவாளே
வடி (பார்த்திபனைப் பார்த்து): ஆஹா நம்மள விட சூப்பர் ஜோடி இதுதான் போலருக்கு. குண்டக்க மண்டக்க பேசுறாங்களே
பார்த்திபன்: இணைய நாடோடி பட்டையும், நாமமும் சொன்னீங்க ஆனா இன்னும் சில விஷயங்கள் இருக்கே: பூணூல் ணூல் ல்
வடி (முணுமுணுக்கிறார்): வார்த்தையைப் பிரிச்சுப் போட்டே கொல்றானே
டோ: எங்காளுங்க வந்தா பட்டை நாமமா. நாங்க இதுக்கெல்லாம் அசரமாட்டோம். போடா ஜடாயு ஸாரி... ஜாட்டான்னு போயிக்கிட்டே இருப்போம்
நா: சரிங்க. உங்கள ஐயங்கார் என்றே விளிக்கலாமா? டோண்டு டோண்ட்-டூ
டோ: சரி ஹிப் ஹிப் ஹிப் (விக்கலெடுக்க பார்த்திபன் தண்ணீர் கொடுக்கின்றார்) ஹிப்போகிரிட் அவர்களே டோண்டு வில்-டூ
வடி: ரெண்டு பேருமே மாத்தி மாத்தி டூ விடுறானுங்களே எப்பிடி அவிய்ங்களுக்குள்ள தனிப்பட்ட நட்பு இருக்கும்?
பார்த்திபன்: அதாண்டா நெட்-தமிழன்
வடி: அதென்ன புது சேனலா?
பார்த்திபன்: டேய் நீ டிவி ஊடகத்த வுட்டுட்டு வெளியில வா! இணையத்துல இணை! பொன்னான 180 நிமிடங்களை செலவு பண்ணு. விவரம் புரியும். சரி சரி இந்த ஜோடி எந்த பாட்டிற்கு ஆடப் போகின்றது?
(வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகு தூரமில்லை நி வாராய் என்ற பாடலுக்கு யார் யாரைப் பிடித்து தள்ளப் போகின்ரார்கள் என்ற சஸ்பென்ஸுடன் டோண்டுவும், நாடோடியும் ஆட அரங்கமே அதிர்கின்றது)

வடி: என்னாணே அடுத்த ஜோடியோட கெட்டப்பே பயமா இருக்கு. ஒருத்தன் முகமூடி போட்டுருக்கான். இன்னோரு ஆளு பாக்க காட்டான் மாதிரி இருக்கான்.
பார்த்திபன்: டேய் ச்சுப்-கரோ
வ: அப்பிடின்னா?
பார்த்திபன்: டெல்லித் தமிழ்ல கம்னு கெட'ன்னு அர்த்தம். அடுத்த ஜோடி வாங்க. கலங்க அடிங்க.
(முகமூடியும், குழலியும் மேடையில் தோன்றுகின்றார்கள்)
முகமூடி: என்ன குழலி என்னையப் பாத்தவுடனே டென்ஷனாறீங்க?
குழலி: உங்கள எங்க பாக்க முடியுது? அதான் முகமூடி போட்டு இருக்கீங்களே?
மு: சரி முகமூடியைக் கழட்டிடுறேன். (முகமூடியைக் கழட்டுகின்றார்)
கு: சரி நீங்கதான் முகமூடின்னு எப்பிடி நம்புறது? நீங்களே ஏன் குசும்பனாவோ, சின்னவனாவோ இருக்க முடியாது?
மு: அடப்பாவிங்களா! இதுக்குப் போயி தாசில்தார், RDO, VAO சர்ட்டிபிகேட்டா வாங்கிட்டு வர முடியும்? நாந்தான் சத்தியமா முகமூடி... நம்புங்க
கு: சதி நடக்கின்றது. வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் இல்லாமல் என்னை அப்யூஸ் செய்யிறாங்க
மு: என்னாது அப்யூஸா? எனக்குத் தெரிந்தவரை சைல்ட் அப்யூஸ், டிரக் அப்யூஸ் கேட்டுருக்கேன். ஆனா உங்கள எப்பிடி அப்யூஸ் செஞ்சாங்க?
கு: திராவிடர்களே எழுமின், விழுமின். நீ அடிமைப்பட்டுக் கிடந்தது போதும். இனிமேலும் உன்னை அப்யூஸ் செய்ய முடியாது. நீங்கள் என்னை அப்யூஸ் செய்தால் அது என் முடிக்கு சமானம் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா நான் அதை கிரீம் போட்டு சீவி வளர்த்து வெட்டி விடுகின்றேன்
மு: ஏங்க உங்களுக்கு வெட்டுறத தவிர வேறெதுவுமே தெரியாதா? நாட்டுல பிரச்சினைன்னா மரம் வெட்டுவீங்க... வீட்டுல பிரச்சினைன்னா முடியை வெட்டுறீங்க
கு: நாங்க என்ன தலையவா வெட்டுனோம்? கேவலம் முடியை வெட்டக் கூடாதா? அய்யய்யோ என்னைய அப்யூஸ் பண்றாங்களே
வடி (முடியைப் பிய்த்துக் கொள்கின்றார்): இந்த ரேஞ்சுல இவனுங்க போனானுங்கன்னா நான் வெட்டுறதுக்கு முடியே இருக்காது போலருக்கே...ஜூட் சீக்கிரம் ஏதாவது பாட்டுக்கு ஆடுங்கப்பா...
கு: நம்மள ஜட்ஜ் பண்ண இவனுங்களுக்கு என்னா தகுதி இருக்கு? எனக்கு ஜீரி மேலேயே சந்தேகமா இருக்கு
மு: அது ஜீரி இல்லீங்க ஜூரி
கு: ஸாரி நான் செந்தமிள் திராவிடன். தேவபாஷை எனக்கு வீக். டீக்-ஹே?

(தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் "என்னம்மா கண்ணு சவுக்கியமா" என்ற பாட்டுக்கு முகமூடி ஆட ஆரம்பிக்க, ரஜினியின் மிஸ்டர் பாரத் படமென்று நினைத்த குழலி படப்பெட்டி கடத்தும் பழக்க தோஷத்தில் பாட்டு டிவிடி'யை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கின்றார். அரங்கத்தில் குழப்பமான கைத்தட்டல்)

பார்த்திபன்: (வியர்வையை வழித்து விட்டபடி) ஏண்டா இந்தப் போட்டிக்கு வந்தோம்னு கண்ணைக் கட்டுதே
வடி: எங்கூருல இதைத்தான் கூப்பிட்டுக் குத்து'ம்பாய்ங்க. சும்மா கெடந்த சுருக்குக் கயித்தை மாலைன்னு கழுத்துல மாட்டிக்கிட்டானாம் ஒருத்தன்
பார்த்திபன்: டேய் எனக்கும் பழமொழி தெரியும். அடங்கு. எவனாவது பழமொழி for Dummies'ன்னு பதிவு போட்டுடப் போறான். நெக்ஸ்ட் நெட் ஜோடி வாங்க ப்ளீஸ்

(வரமாட்டேன் வரமாட்டேன் என்று முரண்டு பிடித்தபடி பத்ரியும், அவர் கையை வித்யாவின் கையாய் நினைத்தபடி இஅழுத்துக் கொண்டு கையில் லேப்டாப்புடன் நுழைகின்றார் தமிழ் பார்டெண்டர்)
பத்ரி: ......
வடி: ஹலோ பத்ரி இப்போ நீங்க என்ன சொன்னீங்க? ஒண்ணுமே கேக்கலியே?
பார்த்திபன்: அவர் ஒண்ணும் சொல்லலியா? எனக்குக் கேட்டுதே?
வடி: ஏம்ப்பா நானும் பக்கத்துலதானனே இருந்தேன். ஒண்ணும் கேக்கலியே?
பார்த்திபன்: ஹூம் அவரு பேசாம இருந்தாலே நூறு தடவை பேசின மாதிரி
(காண்டாகின்றார் வடிவேலு)
தமிழ்: வலைபதிவர் சந்திப்புன்னா ஆரஞ்சு ஜூஸையே சிந்திக் குடிக்கிற உங்களுக்கும், ஸ்கூரூ டிரவரையே ராவுல ராவா அடிக்கிற எனக்கும் ஒன்பது வித்தியாசம் இர்க்கு நைனா. வேணா பான்பராக் காராவையோ, குஜினி கும்கியையோ கேளெங்க கத்ரி ஸார்
வடி: ஆஹா கெளம்பிட்டாய்ங்கடா. ஆமாம் பார்காரரு ஆரு கிட்ட பேசுறாரு?
பார்: கம்னு கெட இல்லேன்னா உன்னைய "குடிவேலு" ஆக்கிப்புடுவாரு அக்காங்
பத்ரி: .........
வடி (பார்த்திபனை கம்மென்று இருக்குமாறு சைகை செய்தபடி) எங்களுக்கும் வெளங்கும். இப்போ இவரு பேசுனது எனக்கும் புரிஞ்சிச்சுல்ல
பார்: அவரு எங்கடா பேசுனாரு? நரசிம்ம ராவு கூட ஏப்பம் வுட வாயைத் தொறப்பாரு. இவரு என்னடான்னா பெவிக்காலு ஒட்டுன டைட்டு லிப்பால்ல இருக்காரு
வடி: அப்ப முன்னாடி ஒரு பஞ்சு டயலாக்கு உட்ட
பார்: பஞ்சு டயலாக்கு சொன்னா அனுபவிக்கணும். அர்த்தம் கேக்கப்படாது
தமிழ்: மேற்கு பதிப்பகத்துல MP3 புக்கு போட்டா பெரிய ஆளா? ஸ்டேஷன் பெஞ்சுல டீ ஆத்துறவனெல்லாம் கொரலு கொடுக்கிறானாமில்ல.
வடி: அடப்பாவி சூப்பர் ஆக்ட் கொடுக்கிறார்பா. லேப்டாப் பதிவுல MP3 புக் சூப்பர்ன்னு சொன்ன மாதிரில்ல தெரிஞ்சுது
பார்: டேய் இவ்வளவு அப்பாவியாய் இருக்குற. அதான் போறவன் வர்றவனெல்லாம் உன்னைய மிதிக்கிறான்
பத்ரி: ............
வடி (கண்களைக் கசக்கியபடி): அய்யோ என்னைய விட நல்லவரா இருக்கிறாரே இந்த பத்ரி
பார்: சரி சரி சட்டு புட்டுன்னு ஆடுங்க

(காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாய் அடிபட்டு தரையில் கிடக்கின்றார். அவரைச் சுற்றி வந்தபடி தனுஷ் மாதிரி வெறியுடன் "திவ்யா திவ்யா" என்று ஆடுகின்றார் தமிழ்பார் டெண்டர். அரங்கமே அதிர்ச்சியுடன் பார்க்கின்றது)

வடி: என்னாபா ஒரே ரவுசு பார்ட்டிங்களா இருக்கு... ஒரு இலக்கிய ஜோடியே இணையத்துல கிடையாதா?

(உடனே தோம் தோம் வந்தோம் என்று ஒரு ஜோடி குதிக்கின்றது. ஸாரி கொதிக்கின்றது. அருகருகே இருந்தாலும் அக்னி நட்சத்திரமாய் தகிக்கின்றது. ஆஹா புரிந்து கொண்டீர்களா? பிகேஎஸ்+சுமூ தான் அந்த ஜோடி)
பிகேஎஸ்: வாங்க குடியாத்தம் முனிரத்னம் சுந்தரமூர்த்தி அவர்களே! வணக்கம் என்பதை நான் சொந்தப் பெயரில் சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
சுமூ: அப்ப நான் என்ன அடுத்தவன் பெயருலயா எழுதறேன். என்னோட முழுப்பேர்லதான் நானும் எழுதறேன். சுருக்கமா சுமூ. அதுவும் என் பெயர்தான். வலிக்கிற இடத்துல அடிக்கணும்.
பி: வாய்யா என் தெலுங்குப் பட வில்லனே... எத்தனை சுட்டிகள் என்னைத் திட்டிப் போட்டிருப்பீர்கள்? இதையும் நான் சொந்தப் பெயரில் தான் கேட்கின்றேன். விளக்கு'ங்கள்
சு: விளக்கு என்பது வாங்கவோ விற்கவோ வந்த ஸ்தாபனமல்ல...
(கூட்டத்திலிருந்து ஒருவர் "ஆஹா விளக்கு பற்றி அருமையாக விளக்குகின்றார். சொல்லி கில்லி மாதிரி அடிக்கின்றார் என்று கத்த கடுப்பகின்றார் பிகேஎஸ்)
வடி: அண்ணே அடிக்கடி "சொந்தப் பெயரில் கேட்கிறேன்னு சவுண்டு வுடறாரே ஏண்ணே?"
பார்த்திபன்: அதுவா அவரு வேற பேருல எழுத முடியலேன்னு கடுப்புதான்
வடி: அப்ப சொந்தப் பேருல இல்லாம வேற பேருல வேற எழுதுவானுங்களா?
பார்த்திபன்: ஆமாண்டா சொந்தப் பேருல படிக்கிற ஆளில்லேன்னு வையி...வேற பேருல எழுதுவானுங்க
வடி: அப்ப பிகேஎஸ் ஏன் வேற பேருல எழுதுல?
பார்த்திபன்: ஏண்டா எனக்கு ஆப்பு வைக்கப் பாக்குறியா? இத நான் என் சொந்தப் பேருலதான் கேக்குறேன்
சுமூ: என்னைக் குறி வைத்து வெறி வந்தது போல் நீங்கள் பல இடங்களில் எழுதி வந்துள்ளீர்கள் என்பதை மக்களுக்கு இந்த சுட்டிகள் மூலம் தெரியப்படுத்திக் கொள்கின்றேன். அதனால் இவரைப் புறக்கணியுங்கள். புத்தகங்கள் வாங்காதீர்கள்
வடி: ஏண்ணே இந்த சுட்டிகள் என்றால் என்னண்ணே?
பார்த்திபன்: அட பொறம்போக்கு... கண்டபடி சுட்டுறதுதான் சுட்டி. எவன் அதிகமா சுட்டுறானோ அவந்தான் ஜெயிச்சதா அர்த்தம்
பி: உங்களைப் போல் எனக்கும் சுட்டத் தெரியும். அதையும் ....
வடி: என்னா சொந்தப் பேருலேயே சொல்றீங்களா? அடங்குங்கப்பு.
பி: உங்களுக்குத் தெரியாது வடிவேலு. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும். கொஞ்சம் அசந்தா சூச்சூன்னு டிரெயினு வுட்டுடுவானுங்க. இல்லே வீரமணி இவந்தான்னு கற்பூரமணைச்சு சத்தியம் பண்ணுவானுங்க. சுதாகரிப்பா இல்லைன்னு வைங்க உங்களையே சுத்திகரிப்பு பண்ணிடுவானுங்க. இந்த செஸ்னாவுல...
சுமூ: அய்யய்யோ அதுல நான் அடிப்படை உறுப்பினர் கூடக் கெடையாது. வருஷாவருஷம் பொங்கல் சாப்பிடத்தான் போவேன். செஸ்னா என்னா எனக்கு டயோட்டா சியானாக் கூடத் தெரியாது. பிரண்டுதான் காட்டுனாரு. நான் தமிழனே கெடையாது. எனக்கு கன்னடம், தெலுங்கு, கியூனிபார்ம் மொழிகள் கூடத் தெரியும் (மூச்சு இளைக்கிறது)

(ஏ சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி என்ற பாடலுக்கு பிகேஎஸ் குத்தாட்டம் போட, சிங்கம் என்ற வார்த்தையில் ஆட்சேபம் தெரிவித்து வெளி நடப்பு செய்கின்றார் சுமூ)

வடி: ஸ்ஸப்பா நாலு ஜோடியிலேயே கண்ணைக் கட்டுதே
பார்த்திபன்: இதுக்கே அசந்தா எப்பிடி... உச்சக்கட்டமே இனிமேத்தான் இருக்கு
வடி: என்னாது உச்சக்கட்டமா?
(பிப்பிரி பிப்பிரி'ப்பேன்னு விசில் ஊதியபடி பபூன் டிரஸ்ஸில் லெப்ட்-ரைட் போட்டபடி இணைய குசும்பனும், டிங்கிரி டிய்யாலே என்று இருக்கும் முடியைக் கோதியபடி இளவஞ்சியும் அரங்கத்திற்குள் நுழைகின்றார்கள். அரங்கத்தில் விசில் சப்தம் காதைப் பிளக்கின்றது)
இவ: @@@###$$$
இகு: !!!%%%&&&
இவ: ***&&&^^^
இகு: +++|||???
வடி: இவய்ங்க என்னா பேசிக்கிறாய்ங்க... சகிக்கலியே?
பார்: இனிமே உனக்கு கண்ணை மட்டும் கட்டாது. எல்லாமே கட்டும் பாரு
இவ: \\\---///
இகு: <<<===>>>
வடி: அடேய் சட்டுபுட்டுன்னு ஆடித் தொலைங்கடா
பார்: இப்ப மட்டும் என்னா பண்றாங்க? இன்னும் வேற ஆடணுமா?
(திருடா திருடி படத்தில் "மன்மத ராசா" பாடல் ஸ்பீக்கரில் எகிறுகின்றது. ஒரே புழுதிமயத்தில் என்ன நடக்கின்ரதென்றே யாருக்கும் தெரியவில்லை. ஆடியன்ஸும் கூட ஆடுகின்றனர்)
வடி: மத்தவன் பேசுனது கூட கொஞ்சமாவது வெளங்குச்சி. ஆனா இந்த ஜோடிதான் சூப்பர் டோய்
பார்: இந்தாங்க மொதோ ரவுண்டுல வின்னர்ஸ் நீங்கதான். கொஞ்ச நேரத்துல கதி கலங்க அடிச்சுட்டீங்க. புடிங்க பரிசை

குழலி: ஆஹா தகுதி இல்லாதவனுங்கள ஜீரியில போடாதீங்கன்னு அப்பவே சொன்னேனடா. இப்பப் பாத்தியா ரிஸல்ட்டை. இதுக்குத்தான் நான் போட்டியிலேயே கலந்துக்குறதில்ல. போன போட்டியில நான் விட்ட பின்னூட்ட சுட்டி
வடி: இனிமே எவனாவது சுட்டி கொடுத்தீங்க சுண்டு விரல கடிச்சிப்பிடுவேன்
பிகேஎஸ்: அதையும் நீங்கள்...
வடி: ஆமாம்ப்பா சொந்தப் பேருலேயே சொல்லிக்கிறேன். இல்லேன்னா குடிவேலுன்னு சொல்லிப்புடுவாய்ங்க
தமிழ்பார்: ஏய்ய்ய்ய் திவ்யா எங்கடா? பைக்கை எடுங்க இசிஆர் போகணும்
வடி: குடிச்சிப்பிட்டு ஓட்டாதீங்கடா எபைஆர் போட்டுடப் போறாங்க
பத்ரி: .....
வடி: அய்யா இப்பவாவது ஏதாவது சொல்லுங்கய்யா...
பத்ரி: .....

(வெறுத்துப் போய் வடிவேலுவும், பார்த்திபனும் நடையைக் கட்டுகின்றார்கள். இரண்டாவது ஸீஸனுக்கு பல ஜோடிகள் தயாராவதாய் தகவல் இரவுக் கழுகாருக்கு குட்டிக் கழுகு எஸெமெஸ் அனுப்புகின்றது)
Posted by குசும்பன் at 5:06 AM 6 comments Links to this post
Friday, February 02, 2007
இணையக(கா)தை for Dummies
ஏதாவது ஒரு பதிவு போட்டு திரட்டியில் சேர்த்து விரட்டிப் பிடித்து, பின்னூட்டம்/விவாதக் குத்துகளில் மூழ்காவிட்டால் உறக்கம் வருவதில்லை என்று செந்தழல் கண்களுடன் கொலைவெறியுடன் அலைபவரா நீங்கள்? கவலைபடாதீர்கள். இணையத்தில் நீங்கள் தனியரல்லர். வெறும் பதிவு போட்டு அவ்வாறு அலைவதை விட தத்துவார்த்தமான கதை, கவிதை, கட்டுரை எழுதிப்பாருங்கள். இணையத்தில் இலக்கியமில்லை என்று சொன்ன ஜெயமோகனே தன்னைத் திருத்திக் கொள்வார். நிற்க! எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? மண்டபத்தில் எழுதிக் கொடுப்பவரெல்லாம் இப்போது கிடையாது. ஏதோ என்னாலான கதை விடச் சில உதவிக் குறிப்புகள்:

1. கதை எழுதுவதற்கு முன் ஒரு குருவை மானசீகமாக செலக்ட் செய்யவும். சுஜாதா என்று ஓப்பனான பெயரை விட கநாசு, சிசுசெ, சுரா, பாரா, நபி, வெசா, இபா என்று இனிஷியல்களை அள்ளிப் போட்டால் பார்க்க பாந்தமாய் இருக்கும்.

2. கதை எழுத உதவும் உத்திகளை விவரிக்கும் பொழுது பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல், பிளாக் ஹோல், *** ஹோல் என்று கரடு முரடாக கோர்க்க வேண்டும். படிப்பவர் இதில் நீங்கள் எந்த யுக்தியையோ குயுக்தியாக பயன்படுத்தியது தெரியாமல் திக்கித் திணறி இறுதியில் "வாவ்" என்ற பாராட்டையோ "ஓவ்/உவ்வேக்" வாந்தியையோ பின்னூட்டுவார்கள்.

3. கேரக்டர்களுக்கு பெயர் வைப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சுஜாதா சொல்வது போல "கேரக்டருக்கு உறவினர்/நண்பர் பெயரை வைக்கலாம் தப்பில்லை. ஆனால் அதுவே அச்சானால், படமாக வந்தால் அவர்களுடனான உங்கள் உறவு எவ்வாறு இருக்கும் என்று காரண்டி கிடையாது". கதையின் உயிரான கேரக்டரென்றால் "அ, ஆ, இ" என்று பெயர் வைக்கலாம். மெய்யான கேரக்டரென்றால் "க், ங், ச்..." என்று சேப்'ஆக விளையாடலாம். இடைப்பட்ட கேரக்டர்களுக்கே இருநூத்திப் பதினாறு ஆப்ஷன்ஸ் "க, ங, ச..." என்று இருக்கின்றது. ஆரிய கேரக்டர்களுக்கு "ஹ, ஹ், ஹா, ஷ, ஜ, ஸ்ரீ" இப்படி அழைக்கலாம். கணக்கு பண்ணுவோருக்கு இருக்கவே இருக்கு "1, 2, 3, ..." செந்தமிழில் கணக்குப் பண்ண "க, ச....". என்னை மாதிரி குசும்பு புடிச்ச காரெக்டரா இருந்தா "ஃ" என்று பெயரிடலாம். இப்படி வைத்தால் தேவையில்லா காண்ட்ரோவெர்ஸிகளைத் தவிர்க்கலாம். இருப்பினும் "ஒண்ணும் ஒண்ணும் இரண்டு" என்று ஒருவர் வலைப்பதிவு வைத்திருக்கின்றார் என்பதறியவும். அவர் சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

4. அதெல்லாம் முடியாது நான் பேரு வைச்சே தீருவேன்னு அடம் பிடிப்பவரா நீங்கள்? தப்பித் தவறி கூட இணையத்திலிருப்பவரை காயப்படுத்தாதபடி OPML கோப்பை தி/விரட்டிகளிலிருந்து டௌன்லோடு செய்து, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டு அங்கிருக்கும் வலைப்பதிவர்களின் பெயர்களை கவனமாகத் தவிர்க்கலாம்.

5. இனிஷியல்களால் செல்லமாக பெயர்கள்/நபர்கள் அழைக்கப்படலாம்/டுவார்கள் என்பதறிக. உதாரணமாக "குருவி கடிச்ச கொய்யாப்பழம்" என்று நீங்கள் எழுதினால் "என்னோட பெயர் குரு.வித்யா; செல்லமாக என்னை குருவி என்று அழைப்பார்கள். சிறிய வயதில் நான் கொய்யாப்பழம் திருடி அடி வாங்கியதை ஒருமுறை பதிவில் எழுதியிருந்தேன்; அதையே குறிப்பிட்டு என்னைக் கதையில் கிண்டலடிக்கின்றார் கதாசிரியர்" என்று யாராவது உங்கள் மீது பாயலாம். எச்சரிக்கை அவசியம்.

6. குழூஉக்குறி, தற்குறிப்பேற்றுதல், வழக்குச் சொற்கள், இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் போன்றவற்றை முடிந்தால் தவிர்த்து விடவும். கூகுளேஸ்வரன் உதவியோடு அவைகள் எங்காவது எகிடுதகிடாக வலைப்பதிவில் வந்திருக்கின்றதா என்று பார்ப்பது அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் "சிக்கல் சண்முகசுந்தரமாகி" நலந்தானா என்று மற்றவரை பாட வைத்து விடும் அளவிற்கு அடிபடுவீர்கள். உங்களைச் சுற்றி அழகாக டான்ஸ் ஆடப்போவது பத்மினி இல்லையென்றும் உணர்க.

7. நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது "பாகேப" எழுத ஒன்றும் வாரமலர் டீகப் முக அந்துமணியல்ல. கற்றதும், பெற்றதும் எழுத சுஜாதாவும் அல்ல. கடமைகள், காயங்கள் எழுத லட்சுமி நாராயணன் அல்ல. அவர்களையும் தாண்டி புனிதமானவர்கள். அதாவது "வலைப்பதிவர்கள்". ஆகையால் உங்கள் சொந்த சம்பவங்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. "ஞாயிற்றுக் கிழமை பத்து மணிக்கு எழுந்து ஊத்தை வாயுடன் காப்பி குடித்தான்" என்று எழுதினால் "மவனே நானே என்னைத்தான் குசும்பு பண்றேன்னு உன்னைச் சம்மிப் புடுவேன்". கருத்துச் சுதந்திரமெல்லாம் படிக்கிறவாளுக்குத்தான். எழுதுறவாக்குக் கெடையாது என்று அறிதல் நலம் பயக்கும்.

8. சம்பவமே இல்லாமல் கதை எழுத எப்பிடி முடியும் என்று புத்திசாலித்தனமாக நீங்கள் கேட்கலாம். இப்ப வரும் கதைகள் ஆழமான சம்வம் சம்பந்தப்பட்டவை என்று நீங்கள் நம்பினால் எப்படி இணையத்தில் காலம் தள்ளப் போகின்றீர்களோ என்ற கவலைதான் வருகின்றது. கமர்ஷியல் படமெடுக்கச் சொன்னால் ஆவணப்படமெடுத்து சொந்தமாய் ஆப்படித்துக் கொள்வதற்கு ஒப்பான பாவகாரியமிது.

9. எத்தனையோ இசங்களும், இயங்களும் இருக்கும் போது எல்லோரும் புரிந்து கொண்ட மாதிரி புருடா பாவனையில் பாவிக்கும் "பெண்ணியம்" என்றெல்லாம் எழுதி உடம்பை புண்ணாக்கிக் கொள்ளாமலிருப்பது புண்ணியம். இல்லை ஏதாவது இயத்தை யூஸ் பண்ணியே தீர வேண்டுமென்றால் காரீயம், காரியம், ஈயம் என்று எழுதி உங்களது இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளலாம்.

10. சரி மேற்கொண்ட புல்லட் பாயிண்ட்டுகளைக் கொண்டு ஒரு வழியாக கதை எழுதி விட்டீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பு என்ன வைப்பது என்று தலையப் பிய்த்துக் கொள்கின்றீர்களா? பழமொழி, கிழமொழியெல்லாம் வைத்து அதிரடியாக ஆட்டம் போடாதீர்கள். "கூடையும் இரண்டு காடைகளும்", "பாயும் தலையணை வாத்துகளும்", "பாயாவும் மூன்று பரோட்டாக்களும்" போன்ற தலைப்புகள் பொதுவாக எந்தப் பிரச்சினைகளையும் தராதவை. இருப்பினும் டோட்டல் சேப்டி சிங்காரம் நீங்களென்றால் "!, @, #, $, %, ^, &, *, (, ), :-), ;-),..." போன்ற சிம்பல்களையே சிம்பாலிக்காக போட்டு விட்டால் குற்றமொன்றுமில்லை கொற்றவனே!

கதை எழுதி உதை வாங்காமலிருக்க வாழ்த்துக்கள் !!!

பிகு: இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு கத எளுதத்தான் வேணுமான்னு கேட்டா அது "உங்கள் சாய்ஸ்". அட இது கூட நல்ல தலைப்பாக உங்களுகுத் தோன்றினால் "அட கஷ்டகாலமே" என்று என்னால் ஆதங்கப்படத்தான் முடியும். வர்ட்டா? ;-)
Posted by குசும்பன்

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP